பெரம்பலூர் புத்தகக் கண்காட்சியில் பேசியதை பதிவு செய்து அந்த சலனப்படத்தை வலையேற்றியிருக்கிறார்கள். இவ்வளவு விரைவாக வலையேற்றிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. சுட்டி(யை)க்காட்டிய நண்பர் கதிர்வேலுக்கு நன்றி.
பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி பற்றிய முந்தைய பதிவு மழைக்காற்று.
இருபத்தேழு நிமிட பதிவு இது. நேரமும் வாய்ப்பும் இருப்பவர்கள் பார்த்துவிட்டுச் சொல்லவும். ‘ஆளை விடு’ என்கிறவர்கள் வலது கைப் பக்கத்தில் மேற்புறத்தில் இருக்கும் x குறியை அழுத்தித் தப்பித்துவிடவும். விளைவுகளுக்கு இந்த வீடியோவை காண்பவர்களே ஜவாப்தாரி.
5 எதிர் சப்தங்கள்:
முதன் முதலில் நேரில் பார்த்து கேட்கும் வாய்ப்பு, நீண்ட நாள் நண்பரை நேரில் பார்ப்பது போல இருந்ததது. வேக வேகமாக பேசியது போல இருந்தது மற்றும் ஏற்ற இறக்கங்களுடன் பேசினால் இன்னும் சுவாரசியத்தை அதிகப்படுத்தலாம். இனி உங்கள் பதிவை படிக்கும் போது உங்கள் குரல் முன் வந்து நிற்க்கும். உண்மையிலேயே வாசிப்பு நமது கற்பனைகளை வளர்க்கிறது. இதுவரை தாங்கள் எழுதிய தொகுப்பை தாங்களே வாசித்தது போல இருந்தது. Podcastல் நிசப்தத்தின் பதிவுகளை தந்தால் கூட நன்றாக இருக்கும் மணி ஸார்.
சாதனைப் பேச்சாளர்களின் ஆரம்பகால படிக்கட்டுகள் அத்தனை அழகானவைகள் அல்ல.ஆனால் மதிப்பு மிக்கவைகள். Keep going on.
தெளிவாக பேசியுள்ளீர்கள் ,,,,,வாழ்த்துக்கள் மணி
Mani its an inspiration speech. Really super and you spoke Most required basic topic of today's.
√.
முதன்முதலாய் உங்கள் குரலைக் கேட்டேன். சந்தோசம்.எத்தனையோ கருத்துக்களை பகிர்ந்திருக்கிறேன். அதே போல் இந்த மேடைப் பேச்சினை பற்றியும் எனது கருத்தினை பகிர ஆசை.
இது ஒரு கலந்துரையாடலைப் போல் தான் உள்ளது. மேடைப் பேச்சிற்கான உணர்ச்சியோடு பேச வேண்டிய அத்தனை சிறந்த தரவுகள் இருந்தும் அதனை வெளிப்படுத்தும் போது இருக்க வேண்டிய உணர்ச்சி குறைவாகவே இருக்கிறது.
குறிப்பாக "அக்கினிக் குஞ்சொன்றை" பாடல். அதனை பாடும் போது அந்த "தீ" யின் சூடு இல்லை.
இறங்கியாச்சு. வென்று விட வேண்டும்.
Post a Comment