Mar 21, 2019

தமிழச்சி தங்கபாண்டியன்

2004 ஆம் ஆண்டு எம்.டெக் ப்ராஜக்ட் செய்வதற்காகச் சென்னை வந்து சேர்ந்தேன். கனவுகளின் காலம் அது. சனி, ஞாயிறுகளில் எந்த யோசனையுமில்லாமல் காலையில் கிளம்பி இரவு வரைக்கும் சென்னையின் தெருக்களில் சுற்றித் திரிந்த இலக்கற்ற பருவம். அப்படியான ஒரு நாளில் ‘எஞ்சோட்டுப் பெண்’ என்ற புத்தகத்தின் திறனாய்வு மைலாப்பூரில் நடப்பதாகவும் வைரமுத்து கலந்து கொள்வதாகவும் நிறைய போஸ்டர்கள் ஒட்டியிருந்தார்கள். வைரமுத்துவைப் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக அந்த அரங்குக்குச் சென்றேன். அது தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய புத்தகம். வைரமுத்துவுக்கு முன்பாகவே கவிஞர் மனுஷ்ய புத்திரன் வந்திருந்தார். அங்குதான் அவருடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. எனது வாழ்நாளில் எழுத்து, வாசிப்பு சார்ந்த பயணத்துக்குக்கான தொடக்கப்புள்ளி அந்தக் கூட்டம்தான்.

ஒரு மார்ச் 15 ஆம் நாளில், மனுஷ்ய புத்திரன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் வந்திருந்தார். ராணி மேரிக்கல்லூரியின் பேராசிரியராகத்தான் அறிமுகம். அப்பொழுது நான் மாணவன் என்பதால் பேராசிரியர்களிடம் காட்டும் தொலைவை அவரிடமும் காட்டினேன். அவர் கிளம்பிய பிறகு அவரைப் பற்றி மனுஷ்ய புத்திரன் சொன்னார்.  அவரது புத்தகத்தை ஒரு பிரதி கொடுத்து அனுப்பினார். 


அப்பொழுது செல்போன் எல்லாம் இல்லை. நினைத்தவுடன் தொடர்பு கொள்வதும் சாத்தியமில்லை. தமிழச்சியுடன் பெரிய அறிமுகமுமில்லை. ஒன்றிரண்டு வருடங்களுக்குப்  பிறகு இன்னொரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் ‘மணி நல்லாருக்கீங்களா?’ என்றார். எனது பெயரை நினைவில் வைத்துக் கேட்டது வெகு சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு அவ்வப்போது மின்னஞ்சல் அனுப்புவதுண்டு. ஏதாவதொரு நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொள்வோம். அலைபேசி வந்த பிறகுதான் அவரிடம் நிறையப் பேசினேன். கடந்த பத்தாண்டுகளில் பல குழப்பங்களுக்கு அவரிடம்தான் தீர்வு கேட்கிற அளவுக்கு நெருங்கியிருக்கிறேன். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர் எதையுமே சொன்னதில்லை. ‘பத்து நிமிஷம் டைம் கொடுங்க’ என்று கேட்டுவிட்டு பத்து நிமிடங்களுக்குப் பிறகு திரும்ப அழைத்துப் பேசுவார். நம்முடைய பிரச்சினைகளுக்காக பத்து நிமிடங்கள் யோசித்துவிட்டு தீர்வு சொல்கிறவர்கள் எத்தனை பேர்கள் இருப்பார்கள்? அவரை நன்கு அறிந்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். 

நம் பிரச்சினைகளுக்கு எல்லோரிடமுமா தீர்வு கேட்போம்? அவரிடம் தீர்வு கேட்க ஒரு காரணமிருக்கிறது. 2009 ஆம் ஆண்டில் ஒரு சாலைப் பயணத்தில் மிகப்பெரிய விபத்து நடந்தது. அவரது எதிர்காலமே முடிந்துவிட்டது என்றார்கள். ஆனால் சில மாதங்களில் அதே மனதைரியத்துடனும், புன்னகையுடனும் எழுந்து வந்தார். அவரது மன தைரியம் அபாரமானது. விபத்து குறித்து, அந்தத் தருணத்தில் அவரது மனநிலை குறித்து அவரிடம் நிறையப் பேசியிருக்கிறேன். அளவுகடந்த மன உறுதி கொண்ட இரும்பு மனுஷி என்பதைப் புரிந்து கொள்ள வாய்த்த தருணங்கள் அவை. 

