Jan 11, 2019

தும்பி

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒரு சிற்றிதழைப் பரிந்துரை செய்யச் சொன்னால் தும்பியைச் சொல்வேன். குழந்தைகளுக்கான சிற்றிதழ் அது. குக்கூ அமைப்பினர் நடத்தும் சிற்றிதழ். குக்கூ பற்றித் தெரியாதவர்களுக்காக- புன்னகை மன்னர்கள் அவர்கள். எந்நேரமும் சிரித்துக் கொண்டிருப்பார்கள். உண்மையாகத்தான் சொல்கிறேன். சிவராஜ் அல்லது முத்து இருவரில் யாரேனும் ஒருவர் வாய் முழுக்கவும் திறக்காமல் சிரிக்கும் ஒரு நிழற்படத்தைக் காட்டிவிட்டால் சொத்தையே எழுதி வைக்கிறேன் என்று கூடச் சவால் விடலாம். கண்டுபிடிக்கவே முடியாது. அப்படியான புன்னகை அவர்களுடையது.


ஜவ்வாது மலையோரம் வனம். அந்த வனத்தில் இயற்கையோடு இயைந்த வாழ்வு. அவர்களே விளைய வைத்துச் சமைப்பார்கள். எரிவாயு கிடையாது. விறகு அடுப்புதான். மாடும் கன்றும் வைத்திருக்கிறார்கள் ஆனால் பால் கறக்க மாட்டார்கள்.  அது கன்றுக்குட்டிக்குத்தான். எப்படியான வாழ்க்கை என்று புரிந்து கொள்ளலாம்.

பெரிய வருமானம் கிடையாது. ஆனால் சமரசமற்ற வாழ்க்கை. தும்பி இதழிலும் அப்படியேதான். சமரசமே இல்லை.


‘என்னங்க ஒரு இதழ் எண்பது ரூபாய் ஆகுது?’ என்று கேட்டிருக்கிறேன். ஆனால் இதழின் தரம் அப்படியிருக்கும். வழவழப்பான தாள்கள். வண்ணப்படம். சர்வதேச அளவில் பிரபலமான குழந்தைகளுக்கான கதையை எடுத்து அதை மொழிபெயர்த்து தமிழ் மற்றும் ஆங்கில மூலம் இரண்டிலும் அச்சிட்டிருப்பார்கள். தமிழ் வாசிக்கத் தெரிந்த குழந்தையாலும் வாசிக்க இயலும்; ஆங்கிலம் மட்டுமே தெரிந்த குழந்தையும் வாசிக்க முடியும். இதழின் கடைசி சில பக்கங்களில் பெற்றோர்/ஆசிரியருக்கான ஒரு கட்டுரை- தமிழின் முக்கியமான ஆளுமையால் எழுதப்பட்டிருக்கும்.



தும்பி, சென்னை புத்தகக் காட்சியிலும் அரங்கு அமைத்திருக்கிறது. புத்தகக் காட்சியின் எந்த நுழைவாயிலில் நுழைந்தாலும் நுழைந்தவுடன் வலது பக்கம் திரும்பினால் தும்பி அரங்கு கண்ணில்படும். வருடச் சந்தா எந்நூறு ரூபாய் என நினைக்கிறேன். ஆனால் தைரியமாகச் சந்தாவைக் கட்டிவிடலாம். 

துணிந்து உத்தரவாதம் அளிக்கலாம். Worth to subscribe.

தொடர்புக்கு: 98438 70059/ thumbigal@gmail.com
இணையதளம்: தும்பி

6 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

http://thumbigal.com/howtoget/ is not working.

Myvizhi Selvi said...

It's connecting for me.

Saravanan Sekar said...

I remember that you have written about "Thumbi" sometime back.

After reading this post, subscribed for this year! Thanks for sharing info, Mani Anna

-Saravanan Sekar

Desigan said...

THUMBI nice title..

Anonymous said...

The cover pic (deer) is too good...

Rupesh said...

subscribed during pongal vacation, Visited stall on saturday. we really liked the book compared to rest of the books which were exhibited.