‘எனக்கு இது மட்டும்தான் தெரியும். இதைத் தாண்டி என்ன வேலையைச் செய்வது?’ என்று யாராவது கேட்கும் போது பதில் சொல்லத் தெரியாது. அவரவர் தேடலைப் பொறுத்துத்தான் அமையும். சுந்தரையும் அவரது நண்பர்களையும் வெகு காலமாகத் தெரியும். மென்பொருள் துறை உட்பட ஆளாளுக்கு ஒரு வேலையில் இருக்கிறார்கள்.
எல்லோருமாகச் சேர்ந்து ஆழியாறில் நிலத்தைக் குத்தகைக்குப் பிடித்து விவசாயம் செய்தார்கள். சுழற்சி முறையில் தோட்டத்துக்குச் சென்றுவிடுவார்கள். ‘இன்னைக்கு நீ; நாளைக்கு நான்’. விடுமுறை நாட்களில் தோட்டத்தில்தான் இருப்பார்கள். வேளாண்மை ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. நஷ்டம்தான். ஏதாவதொரு பிரச்சினை வந்து கொண்டேயிருக்கிறது. ஆனாலும் விடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
‘தொழிலைப் பழகுவோம் சார்’ என்பார்கள். எப்படி இப்படி விடாப்பிடியாகச் செய்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும்.
சில மாதங்களுக்கு முன்பாகப் பேசிய போது ‘அப்படியே ஒரு டீக்கடை ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கோம்’ என்றார் சுந்தர். சுந்தர் தொடர்ச்சியாக நிசப்தம் வாசிக்கிறவர்.
‘டீக்கடையா?’ என்றேன்.
‘ஆமா சார்..கொஞ்சம் வித்தியாசமா’ என்று பதில் சொன்னார். அதற்கு மேல் கேட்டுக் கொள்ளவில்லை. டீக்கடையில் எப்படி வித்தியாசம் காட்ட முடியும் என்று குழப்பமாக இருந்தாலும் கமுக்கமாக இருந்து கொண்டேன்.
எப்பொழுதாவது பேசுவார். ‘கடை எப்போ ஆரம்பிக்கப் போறீங்க?’ என்றால் ‘டீக்கடைக்கு சைட் டெவலப் பண்ணிட்டு இருக்கோம்’ என்பார். தலையில் ஓங்கி அடித்தது போல இருக்கும். ‘டீக்கடைக்கு எதுக்குய்யா சைட்?’ என்று தோன்றுமா தோன்றாதா? ஒருவேளை நம்மைக் கலாய்க்கிறார்களோ என்று கூடச் சந்தேகப்பட்டிருக்கிறேன்.
வாயை வைத்துக் கொண்டு சும்மாயிராமல் ‘மாஸ்டர் கேரளாவுல இருந்தா?’ என்று கேட்டுவிட்டேன். எதார்த்தமாகத்தான் கேட்டேன். கோயமுத்தூரிலிருந்து எட்டிப் பிடித்தால் பாலக்காடு. அங்கேயிருந்து காவி வேஷ்டியை மடித்துக் கட்டிய ஒரு சேட்டனை டீ மாஸ்டராக நியமித்து இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் கேட்ட கேள்வி அது.
‘உங்களுக்கு எங்க கடையைப் பற்றித் தெரியல’ என்று சொன்னார். ‘தெரிஞ்சா ஏய்யா இவ்வளவு கேள்வி கேட்கப் போகிறேன்’ என்று நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு சில நாட்கள் கழித்து ஒரு சலனப்படத்துக்கான இணைப்பைப் பார்த்தேன். கடை உருவாவது குறித்தான படம் அது. அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள்.
Container Coffee shop. கப்பலில் சரக்கு அனுப்பப் பயன்படுத்தும் ஒரு கண்டெய்னரைப் பிடித்து விலைக்கு வாங்கி அதனுள்ளே அலங்காரப்படுத்தி அதை டீக்கடையாக மாற்றியிருக்கிறார்கள். இனியும் டீக்கடை என்று சொல்லக் கூடாது. Cafe.
எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!
மென்பொருள் நிறுவனங்கள் பெருகிக் கிடக்கும் கோவை சரவணம்பட்டியில் ஆரம்பிக்கிறார்கள். யுவ யுவதிகள் நிறைந்த இடம். கேப்புசீனோவும் எக்ஸ்ப்ரெஸ்ஸோவும் விற்றுத் தீரக் கூடிய இடம்தான். வாழ்த்துக்கள்.
