நிசப்தம் அறக்கட்டளை என்.ஜி.ஓவாகச் செயல்படுவதில்லை. வருகிற நிதியை தகுதியான மனிதர்களுக்குக் மனிதாபிமான அடிப்படையில் கொண்டு சேர்க்கும் பணியை மட்டுமே செய்கிறது.
அறக்கட்டளைக்கு பல்வேறு தரப்பினரும் நிதி வழங்குவதால் விதிமுறைகளையும், கணக்கு வழக்குகளையும் வெளிப்படையாகப் பின்பற்ற வேண்டியிருக்கிறது.

தனிநபர்களுக்கான உதவிகள் பின்வரும் விதிகளுக்குட்பட்டு வழங்கப்படும்.
கல்வி உதவி:
1) அரசு மற்றும் அரசு உதவி பெறும் (Government or Govt.aided) கல்வி நிறுவனங்களில் படிக்கக் கூடிய மாணவர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுகிறார்கள். தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதில்லை.
2) பெற்றோரில் இருவருமோ அல்லது ஒருவரோ இல்லாத மாணவர்களின் கோரிக்கைகள் முன்னுரிமை கொடுத்து பரிசீலிக்கப்படும்.
3) மேற்சொன்ன இரண்டு விதிகளுக்கும் பொருந்தும்பட்சத்தில் இரண்டாம் கட்டமாக மாணவர்களின் பொருளாதாரப் பின்புலம் நிசப்தம் அறக்கட்டளையைச் சார்ந்த ஒருவரால் நேரடியாக சரிபார்க்கப்படும்.
மருத்துவ உதவி:
1) உயிர் காக்கும் மருத்துவத்திற்கான உதவி மட்டுமே வழங்கப்படுகிறது. எலும்பு முறிவு உள்ளிட்ட உயிருக்குப் பாதிப்பில்லாத மருத்துவ உதவிகளுக்கான கோரிக்கைகளை அனுப்புவதைத் தவிர்க்கவும்.
2) குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள், குழந்தைகள் ஆகியோர்களுக்கான மருத்துவ உதவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
2) மருத்துவ உதவியைப் பொறுத்தவரையிலும் பொருளாதாரப் பின்புலம் மிகத் தீவிரமாக பரிசீலிக்கப்படும்.
மேற்சொன்ன கல்வி, மருத்துவ உதவி தவிர தனிநபர்களுக்கான வேறு எவ்விதமான உதவிகளும் அறக்கட்டளையிலிருந்து செய்யப்படுவதில்லை.
அறக்கட்டளை நிதியிலிருந்து கடன் உதவி வழங்கப்படுவதில்லை என்பதால் எந்தக் காரியமெனினும் கடனாக நிதி கேட்பதைத் தவிர்க்கவும்.
அமைப்பு ரீதியான உதவிகள் எனில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வசதி வாய்ப்புகளை மேம்படுத்துதல், கிராமப்புற வளர்ச்சி, கிராமப்புற விளையாட்டுக்கான உதவி ஆகிய உதவிகளைச் செய்யலாம். தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு உதவிகள் செய்யப்படுவதில்லை.
தனிநபர் உதவியாக இருப்பினும் அமைப்பு சார்ந்த உதவியாக இருப்பினும் யாராவது ஒருவர் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட வேண்டும். பத்திரிக்கைச் செய்திகள், குறிப்புகளை அனுப்பி வைக்கிறவர்கள் பயனாளிகள் குறித்தான முழுமையான விவரங்களைப் பெற்று ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட இயலுமெனில் மட்டுமே அனுப்பி வைக்கவும். இல்லையெனில் தவிர்த்துவிடலாம்.
எந்தக் காரணத்திற்காகவும் தனிநபர்களின் பெயரில் காசோலை வழங்கப்படாது. மருத்துவ உதவியெனில் மருத்துவமனையின் பெயரிலும், கல்வி உதவியெனில் கல்வி நிறுவனத்தின் பெயரில் மட்டுமே வழங்கப்படும்.
அரசியல், சாதி, மதம் சார்ந்து கவனத்துக்குக் கொண்டு வரப்படும் எந்தவிதமான பரிந்துரைகளும் நிராகரிக்கப்படும்.
மேற்சொன்ன விதிகளைத் தாண்டி விதிவிலக்காக ஏதேனும் உதவிகள் வழங்கப்படுமாயின் அது குறித்த விவரங்கள் நிசப்தம் தளத்தில் விரிவாகப் பதிவு செய்யப்படும்.
கோரிக்கைகளைத் தனியாளாக மட்டுமே பரிசிலீப்பதால் மின்னஞ்சல்கள் அல்லது follow-up போன்றவை தவறிவிடுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஒரு வாரம் கடந்தும் பதில் வரவில்லையெனில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்படுகிறவர்கள் மனம் கோணாமல் நினைவூட்டல் கடிதங்களை அனுப்பி வைக்கவும்.
சமீபமாக வாட்ஸப் பயன்படுத்துவதில்லை. எனவே எந்தச் செய்தியையும் வாட்ஸப்பில் அனுப்ப வேண்டாம்.
அலுவலக நேரம், இரவு நேரங்களில் தெரியாத எண்களிலிருந்து வரக் கூடிய அலைபேசி அழைப்புகளை எடுக்க இயல்வதில்லை. அதற்காக மன்னிக்கவும். முடிந்தவரையிலும் மின்னஞ்சல் வழியான தொடர்புகளே சிறப்பு. (மின்னஞ்சல்: nisapthamtrust@gmail.com).
மேற்சொன்னவற்றைத் தவிர பிற எவ்விதமான உதவியையும் மனிதாபிமான அடிப்படையில், எனக்குத் தெரிந்த தொடர்புகளின் வழியாகச் செய்து தருகிற தனிப்பட்ட உதவிகள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ளவும். ஒருவேளை செய்து தர இயலவில்லையெனில் தயவு கூர்ந்து கோபப்படுவதைத் தவிர்க்கவும். நான் முழுநேர சமூக ஆர்வலரோ அல்லது களப்பணியாளரோ இல்லை.

அறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கு ஒவ்வொரு மாதமும் நிசப்தம் தளத்தில் பதிவு செய்யப்படும்.
அறக்கட்டளையின் செயல்பாடுகள், வரவு செலவு உள்ளிட்டவற்றை நிசப்தம்.காம் தளத்தில் அறக்கட்டளை என்ற பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
அறக்கட்டளையில் இணைந்து செயல்பட விரும்புகிறவர்கள் (தன்னார்வலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள்) தொடர்பு கொள்ளலாம். நன்கொடையாக மட்டுமில்லாமல் நேரத்தை வழங்குவதன் மூலமாகவும் அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்குத் துணையாக இருக்கலாம்.

வேறு ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துகள இருப்பின் vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள்.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment