ஒரு வாரமாக வேலை சம்பந்தமாக மனக்குழப்பம். நலம் விரும்பி ஒருவர்- கிட்டத்தட்ட அண்ணன் மாதிரி- மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்று வரச் சொன்னார். 'சிவன் சந்நிதியிலேயே ஒரு நாள் இருந்துடுங்க. குழப்பம் போயிடும்' என்றார். அவரே கோவில் நண்பர் ஒருவரையும் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். நான்கு மணிக்கு மதுரையில் இறங்கி நடந்து குளித்து ஐந்து மணிக்கெல்லாம் கோவிலுக்குள் சென்றாகிவிட்டது. திருப்பள்ளியெழுச்சி பாடி மீனாட்சியை எழுப்பி, சிவனையும் எழுப்பி அங்கேயே மதியம் வரைக்கும் அமர்ந்திருந்து - 'முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல' என்று கேட்க விரும்பும் மதுரை நண்பர்கள் மன்னிக்க. வெகு குழப்பம். தெளிவானவுடன் சொல்லிவிட்டு வருகிறேன்.
இந்த மாதிரியான குழப்பமான சமயங்களில் மனதை வேறு வழிகளுக்குத் திருப்பிவிட வேண்டும். கோட்டுபுள்ளாம்பாளையம் அடர்வனத்துக்குச் சென்றிருந்தேன். அற்புதமாக செழித்திருக்கிறது. ஊர்க்காரர்கள் இருக்க பயமேன்? இளைஞர்கள் திரண்டிருந்தார்கள். அடர் வனம் அமைத்துக் கொடுத்த ஆனந்தும், தொரவலூர் சம்பத்தும் வந்திருந்தார்கள். ஆனந்த் பற்றி முன்பு நிறையக் குறிப்பிட்டிருக்கிறேன். சம்பத் தனது கிராமத்தில் நிறையச் செலவு செய்து ஒரு அடர்வனம் அமைத்திருக்கிறார். இப்படியான ஆட்களை பார்ப்பது அரிது. அவிநாசி அத்திக்கடவு திட்டப் போராளி. கிராமிய மக்கள் இயக்கம் என்று அமைப்பை ஆரம்பித்து மரம் நடுவது, குளம் தூர் வாருவது, பனை நடுவது என்று அலைகிறவர்.
காலை வெயில் ஏறிக் கொண்டிருந்தது. களைச் செடிகளை பிடுங்கியெறிய கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. பிறகு அடர்வனத்துக்கு முன்பாகவே நிலத்தில் அமர்ந்து கொண்டோம். இப்படி மாதம் ஒரு முறையாவது சந்தித்து பேசுவது என ஏற்கனவே முடிவு செய்திருக்கிறோம். ஊருக்குள் இளைஞர்கள் ஒரு குழுவாக இணைந்து அடுத்தடுத்து வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதுதான் திட்டம். அப்படி ஒரு குழு உருவாகிவிட்டால் நாம் அடுத்த வேலைக்கு நகர்ந்துவிடலாம். அவர்கள் தன்னியல்பாக இயங்கும் தற்சார்பு குழுவாக மாறிவிடுவார்கள். இதைத்தான் பேசினோம். இளைஞர்களிடமே நிறைய திட்டமிருக்கிறது. அவர்கள் செயல்படுத்த ஆரம்பிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் பணிக்கு ஆதரவாக நின்றால் மட்டும் போதும்.
நேற்றைய கூட்டத்துக்கு வேறு ஊரிலிருந்தும் சில இளைஞர்கள் வந்திருந்தார்கள். இருபது கிலோமீட்டர் தள்ளி நாகமலை என்ற ஒரு பகுதி இருக்கிறது. கடுமையான வறட்சி நிலவும் சிறு குன்று அது. அங்கிருந்து சில இளைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் சில மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார்கள். கைக்காசு செலவழித்து தண்ணீர் வாங்கி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். யாரோ நிசப்தம் குறித்துச் சொல்ல தேடி பிடித்து வந்துவிட்டார்கள். 'அடுத்து உங்க ஊருக்கு வர்றோம்' என்று சொன்ன போது கூட்டத்தில் இருந்தவர்கள் 'நாங்களும் வர்றோம்' என்றார்கள். சந்தோஷமாகிவிட்டது. அடுத்த வாரம் நாகமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களை எல்லாம் திரட்டி வைக்கச் சொல்லியிருக்கிறோம். நாங்கள் ஒரு குழுவாகச் சென்று அவர்களுடன் பேசி, இணைந்து அந்த மலையில் வேலைகளைத் தொடங்க வேண்டும்.
