‘குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்’ கட்டுரை எழுதிய தினத்தன்று அது அதிகமாக கவனம் பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக் வழியாக பரவலாக பரவிக் கொண்டிருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். ஏப்ரல் 21 ஆம் தேதியை இந்த ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக அறிவுறுத்தி தொடக்கப்பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டிருக்கிறது. நிசப்தத்தில் எழுதிய கட்டுரைதான் விடுமுறை அளிக்கப்பட்டதற்கான காரணம் என்று உரிமை கொண்டாடவில்லை. அது சரியாகவும் இருக்காது. ஆனால் சிலரின் கவனத்தையாவது ஈர்த்திருந்தால் அதுவே ஆகப் பெரிய திருப்தி.
கோபிபாளையம் ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் கடிதம் எழுதி அதை ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்திருந்தார். அவரது குறிப்பு கொடுத்த சந்தோஷம் அளவிட முடியாதது.
***
சமூகத்திற்கான எழுத்து விதைகள் என்றும் விளையும்;
உறுதியாகக் கனி கொடுக்கும்...
தமிழகத்தில் தற்போது நிலவும் கடுமையான வெப்பச் சூழலில், தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகள் அனுபவிக்கும் துயரங்களை, நண்பர் வா.மணிகண்டன் அவர்கள் தன் வலைப் பூவில் கட்டுரையாக எழுதியிருந்தார்.
அடுத்த நாளே அக்கட்டுரை குழந்தை நல ஆர்வலர்கள், அரசு துறை உயர் அலுவலர்கள், ஆசிரியர் இயக்கங்கள் எனப் பரவலாகப் பரவியதோடு, அரசின் கவனத்தையும் ஈர்த்தது.
விளைவு?
எதிர்வரும் 22ஆம் நாள் முதல், "பள்ளிகளுக்கு விடுமுறை" என தமிழக அரசின் கல்வித் துறை அறிவித்துள்ளது. கல்வி, அரசியல், சமூகம், பசுமை, நட்பு என இவர் தூவும் அனைத்து எழுத்து விதைகளும் விளைந்து கனி கொடுக்கின்றன.
குழந்தைகளின் துயர் நீக்கி, மகிழ்ச்சியை மலர வைத்த தங்களின் விரல்களுக்கு, மிக்க நன்றி, வா.மணிகண்டன்.
***
வெம்மையின் கொடுமையைக் கருத்தில் எடுத்துக் கொண்டு அரசாங்கமாகவே இந்த முடிவை எடுத்திருந்தாலும் அல்லது வேறு எவரேனும் இதே கோரிக்கையை முன்னெடுத்திருந்தாலும் மகிழ்ச்சி. இல்லையென்றால் துரும்பை எடுத்துப் போட்ட சந்தோஷம் எனக்கு. சமூக மாற்றம், புரட்சி என்றெல்லாம் மிகப்பெரிய பிரளயங்களை உருவாக்க வேண்டியதில்லை. உருவாக்குவது சாத்தியமும் இல்லை. கவனத்திற்கு வரும் பிரச்சினைகளின் மீது சிறு சிறு கற்களை எறிந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான்- காலம் முழுக்கவும்.
முயற்சி யாருடையதாக இருப்பினும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி. கட்டுரையைப் பரவலாக பகிர்ந்து கொண்டவர்களுக்கும்.
முயற்சி யாருடையதாக இருப்பினும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி. கட்டுரையைப் பரவலாக பகிர்ந்து கொண்டவர்களுக்கும்.
8 எதிர் சப்தங்கள்:
கவனதாயினி தாமரை சில நாட்களுக்கு முன் இதே கோரிக்கையை பதிவிட்டிருந்தார்
வாழ்த்துக்கள் மணி!
http://tamil.oneindia.com/news/tamilnadu/thamarai-urges-govt-shut-the-schools-due-scorching-summer-280130.html
நன்றி சாம்ஸன்.
யார் எடுத்துச் சென்றால் என்ன? தகவல் அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டினால் சரி. கவிஞர் தாமரை அவர்களுக்கு ஃபேஸ்புக் வழியாக இந்தத் தகவலைக் கொண்டு போய்ச் சேர்த்தது இங்கே வாழ்த்துக் கடிதம் எழுதியிருக்கும் தலைமையாசிரியர்தான். அதன் பிறகு தாமரை அவர்கள் ஃபேஸ்புக்கில் எழுதினார். ஆசிரியரின் வாழ்த்தை பதிவு செய்ய வேண்டும் எனத் தோன்றியது. சிறு குறிப்பாக எழுதினேன்.
பிரபலமானவர்கள் சொல்லும் போது தொடங்கி வைத்தவர்கள் மீது நிழல் விழத்தான் செய்யும். அது பற்றி எதுவுமில்லை.
உங்களைப் போன்றவர்கள் பதறும் போதுதான் வருத்தமாக இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன்? :)
// இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன்? //
அந்த இளம் பிஞ்சு குழந்தைகளும் அவர்கள் பெற்றோரும் வாழ்த்தும் வாழ்த்து நிச்சயம் பலம் வாய்ந்தது.
அடுத்த இல்லுமினாட்டி பட்டம் பெற உள்ளவர், அன்பர் வா.ம. வர்லாம் வா, வர்லாம் வர்லாம் வா வா, வா.ம.
வாழ்த்துகள் அன்பே சிவம்.
மன்னிக்கவும் மணி
பதற்றம் ஏதுமில்லை, தங்களை குறைத்து மதிப்பிடவுமில்லை, நிசப்தத்தில்தான் நான் முதலில் படித்தேன், தாமரையும் இதுபற்றி எழுதியிருந்யிருதார் என்பதை ஒரு செய்தியாக சொல்லவந்து-அதுவும் இருமுறை (வேறு எவரேனும் இதே கோரிக்கையை முன்னெடுத்திருந்தாலும் மகிழ்ச்சி), அது வேறு அர்த்தம் கொடுத்து தங்களின் நியாயமான சந்தோஷத்தை கெடுத்து (உங்களைப் போன்றவர்கள் பதறும் போதுதான் வருத்தமாக இருக்கிறது) வருத்தப்பட வைத்ததற்கக மிகவும் வருந்துகிறேன். வேறு எந்த நோக்கமும் உண்மையாகவே இல்லை. இப்போதுதான் பதற்றமாக இருக்கிறது
மன்னிக்கவும் மணி
அன்புடன்
சாம்
Post a Comment