‘நீட்’ மாதிரியான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதும் மருத்துவப் படிப்புக்குச் சேரவிருக்கும் மாணவர்களை கடுமையாக வடிகட்டுவது அவசியம் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. காரணமில்லாமல் இப்படிச் சொல்லவில்லை. இன்றைக்கு கோடிகளில் பணம் வைத்திருக்கிறவர்கள் தங்கள் மகனையோ அல்லது மகளையோ எழுபத்தைந்து லட்சம் வரைக்கும் கொடுத்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துவிடத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் நீட் தேர்வு என்பது பெரிய தடைக்கல். பணம் கொடுத்து இடம் வாங்குவதாக இருந்தாலும் கூட நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்ணை வாங்க வேண்டும். இதுதான் பிரச்சினை. வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு வந்து ‘அய்யோ....அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் தெரியுமா?’ என்று கதறுவார்கள். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதைதான் இது.
சரியான புள்ளிவிவரம் கைவசம் இல்லாமல் விழித்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் ஒரு நண்பர் அனுப்பி வைத்திருந்தார்.
ராமநாதபுரத்தைச் சார்ந்த ராஜூ என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விவரங்களைக் கேட்டிருக்கிறார். 2009-10 ஆண்டிலிருந்து கடந்த எட்டு வருடங்களில் சற்றேறக்குறைய முப்பதாயிரம் மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இதில் எத்தனை பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்று நினைக்கிறீர்கள்? வெறும் 278 பேர்தான். கணக்குப் போட்டால் ஒரு சதவீதம் கூட இல்லை. இதுதான் நம் மாநிலத்தில் அரசுக் கல்வியின் லட்சணம். அரசுப் பள்ளிகளை மெல்ல மெல்ல நசுக்கி தனியார் பள்ளிகளை உசுப்பேற்றுவதுதான் கடந்த பதினைந்து வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறதே.
அரசுப் பள்ளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் அரசுப் பள்ளிகளில்தான் மாணவர்களை மிரட்டக் கூடாது, அடிக்கக் கூடாது என்று ஆயிரம் விதிகளை அரசாங்கம் வகுக்கிறது. தனியார் பள்ளிகளைப் பற்றி அரசாங்கம் ஏதாவது மூச்சு விடுகிறதா? அங்கேயெல்லாம் விடிய விடிய மாணவர்களை விழிக்க வைத்துப் படிக்க வைக்கிறார்கள். சத்தம் வெளியே வராமல் அடித்து கும்முகிறார்கள். கிட்டத்தட்ட சித்ரவதைக் கூடங்களாகத் தனியார் பள்ளிகளின் மேனிலைக் கல்வி இருக்கிறது. அடித்து, உதைத்து பிழிந்து எப்படியாவது உந்தித் தள்ளி விடுகிறார்கள். பெற்றோர்களும் கண்டுகொள்வதில்லை. அரசாங்கமும் கண்டுகொள்வதில்லை.
அரசுப்பள்ளிகளிலும் அடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் விதிமுறைகள் எல்லோருக்கும் பொதுவாக இருக்கட்டும். தனியார் பள்ளிகளை மட்டும் தாஜா தாஜா என்று வைத்திருந்தால் அடுத்தடுத்த வருடங்களும் தனியார் பள்ளிகளில்தான் மாணவர்களைக் கொண்டு போய் அமுக்குகிறார்கள். கூலி வேலைக்காரராக இருந்தாலும் கூட அரசாங்கப் பள்ளிகளை விரும்புவதில்லை என்றால் எப்படி விரும்புவார்கள்?
அரசுப்பள்ளிகளிலும் அடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் விதிமுறைகள் எல்லோருக்கும் பொதுவாக இருக்கட்டும். தனியார் பள்ளிகளை மட்டும் தாஜா தாஜா என்று வைத்திருந்தால் அடுத்தடுத்த வருடங்களும் தனியார் பள்ளிகளில்தான் மாணவர்களைக் கொண்டு போய் அமுக்குகிறார்கள். கூலி வேலைக்காரராக இருந்தாலும் கூட அரசாங்கப் பள்ளிகளை விரும்புவதில்லை என்றால் எப்படி விரும்புவார்கள்?
பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தினால் அரசுப் பள்ளி மாணவர்களால் ஜொலிக்க முடியாது என்பதெல்லாம் புரட்டுவாதம். அரசுப் பள்ளி மாணவர்களைச் சாக்காகக் காட்டி பணக்காரர்களின் பிள்ளைகளைத் தாங்கிப் பிடிக்கிற அயோக்கியத்தனம். அரசுப் பள்ளி மாணவர்கள் எப்பொழுதுமே பரிதாபம்தான். அவர்களைச் சுட்டிக் காட்டியே நுழைவுத் தேர்வு ரத்து, நீட் தேர்வு வேண்டாம் என்று சோம்பேறிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். வெறுமனே பாடத்தை மனனம் செய்து வாந்தியெடுத்து மதிப்பெண்களை வாங்கினால் போதும் என்றால் தனியார் பள்ளி மாணவர்கள்தான் மதிப்பெண்கள் வாங்குவார்கள். அங்கேதானே ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் அமுக்கி படிக்க வைக்கிறார்கள்?