நேற்று சுந்தர் அழைத்தார். ‘இந்த வாரம் ஊருக்கு வர்றீங்க இல்ல சார்?’ என்றார்.
சனிக்கிழமை மாலையில் திருப்பூர் புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதாகத் திட்டம் வைத்திருக்கிறேன். ‘ஞாயிற்றுக்கிழமை எங்க கடையை நீங்கதான் திறந்து வைக்கணும்’ என்றார். அழைப்பிதழும் அடித்துவிட்டார்கள்.
ஆறு இளைஞர்களின் கனவுத் திட்டம் இது. தினசரி ஓட்டங்களிலேயே சிக்கியிருக்கும் பெருங்கூட்டத்தில் வித்தியாசமாகச் சிந்திக்கக் கூடிய விதிவிலக்கான இளைஞர்களில் ஒரு குழு இது. வெற்றியடையட்டும். இத்தகைய இளைஞர்களின் வெற்றிதான் ‘எனக்கு இந்த வேலையைத் தவிர ஒண்ணும் தெரியாதே’ என்று பயப்படுகிற லட்சக்கணக்கானவர்களுக்கான தூண்டுகோலாக இருக்கும். ‘இது மட்டும்தான் வேலையா? கொஞ்சம் மண்டையைத் திறந்து யோசித்தால் ஏதாவது சிக்கிவிடும்’ என்கிற மனநிலையை உருவாக்கும்.
கறிவேப்பிலையைத் தூக்கி வீசுவது போல பணியிடங்களிலிருந்து பிடுங்கி வீசப்படுகிற காலத்தில் இத்தகைய மனநிலை கொண்ட இளைஞர்கள்தான் சமூகத்தின் சமநிலை குலையாமல் காப்பாற்றுவார்கள். மிகப்பெரிய கனவுகளோடு இளைஞர்கள் ஆரம்பிக்கவிருக்கும் ஒரு தொழிலைத் தொடங்கி வைக்கிற வயதும் அனுபவமும் எனக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் மனமார வாழ்த்தவும் அவர்களுக்காக இறைவனை இறைஞ்சவும் நிறைந்த மனமிருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பர்களே!
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் நிகழ்வுக்கு வருக. சந்திப்போம்.
21 எதிர் சப்தங்கள்:
இந்த இளைஞர்களின் இந்த முயற்சி நிச்சம் பெரும்பாலானவர்களுக்கு முன்னுதாரணமாகவும் ஊக்கமாகவும் இருக்கும். வாழ்த்துக்கள். 'முதலில் பாறையாக தெரிந்த குளம் கை வைத்தவுடன் உடைந்துபோனது'
define:philanthropist
a person who seeks to promote the welfare of others, especially by the generous donation of money to good causes.
Philanthropist என்று அவர்களாக குறிப்பிட்டுவிட்டார்கள். நீங்கள் பதற வேண்டியதில்லை அனானிமஸ். எந்த அடையாளத்தையும் நான் பயன்படுத்துவதில்லை.
பதிவைப் படித்தவுடன் அதில் உள்ள 9940888633எண்ணில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் கூறி பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
வாழ்க வளமுடன்
மணியிடமறைக்கயெ தற்க்குமு கமூடி. மணியின்பால் நேயமிருப்பின் அகற்றிவிடுக. அன்றேல் தயக்கமிருப்பின் துணிந்து வினவுக.
பசங்க பின்றாங்க ... வாழ்த்துக்கள் ... சரவணம்பட்டி போகும் போது ஒரு ட்ரின்க் -எ போற்றுவோம் கன்டைனர் கஃபே ல .... by the by, வா. ம -வை "தல" அப்டினு கூப்பிட வேண்டிய நேரம் வந்துருச்சு ..
வாழ்த்துக்கள்.
"மாத்தி யோசி" த்தால் வெற்றி நிச்சயம் மீண்டும் நிருப்பிக்கப்பட்டது. வாழ்த்துகள் நண்பர்களே
Wish you all the best friends :)💐💐
//தொடங்கி வைக்கிற வயதும் அனுபவமும் எனக்கு இருப்பதாகத் தோன்றவில்லை//
வயசு வேணா கொறைவா இருக்கலாம்.
மனமார வாழ்த்தவும் அவர்களுக்காக இறைவனை இறைஞ்சவும் நிறைந்த மனமிருக்கிருக்குல்லா.அந்த மனசு போதும்.
