நினைவு தெரிந்த காலத்திலிருந்தே நான் திமுகவை விரும்புகிறவன். இரண்டாம் வகுப்பு நோட்டுப் புத்தகத்தில் பிளேடு வைத்து உதயசூரியனை வரைய அது அடுத்தடுத்த பல பக்கங்களைக் கிழித்து 'உங்க பையனுக்கு இப்பவே அரசியல்' என்று ஆசிரியை அப்பாவிடம் சொல்லி உதை வாங்கியதிலிருந்தே அந்த உணர்வு இருக்கிறது. ஏழாம் வகுப்போ அல்லது எடடாம் வகுப்போ படிக்கும் போது பள்ளிக்கூடப் பையில் ஒரு சட்டையை ஒளித்து வைத்து மாலையில் அதை அணிந்து உதய சூரியனுக்கு வாக்கு கோரி தேர்தல் பரப்புரையில் பேசியிருக்கிறேன். அப்பொழுது ஒன்றியச் செயலாளராக இருந்த செல்வராஜ் 'பையனுக்கு மாணவர் அணியில் ஒரு போஸ்டிங் போட்டுடுவோம்' என்று பேசப் போக அந்த விவகாரம் அப்பாவுக்குத் தெரிந்து முற்றுப் புள்ளி வைத்தார்.
சுய வரலாறு பேச வேண்டியதில்லை. ஆனால் ஒன்றைத் தெளிவுபடுத்திவிட வேண்டும். ஒருவனின் ஆரம்ப கட்டத்தில் உருவாகும் அரசியல் சார்ந்த ஆர்வம், பள்ளிக்காலத்தில் விதைக்கப்படும் உணர்வுகள் என்பவைதான் அவனை எதிர்காலத்திலும் வடிவமைக்கின்றன. எனக்கு கிடைத்த நட்புகளும், அவர்கள் வாசிக்கக் கொடுத்த புத்தகங்களும், அவர்களுடன் நடத்திய உரையாடல்களும், எங்கள் ஊர்ச் சூழலும் என்னைத் திராவிட சித்தாந்தத்தின் மீது அதிக ஈர்ப்பு கொண்டவனாக வளர்த்திருக்கிறது.
இதில் மறைக்க என்ன இருக்கிறது? என்னளவில் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்படுகிறேன்.அவ்வளவுதான்.
எந்த அரசியல் சார்புமில்லாமல் நம் சூழலில் ஒருவன் செயல்பட முடியுமா என்று தெரியவில்லை. ஏதாவது ஒரு சித்தாந்தம் ஒருவனை தனக்குள் ஈர்க்கும். தேசியம், திராவிடம், இந்துத்துவம், கம்யூனிசம், தமிழ் தேசியம், சாதியம் என்று ஏதாவதொரு ஈர்ப்பு ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும் என்றுதான் நம்புகிறேன். 'இதை வெளிப்படையாக பேச வேண்டியதில்லை' என்று வேண்டுமானால் அமைதியாக இருந்து கொள்ளலாம் அல்லது சூழலுக்கு ஏற்ப சரி தவறு குறித்துப் பேசலாம். அப்படி எதுவுமே இல்லாமல் 'புதிய இயக்கத்தை உருவாங்குவேன்' என்று கிளம்பலாம். நம்முடைய உயரம் நமக்குத் தெரிய வேண்டும். குடும்ப, பொருளாதாரச் சூழல் போன்றவைதான் நம்மை முடிவு செய்ய வைக்கின்றன.
திராவிடக் கொள்கைகளைச் சாரும் போது எனக்கு ஈடுபாடுள்ள தேசியம், இறை நம்பிக்கை, காந்தியம், சுயச் சார்பு என்பனவற்றோடு முரண்பாடுகள் உண்டாகின்றன. ஆனால் அவற்றையும் தாண்டி நான் திமுக அனுதாபிதான். அரசியல் ரீதியாக திமுக வலுவான இயக்கமாக இருக்க வேண்டும் என விரும்புகிறவன்தான்.