பதினைந்து வருடங்களுக்கு முன்பாக எப்படி மேடம் என்று அழைத்தேனோ இன்றைக்கும் அப்படியேதான் அழைக்கிறேன். இன்று வரைக்கும் ‘நல்லாருக்கீங்களாப்பா?’ என்று அதே வாஞ்சையுடன் பேசுகிறவராகத்தான் இருக்கிறார். என்னிடம் மட்டுமில்லை- பழகுகிறவர்கள் அத்தனை பேரிடமும் அப்படித்தான் இருக்கிறார். இரும்பு மட்டுமில்லை- எளிய மனுஷியும் கூட. எனக்குத் தெரிந்து அவர் பகையாளியை உருவாக்கியதில்லை. அவரளவுக்கு மிகப்பெரிய நட்பு வட்டம் கொண்டவர்களும் எனக்குத் தெரிந்து வேறு யாருமில்லை. அவர் வழியாகவே நிறையத் தொடர்புகள் எனக்கு உருவாகின.


ஏதோவொரு திமுக மாநாட்டில் கொடியேற்றுவதற்கான அழைப்பு வந்தவுடன் பேராசிரியர் பணியை ராஜினாமா செய்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் கடும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இதை எப்படி நேரடியாகக் கேட்பது என்று தயங்கிக் கேட்டதில்லை. பல வருடங்களுக்குப் பிறகு அவருடன் நட்பானவுடன் ‘இப்போ நீங்க வேலையில் இருந்திருந்தீங்கன்னா பிரின்ஸிபல் ஆகியிருப்பீங்க மேடம்’ என்றேன். சிரித்துக் கொண்டார்.  இதுதான் தருணம் என்று ‘தவறான முடிவு எடுத்துட்டோம்ன்னு எப்பவாச்சும் நினைச்சிருக்கீங்களா?’ என்று கேட்டேன். ‘ச்சே..ச்சே...யோசிச்சுத்தானே முடிவு எடுத்தேன்..’ என்றார். 

ஒவ்வொரு தேர்தலிலும் அவருக்கு சீட் கிடைக்கும் என்று சொல்வார்கள். பதினைந்து வருடங்கள் கழித்து இப்பொழுது அவருக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. 

சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியனிடம் ஆச்சரியப்படுகிற அம்சங்கள் நிறைய உண்டு. அவரைப் பாராட்டி எழுதினால் அது தேர்தல் நோக்கத்துக்காக எழுதப்பட்டதாகி விடக் கூடாது என்ற தயக்கம் இருக்கிறது. ஆனால் இதுதான் சரியான தருணம் என்றும் கூடத் தோன்றுகிறது. எந்தவொரு கூட்டத்திலும் தயாரிப்பில்லாமல் வந்து பேசி பார்த்ததில்லை. அவரது பேச்சில் நிறையத் தரவுகள் இருக்கும். மேற்கோள்கள் இருக்கும். ஆங்கிலமும் தமிழும் பேச்சில் நடனமாடும். 

மிக ஆச்சரியமாக, தமிழச்சி தங்கம் அணியமாட்டார். தெருவோரக் கடைகளில் விற்கும் பாசி மணிகள்தான். இப்படி அவரைப் பற்றி சின்னச் சின்னச் செய்தியாகச் சொல்லிக் கொண்டேயிருக்கலாம். தேர்தல் முடிந்த பிறகு நிறைய எழுதுகிறேன். அவரிடம் குறைகள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டால் எனக்குத்  தெரியவில்லை. நிறைகள்தான் முன்னால் வந்து நிற்கின்றன. 