"அனுபவம்" இது கூட ஒரு அனுபவம் தான்.
வாழ்த்துக்கள் "HiFive Cafe & Cakes"
//நீங்கள் பதற வேண்டியதில்லை//
அடுத்தவர் நலமாக இருக்கணும் ன்னு நீங்க நெனைக்கலியா மணி?.அப்புறம் என்ன?
இது போன்ற இடங்களில் "ஆமாய்யா" ன்னு சொல்லணும்.
கொபசெ சொல்லுறது ல தப்பு ஒண்ணும் இல்லியே அவைத்தலைவா?
Good attempt.
Don’t respond to the anonymous questions like this. You don’t have to prove anything to these guys Mani.
யப்பா! கொ.ப.செ. உம்ம 'கடி'தம் ஏற்கப்பட்டது. (போறுமா! போறுமா?) மண்ணிக்கத் தெரிஞ்சவன் ஆத்மா. மன்னிப்பு கேக்க துணிஞ்சவர் மஹாத்மா.
நீருமயமஹாத்மா ஆக வாழ்த்துகள்.ளே
Best wishes....
கடையை தொடங்கி வைக்க அவர்கள் சரியான மனிதரைதான் கூப்பிட்டு இருக்கிறார்கள். அரசு பேருந்துகளில் பயணம் செய்து மற்றவர்களின் துயரை துடைக்கும் ஒரு நல்ல இதயத்தை அழைத்து கடையை தொடங்கி வைப்பது மிகவும் பொருத்தமே.
வாழ்த்துக்கள்.
நாடென்ன செய்தது நமக்கு யென்ற வினாவை தொடுக்காமல் அடுத்தெ ன்னாட்டுக்கு செய்ய வேண்டிய தென்னயென யோசிக்கும் நீர் உள்ளவரை வற்றாது நம்நாடு.
இளைஞர்களின் இந்த முயற்சியைப் பாராட்டுவோம்.
சரவணன் சேகரைய்யா!, இது நம்ம எடம் மட்டுமில்ல நன்மையின் பிறப்பிடம். தன்னடக்த்தின் இருப்பிடம். ஆனால் கூவூறதுக்கு முன்ன COPY RIGHT பிரச்சின வருமான்னு யோசிக்கனும். ஏற்கனவே தலய தலன்னு Declare பண்ணியாச்சு. எங்ப்பா இந் கொ..செ.
// எங்ப்பா இந் கொ..செ.//
மரியாதைக்குரிய அவைத்தலைவருக்கு,
ஏற்கனவே நம்மால் "தல" யாக ஏற்றுக் கொள்ளப் பட்ட நம்ம "தல" யை சரவணன் சேகர் என்பவர், "by the by, வா. ம -வை "தல" அப்டினு கூப்பிட வேண்டிய நேரம் வந்துருச்சு" என குறிப்பிட்டுள்ளதற்கு காப்புரிமை உள்ளதால் வழக்கு தொடுக்கலாமா என்ற ஆலோசனை வழக்கறிஞர் அணியினருடன் நடந்து கொண்டிருந்தது.ஆதலால் உடனடியாக விளக்கம் அளிக்க முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இந்த "மன்னிப்பு" என்பது "மகாத்மா" வை நோக்கிய பயணத்திற்காக கேட்கப் படுவதல்ல."வாம" வின் பாறைகள் கட்டுக்கோப்பானவர்கள்,த(ல)லைமைக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதனால் மட்டுமே.
அதே நேரம் கொளத்தூர் கொள்ளை வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள "நாதுராம்" என்னை துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவான் என்ற பயத்தினால் "மகாத்மா" என்ற அடைமொழியை ஏற்க பயப்படுகிறேன் என்றும் கருதி விட வேண்டாம்.
இறுதியாக சரவணன் சேகரும் நம்மை போன்றே தாமதமாக சிந்தித்திருப்பதால் அவரையும் நம்மில் ஒரு "குறும்பாறை" யாக சேர்த்து நம் இயக்கத்தை வலுப்படுத்த வழக்கறிஞர் அணி வலியுறுத்தியுள்ளது. எனவே அவரையும் நம் இயக்கத்தில் இணைத்துக் கொள்ள அவைத்தலைவர் அனுமதிக்குமாறு கட்டளையிடுகிறேன்.
இப்படிக்கு
கொபசெ
வாம பாறைகள்.
Wish you all the best Cafe team...
Post a Comment