கேரளாவுக்கான நிவாரணப் பொருட்கள்- போர்வை, லுங்கி, அரிசி உட்பட சுமார் ஒன்றரை டன் எடையுள்ள பொருட்களை நிசப்தம் நண்பர்கள் சென்னையில் சேகரித்து வைத்திருக்கிறார்கள். இவற்றை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.
இது தவிர, நிதியாக கிட்டத்தட்ட எட்டு லட்ச ரூபாய் (Rs. 7,90,189.00) வந்திருக்கிறது.ஆரம்பத்தில் கருதியது போல இந்தத் தொகைக்கு நிவாரணப் பொருட்களை வாங்குவதைவிடவும் வேறு ஏதேனும் வகையில் பயன்படுத்தலாம் என்று ஆலோசனைகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.
ஒரு கிராமம் அல்லது ஒரு சிறு பள்ளிக்கூடத்தை தேர்ந்தெடுத்து அதை முழுமையாக புனரமைத்துக் கொடுக்கலாமா என்று விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கிராமம் என்று எடுத்துக் கொண்டால் இந்தத் தொகை போதுமானதாக இருக்கும் என்று தோன்றவில்லை. பள்ளிக்கூடம் என்பது சரியானதாக இருக்கும்.
'வயநாடு நண்பர்கள்' என்று வாட்ஸாப் குழுமம் ஒன்றை உருவாக்கி இணைத்துவிட்டிருக்கிறார்கள். அவர்கள் ஆலோசனைங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் உறுதி செய்துவிட்டால் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்று திட்டமிட வேண்டும். அடுத்ததடுத்த கட்டத்தில் எழுதுகிறேன்.
நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.
இணைந்திருங்கள்.
2 எதிர் சப்தங்கள்:
//. அடுத்ததடுத்த கட்டத்தில் எழுதுகிறேன்.//
√
நல்ல தொண்டு செய்கிறீர்கள். பண உதவி செய்தோர் விபரம் வெளிப்படையாக வெளியிடப்படுவது சிறப்பு. பணத்தை எப்படி செலவிடுவது என்பது குறித்து சொல்லி இருக்கிறீர்கள். பள்ளிகளை சீரமைப்பது நெடிய அரசு பணி. தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் தங்களது வீடுகளுக்கு சென்று உடனடியாக தங்கள் வழக்கமான வாழ்வை தொடர உதவுவதே சிறப்பு என்று நினைக்கிறேன்.
Post a Comment