வாழ்வின் மிகப்பெரிய உயரங்களையும் வீழ்ச்சிகளையும் பார்த்தவர் அவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக அறிந்திருக்கிறேன். அவர் இன்னமும் அதே மல்லாங்கிணறைச் சார்ந்த சொமதியாகத்தான் இருக்கிறார். அதுதான் அவரது மிகப்பெரிய பலமும் கூட. ஆழ்ந்த புலமை, விரிவான வாசிப்பு, தீர்க்கமாகப் பேசுகிற திறன், கள்ளமில்லாத நட்பு எனக் கலந்து கட்டிய ஆளுமை இந்தச் சுமதி. 

தென் சென்னையின் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

Facebook
Twitter

10 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

Anonymous said...

மணி, நீங்க சொன்ன மாதிரி தி.மு.க வுக்கு நல்லா வேலை பாக்கறீங்க. இங்கே ஆட்சி என்பது தனி ஆள்களில் ஆவர்த்தனம் என்பதை பார்க்க முடிவதில்லை என்பது தான் நிஜம். எவ்வளவு நல்லவனா இருந்தாலும் கடைசில் இலவசத்துக்கு, லஞ்சத்துக்கும், கமிஷனுக்கு திட்டமிடுகிற கூட்டமாக தானே அரசியல் வாதிகள் ஆகிறார்கள்.

நீங்கள் எல்லாவற்றையும் ரொம்ப அலசி தெளிவாக எழுதுவீர்கள். இன்றைக்கு தி.மு.க வில் தலைமை என்று இருக்கும். ஸ்டாலின் மாதிரி நாதாரிகள் இந்துக்களை பற்றி தரக்குறைவாக பேசிக்கொண்டு, முஸ்லிம்களுடன் கூடடணி, கிருஸ்தவர்களுடன் கூட்டணி என்று மகா மட்டமான ஒரு பிறவியாக இருக்கும் ஒரு மடையனை சி.எம் என்று நாம் பார்க்கணுமா? இதில் கிருஸ்தவர்கள் மதமாற்ற பின்னணி, அதில் இருக்கும் உலக அரசியல் எல்லாம் தெரியாதவர் போல பதில் கூற மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இங்கே நடக்கும் உலக மத அரசியல் ரொம்ப கொடூரமானது. அதற்க்கு பக்க பலமாய் இருக்கும் ஸ்டாலின் நாதாரி தானாகவே சீக்கிரம் செத்து போவான். செத்து போகணும் என்பது எனது ஆசை. இன்னும் ஒரு வருடத்தில் அவன் செத்து போவான். எழுதி வைத்து கொள்ளுங்கள்.

இதை நீங்கள் பிரசுரிக்க வேண்டாம். போவதும் இல்லை. அவசியமும் இல்லை. இதில் அந்த அளவுக்கு நடுநிலை தன்மை இல்லை என்றே வைத்து கொள்வோம். இது நான் உங்களுக்கு எழுதிய ஒரு மெயில் என்றே வைத்து கொள்ளுங்கள். தி.மு.க வுக்கு ரொம்ப ஜால்றா அடிக்கிறீங்க. ஸ்டாலின், கனிமொழி மாதிரி நாதாரிகளை தலைமையில் வைத்து பார்க்கும் பொது உங்களுக்கெல்லாம் கூசாதா?

ஸ்டாலின் இந்து அரசியல் பற்றி உங்கள் பார்வையில் ஒரு கட்டுரை எழுதினால் உங்களுக்கும் கொஞ்சம் யோசிக்க தெரிகிறது என்று நினைத்து கொள்வேன். இந்த கிருஸ்தவ அரசியல் பற்றி உங்களால் பேச முடியமா என்று தெரியவில்லை. நான் மதவாதி அல்ல. ஆனால் அடிமட்டத்தில் இருந்து பார்த்தால் தான் புரியும் இந்த மத அரசியல் இந்தியாவை எந்த அளவுக்கு கவ்வுகிறது என்று.

Anonymous said...

Thats it!

tirupurashok said...

Mallaankinaru of S RAMAKRISHNAN FAME?

சூர்யா said...

