May 30, 2018

ரஜினிகாந்த்

'எம்.ஜி.ஆருக்கு ஏன் அருந்ததியர் மக்களிடம் இவ்வளவு ஆதரவு?' என்று பழைய ஆட்களிடம் கேட்டால் 'மதுரை வீரன் படம்தான் அவரை கடவுளாக மாற்றியது' என்பார்கள். அது மிகைப்படுத்தப்பட்டதில்லை. அந்தப் படம் எம்.ஜி.ஆருக்கு அரசியல் ரீதியில் மிகப்பெரிய பலம். இன்றைக்கு வரைக்கும் காலணிகளுக்குள் பிற கட்சிகள் பெரிய அளவிலான செல்வாக்கை பெற முடியவில்லை. அதே யுக்தியைத்தான் ரஜினி தனது சினிமாவின் அந்திம காலத்தில் பயன்படுத்துகிறார் என்று தோன்றுகிறது. கபாலியும் காலாவும் அப்படியான களம் அவருக்கு. 

ரஜினியை பெரும்பாலானவர்கள் கோமாளி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரது காய் நகர்த்தல்கள் மிகச் சரியாக இருக்கின்றன. ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஓயும் வரைக்கும் காத்திருந்து பிறகு துள்ளுவதில் ஆரம்பித்து, திமுகவுக்கும் நோகாமல், அதிமுகவுக்கும் நோகாமல், பாஜகவின் கொள்கைகளை தமிழ் முலாம் பூசி மக்களிடையே பேசுகிற ஆளாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார். 'குடும்பத்தை கவனிங்க' என்று இளைஞர் நலன் பற்றிக் கவலைப்படுகிறவராக தன்னை காட்டிக் கொள்கிறார். இவ்வளவு பேசுகிற நீங்கள் இதுவரைக்கும் இளைஞர் நலனுக்காக என்ன செய்திருக்கிறீர்கள் சார்?

சினிமாவில் ரஜினியின் தீவிர ரசிகன் நான். ஆனால் அரசியல் ரீதியில் பார்த்தல் அவர் கடுமையான விஷச் செடி. எந்தவிதத்திலும் அவர் அரசியல் களத்தில் செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது என்று விரும்புவதில்லை தவறு எதுவுமில்லை. அவரது அரைவேக்காட்டுத்தனமான கொள்கைகள், அரசியல் நிலைப்பாடுகள், தமிழர் நலன் என்று பேசுகிற போலித்தனம் என்பதெல்லாம் மிகுந்த தீமை விளைவிக்கக் கூடியவை. ஆனால் ஆக்டொபஸ் போல மெல்ல தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கியிருக்கிறார். 

கமல் கட்சி ஆரம்பித்து ஊர் ஊராகச் சென்று கூட்டம் சேர்த்து- மக்களிடையே அப்படியொன்றும் பெரிய வரவேற்பில்லாத அரசியல்வாதி என்று தன்னை வெளிப்படுத்திவிட்டார். ஆனால் ரஜினி அப்படியில்லை. 'இந்த ஆளுக்கு செல்வாக்கு இருக்கா? இல்லையா?' என்று மக்கள் கணிப்பதற்கே அவகாசம் கொடுக்காமல் தேர்தல் சமயத்தில் உள்ளே இறங்கி ஒரு அலசு அலசுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன. 