பொதுவான நுழைவுத் தேர்வை நடத்தினால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நல்லதுதான். வெறுமனமே மனனம் செய்தால் போதும் என்றில்லாமல் புரிந்து எழுதுகிற தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை வாங்குவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஒருவேளை நீட் தேர்வு நடைபெற்றால் மருத்துவப்படிப்பில் சேரக் கூடிய அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சற்றே கூடினாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் அதற்கு விடமாட்டார்கள். வாந்தியெடுக்கிற தேர்வு முறைதான் இவர்களுக்கு தோதுப்படும். அப்பொழுதுதான் மேனேஜ்மெண்ட் கோட்டா கல்லா கட்டும்.
நீட் தேர்வு நடைபெறுவதால் அந்நிய மாநில மாணவர்கள் யாரும் இங்கே வந்து சேர்ந்துவிடப்போவதில்லை. தமிழகத்திற்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்களின் எண்ணிக்கை அப்படியேதான் இருக்கும். ஆனால் அந்தப் படிப்பில் சேர்வதற்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணை நீட் தேர்வில் வாங்க வேண்டும். பீட்சாவும் பர்கரும் தின்றுவிட்டு சோபாவில் அமர்ந்து டிவி பார்த்தபடியே எழுநூற்றுச் சில்லரை வாங்கிய பணக்காரப் பையனால் ஒரு கோடி ரூபாய் கொடுத்து எம்.பி.பி.எஸ்ஸில் சேர முடியாது. அதனால்தான் பணக்கார பெற்றோர்கள் பதறுகிறார்கள்.
வேறு காரணங்களைச் சொன்னால் விவாதிக்கலாம்.
உடனடியாக நீட் தேர்வு நடத்தக் கூடாது என்று கோரிக்கை வைப்பதற்கு ஒரே காரணம்தான் - CBSE பாடப்பிரிவில் மாணவர்கள் பயிற்சி பெற்றிருக்க மாட்டார்கள். இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இடைவெளி கொடுத்து ஒன்பதாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பிலிருந்தே பாடத்திட்டங்களை சற்றே மேம்படுத்தி அமைத்துக் கொடுத்தால் நீட் தேர்வு என்பது தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பெரிய சிரமத்தைக் கொடுக்காது என்கிற அடிப்படையில்தான் மூன்று அல்லது நான்கு வருட இடைவெளி கேட்பது.
ஒருவேளை அரசாங்கம் ‘அதெல்லாம் தர முடியாது’ என்று சொன்னாலும் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறேன். கடந்த எட்டு வருடங்களாக சராசரியாக வருடத்திற்கு 34 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். அடுத்த சில வருடங்களுக்கு அந்த எண்ணிக்கை பத்து அல்லது இருபது என்கிற அளவுக்கு குறைந்தாலும் கூட ஒன்றும் குடி மூழ்கிப் போய்விடாது.
இன்று ப்ளஸ் டூ தேர்வு ஆரம்பமாகிறது.
நீட் தேர்வு குறித்தான பெரிய அளவிலான விவாதம் ஏதுமில்லை. இதைப் பற்றி பேசுகிற ஆட்களின் எண்ணிக்கையும் வெகு குறைவு. ஆனாலும் ஒன்றும் பிரச்சினையில்லை. நீட் தேர்வு நடத்தப்பட்டால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக் கூடுமோ என்கிற பயத்தில்தான் சற்றே அடக்கி வாசித்தேன். மேற்சொன்ன புள்ளிவிவரத்தைப் பார்த்த பிறகு தைரியமாகவே நீட் தேர்வை ஆதரித்துப் பேசலாம். கடுமையான வடிகட்டலுக்குப் பிறகு மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேரட்டும். இல்லையென்றால் வேறு படிப்புகளைப் படிக்கட்டும். இதே கடுமையை பொறியியல் படிப்பிலும் அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என்றே குரல் கொடுக்கலாம்.
பணக்காரர்களின் பிள்ளைகளும் தனியார் பள்ளிகளும் கைகோர்த்து வேட்டையாடுவதற்கு அரசுப் பள்ளி மாணவர்கள்தான் கேடயம். இல்லையா? அயோக்கியப்பயல்கள்.
22 எதிர் சப்தங்கள்:
It is true.so long way to go. As already told
syllabus and teaching
pattern
That itself give a change among the students.Exposure will be more.
I strongly recommend to abolish so called management quota I all degrees. Both in NEET and engineering colleges. AICTE knows , but they won't see that as offence, why?
Common entrance exam for engineering is coming in 2018 sir.