திராவிட கொள்கைகளிலும் ஆழ்ந்த அறிவும் பற்றும் உள்ளவர். புத்தக அறிவும், நேரடி களசெயல்பாட்டு அனுபவமும் ஒருசேர பெற்றவர் என்று அவரை பற்றி பேச ஆயிரம் விஷயமிருந்தும், உதயநிதியின் பேச்சை அடுத்து இன்று அவரை பற்றி ஒன்றும் அறியாதவர்கள் கூட எதோ அவர் அழகை காட்டி வாய்ப்பு பெற்றவரை போல இணையத்தில் பேசிக்கொண்டிருப்பது வேதனையானது. எவ்வளவு தான் நல்லவராக இருந்தாலும் அரசியல் என்று வந்துவிட்டால் எப்படி வேண்டுமானாலும் அசிங்கப்படுத்துவார்கள் என்று அறிந்த தினம் இன்று.

KRISHNAN said...

#சுமதியாக இருந்து #தமிழச்சி_தங்கப்_பாண்டியன் ஆக மாறி;
இப்போது தென் சென்னைத் தொகுதியின் திமுக வேட்பாளராக ஆகியிருக்கும் இவர் தமிழறிஞர் உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களைப் பார்ப்பான் என்று அழைத்து அசிங்கமாக வசை பாடியவர்.

அமெரிக்காவின் ஃபெட்னா மாநாட்டின் பொழுது உ.வே.சா. அவர்களை மிகக் கேவலமாகப் பேசிய பெண்மணி இவர். இவருக்கா தென் சென்னைத் தொகுதி பிராமணர்கள் ஓட்டளிக்கப் போகிறார்கள்..????

பிராமணர்கள் மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தமிழர்களும் புறக்கணிக்க வேண்டிய நபர் இந்த திமுக வேட்பாளர்கள். தென்சென்னைத் தொகுதி பிராமணர்கள் அனைவரும்....

ஓட்டளிக்கும் தினத்தன்று உ.வே.சா.வை அசிங்கமாக வசை பாடிய இந்தப் பெண்ணுக்குத் தக்க தண்டனை அளிப்பார்களா...???

தக்க தண்டனை அளிப்பார்களா..????

இந்த மாதிரி சந்தர்ப்பவாத ஜென்மங்களுக்கு
உங்கள் ஓட்டைத் தராதீர்கள்...!!!

வெட்கம், மானம், சூடு, சுரணை உள்ளவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள்..!

Selvaraj said...

கேட்டவுடன் நினைவில் பதியும் நல்ல பெயராதலால் இவரின் பெயர் நினைவிலிருக்கிறது. அழகான வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கனு உதயநிதி சொன்னதை வச்சி நேத்து முகநூலில் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ரொம்ப கிண்டல் பண்ணிருந்தாங்க. இந்த கட்டுரையை படித்தவுடன் இவர் மீது மதிப்பும் மரியாதையும் வருகிறது. ஆளை பார்த்து யாரையும் எடைபோடக்கூடாது என்பது எவ்வளவு உண்மை .ஒருவரின் குணம் அவரிடம் பழகியவர்களுக்குத்தான் தெரியும்.
மிகப்பெரிய அரசியல், பொருளாதார பின்னணியுடைய குடும்பத்தை சார்ந்தவர் அரசியலுக்காக தனது பேராசிரியர் பணியை இராஜினாமா செய்ததில் வியப்பில்லை ஆனால் அரசியலில் கால் பதிக்க முடிவெடுத்தவுடன் தனது வேலையை இராஜினாமா செய்தது பாராட்டுக்குரியது
‘இரும்பு மட்டுமில்லை- எளிய மனுஷியும் கூட’ வாழ்த்துக்கள், தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் நிச்சயம் வெற்றிபெறுவார்.
புகைப்படத்தில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் நேர்பின்னால் நிற்பது நீங்கள்தானே?

அன்பே சிவம் said...

ம் 2003 லேயே செல்போனெல்லாம் வந்துட்டதாஞாபகம். இருந்தாலும், தலை சொன்னா ஏத்துக்கிடனும்.

வாழ்த்துகள்.

Anonymous said...


No need to show hatred just because she is from a political family

No need to support her just because she is from a political family

Her credentials are sound and impressive
let people decide it

Anonymous said...

I like your articles when they are not about politics..