ரஜினியின் இன்றைய தூத்துக்குடி பயணம் பக்காவான அரசியல் திட்டம்.  தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்த போதெல்லாம் வாய் பொத்திக் கிடந்த ஊடகங்கள் எல்லாம் இன்று கேமிராவைத் தூக்கிக் கொண்டு ரஜினி பின்னால் அலைகின்றன.அத்தனை பேர் செத்துக் கொண்டிருந்த போது கண்டுகொள்ளாத சேனல்கள் கூட தூத்துக்குடி சம்பவத்தைவிடவும் தூத்துக்குடிக்கு ரஜினி செல்வது மிக முக்கியமான செய்தியாக பிம்பப்படுத்துகின்றன. ரஜினியும்  மக்களைக் காக்க வந்த ஆபத்பாந்தவனாக கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இவையெல்லாம் யதேச்சையாக நடக்கக் கூடிய செயல்கள் இல்லை. ஜெயலலிதாவின் ஆடியோ செய்ய முடியாததை ரஜினியால் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். 'தமிழகத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள்' என்று தமது தேசபக்தியைக் காட்டும் இன்னொரு பக்தாளாக ரஜினி பேருருவம் காட்டிக் கொண்டிருக்கிறார். 

எலும்புத் துண்டுக்கு வாலாட்டும் ஊடகங்கள் மிகுந்த சலிப்பை உண்டாக்குகின்றன. அவர்கள் அப்படிதான் இருப்பார்கள். ஆனால் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை சமூக ஊடகங்கள்தான். அரசியல் களத்தில் ரஜினி யார், அவரது பின்னால் இருப்பவர்கள் யார், ரஜினி இன்று செய்து கொண்டிருக்கும் அரசியல் என்ன என எல்லாவற்றையும் உரித்துத் தொங்கவிடுவார்கள் என்று நம்பலாம். அப்படியொரு ஆழமான விவாதம் உருவாக்கப்பட வேண்டும். எளிய மக்கள் சினிமா லைட் வெளிச்சத்தில் ஏமாந்துவிடக் கூடாது. ஒருவேளை அவர் நேர்மையானவராக இருந்தால் இங்கு உருவாக்கப்படும் விவாதங்களுக்கு வெளிப்படையான, நேர்மையான பதில்களைச் சொல்லிவிட்டு வரட்டும். மனப்பூர்வமாக ஆதரிக்கலாம். 

தொண்ணூறுகளில் இருந்த செல்வாக்கு இன்றைக்கு ரஜினிக்கு இல்லை. மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் 'இவர்தான் மாற்று' என்று தவறுதலாகக் கூட ரஜினியைத் தேர்ந்தெடுத்துவிடக் கூடாது என்று பதற வேண்டியிருக்கிறது.  இருக்கின்ற பேய்கள் மோசம் என்று கருதுகிறவர்கள்  புதியதாக ஒரு பிசாசு வருவதை அனுமதிக்க வேண்டியதில்லை. ரஜினியைப் பற்றி பேசும் போது 'ரஜினியை பொருட்படுத்த வேண்டியதில்லை' என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்படி விட்டுவிட வேண்டியதில்லை. போலியான ஒரு ஆளை, தமது கொள்கைகளை வெளிப்படையாக பேச விரும்பாத ஒருவரை, தமது வணிக நலன்களை விட்டுக் கொடுக்காத ஒருவரை புனிதப்படுத்தி தலைவராக்க வேண்டியதில்லை. 

'ரஜினி இவ்வளவு நாட்கள் நடிகராக மட்டுமே இருந்தார்..இப்பொழுதுதான் அரசியல்வாதியாக வந்திருக்கிறார்' என்று யாரவது வந்தால் கச்சநத்தம் கிராமத்தில் நடந்த கொலைகளைப் பற்றியும் ஒரு வார்த்தை பேசச் சொல்லுங்கள் என்று கேட்க வேண்டும். ஹைட்ரொ கார்பன் திட்டம் பற்றி எதையாவது சொல்லட்டும். இப்படி தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக எவ்வளவோ பிரச்சினைகள் நடந்திருக்கின்றன. எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தாத ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடியில் 'ஆவேச பேச்சு' என்று கபடி ஆடுவதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. 

