சிவா வந்திருந்தார். சிவசுப்பிரமணியன். குறள்பாட்டை உருவாக்கியவர். ஜெர்மனி சென்று கொஞ்ச நாட்கள் பணியிருந்துவிட்டு இப்பொழுது அங்க ருந்து லண்டனுக்கு இடம் மாறிவிட்டார். அவர் முன்பு பெங்களூரில் இருந்த போது சந்தித்திருக்கிறோம். இன்று கப்பன் பூங்காவிலிருந்து அழைத்தார்.
‘மெட்ரோ புடிச்சு ட்ரினிட்டி வந்துடுங்க..’ என்றேன். அங்கேயிருந்து எங்கள் அலுவலகம் பக்கம். வருகிறவர்களுக்கு காபியோ டீயோ வாசுதேவ் அடிகாஸில் வாங்கி அந்தக் கடையை ஒட்டிய சந்தில் இருக்கும் அரசமரத்தடிக்கு அழைத்துச் சென்றுவிடுவது வாடிக்கை. அந்த அரசமரத்தடி எம்.ஜி.சாலை மாதிரியே இருக்காது. அணில் கத்தும். குருவிகள் பறக்கும். நடக்க முடியாத பணக்கார வீட்டு நாய் ஒன்றைத் தள்ளுவண்டியில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்கள். அந்த நாய் வாழ்ந்து முடித்த கிழவனைப் போல சாலையின் நடமாட்டங்களை வேடிக்கை பார்த்தபடியே அமர்ந்திருக்கும்.
‘மெட்ரோ புடிச்சு ட்ரினிட்டி வந்துடுங்க..’ என்றேன். அங்கேயிருந்து எங்கள் அலுவலகம் பக்கம். வருகிறவர்களுக்கு காபியோ டீயோ வாசுதேவ் அடிகாஸில் வாங்கி அந்தக் கடையை ஒட்டிய சந்தில் இருக்கும் அரசமரத்தடிக்கு அழைத்துச் சென்றுவிடுவது வாடிக்கை. அந்த அரசமரத்தடி எம்.ஜி.சாலை மாதிரியே இருக்காது. அணில் கத்தும். குருவிகள் பறக்கும். நடக்க முடியாத பணக்கார வீட்டு நாய் ஒன்றைத் தள்ளுவண்டியில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்கள். அந்த நாய் வாழ்ந்து முடித்த கிழவனைப் போல சாலையின் நடமாட்டங்களை வேடிக்கை பார்த்தபடியே அமர்ந்திருக்கும்.
இப்பொழுதெல்லாம் வாரம் இரண்டு மூன்று நண்பர்களையாவது சந்தித்துவிடுகிறேன். நேற்று பிரகாஷ் வந்திருந்தார். மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணியில் இருந்தவர். நல்ல சம்பளம். சில மாதங்களுக்கு முன்பு பேசிய போது கோவை வந்துவிடப் போவதாகச் சொன்னார். இப்படி நிறையப் பேர்கள் சொல்வார்கள். ஆனால் வரமாட்டார்கள். நேற்று மதியம் அழைத்து ‘நான் இந்தியாவுக்கு வந்துட்டேன்’ என்றார். ஆச்சரியமாக இருந்தது. ‘பெங்களூரில்தான் இருக்கேன்’ என்றார். அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு குழந்தைகள். சொந்தமாக ஒரு வீடு வாங்குமளவுக்கு பணம் வைத்திருக்கிறார் போலிருக்கிறது. கோயமுத்தூரில் சுமாரான சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டார். வந்தவுடனேயே வேலை கிடைத்துவிடப் போகிறதா? அதுவரைக்கும் இருக்கட்டும் என்று பெங்களூரில் ஒரு வேலையைப் பிடித்திருக்கிறார். குடும்பம் கோவையில்.
நிறையத் திட்டங்கள் வைத்திருக்கிறார். இத்தகைய மனிதர்களுடன் பேசும் போது சுவாரசியமாக இருக்கும்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக அலுவலக நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘அமெரிக்காகாரன் விசாவையெல்லாம் முடக்கிட்டான். பழைய நிறுவனத்தில் வேலை செஞ்ச ஆளுங்க சொன்னாங்க...இனி கஷ்டம்ன்னு’ என்று எதிர்மறையாகவே பேசிக் கொண்டிருந்தார். இத்தகைய ஆட்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு பிரகாஷ் மாதிரியான ஆட்களிடமும் சிவா மாதிரியானவர்களிடமும் பேச வேண்டும். அப்பொழுதுதான் வித்தியாசம் தெரியும்.
சிவாவின் மனைவி வேறொரு நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். அவருக்கு லண்டன் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தவுடன் அவரை அனுப்பிவிட்டு இவர் தேடி ஜெர்மனியில் வேலையைக் கண்டுபிடித்துவிட்டார். ‘நீ லண்டன்ல இரு...பக்கம்தானே..நான் ஜெர்மனியில் கொஞ்ச நாளைக்கு இருக்கேன்’ என்று இருவருக்குமிடையில் டீலிங் போலிருக்கிறது. ஜெர்மனி சென்றுவிட்டார். ஆறு மாதங்களுக்குப் பிறகு லண்டனில் வேலையைக் கண்டுபிடித்து இப்பொழுது குடும்பத்துடன் அங்கே இருக்கிறார்.
‘ஐரோப்பாவில் நிறைய வேலை இருக்குங்க..வழி மட்டும் தெரிஞ்சா ஈஸியா போய்டலாம்’ என்று பேசிக் கொண்டிருந்தார்.