இன்று வரையிலும் திமுகவின் தேர்தல் அரசியலுக்கு எந்த வகையிலும் ஆதரவு தெரிவித்து எழுதியதில்லை. ஆனால் அதற்காக எப்பொழுதும் அப்படியே இருக்கப் போவதுமில்லை. வேறொரு சித்தாந்தம் சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளில் ஆக்டொபஸ் போல நாம் வாழும் சூழலை ஆக்கிரமிக்கத் தயாராகும் போது பால்யத்திலிருந்து நாம் நம்பிய சித்தாந்தத்தை யாராவது காப்பாற்றிவிட மாட்டார்களா என்று ஆதங்கம் கொள்வது மனிதனின் சாதாரண மனநிலை. அப்படியொரு மனநிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்தத் தருணத்தில் கலைஞர் மறைவு என்பது உணர்வு ரீதியாக அசைத்துப் பார்க்கிறது.
நாம் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய தலைவர் கலைஞர் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இங்கு எல்லோர் மீதும் விமர்சனங்கள் இருக்கும். தனிமனித தாக்குதல் இருக்கும். விமர்சனத்தை எதிர்கொள்ளாமல் பொது வாழ்க்கை என்பது சாத்தியமே இல்லை. காந்தியாக இருந்தாலும் சரி; மண்டேலாவாக இருந்தாலும் சரி. அவர்கள் வாழும் காலத்தில் எதிரிகள் இருப்பார்கள். மட்டம் தட்டுவார்கள். ஆனால் வாழ்ந்து முடிந்த பிறகு தலைவர்கள் அடையாளம் ஆக்கப்படுவார்கள். கலைஞரும் விதிவிலக்கில்லை.
அதே சமயம், லெனின் குறிப்பிட்டது போல ஒருவரின் உடல்தான் மரணிக்கிறது. அவரது அரசியல் இல்லை. கலைஞரின் அரசியல் விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் உட்பட்டதுதான். அப்படியான உரையாடல்கள் வழியாகவும் செயல்பாடுகளின் வழியாகவும் சித்தாந்தங்கள் உயிர்ப்பு பெறுகின்றன அல்லது மடிந்து போகின்றன. பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் உருவாக்கிய திராவிட சித்தாந்தமும் அப்படியானதொரு செயல்பாடுகள் வழியாகவே அடுத்தடுத்த கட்டத்துக்கு நகரும்.
இது வெறும் ஒரு மனிதரின் மரணம் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. இயக்கம், சித்தாந்தம் சம்பந்தப்பட்டது.
கலைஞருக்குப் பிறகு திமுக என்ன ஆகும் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். அரசியல் இயக்கத்தை சார்ந்து வளர்ந்த ஒரு சித்தாந்தம் அதன் தலைமை அசைவுறும் போது வலுவிழந்து போக வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஸ்டாலின் முழுமையாகத் தன்னை தயார் படுத்திக் கொண்டுவிட்டார் என்றுதான் அவருடைய சமீபத்திய செயல்பாடுகளும் பக்குவமும் காட்டுகின்றன. 'உங்க அப்பாவுக்கு மெரினாவில் இடமில்லை' என்று சொல்லும் போது 'அதையும் பார்த்துவிடுவோமே' என்று ஒரு கண்ணசைப்பைக் காட்டியிருந்தால் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு நிலைமை விபரீதம் ஆகியிருக்கக் கூடும்.
ஒரு மனிதருக்கு இதைவிடவும் ஒரு அழுத்தம் வேறு என்ன இருந்துவிட முடியும்? அப்பாவின் ஆசையான அண்ணாவின் அருகில் இடம் என்பதை நிறைவேற்ற முடியாது போலிருக்கும் சூழல். தன்னிடம் மிகப்பெரிய இயக்கம் இருக்கிறது. அடித்து நொறுக்கும் தொண்டர் படை இருக்கிறது. ஆளும் வர்க்கத்திடம் தோற்றுப் போனால் தன் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும். அவகாசம் இல்லை. என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு பெரிய அழுத்தம் இது? இருந்த குறுகிய காலத்தில் பிரச்சினையை வழக்கு வழியாக எதிர்கொண்டதும், தீர்ப்பு வரும் வரை அவர் காட்டிய பொறுமையும், தீர்ப்பைக் கேட்டு மகனாக உடைந்து அழுத தருணமும் அவர் மீதான நம்பிக்கையை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது.
