'டேய் நான் முரளி பேசறேன்' என்கிறார். அழைப்பை எடுத்தவுடன் 'அடே புடே' என்றால் கோபம் வரத்தானே செய்யும்? ஒருமையில் விளிக்கிற அளவுக்கு எந்த முரளியும் நண்பனில்லை. கொஞ்ச நேரம் யோசனை ஓடியது.
'உன்னைப் பத்திச் சொன்னாங்க..நெம்பர் வாங்கிக் கூப்பிட்டேன்' என்று அவராகப் பேசிக் கொண்டே இருந்தார். நிச்சயமாகத் தெரிந்த மனிதராகத்தான் இருக்கும் போலிருக்கிறது. முகத்தில் அறைந்த மாதிரி 'யார் நீங்க' என எப்படிக் கேட்பது?
'எந்த முரளின்னு டக்குன்னு நினைவுக்கு வரலைங்களே' என்று இழுத்தேன்.
சிரித்துவிட்டு 'அருணாச்சலம் வாத்தியார்கிட்ட ட்யூஷன் படிச்சோமே' என்றார்.
'அவனா நீயி'.
அவனை எனக்கு நன்றாகத் தெரியும். இருபத்தைந்து வருடங்கள் ஓடிவிட்டது. மின்னலடிக்க 'டேய் முளரியா' என்றேன். எழுத்துப் பிழை இல்லை. முளரிதான். சிரித்துவிட்டான். அவனேதான். ஒரே தனிப்பயிற்சியில் படித்தோம். முரளியின் அப்பாவுக்கு நாங்கள் மிகச் சிறுவர்களாக இருந்த போதே முடியெல்லாம் நரைத்து தளர்ந்திருந்தார். இவன் அவர்களுக்கு ஒரே பையன். வெகு காலம் கழித்துப் பிறந்தவன் என்பதால் தாங்கு தாங்கென்று தங்குவார். அவனை நடக்க வைக்க மாட்டார். அவரிடம் ஓர் ஓட்டை சைக்கிள் இருந்தது. அதில்தான் அவனை வைத்துக் கொண்டே சுற்றுவார்.
அவனை எனக்கு நன்றாகத் தெரியும். இருபத்தைந்து வருடங்கள் ஓடிவிட்டது. மின்னலடிக்க 'டேய் முளரியா' என்றேன். எழுத்துப் பிழை இல்லை. முளரிதான். சிரித்துவிட்டான். அவனேதான். ஒரே தனிப்பயிற்சியில் படித்தோம். முரளியின் அப்பாவுக்கு நாங்கள் மிகச் சிறுவர்களாக இருந்த போதே முடியெல்லாம் நரைத்து தளர்ந்திருந்தார். இவன் அவர்களுக்கு ஒரே பையன். வெகு காலம் கழித்துப் பிறந்தவன் என்பதால் தாங்கு தாங்கென்று தங்குவார். அவனை நடக்க வைக்க மாட்டார். அவரிடம் ஓர் ஓட்டை சைக்கிள் இருந்தது. அதில்தான் அவனை வைத்துக் கொண்டே சுற்றுவார்.
ஐந்தாம் வகுப்பு வரையிலும் ஆல்- பாஸ். படித்தாலும் படிக்காவிட்டாலும் மேல் வகுப்புக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். ஆறாம் வகுப்பில் ஃபெயில் உண்டு. அதனால் முரளியின் அப்பா அவனை தனிப்பயிற்சியில் சேர்த்துவிட்டார்.
அருணாச்சலம் வாத்தியார்தான் பாவம். 'உங்க பையனுக்கு பேர் எழுதவே தெரியலைங்க' என்பார்.
'சார்..ஏதாச்சும் பண்ணுங்க..ஆனா பையன் மேல கை மட்டும் வெச்சுடாதீங்க' என்று சொல்லிவிட்டுப் போவார். அதே எங்கள் அம்மா இருக்கிறாரே? வாதியாரைப் பார்த்தால் 'அடிக்கறதுக்கெல்லாம் யோசிக்காதீங்க' என்று போட்டுக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார். ட்யூஷனில் அடி வாங்கும் ஒரே அப்புராணி நானாகத்தான் இருப்பேன். அது ஒரு தனிக்கதை.