Books and Reference for NEET exam:
Must Books
1)NCERT book
2)Aakash study materials
3)Any coaching institute's study material, especially the question bank including the tests
General books
PHYSICS:
1.Complete NEET Guide for Physics by MTG
2.Concepts of Physics by H.C. Verma
3.Objective NCERT at Your Fingertips for NEET-AIIMS
4.Fundamentals of Physics by Halliday, Resnick and Walker
5.Get an Insight of - NEET Physics with 28 Years Chapterwise Solutions of CBSE AIPMT & NEET
CHEMISTRY:
1.Physical Chemistry by P. Bahadur
2.Concepts of Physical, Organic, Inorganic chemistry by O. P. Tandon
3.Objective NCERT at Your Fingertips for NEET-AIIMS
4.New Pattern Chemistry by R.K Gupta
5.Get an Insight of - NEET Chemistry with 28 Years Chapterwise Solutions of CBSE AIPMT & NEET Organic Chemistry Paperback by Robert Thornton Morrison
6.Concise Inorganic Chemistry by JD Lee
7.Complete NEET Guide for Chemistry by MTG
BIOLOGY:
1.Dinesh Companion Biology by K Bhatti
2.Objective NCERT at Your Fingertips for NEET-AIIMS
3.Complete NEET Guide for Biology by MTG
4.Get an Insight of - NEET Biology with 28 Years Chapterwise Solutions of CBSE AIPMT & NEET
5.Trueman's Biology Vol 1 and 2
In USA they have SAT for high school to college. MCat for medical schools. Based on this test scores and academic credentials one get accepted. This for the students from Rural Mississippi to Urban NYC and every school district is different in their evaluation of the grades.
They consider from from 9 to 12 for the high school. Extra curricular and Community service, and advance placement tests are added to the above to determine a well rounded student to go to college. MySon had a excellent GPA and 90th percentile in SAT and was the captain of Swimming team, He also spent a month in India teaching English to Street kids in Mumbai. He got accepted in Cornell , an Ivy League with 90% grant. Remember they consider if you are going to college for the first generation or minority or economically down trodden.
Financial aid is based on your income tax returns of the parents every year. He works in the campus for 16 hours a week and that takes care of his boarding.
The system works for the last 100 years.
You are absolutely correct when people compare the government schools to private schools if they test in a common denominators.
We can adept some thing similar to our country.
I did my undergrad in Anamalai University and wrote my GRE and Tofel in 1979 and came to USA todo my Masters. I am not the cream just above average student.
It is very important that the student should be proficient in English to be successful in their career any where in the World. Even if they are semi proficient in English they can will be able to handle the under graduate.
For Medicine English is a must and they should understand instead of memorizing.
This is my 2 cents worth of advice.
Mani anna, I follow your posts. On NEET, I'm getting to know different opinions.
https://realitycheck.wordpress.com/2016/05/22/demystifying-neet-caveat-emptor/
Please read the above article.
Happy to discuss more.
தனியார் பள்ளி மாணவனாகவே இருந்தாலும் டியூசன் மற்றும் நுளைவுத்தேர்வுக்கான சிறப்புப்பயிர்ச்சி வகுப்புக்கு செல்ல வேண்டும்.
தமிழகத்திற்கு 10000 இடங்கள் என்றால் முதல் 10000 தமிழக மாணவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்டுமா அல்லது ஒருவேளை குறிப்பிட்ட மதிப்பெண் எடுக்கும் 8000 தமிழக மாணவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு மீதி இடங்கள் குறிப்பிட்ட மதிப்பெண் எடுத்த வெளி மாநிலத்தவரால் நிரப்பப்படாது என்பதற்கு உத்திரவாதம் உண்டா?
நீட் தேர்வு வைத்து மருத்துவர்களாக ஆக்கினால்தான் தரமான மருத்துவர்கள் கிடைப்பார்களா?
நிர்வாக ஒதுக்கீட்டில் பணக்கார மாணவர்கள் சேர்கிறார்கள் என்றால் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு மட்டும் நீட் தேர்வின் மதிப்பெண்ணை கணக்கில் கொண்டால் என்ன?
மத்திய அரசின் AIIMS போன்ற மருத்துவக்கல்லூரிகளில் நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெற இருக்கிறதா?
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பெரும் பணக்கார மாணவர்களா? அவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கோடிகளில்தான் புரண்டு கொண்டிருக்கிறார்களா?
கடனை வாங்கியாவது தனியார் பள்ளிகளில் சேர்த்து தன் பிள்ளையை எப்படியாவது மருத்துவராக்கிவிட வேண்டும் என கனவு காணும் பெற்றோர்கள்தானே அதிகம்.
நீட் தேர்வு தொடர்பான உங்களது கட்டுரையை தொடரந்து வாசித்து வருகிறேன். நீட் தேர்விற்கான தெளிவான காரணங்கள் உங்கள் கட்டுரையில் இல்லை. பொதுப்புத்தியிலேயே தாங்களும் சிந்திப்பதாக தோன்றுகிறது. முடிந்தால் வலுவான காரணங்களோடு தெளிவாக நீட்டைப் பற்றி எழுத முடிந்தால் எழுதுங்கள். சமூகநீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட், பொதுப்பள்ளிகளுக்கான மேடை கஜேந்திரபாபு, ரவீந்திநாத், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் எதிர்க்கும் மருத்துவ நுழைவுத்தேர்வை மணிகண்டன் எந்த நியாயத்தின் அடிப்படையில் வேண்டும் என்கிறீர்கள்? விளக்கினால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் நீட் பிரச்சினையில் உங்களுக்கு போதுமான தெளிவு இல்லை என்றே நான் கருதுவேன்.
நன்றி.
இரா.கதிர்வேல்...
First thing...உனக்குத் தெளிவில்லை என்று யாராவது சொன்னால் மெனக்கெட்டு என்னுடைய தெளிவைக் நிரூபிக்க வேண்டியதில்லை என்கிற மனநிலையை உடையவன். ஆனால் இதுவொரு முக்கியமான விஷயம் என்பதால் என்னுடைய தரப்பை தெளிவாக எழுதவே விரும்புகிறேன்.