நான் திமுகவின் ஸ்லீப்பர் செல் எல்லாம் இல்லை. நேரடியாகவே திமுகவை ஆதரிக்கிறேன். மாற்று சித்தாந்த, அரசியல் இயக்க நண்பர்களுக்கு இது உறுத்தலாக இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்? வெளிப்படையாக எதையும் பேசிவிடாமல் உள்ளுக்குள் வைத்துக் கொள்ளலாம். அதுதான் அவசியமா என்ன?
அவரவருக்கு எப்படி ஒரு சித்தாந்தம், அரசியல் பார்வையோ அப்படித்தான் எனக்கும்.
20 எதிர் சப்தங்கள்:
வாழ்த்துக்கள் மணிகண்டன்!
கலைஞின் மறைவு நிறைய பேருக்குள் உறைந்திருந்த வாஞ்சையை வெளிக்கொண்டு வந்துள்ளது.
ஐயா,
எடப்பாடியிடம் ஸ்டாலின் பேசும் போதே இதை எடுத்து சொல்லியாகி விட்டது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு அரசியல் எதிரியாக இருந்தவர் கருணாநிதி. அவருக்கு எடப்பாடி இடம்கொடுத்தால் அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை ஸ்டாலினிடம் எடுத்து சொல்லியாகி விட்டது. அதே போல நீதி மன்றத்தில் வலுவாக எல்லாம் எடப்பாடி தரப்பு வாதாட வில்லை. வாதாடவும் மாட்டோம் என்று ஸ்டாலினிடம் உறுதி அளித்தபடி செய்யப்பட்டது. எனவே இதுதான் தீர்ப்பு என்று ஸ்டாலினிற்கு கண்டிப்பாக தெரியும்.
நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை செயல்படுத்துகிறோம் என்று எடப்பாடி ஒரே வரியில் பதில் சொல்லி, மெரினாவில் நல்லடக்கம் செய்ய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
அதிகாரிகள் தரப்பில், ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் அமைப்பதற்கு ஐந்து வழக்குகள் எதிராகப் போட்டிருக்கிறார்கள். அவற்றை வாபஸ் வாங்கினால்தான், இப்போது கருணாநிதிக்கு இடம் தரமுடியும் என்றார்கள். இந்த விஷயம்தான், வழக்கு விசாரணையின்போது முக்கிய விவாதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. ஐந்து வழக்குகளையும் சம்பந்தப்பட்டவர்கள் வாபஸ் பெற்றனர். இதனால், ஜெயலலிதாவுக்கு கட்ட இருக்கும் மணிமண்டபத்துக்கான ரூட் கிளியர் ஆனது. இந்தத் தீர்ப்பு, ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் ஜெகஜோதியாய் அமைய வழிவகுத்துவிட்டது. ஸ்டாலினும் எடப்பாடியும் கூட்டு வைத்து கொண்டு செயல்படுகின்றனர் என்ற அதிமுக தொண்டர்களின் சந்தேகமும் தீர்க்கப்பட்டது.
சத்தியமான வார்த்தைகள்.
இறந்தவரை பற்றி பேசுவது சரி அல்ல. ஆனால் ஏதோ காமராஜர் அளவுக்கு பேசுவதைத்தான் தாங்க முடிய வில்லை!!
இன்று கருணாநிதிக்கு பல பேரிடம் இருந்து அனுதாப அலை இருக்கிறது. காரணம், திமுக தமிழ்நாட்டை ஆண்டு கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகி விட்டன. தமிழ் மக்களின் பரம்பரை நோயாக மறதி இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. என்னமோ கருணாநிதி ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடியது போல் இன்று சிலர் நினைப்பது வியப்பு அளிக்கிறது.