முரளி என்று எழுதி அதன் மீது நூறு தடவை எழுதச் சொன்னாலும் அழித்துவிட்டு புதிதாக எழுதும் போது 'முளரி' என்று எழுதுவான். வாத்தியார் அடிக்கவே கூடாது என்றுதான் முயற்சிப்பார். ஆனால் முளரியின் அறிவு அப்பேர்பட்டது. 'உங்கப்பன் அடிக்க வேண்டாம்னு சொல்லுறாருனு பார்க்கிறேன்...இல்லன்னா கொன்னே போடுவேன்...ஒழுங்கா எழுதடா' என்பார்.
அப்பவும் முளரிதான். முரளி அவனுடைய பெயரை எழுதி பழகுவதற்காக வாத்தியார் தண்ணி குடித்துக் கொண்டேயிருந்தார். 'வக்காரோலி...தெரியாத்தனமா இவனுக்கு கரிகாலச் சோழன்னு பேர் வெச்சு இருந்தாங்கன்னா இந்நேரம் நான் தூக்குல தொங்கி செத்து இருப்பேன்' என்று அவர் புலம்பியது நினைவில் இருக்கிறது.
ஆறாம் வகுப்பில் அவனை ஃபெயில் ஆகிவிட்டார்கள். அதன் பிறகும் அவனைப் பார்ப்பதுண்டு. ஆனால் பெரிய தொடர்பில்லை. சில வருடங்களில் ஊர் மாற்றிச் சென்றுவிட்டார்கள்.
'இந்தியா வர்றேன்' என்றான்.
'நீ வெளிய இருக்கியா?'
'ஆமாண்டா....இப்போ நியூ ஜெர்சி'.
இவனும் எப்படியோ படித்து முடித்து பெட்டி தட்ட வந்துவிட்டான் பாருங்கள்.
'ஊருக்கு வரும் போது சொல்லுடா...ஒரு நாள் பார்க்கலாம்' என்றேன்.
'ஆமா... எந்த கம்பெனில இருக்க?'
பெயரைச் சொன்னான். ஆச்சரியப்படும் நிறுவனம் அது. ஏதாவதொரு வேலையில் இருப்பானாக இருக்கும். இரான், குவைத் என்று சொல்லியிருந்தால் ஒட்டகம் மேய்க்கிறான் என்று முடிவு செய்திருப்பேன். நியூ ஜெர்சியில் ஒட்டகம் மேய்க்க முடியாது.
'என்ன ரோல்ல இருக்க'
'சீனியர் டெலிவரி மேனேஜர்'
'டேய்' இந்த டேய் சாதாரண டேய் இல்லை. சத்தமேயில்லாமல் காற்று மட்டும் வெளியில் வருவதான டேய். ஒரு முறை சொல்லிப் பாருங்கள். சொல்லிப் பார்த்தீர்களா? அதேதான்.
என்னை விட ஒன்றிரண்டு வருடம் பின்னால்தான் வேலையில் சேர்ந்திருக்கக் கூடும். 'உனக்கு மெயில் கூட அனுப்பத் தெரியல' என்று நான் இன்னமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறேன். அவனுக்கு எப்படி சாத்தியம்?
'மல..நல்லருக்கியா மல' என்றேன். ஏன் இவ்வளவு ஆச்சரியப் படுகிறேன் என்பது அவனுக்கும் புரிந்திருக்கும்.
காட்டிக் கொள்ளாமல் 'நீ என்ன பண்ணுற' என்றான். எல்லாவற்றையும் விலாவாரியாக்கிவிட்டு 'கோயமுத்தூர்ல ஒரு வேலை இருந்தா சொல்லுடா....' என்றேன்.
'அங்க எங்க கம்பெனி இல்ல...ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல விசாரிக்கிறேன்...give me sometime..I will get back to you' என்றான்.