நான் கல்லூரியில் சேரும் காலம் வரைக்கும் நுழைவுத்தேர்வுகள் இருந்தன. மாணவர்களிடையே போட்டி இருந்தது. வெறுமனே மனனம் செய்து வாந்தியெடுத்தால் போதாது என்கிற நிலைமை இருந்தது. இப்பொழுது அப்படியில்லை. புரிந்து படிக்கிறவர்களின் எண்ணிக்கை பெருமளவு சரிந்துவிட்டது.
பொதுப்புத்தியின் அடிப்படையில் எழுதவில்லை. தொடர்ந்து ப்ளஸ் டூ மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். அந்தப் புரிதலில்தான் பேசியும் எழுதியபடியும் இருக்கிறேன்.
திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட், கஜேந்திரபாபு உள்ளிட்டோர் ஏன் எதிர்க்கிறார்கள் என்று பட்டியலிடுங்கள். மின்னஞ்சலில் வேண்டுமானாலும் அனுப்புங்கள். விரிவான பதில் எழுதுகிறேன். தயவு செய்து ‘பார்ப்பனர்கள் சேர்ந்துவிடுவார்கள். அதனால் எதிர்க்கிறோம்’ என்ற காரணத்தைச் சொல்ல வேண்டாம் :)
தங்களது நேரத்தை ஒதுக்கி பதிலளித்தமைக்கு நன்றி.
‘பார்ப்பனர்கள் சேர்ந்துவிடுவார்கள். அதனால் எதிர்க்கிறோம்’ என்று சொல்லக்கூடாதா என்ன? மருத்துவம் படிப்பதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தமிழகத்தில் இருந்தது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். இன்றைக்கும் அந்த நிபந்தனை தொடர்ந்திருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும். சரி அதை விட்டுவிடுவோம்.
பொதுப்பிரிவிலேயே பார்ப்பனர் அல்லாதவர்கள் நிறைய இடங்களை பெற்று வந்துகொண்டிருக்கிறார்கள். பார்ப்பனர்கள் நினைத்தாலும் அனைத்து இடங்களையும் பொதுப்பிரிவிலிருந்து எடுத்துக்கொள்ள முடியாது.
திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட், கஜேந்திரபாபுனு வார்த்தைகளைப் பயன்படுத்திய உடனையே, பதிலுக்கு 'பார்ப்பனர்கள்'ங்கிற வார்த்தை வேண்டாம்னு முந்திக்கிட்டீங்களே? ம்....
திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட், கஜேந்திரபாபு உள்ளிட்டோர் ஏன் எதிர்க்கிறார்கள் என்று மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்.விரிவாக ஒரு பதிவாக எழுதுங்கள். மிகவும் மகிழ்ச்சியடைவேன். உங்களுடைய எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருவதால், ஏன் நீங்கள் நீட்டை எதிர்க்கிறீர்கள் என்று விளக்கிவிட்டால் நிம்மதியாக இருப்பேன்.
The stat mentioned the article recently came in Tamil Hindu:
http://tamil.thehindu.com/tamilnadu/8-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-278-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article9562070.ece?homepage=true
Pari Said
நீட் தேர்வு பிரச்னை மாதிரி ஒண்ணுமே வெளங்கலியே ய்யா
அரசுக் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப் படுவதால் IAS தேர்வுகளை ரத்து செய்து விட்டு மதிப்பெண் அடிப்படையில் கலெக்டர்களை பணியிலமர்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்.
நல்ல படிப்ப சொல்லி குடுங்கடா ன்னா சொல்லும் போது நாட்டமை வேல பாக்காதீங்கய்யா.
I fully agree with the content of this article. All the while, politicians have just suppressed Tamil people by repeatedly telling them "you are unfit, you cannot compete, you are poor, you belong to rural". The government should take steps to improve the levels of education rather than degrading the levels further and further. It was clear from the facts stated above that pure board marks are not just helping rural students as projected.
I do support NEET as it seems to have reduced the capitation fees last year (though the fee structure has increased, at least it is not black money any more). NEET at least ensures candidates have to qualify some minimum level of exam.
Regards,
Manick
justgetmbbs.com
தகுதி இருந்தும் மருத்துவக் கல்வியை தட்டிப் பறிக்கும் “நீட்” - து.அரிபரந்தாமன்(சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி)
‘நீட்’ தேர்வு, தனிப் பயிற்சி மையங்கள் வளரவே உதவும்! - கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
இப்படிக்கு இவர்கள்: நீட் தேர்வு: ஒரு குறிப்பு! - கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
நீட் தேர்வு கூடவே கூடாது! - மஞ்சை வசந்தன்
மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது - கி.வீரமணி
தமிழில் எழுதினாலும் ‘நீட்' தேர்வு வேண்டாம்! - கி.வீரமணி
'நீட்' தேர்வு அல்ல முடக்கும் தேர்வு
‘நீட்’: மத்திய அரசின் பக்கம் பந்து இருக்கிறது
இணைப்புகள் அனுப்பியிருக்கேன் படித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவிடுங்கள். நீதிபதி அரிபரந்தாமன், கல்வியாளர் இராஜகோபாலன் ஆகியோரும் நீட் தேர்வு கூடாது என்றுதான் கூறுகிறார்கள். அதற்கான இணைப்புகள் என்னுடைய பின்னூட்டத்தில் இருக்கிறது.