ரஜினி வணங்கும் பாபாவிடம் எனக்கு ஒரேயொரு கோரிக்கைதான்- இந்த ஸ்டண்ட் அனைத்தும் காலா படத்துக்கான வியாபார யுக்தியாக மட்டுமே இருக்க வேண்டும். அப்படியிருந்தால் நாம் தப்பித்தோம். ஒருவேளை அரசியலுக்கு வருவதாக இருந்தால் தமிழக மக்கள் வாலில் வற ஓலையைக் கட்டி விரட்டியடிக்க வேண்டும். 

22 எதிர் சப்தங்கள்:

Muthuraman said...

ஐயா தங்களுடைய கருத்து ஏற்புடையதாக இல்லை.தாங்கள் தமிழ் அடிப்படைவாத கொள்கையினை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது.உண்மையில் அப்படி நடந்தால் அது துயரமான விஷயம்தான்.இங்கு மிகப்பெரிய அளவில் அரசியல் சீர் கெட்டு கிடக்கிறது.இதில் ரஜினி வந்தால் ஒன்றும் குடி முழுகி போய்விடாது.

Anonymous said...

என்ன ஒரு ஞான த்ருஷ்டி................ எங்கேயோ போய்ட்டீங்க

----- நாஞ்சில் அரசன்

thiru said...

https://tamil.oneindia.com/news/tamilnadu/rajinikanth-s-tuticorin-video-goes-on-viral-321154.html

இதோ இந்தத் தெளிவு போதும் என்று தோன்றுகிறது. ராஜா அம்மணமாய் வருகிறார் என்று ஒரு சிறு குழந்தை சொன்ன கதை போல் இருக்கிறது. இவ்வளவு நாள் "ராஜா" என நினைத்தவர்களுக்கு இந்நேரம் தெளிந்திருக்கும்.


Unknown said...

// சினிமாவில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் // இப்படிச் சொல்லியே ரஜினியின் மீதான வன்மத்தை காட்டுவது சிலரின் சமீபத்திய வழிமுறை. தனது செயல்பாடுகளில் நேர்மையைக் காட்டும் ஒருவரின் நேர்மையற்ற கருத்து.

Raja said...

சரியான கணிப்பு. அவரின் பேட்டியை பார்த்து எரிச்சல் வருவதை விட ஆற்றாமைதான் அதிகம் வந்தது. அவரின் ஏதோ ஒன்று அவரை ஒரு ஏமாற்றுக்காரனாக நினைப்பதை தடுக்கிறது. ரஜினி மோசமான ஆள் இல்லை என்பதுதான் நிதர்சனம். சமகால அரசியல் வியாதிகளை விட மேலேதான் இருக்கிறார். புகழோ, பணமோ அரசியலில் வந்து ரஜினி சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இவ்வளவு குழப்பத்தில் வந்து எப்போது பார்த்தாலும் களத்திற்கு செல்லாமல் யாராவது சொல்வதை நம்பி பேட்டியளிப்பது, போலீசை எதுவுமே தெரியாமல் சப்போர்ட் செய்வது என்று எதுவுமே ரஜினியின் செயல்பாடுகள் சரி இல்லை.


இன்று இருக்கும் சூழ்நிலையில் தினகரனின் செயல்பாடுகள் சரியாக உள்ளன. எல்லா விதத்திலும் ஸ்கோர் செய்கிறார். மத்திய அரசு கேக்கும் போது ஒதுங்கி இருந்தால் அவருக்கு எந்த கஷ்டமும் வந்து இருக்காது என்று நெனைக்கிறேன். பேச்சில் குழப்பம் இல்லை. சும்மா அரசியல் ஸ்டண்ட் அடிப்பதில்லை. முடிவுகள் எடுப்பதில் பயப்படுவதில்லை. வயதும் இருக்கிறது. பார்ப்போம்.



David D C said...

மானமுள்ள தமிழர்கள் எத்தனை பேர்?
நிதானமாக, சதிகார கூட்டத்தையும்
கைக்கூலிகளையும் புறந்தள்வோர் எத்தனை பேர்?

