Oct 10, 2018

விதைகள்

கடந்த வாரத்தில் சத்தியமங்கலத்தில் விதைகள் வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் கிராமப்புறங்களைச் சார்ந்த ஏழு அரசு தொடக்க/நடுநிலைப்பள்ளிகளை அழைத்து ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய்க்கான கூப்பன்களை வழங்கியிருந்தோம். ஒவ்வொரு பள்ளியும் தமக்க வழங்கப்பட்ட கூப்பன்களைக் அரங்குகளில் கொடுத்து தேவைப்படும் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம். மொத்தம் முப்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு வழங்கியிருக்கிறோம்.

இதுவரையிலும் நிசப்தம் அறக்கட்டளை சார்பில் சுமார் முப்பது முதல் நாற்பது கிராமப்புற பள்ளிகளில் நூலகங்கள் அமைத்துத் தரப்பட்டிருக்கிறது. 

புத்தகங்கள் வழங்குவது பெரிய காரியமில்லை. அவற்றை பள்ளிகளில் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்று புரிந்து கொள்வதும் அவசியம். அனைத்துப் பள்ளிகளுடனும் நூறு சதவீதம் தொடர்பில் இருப்பது சாத்தியமில்லை என்றாலும் கூட பெரும்பாலான பள்ளிகளுடன் ஏதாவதொரு வகையில் தொடர்பிருக்கிறது. கடந்த ஆண்டு நூலகம் அமைத்துத் தரப்பட்ட பத்து பள்ளிகளிலிருந்து ஏழெட்டு பேர் புத்தகக் கண்காட்சியில் சந்திக்க வந்திருந்தார்கள். புத்தகங்களை எப்படி பயன்படுத்துகிறார்கள்? அடுத்தடுத்த தடவைகளில் எப்படியான மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் விரிவாக உரையாடுவதுதான் திட்டமாக இருந்தது. இந்த முறை மழை தடை செய்துவிட்டது. 

எதற்காகச் சொல்கிறேன் என்றால்- பள்ளிகள் தொடர்பில் இருக்கின்றன.

அரசுப்பள்ளிகளில் அதுவும் கிராமப்புற பள்ளிகளில் சிறிய அளவிலான நூலகம் ஒன்றை அமைத்துத் தருவதும் பெரும்பாலான பள்ளிகள் அவற்றை சரியாகப் பயன்படுத்துவம் மகிழ்ச்சியளிக்கக் கூடியது. சிறப்பாகச் செயல்படும் பள்ளிகள் நூலகத்திற்கான தேவையைக் கோரினால் தெரியப்படுத்துங்கள். அமைத்துத் தருவோம். இந்த வாரம் நூலகம் அமைத்துத் தரப்பட்ட பள்ளிகளில் ஒன்றான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பகுத்தம் பாளையத்திலிருந்து நிழற்படங்களை அனுப்பியிருந்தார்கள். நிசப்தம் நண்பர்களின் பார்வைக்கு.



2 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

Superb

Paramesdriver said...

மதிப்பிற்குரிய அய்யா,
வணக்கம்.தாங்கள் சத்தியமங்கலம் புத்தகத்திருவிழாவிற்கு இரண்டாவது ஆண்டாக வருகைபுரிந்து எங்களை சிறப்பு செய்ததோடு இரண்டு ஆண்டுகளும் சத்தி வட்டார கிராம பகுதி அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் வாங்கி நன்கொடையளித்தமைக்கு சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
என அன்புடன்,
C.பரமேஸ்வரன்,,
செயலாளர்,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
தொடர்பு எண் 9585600733,
paramesdriver@gmail.com.,
https://vithaikalsathy.blogspot.com