‘பார்ப்பனர்கள் சேர்ந்துவிடுவார்கள். அதனால் எதிர்க்கிறோம்’ என்று மட்டும் கூறிவிடாதீர்கள் என்று கூறி ஒரு ஸ்மைலி வேறு போட்டிருக்கிறீர்கள். உங்கள் நக்கல் எனக்குத் தெரிகிறது. ஏதோ திராவிடம் பேசுபவர்கள் பார்ப்பனர்களை கண்ணை மூடிக்கொண்டு எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்கின்ற நினைப்பு உங்களிடம் இருக்கலாம். அது உங்கள் உரிமை.
மணிகண்டன் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும், பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என பெரியாரும் நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும், திராவிடர் இயங்கங்களும் பேசியதால்தான் மணிகண்டன் பொறியாளர், கதிர்வேலும் பொறியாளர். பார்ப்பன எதிர்ப்பு என்பது திராவிட இயக்கங்களின் உயிர்மூச்சு. அதை நக்கலடிக்க ஒரு ஸ்மைலி!
//‘நீட்’ மாதிரியான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதும் மருத்துவப் படிப்புக்குச் சேரவிருக்கும் மாணவர்களை கடுமையாக வடிகட்டுவது அவசியம் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.//
ஏன் தேசிய அளவல் மட்டும் தான் நுழைவுத் தேர்வு இருக்க வேண்டுமா, மாநில அளவில் இருந்தால் ஆகாதா?
//காரணமில்லாமல் இப்படிச் சொல்லவில்லை. இன்றைக்கு கோடிகளில் பணம் வைத்திருக்கிறவர்கள் தங்கள் மகனையோ அல்லது மகளையோ எழுபத்தைந்து லட்சம் வரைக்கும் கொடுத்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துவிடத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் நீட் தேர்வு என்பது பெரிய தடைக்கல். பணம் கொடுத்து இடம் வாங்குவதாக இருந்தாலும் கூட நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்ணை வாங்க வேண்டும். இதுதான் பிரச்சினை. வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு வந்து ‘அய்யோ....அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் தெரியுமா?’ என்று கதறுவார்கள். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதைதான் இது//
நான் மதுரையில் தனியார் நிர்வகிக்கும் அரசு உதவி பெரும் மேல்நிலைப்பள்ளியில் தான் படித்தேன். பள்ளி ஆண்டுக்கட்டணம் 300 ரூபாய் மட்டுமே. 10தாவது வரை இதுபோன்ற மற்றோரு தனியார், அரசு உதவி பெரும் பள்ளியில் தான் படித்தேன். ஆனால் 11, 12 வகுப்புகளில் பாடம் நடத்துவது புரியவில்லை;(புரியும்படி நடத்தவில்லை என்பதே உண்மை) முக்கியமாக கணிதம் மற்றும் வேதியல். எனக்கு மட்டுமில்லை அனைத்து மாணவர்களுக்கும் தான். எனவே வசதியும் ஆர்வமும் உள்ள மாணவர்கள் முக்கியமான பாடங்களுக்கு (இயர்பியல், வேதியல், கணிதம்) தனியாக டியூசன் படித்தனர். என்னால் பணம் குடுத்து டியூசன் சேர இயலவில்லை.
12ம் வகுப்பில் வேறுவழியில்லை கணிதத்திற்கு மட்டுமாவது டியூசன் சேர வேண்டும் என சேர்ந்தேன்.(800 ரூபாய் ஆண்டுக்கட்டணம்) 12ம் வகுப்பு கணிதம் புரிந்து படித்தேன். பிறகு நுழைவுத் தேர்வு. பயிற்சி வகுப்பில் சேர முடியவில்லை. நுழைவுத்தேர்வில் 50 மதிப்பெண் மட்டுமே பெற்றேன். அரசாங்க கோட்டாவில் தனியார் கல்லூரியில் பொறியியல் படிங்க இடம் கிடைங்கவில்லை, மேனேஜ்மென்ட் கோட்டாவில் (மேனேஜ்மெண்ட் சீட் அல்ல)மட்டுமே இடம் கிடைத்தது. வருடத்திற்கு 60 ஆயிரம் கட்டணம். முடியாது.
அறிவியல் கல்லூரியில் இயர்பியல் சேர்ந்தேன். நண்பர்களிடமிருந்து நுழைவுத் தேர்வு பாடங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். அடுத்த ஆண்டு நுழைவுத் தேர்வு திரும்பவும் எழுதினேன்.85 மதிப்பெண். அரசு கோட்டாவில் தனியார் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. 14-18 ஆயிரம் ஆண்டு கட்டணம். கல்விக்கடன் (அரசு ஊழியரின் ஷூரிடியுடன்) வாங்கித்தான் படித்தேன்.
நகரில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் படித்த என்னை போன்றவர்களின் நிலையே இதுதான். கிராமங்களில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவருகளின் நிலை இதைவிட மோசமாகத்தான் இருக்கும் என உறுதியாகச் சொல்லலாம்.