ஒரு வேலையைச் செய்யும் போது 'எல்லாத்தையும் நாமளே செஞ்சுடலாம்' என்றுதான் தொடக்கத்தில் தோன்றும். ஆனால் அது சரியான அணுகுமுறை இல்லை. வாய்ப்பிருக்குமிடங்களில் எல்லாம் அடுத்தவர்களின் உதவியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மால் இயலாதவற்றையும் கூட அவர்களில் சிலர் செய்ய சாத்தியமிருக்கிறது. அவர்களில் சிலரை அடுத்தடுத்த வேலைகளுக்குத் தயார் செய்துவிட்டு நாம் நம்முடைய பாதையில் நகர்ந்து கொண்டேயிருப்பதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது. சொல்வதற்கு இது இலகு. ஆனால் அனுபவங்களே இதையெல்லாம் சரியாகக் கற்றுத் தரும். எந்தப் பணிக்கும் இது பொருந்தும். பொதுக்காரியங்களில் நூறு சதவீதம் பொருந்தும்.
ஒரு வேலையைச் செய்யும் போது 'எல்லாத்தையும் நாமளே செஞ்சுடலாம்' என்றுதான் தொடக்கத்தில் தோன்றும். ஆனால் அது சரியான அணுகுமுறை இல்லை. வாய்ப்பிருக்குமிடங்களில் எல்லாம் அடுத்தவர்களின் உதவியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மால் இயலாதவற்றையும் கூட அவர்களில் சிலர் செய்ய சாத்தியமிருக்கிறது. அவர்களில் சிலரை அடுத்தடுத்த வேலைகளுக்குத் தயார் செய்துவிட்டு நாம் நம்முடைய பாதையில் நகர்ந்து கொண்டேயிருப்பதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது. சொல்வதற்கு இது இலகு. ஆனால் அனுபவங்களே இதையெல்லாம் சரியாகக் கற்றுத் தரும். எந்தப் பணிக்கும் இது பொருந்தும். பொதுக்காரியங்களில் நூறு சதவீதம் பொருந்தும்.
இப்படி ஆங்காங்கே விதைகள் விழுந்து கொண்டேயிருக்கும்படி பார்த்துக் கொண்டால் சரி. மிகச் சரியான வித்துக்கள் முளைத்து விருட்சமாகி அந்தந்தப் பகுதிகளுக்கு பலனும் நிழலும் தர ஆரம்பித்துவிடும் என்ற நம்பிக்கையிருக்கிறது. அதைச் செய்து கொண்டேயிருக்க வேண்டியதுதான். இன்னும் செல்ல வேண்டியது வெகு தூரம்.
10 எதிர் சப்தங்கள்:
While reading some of your blog's. I am crying...is anybody felt the same is there any problem with me...
Sir
Please share the photo of adarvanam for every month. We can come to know the progress.
All the best of your work
“நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென..
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்”
//ஒரு வாரமாக வேலை சம்பந்தமாக மனக்குழப்பம்
இதுவும் (நிச்சயம்) கடந்து போகும்!! விரைவில் தெளிவு பெறுவீர்கள்!!!
// மனக்குழப்பம்//
ஒரு வாரமா பதிவு இல்லே ன்னதுமே நினைச்சேன்.
வேலை, பொதுச்சேவை ல முசுவா (BUSY ங்கறத அப்படிதான சொல்லணும்) இருக்கீங்க
ன்னு நெனைச்சேன்.
ரெண்டு நாளு லீவை போட்டுட்டு
"குட்டியான்" ஐ கொஞ்சுங்க.
அப்புறம் குழப்பமாவது கலக்கமாவது.
என்னடாது இன்னமும் அருணாசலமே இருக்கிறாரே மணிக்கு என்ன வேலைபளுவோ/தொந்தரவோ என நினைத்தேன். விரைவில் எல்லாம் சரி ஆகிவிடும்.. வாழ்க வளமுடன்
All the best.
for nagamalai area try this successful water plan
https://www.youtube.com/watch?v=9hmkgn0nBgk
Nice take and good article. Check out BCG Matrix of apple used by companies
Post a Comment