வாழ்வுரிமை பயணத்தை துவக்கிவிட்டோம்!
உரிமையை நிலைநாட்டும் வரை தெளிவுடன் தொடர்வோம்!

ஓநாய்கள் மீதும் ஒரு கண் இருக்கட்டும்.

Selvaraj said...

/ தமிழ் அடிப்படைவாத கொள்கை /

இதில் என்ன தமிழ் அடிப்படைவாதம் உள்ளது? யாரும் போலீசை தாக்குவதை ஆதரிக்கவில்லை. போலீஸ் தங்களுக்கு விதிக்கப்பட்ட வழிமுறையை (தண்ணீரை பீச்சுதல் , வான் நோக்கி குண்டு )பின்பற்றவில்லை என்று தெளிவாக தெரிகிறது. அதை கண்டிக்காமல் இருப்பது நியாயமா ? தீவிரவாதிகள் என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சொன்னார்கள். தீயிட்டு கொளுத்துவது தீவிரவாதம் என்றால், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போலீஸ் ஆட்டோவை கொளுத்தியது குறித்து வாய் மூடி இருப்பது என்ன நியாயமோ ?
துண்டு பிரசுரம் கொடுப்பது, ஊர் மக்களை ஒன்றிணைத்தது போராடுவது என்பதுதான் தீவிரவாதமா? அவரது பார்வை ஒரு சார்பாகவே உள்ளது. அதை மக்கள் உணர்வது நல்லது. சரியோ தவறோ ரஜினியை அரசியலில் தவிர்க்கமுடியாத நிலை என்பது வரக்கூடிய சாத்தியம் தெரிகிறது. அப்படி வரும் பட்சத்தில் அவர் மக்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளவேண்டும். AC அறையில் இருந்துகொண்டு தனக்கு தோன்றியதை பேசக்ககூடாது

சேக்காளி said...

எல்லோருக்கும் அவரவர் எண்ணங்கள், கருத்துக்கள் சரியானதே.ஆனால் மற்றவர்கள் பார்வையில் அது எப்படி என்பது தான் முக்கியம்.

Anonymous said...

நீங்களுமா......உங்கள் மனதில் உள்ளதை சொல்லலாம்.ரஜினி தன் கருத்தை சொன்னால் விஷசெடி.அது சரி தூத்துக்குடிக்கு பிறகுதானே சேலம் எட்டு வழி சாலை....நீங்கள் ஏன் முந்தி பதிவிட்டீர்கள்.அசல் திராவிடனாக மாறி விட்டீர்கள். கருப்பு கண்ணாடியை கழட்டுங்கள்.திறந்த மனதுடன் பிரச்சினை யை அணுகுங்கள்

Anonymous said...

"இன்னொரு பக்தாளாக" - சென்று சேர்ந்த மேடை அப்படி. சரியான இடத்துக்கு போய் கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Murugan R.D. said...

சென்னை
பெங்களூர்
இமயமலை
அமெரிக்கா

என்று இந்த நான்கே நான்கு எளிய இடங்களில் மட்டுமே பயணித்த நம் இரண்டாம் காந்தி அவர்களின் பாதம் முதன் முதலாக தமிழ்நாட்டில் சென்னையை தாண்டி ஒரு இடத்தில் பதிகிறது என்றால் தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க ஆரம்பித்துவிட்டது என்று தானே அர்த்தம்,,

ஏன் இப்படி வறுத்தெடுக்கிறீர்கள்,,,,,
மனசு இளிக்கிறது ச்ச்சீ வலிக்கிறது,,,,,


ரஜினி பற்றி பேசினாலே அவரின் ரசிகர்கள் பொங்கியெழுவார்களே என்று யோசித்தபடி கமண்ட் பார்த்தேன்,, உங்களுக்கு கிடைத்த டோஸ் ரொம்ப ரொம்ப கம்மி,, யூ ஆர் லக்கி,,, இந்த அளவுக்கு தப்பிச்சீங்களே,,,, ஒரு வேள பேஸ்புக்ல வாங்கி கட்டிகிட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்,, நான் பேஸ்புக் போவதில்லை என்பதால் தெரியவில்லை,,,

மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டி தீர்த்திட்டீங்க,, உண்மையும் கூட,,,, கமலின் நடவடிக்கைகள் பற்றி விமர்சனமும் நெத்தியடி,,,,

Pankajaputhran said...