பொது மக்கள் குடிக்கும் தண்ணீருக்காக போராடிய நேர்மையான, எளிமையான பெண் என்றும் பாராமல் பட்ட பகலில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொல்லப்பட்டது யார் ஆட்சியில்? பின், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அந்த பாவிகளை அண்ணா பிறந்த நாளில் 'நன்னடத்தைக் கைதிகள்'! என்று விடுதலை செய்தது யார்!
காலையில் நடை பயிற்சிக்கு சென்ற தா. கிருட்டிணன் வெட்டிகொல்லப்பட்டார். அதுவும் திமுக ஆட்சியில் தான். கட்சியில் இத்தனை காலம் உழைத்தவரை, பெரியார் காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவரை, கருணாநிதியின் நண்பர், மூத்த தலைவர் என்றும் பாராமல் அழகிரி வெட்டி கொன்ற போது கருணாநிதி விரல் அசைக்க வில்லையே. கருணாநிதி இருக்கும் வரை நமக்கு ஒன்னும் ஆகாது என்று நம்பியவரை இப்படியா கழுத்து அறுப்பது!
அதை விட கொடுமை, கோர்ட் உத்தரவின்படி காவல்துறை வழக்குப் பதிவு செய்து மு.க. அழகிரி உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்தனர். ஆனால் மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவரை கூட காவல் துறை கைது செய்து தண்டனை வாங்கி கொடுக்க முடிய வில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பல பேர் இன்றைக்கு கோடீஸ்வரர்கள் என்பது கூடுதல் தகவல். எல்லாமே கருணாநிதி ஆட்சியில் தானே நடந்தது!
2009 ஜனவரி 9-ல் திருமங்கலம் இடைத்தேர்தல் மறக்க முடியுமா! இந்தத் தேர்தலை வென்று கொடுத்ததற்காக அழகிரியை தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியில் அமர்த்தினார் கருணாநிதி. இந்திய தேர்தல் ஆணையமே மிரளுமளவுக்கு விஞ்ஞான ரீதியில் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்ட தேர்தல். "திருமங்கலம் பார்முலா" என்று இந்திய அளவில் அனைத்து கட்சிகளும் இந்த பார்முலாவை பேசி, பேசி தமிழ் நாட்டின் மானத்தை வாங்கினர். இந்த பார்முலாவை கண்டு பிடித்து கற்று கொள்ள வைத்த பெருமை கருணாநிதிக்கே கிடைக்கும்!
மன்னித்து விடுங்கள். நான் ஏதும் கற்பனை பண்ணி சொல்ல வில்லை. இறந்தவரை பற்றி சொன்னதற்கு வருந்துகிறேன். இனிமேலே வாய்ப்பு இல்லையே, அதனால் சொன்னேன்.
நம் மாநில நலனுக்காக திமுக பாதுகாக்கபட வேண்டிய இயக்கம்
வாழ்த்துகள் மணிகண்டன் சார்!!! பொதுத்தளத்தில் இருக்கும் யாரும் குறிப்பாக எழுத்தாளர்கள் திராவிட இயக்க ஆதரவாளர்களாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்கள். காரணம் பயம். ஆனால் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். உங்களுக்கு அசாத்திய தைரியம் இருக்கிறது.
உங்கள் இடமிருந்து இதுபோன்ற ஒரு பதிவைத்தான் எதிர் நோக்கி காத்து இருந்தேன். வாழ்க வளமுடன்
சரி, இப்போது தந்தை போய், மகன் வந்து இருக்கிறார். அதை விட்டு விடுவோம். பிரியாணி பிரச்சனைக்கு வருவோம்.
மாணவரணி தலைவர் யுவராஜின் - CCTV காட்சிகள் மட்டும் இல்லையென்றால், ஸ்டாலின் இப்படி இறங்கி வருவாரா?
