May 8, 2018

அரசியல் மேடை

மிகக் கலவையான பெயர்களைக் கொண்ட அழைப்பிதழ் இது. யாரிடம் காட்டினாலும் 'இது என்ன காம்போ' என்பார்கள். 


கடந்த வாரத்தில் ஒரு நாள்  தா.பாண்டியன் எழுதிய  'மதமா? அரசியலா?' புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார்கள். ஐம்பது பக்கம்தான். புத்தகத்தின் பேசுபொருள் மிக முக்கியமானது. இரண்டு மணி நேரங்களில் வாசித்து முடித்துவிட்டேன். 

'வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. வாழ்த்துரையில் பெயரை சேர்த்துக் கொள்ளலாமா' என்று கேட்ட போது சரி என்று சொல்லிவிட்டேன். ஒற்றைப்படையான கொள்கைகள் கொண்ட பங்கேற்பாளர்களாக இருந்திருந்தால் மறுத்திருப்பேன்.

வாழ்த்துரை என்பதால் புத்தகத்தைப் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை.  பொதுவாக பேசலாம்.  'பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் பேசுங்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள். கூட்டத்தில் முதல் பேச்சே என்னுடையதுதான் என்பதால் கூடுதலாக ஐந்து பத்து நிமிடங்களை எடுத்துக் கொண்டாலும் கூட எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 

இது ஒரு வகையில் அரசியல் கூட்டம்தான். 

நான் கம்யூனிஸ்ட் இல்லை. கழகங்களில் இணைந்தவனுமில்லை. தேசியக் கட்சிகளில் உறுப்பினருமில்லை. முழுமையான பெரியரியவாதியுமில்லை, தமிழ்த்தேசியவாதியுமில்லை.  ஆனால் ஒன்றில் உறுதியாக இருக்கிறேன்- எப்பொழுது தேர்தல் நடந்தாலும்  இன்றைய அரசாங்கங்களை எதிர்த்து கடுமையான பரப்புரையைச் செய்ய வேண்டும். எங்கள் தொகுதியில் ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல வேண்டும். பதவி என்பதை வெற்று அலங்கரமாக்கிக் கொண்டு ஆட்சியாளர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிற கூத்துக்களையும், மக்களுக்கு எதிரான அவர்களது நிலைப்பாடுகளையும் முன் வைத்து மக்களிடம் பேச வேண்டும். எந்த அமைப்பிலும் இயக்கத்திலும் இணைத்துக் கொள்ளாமல் உதிரியாகவே இதைச் செய்ய முடியும்.

எளிய மனிதர்கள் புரிந்து கொள்ளும் அரசியல்தான் மாற்றங்களின் முதல்படி. மக்கள் புரிந்து கொள்ளட்டும். பணத்துக்கு முன்பாக என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் எதிரிகளுக்கு கடும் தலைவலியைக் கொடுத்துவிட வேண்டும். அப்படியான பரப்புரையைத் தொடங்குவதற்கான முதல் மேடையாக  இந்த புத்தக வெளியீட்டு விழா இருக்கும். அப்படிதான் தயாரிப்புகளை செய்து கொண்டிருக்கிறேன். 

20 எதிர் சப்தங்கள்:

ram said...

Dear Mr. Manikandan

It is totally wrong decision.

You can easily convey your thoughts in a neutral forum.

Madhan said...

@Ram
What is the neutral forum? His blog? Let’s not pull him down by one sentence. If you have valid suggestions, please add them before saying NO.

Mani- I feel this is a great opportunity. We wish you to grow more than this. We have seen you getting better and better in last few years.

Guna, Trichy said...

Madhan is correct. We are happy to see you in this Mani..

Prabu said...

தயவு செய்து திமுகவை ஆதரித்து விடாதீர்கள். உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன். எந்த விதத்திலும் திமுக மாற்று அல்ல. முன்பாவது ஜெயலலிதா இருந்தார், திமுகவை தட்டி கேப்பதற்கு.