நான் எழுதிய நுழைவுத்தேர்வு மாநிலஅரசு பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழிலும் ஆங்கிலத்திலும் வினாக்கள் இருக்கும். இதில் வெற்றி பெற ஆர்வமும் திறமையும் உள்ள மாணவருகளுக்கே பள்ளியில் (அரசு, அரசு உதவி பெறும்) கற்றுத்தரும் பாடமும் கொடுக்கும் பயிற்சியும் உறுதியாகப் போதாது. இத்தகைய பள்ளிகள் எத்தனை அதில் பயிலும் மாணவர்கள் எத்தனை பேர் என எண்ணிப்பாருக்கலாம்.
நீட் தேர்வு மத்திய அரசு பாடத்திட்த்தை அடிப்படையாகக் கோண்டது. நான் இளங்கலை அறிவியல் முதல் வருடத் படிக்கும்போது என் உடன் படித்த மாணவன் ஒருவன் மத்திய அரசு பாடத்திட்டத்தில் பயின்றவன். நாங்கள் செய்த பெரும்பாலான ஆய்வக சோதனைகளே அவன் 11, 12 வகுப்புகளிலேயே செய்ததாகக் கூறினான். இப்போது அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் படிக்கும் ஆர்வமும் தகுதியும் உள்ள மாணவர்களின் நீட் தேர்வு வெற்றி வாய்ப்பு எத்தனை சதவீதம் இருக்கும் என யூகிக்கலாம்.
//ராமநாதபுரத்தைச் சார்ந்த ராஜூ என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விவரங்களைக் கேட்டிருக்கிறார். 2009-10 ஆண்டிலிருந்து கடந்த எட்டு வருடங்களில் சற்றேறக்குறைய முப்பதாயிரம் மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இதில் எத்தனை பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்று நினைக்கிறீர்கள்? வெறும் 278 பேர்தான். கணக்குப் போட்டால் ஒரு சதவீதம் கூட இல்லை. இதுதான் நம் மாநிலத்தில் அரசுக் கல்வியின் லட்சணம். அரசுப் பள்ளிகளை மெல்ல மெல்ல நசுக்கி தனியார் பள்ளிகளை உசுப்பேற்றுவதுதான் கடந்த பதினைந்து வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறதே.//
அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களை அனைவரும் வசதியாக மறந்துவிட்டோம். அவர்களையும் சேர்த்து கணக்கிடவேண்டும். அது மட்டும் போதாது நுழைவுத்தேர்வை நிறுத்துவதற்கு முன்பு எத்தனை மாணவரகள் அரசு, அரசு உதவி பெரும் பள்ளியிலிருந்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர் என்றும் கணக்கிட வேண்டும். அப்போது தான் ஒப்பிட்டுப்பார்க்க முடியும்.
மாநில அரசு பாடத்திட்டத்தைக் கொண்டு நுழைவுத்தேர்வுக்கு தயாராவதிலேயே மாணவர்களுக்கு நிறைய சிரமங்கள் இருந்தன. அதை களையவே இன்னும் வழிகாணவில்லை. 8 வருடங்களாக நுழைவுத்தேர்வு நடத்தாமல் இருந்து விட்டு மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு மத்திய அரசு பாடத்திட்டத்தில் நுழைவுத்தேர்வு வைப்பது அநியாயமாகப் படவில்லையா?
//அரசுப் பள்ளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் அரசுப் பள்ளிகளில்தான் மாணவர்களை மிரட்டக் கூடாது, அடிக்கக் கூடாது என்று ஆயிரம் விதிகளை அரசாங்கம் வகுக்கிறது. //
அடித்து மிரட்டி சொல்லிக்குடுப்தால் புரிந்து படிக்க வைத்து விட முடியாது.
//தனியார் பள்ளிகளைப் பற்றி அரசாங்கம் ஏதாவது மூச்சு விடுகிறதா? அங்கேயெல்லாம் விடிய விடிய மாணவர்களை விழிக்க வைத்துப் படிக்க வைக்கிறார்கள். சத்தம் வெளியே வராமல் அடித்து கும்முகிறார்கள். கிட்டத்தட்ட சித்ரவதைக் கூடங்களாகத் தனியார் பள்ளிகளின் மேனிலைக் கல்வி இருக்கிறது. அடித்து, உதைத்து பிழிந்து எப்படியாவது உந்தித் தள்ளி விடுகிறார்கள். பெற்றோர்களும் கண்டுகொள்வதில்லை. அரசாங்கமும் கண்டுகொள்வதில்லை.//
இதில் எந்த எதிர்க்கருத்தும் இல்லை
//
பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தினால் அரசுப் பள்ளி மாணவர்களால் ஜொலிக்க முடியாது என்பதெல்லாம் புரட்டுவாதம்.
//
பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தினால் ஆர்வமும் திறமையும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் சிறப்புப் பயிற்சி பெறாமல் ஜொலிக்க முடியாது என்பதே நிதர்சனம். என் அனுபவம்
நீட் தேர்வை எத்தனை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எழுதுகிறார்கள்/தேர்வடைகிறார்கள் எனப் பார்ப்போம்.
