ஒரு மனுசனுக்கழகு சொன்ன வார்த்தைய காப்பாத்தனும். இதான் என் கேள்வி. புரியுதா. புரியும்னு நம்புறேன்.
சத்தியமாக புரியவில்லை. 'வாரம் ஒரு தடவை கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்' என்று சொல்லியிருந்தேன். அந்த வார்த்தையைக் கூட காப்பாற்றவில்லை. செய்யக் கூடாது என்றில்லை. செய்ய முடிவதில்லை. இப்படி எவ்வளவு விவகாரங்களில் கோட்டை விட்டிருக்கிறேனோ தெரியவில்லை. 'இதுதான் நீ சொன்ன வார்த்தை' என்று சுட்டிக் காட்டினால் காப்பாற்றிவிடுகிறேன்.
கவனமில்லாமல் வேகமா வேலை செய்றப்ப எல்லாரும் பாராட்றாங்க, கவனமா, நிதானமா யோசிச்சு செய்யும்போது, ஏன் அமைதியா, டென்ஷனாயிருக்கீங்கன்னு கேட்கறாங்க. கருத்து முரண்பாடு அதிகமாயிடுது. என்ன பண்ண?
உங்கள் பலமே கவனமில்லாமல் வேகமாகச் செய்வதுதான் என்னும் போது ஏன் மெனக் கெடுகிறீர்கள்? அப்படியே இருந்துவிட வேண்டியதுதானே! கருத்து முரண்பாடு வருவதாகத் தெரியும் போது நான் பெரும்பாலும் வாயைக் கட்டிக் கொள்வேன்.
பணமெல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது, அத எப்ப வேணாலும் சம்பாதிச்சக்கலாம்ன்னு சொல்றாங்க. அப்படி சம்பாதிக்கறாங்களா?
நேற்று ஊரிலிருந்து நானும் அம்மாவும் வந்து கொண்டிருந்தோம். எங்களுக்குத் தெரிந்த சில பெரும் பணக்காரர்களை அம்மாவுக்குச் சுட்டிக் காட்டிப் பேசினேன். கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள். ஆறாம் வகுப்பையும் எட்டாம் வகுப்பையும் தாண்டாதவர்கள் அவர்கள். டாஸ்மாக் கடைக்கு அருகில் பார் நடத்துவதற்கு அரசாங்கம் ஏலம் விடும். ஒரேயொரு கடையை எடுத்து நடத்தினால் கூட லட்சக்கணக்கில் வருமானம் நிற்கும். அவருக்கு பனிரெண்டு கடைகள் இருக்கின்றன. கணக்குப் போட்டுக் கொள்ளலாம். தமது பெயரைக் கூட அவரால் முழுமையாகச் சேர்த்து எழுத முடியாது. எழுதத் தெரியாது. பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. பெரும்பாலானவர்கள் எதிக்ஸ் பார்ப்போம். நேர்மையாகச் சம்பாதிப்போம் என்றிருப்போம். சம்பாதித்துவிடலாம். ஆனால் காலம் பிடிக்கும்.
ஒரு வேளை நீங்கள் மதிக்கும் தலைவர் ஒருவரிடமிருந்து அரசியலுக்கு வர சொல்லி அழைப்பு வந்தால் என்ன செய்வீர்கள். முக்கியமான கண்டிஷன் அந்த தலைவர் பெயரை இங்கேயே இப்போதே சொல்ல வேண்டும்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் மோடியின் பெயரைச் சொல்லியிருப்பேன். இப்பொழுது ராகுல் காந்தியின் பெயரைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. அரசியலுக்கு என்னை வரச் சொல்லிக் கேட்கிற அளவுக்கு நான் என்ன அவ்வளவு பெரிய அதுப்பா? ஆசை இருந்தால் நாமாக போய்ச் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான்.
[அனானிமஸாக இருக்கட்டும் என்று விரும்பினால் மட்டும் பெயர் குறிப்பிட வேண்டாம். இல்லையெனில் பெயர் குறிப்பிட்டு கேள்வியை அனுப்புங்கள்.நிச்சயமாக மகிழ்ச்சியடைவேன். பதில் சொல்லாத சில கேள்விகள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் விரைவில் பதில் எழுதிவிடுகிறேன்]
கேள்விகளை உள்ளிட: Sarahah இணைப்பு.
6 எதிர் சப்தங்கள்:
அனானிமஸ், அணிமல்ஸ்,மட்டுமில்ல, அவதார் புருஷ்க்கும் ப'தில்லு" சொல்வார்யா, எங்க தல. காரணம் நேர்மை மட்டுமில்ல. அடிச்சு ஆட இப்பதான் நேரம் கூடியிருக்கு.
சரிதானுங்களே! கொ.ப.செ.
வாரத்தில் இரண்டுநாள் கேள்வி பதில் என்று சொல்லியிருந்தீர்கள் (மூன்று நாளுக்கு ஒருமுறை என்று). கேள்வி பதில் நன்றாகத்தான் இருக்கிறது நேரமிருந்தால் வாரத்திற்கு ஒருமுறையாவது பதிவிடுங்கள்.
பின்னூட்டம் போடுறவங்களும் தங்கள் பெயரை குறிப்பிட்டார்கள் என்றால் நன்றாக இருக்கும். யாருக்காவது பதில் பின்னூட்டம் எழுதவேண்டுமென்றால் நிறைய அனானிமஸ் இருப்பதால் சற்று சிரமம்.
//அனானிமஸாக இருக்கட்டும் என்று விரும்பினால் மட்டும் பெயர் குறிப்பிட வேண்டாம். இல்லையெனில் பெயர் குறிப்பிட்டு கேள்வியை அனுப்புங்கள்.//
கணக்கெடுத்து கச்சி பொறுப்பாளர்களை நியமிப்பதற்கு வசதியாய் இருக்கும் என்பதற்காக இருக்குமோ என சந்தேகப் படுகிறார் அவைத்தலைவர்.
அடிச்சு ஆடி சந்தேகத்தை களையவும்.
//பதில் சொல்லாத சில கேள்விகள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் விரைவில் பதில் எழுதிவிடுகிறேன்//
அந்த எரநூறு ஓவா என்னாச்சு?
//ஆசை இருந்தால் நாமாக போய்ச் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான்//
அவைத்தலைவா!!!!
நம்மை அரசியல் அநாதைகளாக்க சதி நடைபெறுவது போல் இருக்கிறேதே. உமக்கு ஏதும் தோன்றுகிறதா?
கொபசெ
பொதுச் செயலாளரும், அவைத்தலைவரும் எடுக்கும் ஜன நியாயமான முடிவுக்கு கட்டுப்பட வேவேண்டியது கொ.ப.செ. வின் கடமை.
Post a Comment