Jun 7, 2017

மே 2017

பதினேழு லட்ச ரூபாய் நிரந்தர நிரந்தர வைப்பு நிதியிலிருந்து பரிமாற்றக் கணக்குக்கு மாற்றப்பட்டிருக்கிறது. நிரந்தர வைப்பு நிதியில் இருந்ததனால் கிட்டத்தட்ட ஐம்பத்தெட்டாயிரம் ரூபாய் வட்டியாகக் கிடைத்திருக்கிறது. அதுவும் அறக்கட்டளையின் கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறது.


மே மாதத்தின் செலவினங்கள்-

கிருஷ்ணா என்னும் குழந்தையின் பராமரிப்புக்காக வழங்கப்பட்ட தொகை ரூ.2000.

சிகாகோவில் வசிக்கும் தமிழர்கள் இணைந்து தமிழகத்தின் பசுமை மீட்புப் பணிக்காக 1,35,000 ரூபாய் அனுப்பி வைத்திருந்தார்கள். ஒழலக்கோயில் பஞ்சாயத்தில் வேலை மும்முரமாக நடைபெற்ற போது ‘சீமைக்கருவேல மரத்தை வெட்டக் கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்தது. சீமைக்கருவேல புதரை அகற்றாமல் நீர் நிலைகளை எப்படி மேம்படுத்துவது என்று குழம்பி வேலையை அத்தோடு நிறுத்திவிட்டு அது வரை செய்த பணிக்கான தொகை ரூ.49,675 க்கு காசோலை வழங்கப்பட்டது. (விவரங்கள்: இணைப்பில்)

சிஐடி கல்லூரியில் படிக்கும் அங்குராஜூவுக்கு ரூ.19,500 வழங்கப்பட்டது. அங்குராஜ் தனது சித்தியின் பராமரிப்பில் வளர்ந்து படித்துக் கொண்டிருக்கிறான்.

அறக்கட்டளையின் கணக்கில் மே மாத இறுதியில் முப்பது லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய் இருக்கிறது. (ரூ.30,09,146.88). வருடாந்திர வரித்தாக்கலுக்காக ரசீது தேவைப்படுகிறவர்கள் நன்கொடையின் மாதம் தேதி குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பி வைத்தால் சரிபார்த்துவிட்டு ரசீதை அனுப்பி வைத்துவிடுகிறேன்.

கணக்கு விவரங்களில் ஏதேனும் சந்தேகமிருப்பினும் கேட்கவும்.

நன்றி.