தொடர்ச்சியான அவரது பேச்சுகள் கருத்துகள் அதை தொடர்ந்த பிஜேபி ஆதரவு அனைத்தும் அவரின் மீதான நம்பத்தன்மையை ஏற்படுத்தவில்லை. மேலும் பொது வெளியில் நீங்கள் குறிப்பிட்டதுபோல் அவர் அரசியல் குறித்த பரவலான விவாதமே இதன் மீதான புரிதலை தரும். தவிர அவரது ரசிகர் என்ற காரணத்தினால் அவரது அரசியலையும் ஏத்துக்க வேண்டிய கட்டாயமில்லை. அவருக்கும் காவி சாயம்தான் போல!

Catherine Augustine said...

ஆமா.. யார் நீங்க ? எங்க இருந்து வரீங்க? சென்னை ல இருந்து தூத்துக்குடி வர நூறு நாள் ஆகுமா ?

// Tuticorin shooting has created an everlasting pain in the people's hearts. Such opportunistic persons cannot play stunts anymore. Really happy to see the enlightening. But we have paid a huge price

Anonymous said...

Sir,
Its your blog, your comment. I have no rights to criticize your comments. But since you are the person who welcome feedback thought of sharing this.

Not only Rajnikanth any person on the world can be criticized by anyone. So I am not going to argue that he is above criticism.

Personally what I liked about you is, the fact that you are talking practical and above all logical things, no matter what the mass attitude is. ( when Bangalore was on fire, you gave real stats on things ).

I am not so learned or noble person like you who do many good things and meet many people to have vast exposure, but in my limited knowledge, I am seeing a strange shift in your opinions and criticism.. such as..

(1) Supporting violence (toll gate attack), and praising Velmurugan
(2) Linking Diwali celebration induction and BJP ( When did we start celebrating Diwali and when did BJP came to power)
(3) Trying to highlight -ve sides of Periyar. What is the need to do so when things are on fire at that time. ( I am completely against his most of his principles, but Periyar as an identity is still required for Tamil Nadu's equality )
(4) And linking Rajni's action and meeting people as his promotional stunts. Sir honestly speaking, have you seen his movies because of the fact he said he might come into politics? If you have not, then what makes you to belittle other people thinking they are watching movies because he said he is going to come to politics. The one who has declined all advertisements ( you know his real value, the hundreds of crores he can mint if he does advertisement), the one who is not giving interviews to tv channels to promote his movies, would he do this cheap trick? or does his movie require any promotion ?

Let him start his party and announce his agenda. Then decide or criticize, why so much hurry sir ? If his game plan is to announce near the election it is not against the law right? If people believe him let them vote.

Shooting innocent people is crime and those police men and authorities who gave orders should be punished severely. No second thought on that. He had already condemned it.

But at the same time, why not accept the fact that fringe elements were there in the protest? He didn't say general public set the quarters on fire or attacked the police. He said fringe elements. If people are criticizing this statement, are we agreeing it is general public who attacked police and set quarters on fire?

I too have reservations on his last statement, that protests is not good for state. He could have given more facts like, it will not attract any companies to start business here, will indirectly cause job loss etc. But does that make him to be neglected.

Ok lets neglect him, then what ? Moondram Kalingar ? ;) just kidding.

Disregard this if my comments didn't make sense to you. Because what seems right to me may be wrong or foolish to you :)

- Somesh

மதன் said...

இந்த கண்மூடித்தனமான ரசிகர்கள பார்த்தால் ரொம்ப பயமாயிருக்கு.