‘நீங்க விவரமா எழுதிக் கொடுங்க’ என்று கேட்டிருக்கிறேன்.
‘நீங்க வர்றீங்களா?’என்றார்.
வெளிநாட்டுக்குச் செல்வதெல்லாம் இனி சாத்தியமில்லை. அறக்கட்டளை வேலைகளை ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் கூட யோசித்திருக்கலாம். இப்பொழுது இங்கேயே தொடர்வதுதான் சரியாக இருக்கும். நம் ஊரிலேயே இருந்தால்தான் இத்தகைய பணிகளைச் செய்ய முடியும். நேரத்தைக் கடுமையாக உறிஞ்சுகிறது. நீட் தேர்வுக்கான பயிற்சிகள், சூப்பர் 16, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பயிலரங்குகள் என்கிற வேலைகளுக்கு மட்டுமே இந்த வருடத்தில் பாதி கரைந்திருக்கிறது. ஒவ்வொரு சனி, ஞாயிறும் தேவைப்படுகிறது. இடையில் மருத்துவ உதவிகள், அதற்கான விசாரணைகள் என்பது இன்னொரு பக்கம். மாதத்தில் நான்கு சனி, ஞாயிறுகள் போதுவதில்லை.
தமிழ்நாட்டுக்குள் சென்றுவிட்டால் இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் செய்யலாம். தமிழ்நாட்டுக்குள் சென்றாலும் ஏதேனும் வேலையில்தான் ஒட்டியிருக்க வேண்டும். சுயதொழில் செய்வதற்கு நேரம் போதாது. அப்படி ஆரம்பித்தால் கவனம் முழுமையும் அதில்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் யாராவது உருவிக் கொண்டு போய்விடுவார்கள். இப்படியே ஒரு நாளைக்கு எட்டு அல்லது பத்து மணி நேர வேலை, அதற்கேற்ற சம்பளம் என ஓட்டிக் கொண்டிருந்தால் பிற காரியங்களைச் செய்து கொண்டிருக்கலாம்.
என் கதை இருக்கட்டும்.
எதற்குச் சொல்கிறேன் என்றால் வெளியுலகம் தெரியாத எதிர்மறையான ஆட்கள் சுற்றிச் சுற்றி இருக்கிறார்கள். தலைக்கு மேல் வெள்ளம் போவதாகச் சொல்லி வருந்துவதில் அலாதி இன்பம் அவர்களுக்கு. அவர்களையெல்லாம் கண்டுகொள்ளவே கூடாது. ‘இங்க ஒரு வழி இருக்குங்க’ ‘இப்படி ஒரு ரூட் இருக்குங்க’ என்று வழிகாட்டிக் கொண்டேயிருக்கிற ஆட்கள் நான்கைந்து பேர்களை கூட வைத்துக் கொள்ள வேண்டும். அது போதும் எதற்கும் பயமிருக்காது. பாஸிட்டிவிட்டி.
என்னிடம் ஒரு மிகப்பெரிய வழி இருக்கிறது. ‘நீ மட்டும் பெரிய ஆள் ஆகிட்டா சட்டி பானையைக் கழுவிட்டு ஹவுஸ் ஹஸ்பெண்ட் ஆகிக்கிறேன்’ என்று வேணியிடம் சொல்லியிருக்கிறேன். வேலை, விளக்கெண்ணெய் என்று எந்தக் கச்சடாவும் இல்லாமல் இருந்துவிடலாம். இருக்கன்குடி மாரியம்மன் மனம் வைத்து அவளுக்கு விரைவில் பணி உயர்வைக் கொடுக்க வேண்டும்.
3 எதிர் சப்தங்கள்:
I would like to add something from my experience. Positive thinking is always good but you have to be ready and should have plan for what you are going to face when you are going to try new assignment or especially moving to the new place. If you want only money, your perspective is good. But you will lose your life when husband and wife live in different places and even if you have child, that life is horrible. I have seen people in USA, how much struggle to take care of their children. You will have money but no peace of mind, which will give all stress/anxiety. Moreover, there is many other problems like visa, transport (going to office and buy groceries etc), safety etc. Again, I am saying you should set your mind how you are going to handle it and this is how you are going live for sometime. Once you set your mind for all these challenges, you are good. Unfortunately, most people do not have that mental strength. I know some people is handled very smiley and polite for those situations. Actually, those simple people are my role model.
//‘நீ மட்டும் பெரிய ஆள் ஆகிட்டா சட்டி பானையைக் கழுவிட்டு ஹவுஸ் ஹஸ்பெண்ட் ஆகிக்கிறேன்’ என்று வேணியிடம் சொல்லியிருக்கிறேன்.//
ஐஸ் ஐஸ்
//வெளிநாட்டுக்குச் செல்வதெல்லாம் இனி சாத்தியமில்லை. அறக்கட்டளை வேலைகளை ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் கூட யோசித்திருக்கலாம்.
அதெல்லாம் நெனச்சா போகலாம்...நீங்க போகாததுக்கு காரணம் உங்க சுய நலம் தான்....
மத்தவங்களுக்கு ஏதாவது நல்லது செஞ்சு சந்தோசமா இருக்கணும்-ங்கிற உங்க சுய நலம் தான்....
================
//சட்டி பானையைக் கழுவிட்டு ஹவுஸ் ஹஸ்பெண்ட்
என்னோட dream job அது ...
அன்புடன் அருண்.
http://iravukkirukkalgal.blogspot.com.au
Post a Comment