திமுக நிர்வாகி யுவராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட குண்டர்கள் உள்ளே நுழைந்து இலவச பிரியாணி கேட்டு சண்டை போட்டு அத்துடன் கேஷியர் முகத்தில் குத்துவிட்டனர். அவருடன் வந்த குண்டர்களும் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர் என்ற செய்தியில் இருந்து மேற்படி கட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதை மக்கள் அறிவர். இச்செய்கையினால் மக்களின் வாக்கு வங்கி போய் விடுமோ என்ற கவலை. எனவே தான் இந்த சந்திப்பு நாடகம்!
சர்வதேச தொலைக்காட்சியான சி. என். என் வரை இவர்களது "பெருமை" சென்றிருக்கிறது. வேறு வழி இல்லை. பயத்தால் வந்தார். 2 ஜி ஊழலை விட, இந்த ஓசி பிரியாணியின் செய்திதான் உலகெங்கும் ஒலித்தது.
அந்த யுவராஜ் நபரை நிரந்தரமாக நீக்கவில்லை. தற்காலிக நீக்கம் தான். இன்று பிரியாணி திருடனை சஸ்பெண்ட் செய்துவிட்டு, நாளை ஹார்லிக்ஸ் திருடனை சேர்த்து கொள்வார்கள்.
தந்தையும் மகனும் காமராஜரை, இந்திராவை நா கூசாமல், அநியாயமாக பேசிய பேச்சுக்கள் தான் எத்தனை! வெயிலிலும் மழையிலும் உழைத்த அந்த நல்ல மனிதனை பெருந் தலைவனை கொடைக்கானலில் உல்லாசம் என்று பேசியதை வரலாறு மன்னிக்காது. இன்று தமிழகத்தில் குடிக்காத இளம் தலைமுறையை பார்ப்பது அரிது. மது விலக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்லியும் கேக்க வில்லை. தனி மனித ஒழுக்கம் இல்லாது என்ன பயன்! மனைவி, துணைவி, இணைவி என்று எத்தனை பெயர்கள்!
ஆனால் வரலாறு மிக பெரிய பாடத்தை கற்று கொண்டு இருக்கிறது. தமிழக மக்கள் இவர்களைத்தான் கொண்டாடுவார்கள். மாற வேண்டியது தலைவர்கள் இல்லை. மக்கள்தான். ஆனால் அவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள், உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் என்று வரலாறு தெளிவாக கற்று கொடுத்து விட்டது போல் உணர்கிறேன். திருமுருகன் காந்தி போன்ற மனிதர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!
வழக்குகளை எப்பாடு பட்டாவது வாபஸ்தான் வாங்கி இருக்கிறாரே தவிர வாதாடியது ..? பல கமிஷன்கள் இவருக்காவே பாேடப்பட்டது என்பது வரலாறு ...!
லஞ்சத்தை நியாயப்படுத்த " தேனை எடுப்பவன் புறங்கையை நக்குவான்" என்று புது அர்த்தம் கூறியவர் ....எது எப்படியாே தேனையும் எடுத்தார் ..புறங்கையை யும் நக்கினார் ... இதுதான் அவரது எதார்த்தம் ...
வாழ்த்துக்கள் மணிகண்டன்!
https://rajkanss.wordpress.com/2008/09/22/%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85/
எஹேஹே ஹேஹஹாேஹஹே ஹஹஹஹஹஹஹ
ஓஓஓஓஓஹோ,,,,
ஒலகத்துல எந்த இனத்திற்கும் இல்லாத , செத்தவன விமர்சனம் பண்ணகூடாதுங்கிற, நாகரீகம், பண்பாடு, கெழபோல்டு இதெல்லாம் மழுங்கிப்போன தமிழினத்திற்கு மட்டுமே உண்டு என்பதை இதுபோன்ற நிகழ்வுகளும், உங்களைப்போன்றவர்களின் பதிவுகளும் அவ்வப்போது சுட்டிக்காட்டுகின்றன,
நீங்க திராவிட இயக்க ஆதாரவாளரா? அதை முன்பு ஆதரித்தது சரி,,,
இப்பொழுதும் ஆதரிக்கிறீர்கள் என்று சொல்வதைதான் ஜீரணிக்க முடியல,,,,,
நெஜமாதானா?