//
அரசுப் பள்ளி மாணவர்களைச் சாக்காகக் காட்டி பணக்காரர்களின் பிள்ளைகளைத் தாங்கிப் பிடிக்கிற அயோக்கியத்தனம். அரசுப் பள்ளி மாணவர்கள் எப்பொழுதுமே பரிதாபம்தான். அவர்களைச் சுட்டிக் காட்டியே நுழைவுத் தேர்வு ரத்து, நீட் தேர்வு வேண்டாம் என்று சோம்பேறிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். வெறுமனே பாடத்தை மனனம் செய்து வாந்தியெடுத்து மதிப்பெண்களை வாங்கினால் போதும் என்றால் தனியார் பள்ளி மாணவர்கள்தான் மதிப்பெண்கள் வாங்குவார்கள். அங்கேதானே ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் அமுக்கி படிக்க வைக்கிறார்கள்?
//
நான் படித்த போது அரசு உதவிபேறாத தனியார் பள்ளி மாணவர்களும் என்னுடன் டியூசன் படித்தனர். சென்றவருடம் நான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரும் அரசு உதவிபேறாத தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் படிக்கும் தன் பிள்ளைகளை முககிய பாடங்களுக்கு டியூசன் அனுப்பினார்.
//
நீட் தேர்வு நடைபெறுவதால் அந்நிய மாநில மாணவர்கள் யாரும் இங்கே வந்து சேர்ந்துவிடப்போவதில்லை. தமிழகத்திற்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்களின் எண்ணிக்கை அப்படியேதான் இருக்கும்
//
மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு மத்திய அரசு பாடத்திட்டத்தில் நுழைவுத்தேர்வு வைத்தால் தேருவது கடினமே. தமிழகத்தில 6510 இடங்கள் உள்ளன 6210 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு
ஒரு பேச்சிற்கு 6000 தமிழ் மாணவர்களே தேர்வு பெறுகின்றனர் எனில் 210 இடங்கள் வெளி மாநிலங்களுக்குப் போகாது என்பதற்கு உத்திரவாதம் உண்டா?
//
கடந்த எட்டு வருடங்களாக சராசரியாக வருடத்திற்கு 34 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். அடுத்த சில வருடங்களுக்கு அந்த எண்ணிக்கை பத்து அல்லது இருபது என்கிற அளவுக்கு குறைந்தாலும் கூட ஒன்றும் குடி மூழ்கிப் போய்விடாது.
//
இது ரெம்ப ஸ்ட்ராங்கான வார்த்தை. 34 அரசுப் பள்ளி மாணவர்களின் குடி மூழ்குவதைப் பற்றியது. இதை சொல்றதுக்கு கடந்த 8 வருட சராசரி மட்டும் போதாது, அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு அதற்கு முந்தைய, மாநில அளவில் நிழைவுத்தேர்வு நடைபெற்றுக் கொணுடிருந்த 8 வருட சராசரியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தான் யார்குடி மூழ்கியது/மீண்டது எதற்காக மூழ்கியது/மீண்டது என்பது தெரியும்.
நன்றி
அன்பு மணிகண்டன் அவர்களுக்கு,
278 எண்ணிக்கை அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமா அல்லது அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்களையும் கணக்கில் கொண்டுள்ளதா? இல்லை என்றால் அரசு உதவி பெரும் பள்ளிகளை நீங்கள் தனியார் பள்ளியாக கருதுகிறீர்களா? மேலும் இந்த 30,000 இடங்களில் எவ்வளவு இலவச இடங்கள், எவ்வளவு நிர்வாக (மேனேஜ்மென்ட்) இடங்கள் என்ற விவரம் உள்ளதா? இவற்றை கணக்கில் கொள்ளாமல் வெறும் அரசு பள்ளி மாணவர்களின் புள்ளி விவரம் மட்டும் சரியான விடையை தர இயலும் என்று தோன்றவில்லை.
எல்லா பள்ளிகளுக்கும் பொதுவான விதிமுறைகள்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒரு தனியார் பள்ளி தொடங்க வேண்டும் என்றால் அரசு தேவையற்ற பல நிர்பந்தங்களை விதிப்பதாகவே படித்துள்ளேன். ஆனால் இத்தகைய விதிமுறைகள் எதுவுமின்றி அரசு பள்ளிகள் இயங்குகின்றன என்று படித்துள்ளேன். எல்லா அரசு பள்ளிகளும் இவ்விதிகளை மீறுகின்றன என்று கூறவில்லை. ஆனால் அரசு புள்ளிகளால் அடிப்படை தரமின்றி இயங்கி விட முடியும் என்றே தோன்றுகிறது.
பணக்கார பிள்ளைகளும் தனியார் பள்ளிகளும் அரசு பள்ளி மாணவர்களை வேட்டை ஆடுவதில்லை. அரசாங்கமே இப்பிள்ளைகளின் வாழ்க்கையை சூரையாடுகின்றது. பள்ளி தொடங்குவதற்கு அங்கீகாரம் என்ற பெயரில், பெரும் பணமும் அரசியல் பலமும் கொண்டவர்கள் மட்டுமே பள்ளிகளை தொடங்க முடியுமாறு ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. தரமான கல்வியை மட்டுமே தர விரும்பும் ஒரு பண ஆசையற்ற ஒருவர், ஒரு பள்ளியை தொடங்க இயலுமா? நீங்களே நாளை ஓரு பள்ளியை தொடங்கி நல்ல கல்வியை தர நினைத்தால் அதற்க்கு வழி உள்ளதா?