தொரை இங்கிலிஷ் எல்லாம் பேசுது என்று நினைத்துக் கொண்டேன். பேசுவான். பேசுவான். பேசாமலா இருப்பான்? எப்படியோ வேலை வாங்கி கொடுத்தால் சரி.
படித்து முடிக்கும் வரைக்கும்தான் மதிப்பெண்களை மதிப்பார்கள். சம்பாத்தியம் என்று வந்துவிட்டால் மதிப்பெண்கள் என்பதெல்லாம் பொருட்டேயில்லை. தனித்துவமான திறமை மட்டும்தான். பேசத் தெரிய வேண்டும். காற்றிலேயே கம்பு சுற்ற வேண்டும். எதிர்த்து நிற்கிறவனை இலாவகமாகக் கட்டியணைத்து நம் கால்களை அவனது கால்களுக்குள் விட்டு சிரித்தபடியே வளைத்து வீழ்த்தத் தெரிய வேண்டும். பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? கார்பொரேட்களில் மட்டுமில்லை. தள்ளுவண்டியில் காய்கறி விற்றாலும் கூட சூத்திரம் இதுதான்.
'எப்படிடா நீயெல்லாம்?' என்று கேட்கலாம்தான். கார்பொரேட் பெருந்தலைகளிடம் முதல் முறையிலேயே நெருக்கமாகிவிடக் கூடாது. விஷப்பாம்புகள். எல்லாவற்றுக்கும் இன்னொரு அர்த்தம் எடுத்துக் கொண்டு சிரித்தபடியே பதில் சொல்வார்கள்.
'ஆமா நீ நிசப்தம் படிப்பியா?' என்றேன்.
'தமிழ் படிக்கிறதில்லைடா..' என்றான்.
'இன்னுமாடா தமிழ் படிச்சுப் பழகலை' என்றேன்.
சிரித்தான். 'Its not required for me as of now' - நல்லதாகப் போய்விட்டது. அவனைப் பற்றி என்ன எழுதினாலும் திட்ட மாட்டான். இந்தியா வரட்டும் நேரில் பேசிவிட்டு இன்னும் நிறையச் சொல்கிறேன்.
7 எதிர் சப்தங்கள்:
// எதிர்த்து நிற்கிறவனை இலாவகமாகக் கட்டியணைத்து நம் கால்களை அவனது கால்களுக்குள் விட்டு சிரித்தபடியே வளைத்து வீழ்த்தத் தெரிய வேண்டும். பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? //
ஆமா மா அப்பல்லோ வுல சேந்த அம்மா வையும் பாத்தோம்.அக்ரகாரத்துல இருக்குற அம்மாவையும் பாத்தோம்.
போவேரா அந்தால.
படுத்த பத்து நிமுசத்துல தூக்கம் வரணும்.
முக்குன அடுத்த நிமுசத்துல கக்கா வரணும்.
//உன்னைப் பத்திச் சொன்னாங்க..நெம்பர் வாங்கிக் கூப்பிட்டேன்//
நியூஜெர்சி வரைக்கும் புகழ் பரவிருக்கு ன்னா தெறம தாம்ய்யா.
Wow!!!
'மல..நல்லருக்கியா மல' என்றேன். ஏன் இவ்வளவு ஆச்சரியப் படுகிறேன் என்பது அவனுக்கும் புரிந்திருக்கும்.//ha ha...
மல..நல்லருக்கியா மல' என்றேன் ஹா ஹா ஹா ஹா அப்டியே வடிவேல் அர்ஜுன்டா கேக்குறத நினச்சேன் செம (புள்ளபூச்சிக்கெல்லாம் கொடுக்குமுளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்)
//அவனை எனக்கு நன்றாகத் தெரியும். இருபத்தைந்து வருடங்கள் ஓடிவிட்டது. மின்னலடிக்க 'டேய் முளரியா' என்றேன். எழுத்துப் பிழை இல்லை. முளரிதான். சிரித்துவிட்டான்.//
எழுத்துப்பிழை இருக்கு.. /ஓடிவிட்டது/ ஓடிவிட்டன தானே சரி??
A satire post? I believe his new school helped him much.
Post a Comment