அவரும் இல்லை.இப்போது இவர்கள் கையில் கொடுத்தால், அவ்வளவுதான். கேக்க நாதி இல்லை. புரிந்து கொள்வீர்கள் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன்.

எனக்கு எந்த அரசியல் சார்பும் இல்லை.

Anonymous said...

சிங்கம் களம் இறங்கிடுச்சே ...

Unknown said...

எளிய மனிதர்கள் புரியும்படியான அரசியல் அனைவருக்கும் அவசியமான ஒன்று அண்ணா.

Anonymous said...

As long as you are alone you are safe. But, that is only when your thoughts and actions primarily for self satisfaction . The more u put burden political activism of theirs, you will be cornered by all, and being alone is difficult. Nevertheless great step, your first responsibility is appraise your family what you are intended to do. Best wishes

Regular Reader said...

This is not a wise move. You are doing so well in the social space and many of us will have misgivings with the different names on the list.

Sathiya said...

Sir,
All the best in all your endeavors. But getting rid of the present rulers alone is not enough, we should drive the forthcoming elected representatives with our wants and thoughts. They should not be rulers they should only be elected representative who will hear all our concerns and help the people who elected them. We should ask them what will be their stand in the burning issues, we see that all the issues are reacted by present day government and previous government in same way. We do not want rulers we want leaders.

Thanks
Sathiya

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

இது ஒரு நடுநிலை அரங்கம் தான். கருத்துக்களை நன்றாக ஊன்றுங்கள். வாழ்க வளமுடன்

Anonymous said...

ennathai solrathu, confussion .

Anonymous said...

உசுப்பேத்தி ரணகளமாக்கி, அதில் சிலர் சுகம் அடைய இருப்பதை பார்க்க முடிகிறது. தலைவா வா......ன்னு மட்டும் இன்னும் சொல்லலை. கூடிய சீக்கிரம் அதையும் எதிர்பார்க்கலாம்.

--நாஞ்சில் மன்னன்

Anonymous said...

The names in the stage doesn't inspire confidence with their not so good intentions and actions so far. Anyways, you know better. You are gem and treasure to the society. Hope you achieve what you intend through this stage.

ram said...

@ Madhan,

plz keep quiet , you have shared your views , i am sharing my view. so learn to respect others view.

Why a good person like Mr. Manikandan should share the stage with the leaders, those who are unable to control their supporters. Mostly they are indulging the violent act during protests.

Kannan said...

தமிழ்திரு வா? இது எப்போ நடந்தது?

David D C said...

நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்கிறவர்கள், உண்மையில் நல்லவர்கள் வரும்போது, நீங்கள் நல்லவர் அதனால் வராதீர்கள் என்று சொல்வர்.

மணி! நீங்கள் எந்த களத்திலும் தற்சிறப்பு / தனித்தன்மை விட்டுக்கொடுக்காது, நற்பணி தொடருங்கள்.

மாற்றம் வரும். நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்!

Madhan said...

@Ram
‘Learn to respect others view’ - exactly my point. The way you put it like ‘ it is totally wrong decision’ is nothing but discouraging. Your second response has a reason and that is what I had asked for...

Btw I believe you are referring Velmurugan but you never know how many people liked that act... at one point, people will go to that level and we can’t keep on saying ‘follow ahimsa’. Those days are gone with Gandhi.

‘Keep quiet’ - that is funny. When you are publicly sharing your opinion, you have to be open for feedback also.. asking people to keep quiet is not going to work. If that is your expectation, welcome to the blog world :) :)

நேசன் said...

வருங்கால கோபி MLA வாழ்க வாழ்க!!!

- வா.ம இளைஞர் பாசறை, அரிசோனா மாகாணம்

Selvaraj said...

நல்லா பேசுங்க. கட்சி சார்பற்றவர்னு சொல்லிட்டீங்க அதனால சும்மா தெறிக்க விடுங்க

Murugan R.D. said...

வாவ்
தமிழர் தேசிய கழகம்
திருமுருகன் நாயர்

சூப்பர் காம்பி‌னேசன்