நன்றி
ஈஸ்வர்
USல் குழந்தைகள் தங்கள் விருப்பம்,அறிவு மற்றும் பாடங்களில் அவர்களின் திறமை இவற்றைக் கணக்கில் கொண்டு சுயமாகவே தங்கள் முயற்சியால் பல வருடங்கள் அது சம்பந்தமாகத் தாங்களேப் படித்துப் பின்னர் 12 th grade முடிந்து தகுதித் தேர்வு எழுதிப் பின்னர் மருத்துவத்தில் சேருவர். இங்கு போல் இல்லை.எந்தப் படிப்பும், திறமையும் எந்தப் பாடப் பிரிவில் என்றாலும் அதை அவர்களின் திறமையாக அங்கீகரிக்கப்பட்டு அந்தந்த படிப்பில் மேலும் மேலும் உயர்வார்கள் . அது art,drawing போன்றப் பாடப் பிரிவாக இருந்தாலும் . இங்கு தான் தகுதி சிறிதும் இல்லாத மருத்துவர்களும், பொறியாளர்களும் உருவாகிறார்கள். தகுதியில்லாப் பொறியாளரை விட தகுதியில்லா மருத்துவர் நிறைய கடந்த 16 ஆண்டுகளுக்கு மேல் உருவாகி விட்டார்கள். முதிய வைத்தியரிடம் அறுவை சிகிச்சைக்குப் போக வேண்டும் என்ற பயத்தையும் விளைவித்து விட்டார்கள்.Neet பற்றிய தெளிவு தந்தமைக்கு நன்றி.
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article9593862.ece?homepage=true&relartwiz=true
மருத்துவப் படிப்பில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு விகிதாச்சார ஒதுக்கீடு தேவை:
மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் நலன்களுக்கு எதிராக அமைந்துள்ள நிலையில், அவர்களின் நலன்களை பாதுகாக்க வழிகாட்டியிருக்கிறது குஜராத் அரசின் அறிவிப்பு. குஜராத்தில் மத்திய, மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கைப்படி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு.
குறிப்பாக தமிழ்நாட்டில் மத்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கியது போக மீதமுள்ள 3623 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களில் 90% இடங்களை மத்திய பாடத்திட்ட மாணவர்களே கைப்பற்றும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை 9 லட்சம். இவர்களில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான பாடப்பிரிவுகளை படித்தவர்கள் 4 லட்சம் பேர்.
மத்தியப் பாடத்திட்டத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 12,000 பேர் மட்டுமே. இவர்களில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான பாடங்களை படித்தவர்கள் 4000 பேர் தான். 4000 பேர் மட்டுமே உள்ள ஒரு பிரிவினர் 3300 இடங்களையும், 4 லட்சம் பேர் கொண்ட பிரிவினர் 330 இடங்களையும் கைப்பற்றுவது என்ன வகையான நீதி? இது சமூக நீதிக்கும், இயற்கை நீதிக்கும் சாவுமணி அடிக்கும் செயல் அல்லவா?
குஜராத் மாநிலத்திலும் இதேபோன்ற நிலை ஏற்படும் என்று பெற்றோர்கள் அச்சம் தெரிவித்தததை அடுத்து, அம்மாநில மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெற்றாலும், கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டது போன்று மத்திய, மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்க விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுமென்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு வரை குஜராத் பொது நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. அந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்றவர்களில் 75% மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் என்றால் அவர்களுக்கு 75% இடங்கள் ஒதுக்கப்படும். மத்தியப் பாடத்திட்டத்தில் 25% மாணவர்கள் படித்திருந்தால் அவர்களுக்கு அதே அளவிலான இடங்கள் ஒதுக்கப்படும். அதே முறை இந்த ஆண்டும் கடைபிடிக்கப்படுவதன் மூலம் அம்மாநிலப்பாடத்திட்ட மாணவர்கள் நலன் காக்கப்படும்.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் நலனை பாதுகாக்க குஜராத் மாதிரியை பின்பற்றலாம். தமிழகத்திலிருந்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 80,000 என்றும், அதில் மத்திய, மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை முறையே 4000, 76,000 என்று வைத்துக் கொண்டால் மத்தியப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 5% இடங்களும், மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 95% இடங்களையும் ஒதுக்கீடு செய்யலாம். இதன்மூலம் சமூக நீதியை பாதுகாக்கவும் முடியும். இதில் கிடைக்கும் 5% இடங்கள் தவிர அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் 15% இடங்களும் மத்தியப் பாடத்திட்ட மாணவர்களுக்கே முழுமையாக கிடைக்கும் என்பதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
கடந்த மாதம் 15-ம் தேதி தமிழகத்திற்கு வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசு விரும்பினால், கிராமப்புற மாணவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று அறிவித்தார்.
அதன்படி பார்த்தால் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் நலனைப் பாதுகாக்க அவர்களுக்கென தனி ஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு முட்டுக்கட்டை போடாது. எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் நலனைப் பாதுகாக்க, அவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மாணவர் சேர்க்கை விதிகளில் உரிய திருத்தங்களை அரசு செய்ய வேண்டும்
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/article9692911.ece
Post a Comment