சத்யராஜ் அமைதிப்படைல சொன்ன மாதிரி,, நம்ம சனங்களுக்கு அழுவாச்சின்னா ரொம்ப பிடிக்கும், மூக்கசிந்திக்கிட்டே ஓட்டுப்போடறதுல அவங்களுக்கு அலாதி பிரியம்,,, மணிகண்டன் போன்ற வெளிப்படையான பதிவர்களே மேலே சொன்ன டயலாக்குகளுக்கு உதாரணமாக திகழும்போது அங்கு கூடிய மக்கள் கூட்டத்தை வேறென்ன சொல்ல,,,, காலாகாலத்துல நாடாளுமன்றத்தோட சேத்து தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரோணும், அதுல திமுக நிக்கோணும்,,,,சூராதி சூரன் வீராதி வீரன் பண்பின் சிகரம் ஸ்டாலின் கெலிச்சி தமிழ்நாட்டு சிம் ஆகோணும்,,,,
கருணாநிதி ஆத்துமா மேலயிருந்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கோணும்,,,,,
மணிகண்டன் இந்த பதிவு சுவராஸ்யமா இருந்தது,,, அப்படியே இவ்விசயத்தில் கனிமொழியின் அளப்பற்கரிய முயற்சியை பற்றியும் ஒரு பதிவு பாராட்டி போடுங்களேன்,,,
DMK is certainly not an alternative for AIADMK. Both the parties should be voted out of power. The key challenge is finding a sensible party / alliance, keeping aside both DMK and AIADMK.
I wrote a small write-up / note during 2011 assembly elections on DMK. The same holds good by and large, even today.
DMK should be voted out of power for
a) Corruption
Unprecedented corruption - Veeranam, Sarkaria commission, (Rs. 17,60,00,00,00,000 - 1.76 Lac Crores - loss on 2G spectrum allocation etc (Jaya convicted, but not DMK men / women doesn't make them Mahatmas)
b) Family domination / politics
1) Imposing monopoly in all their businesses with political power
2) Cinema, TV & Print media and Real Estate too?
3) 3 employees of Dinakaran were burnt alive and once the family issue got settled, there was not even an appeal by TN government
Trust me, if they are elected to power again, all grandchildren of Karunanidhi will become MLA, MLC, MP, Central and state Ministers and none other than his family should be able to run any business successfully.
c) Poor governance
1) Power cut beyond threshold, which affects industry, development and normal life for common man
d) Made “Cash for Vote” as a culture for every electorate, proudly calling as “Thirumangalam
Formula”.
We all know that this list is not comprehensive.
Dear Mani,
Your True colour has come out as Black and Red.
Keep it up.
Er.R.Ganapathy,Chennai
செய்த ஊழல்கள், ஜனநாயக படுகொலைகள், அநாகரிகமான அரசியல் அனைத்தும் மறந்து தற்பொழுது புனிதர் ஆகி விட்டார். இதுதான் இன்றைய நிலை.
//. இரண்டாம் வகுப்பு நோட்டுப் புத்தகத்தில் பிளேடு வைத்து உதயசூரியனை வரைய அது அடுத்தடுத்த பல பக்கங்களைக் கிழித்து //
நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது பரீட்சை பேடில் பேனாவால் உதயசூரியன் வரைந்தேன். பள்ளி முடியும் வரைக்கும் அதுதான்.
It is the biggest lie in this world.He is the key person who spoiled Tamilnadu politics.
People commenting about DMK conveniently forgotten hundreds of good things kalaignar did to state.
1.Establishing largest library in state by name Anna centinary library
2.establishing mini bus services mode of transport in villages
3.Establishing Farmers market in all towns
4.Setting up samathuvapurams for all castes in villages
5.Establishing sholinganallu Sez,sriser sez,coimbatore it park and many more industrial zones
6.Hogenakal drinking project for several districts
7.Law college of trichy
8.Establishment of direct paddy procurement for farmers
Above list is 10 percent only..apart from Kamaraj which other CM did so many good things..Lack of information make people to take biased opinion.
https://youtu.be/cttLOhsoSns
Post a Comment