நேற்று (21-ஜனவரி)யன்று கோபியில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவான போராட்டத்தில் பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. இரவு பனிரெண்டு மணிக்கும் கூட போராட்டக்களத்தில் ஆட்கள் இருப்பதாகச் சொன்னார்கள். கோபி மாதிரியான மூன்றாம் கட்ட சிறு நகரங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயம். குடும்பத்தோடு வந்து பந்தலில் அமர்ந்திருக்கிறார்கள். உண்மையிலேயே கூட்டத்தைப் பார்த்த உடன் உடல் குலுங்கி அடங்கியது.
போராட்டம் பற்றி நிறையப் பகிர்ந்து கொள்ள இருக்கிறது. விரிவாக எழுதுகிறேன்.
திரு. குமணன் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி ஒலிவாங்கியை வாங்கிக் கொடுத்தார். பேச வேண்டும் என்று நினைத்ததைத்தான் பேசினேன். ஆனால் சற்றே உணர்ச்சிவசப்பட்டேன் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. கூட்டம் அப்படியான கூட்டம். என்னையும் மீறி வேகமாக பேசச் செய்தது.
நான் மிகப்பெரிய ரவுடி என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். உங்களுக்கே தெரிந்திருக்கும். எனவே வீடியோவை பார்த்துவிட்டு கலாய்க்காமல் போய்விடவும். மீறி கலாய்த்தால் அழுதுவிடுவேன் என்பதை மட்டும் மிரட்டலாக விடுத்து விடைபெற்றுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்!
திரு.குமணனுக்கும், பேசியதைப் படம் பிடித்து அனுப்பி வைத்த திரு.தாமஸ் அவர்களுக்கும் நன்றி. கோபியின் இள ரத்தங்களுக்கும், அத்தனை சங்கங்களுக்கும், பொதுமக்களுக்கும் வாழ்த்துக்கள்.
4 எதிர் சப்தங்கள்:
அக்னிக்குஞ்சு ஓன்று கண்டேன்.
அன்பு மணிகண்டன் ,
சாதி வேண்டாம் , மதம் வேண்டாம் , அரசியல் கட்சிகள் வேண்டாம் , ஆனால் இனம் , மொழி சார்ந்து வாழ்வோம் என்று சொல்கிறீர்கள் இதிலும் ஒரு மோசமான அரசியல் இருக்கிறது என்பதனை உணர்வீர்கள் என நம்புகிறேன்
you appear highly excited. i think it will happen to anybody when emotionally strung
thalaiva Konjam slow ah pesunga .. ;) theeya sakthigal listla sethruvanga.
Post a Comment