If you oppose BJP outside of Tamil Nadu, you are Anti-national. If you do that in Tamil Nadu, you are part of fringe group. What a great segregation by people..

You can’t be in the middle :(

Anonymous said...

As a strong DMK cadre you expressed your opinion and fear also. nothing more than that.

அன்பே சிவம் said...

அப்படியே ஆமக்கறி அண்ணன புகழ்ந்து ஒரு கவிதை பார்சல்.

David D C said...

மாண்டவர்களில் சமூக விரோதிகளை காட்டமுடியவில்லை
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் காட்டமுடியவில்லை
அப்படி எனில், எந்த பாதிப்பும் இல்லாமல் வந்து வன்முறையில் ஈடுபட்டு திரும்ப முடிந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க போனவர்கள் மீதெல்லாம் பெயர்குறிப்பட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன
சமூக விரோதிகள் மீது ஒரு வழக்கு பதிவாகியுள்ளதா?
ஆம் என்றால் யார் அவர்கள்?
இல்லை என்றால் அப்படி என்ன invisible aliens ஆ?

இது எந்த தனிநபர் நோக்கிய வினா அல்ல.

Selvaraj said...

(என் முதல் பின்னூட்டம் இந்த கட்டுரைக்கு)

கட்டுரையாளர்தான் சொல்கிறாரே 'ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தால் மக்கள் பிரச்சினைகளுக்கு அவரின் நிலைப்பாடு என்ன என்று வெளிப்படையாக அறிவித்து கொண்டு தாராளமாக அரசியலுக்கு வரட்டும் என்று' அதுதானே சரி. தற்போது ரஜினியின் வயதையும் 67. அவரின் உடல்நிலையையும் நாம் கருத்தில் கொண்டால் அவராகவே அரசியலுக்கு வரும் முடிவை இந்த முடிவை நிச்சயம் எடுத்திருக்க மாட்டார். என் சந்தேகத்தை நேரடியாகவே சொல்கிறேன் பாரதிய ஜனதா கட்சி அவர் முதுகில் ஏறி சவாரி செய்ய அவரை ஒரு கேடயமாக பயன்படுத்துகிறது பின்னாலிருந்து இயக்குகிறது இதுதான் உண்மை.

ரஜினிக்கு பத்ம விபூஷண்
மகளுக்கு ஐநா மன்றத்தில் பரதநாட்டியம் ஆட வாய்ப்பு
ஆன்மீக அரசியல்

Anonymous said...

இந்த ஸ்டண்ட் அனைத்தும் காலா படத்துக்கான வியாபார யுக்தியாக மட்டுமே இருக்க வேண்டும். அப்படியிருந்தால் நாம் தப்பித்தோம். ஒருவேளை அரசியலுக்கு வருவதாக இருந்தால் தமிழக மக்கள் வாலில் வற ஓலையைக் கட்டி விரட்டியடிக்க வேண்டும்.

ராஜகோபாலன் said...

If your expectations are for a ideal political leader., then what you wrote is a literary piece... Let me cherish your dream., if to be logical ,, tell me, is there one leader who could control their followers today in Tamil Nadu. All parties have local leaders with their own demand to permit them to loot locally. After Jayalalitha, there is none, Rajini may not fill the vacuum, not kamal, not Vijayakanth, but , these people can put powerful parties to be careful with people. These people by their offer of a better govt , force indirectly the national and regional parties to offer growth based, strategy based promises. Their offer or promise to public can't be vague any more. So, let's welcome more and more people into politics who has no hope to win, but, has a meaning to their life.

Anonymous said...

ரஜினி அரசியலுக்கு வருவது நல்லது.
எப்படியென்றால் கிறுக்கனுக
ஓட்டல்லாம் திருடர் கழகத்துக்கு
போகாமல் ரஜினி க்கு பிரியும்.
அது தமிழ் நாட்டுக்கு நல்லது.