செப்டம்பர்’2016 க்கான நிசப்தம் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கின் நிதிக்கூற்று (Bank Statement) இது.


வரிசை எண் 10 மற்றும் 12: தூய திரேசாள் முதனிலைப்பள்ளி மற்றும் வைரவிழா ஆரம்பப் பள்ளிகளில் தொடுதிரையுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்காக வழங்கப்பட்ட காசோலைகள். இரண்டு பள்ளிகளிலும் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுவிட்டன.
வரிசை எண் 11: வைபவ் கிருஷ்ணா என்கிற குழந்தைக்கு ஒவ்வொரு மாதமும் தருகிற உதவித் தொகை.
வரிசை எண் 13: ஜோதிலட்சுமி என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்ட உதவி இது. ஏதோ விஷக்கடி என்று திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் எந்த விஷக்கடி என்று தெளிவாகத் தெரியவில்லை. நினைவு தப்பிவிட்டது. கோமாவில் இருக்கிறார். ஜோதிலட்சுமிக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். கணவர் தினக்கூலி. காவேரி மருத்துவமனையின் செலவைச் சமாளிக்க முடியாமல் அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். காவேரி மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய தொகையில் சிறு பகுதியான முப்பத்தைந்தாயிரம் ரூபாயைக் கொடுத்திருக்கிறோம். இன்று அழைத்துக் கேட்ட போது ஜோதிலட்சுமிக்கு பெரிய முன்னேற்றம் இல்லையென்றும் அப்படியே இருப்பதாகவும் சொன்னார்கள்.
வரிசை எண் 17: சென்னை கடலூர் வெள்ளச் சமயத்தில் ஏழாயிரம் ரூபாய் வெளிநாட்டிலிருந்து நேரடியாக வந்திருக்கிறது. அந்தச் சமயத்தில் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுது வங்கியிலிருந்து வெளிநாட்டு வங்கிக் கணக்கிலிருந்து வந்த தொகையை திருப்பி அனுப்பச் சொல்லி தங்களுக்கு நோட்டீஸ் வந்திருப்பதாகச் சொன்னார்கள். ‘ஆளை விடுங்க சாமீ’ என்று சொல்லி திருப்பி அனுப்பச் சொல்லிவிட்டேன்.
ஆகஸ்ட் மாதக் கணக்கு விவரம் இணைப்பில் இருக்கிறது.
இன்றைய நிலவரப்படி(03-10-2016) அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் ரூ.27,80,039.50 இருக்கிறது.
மேலதிக விவரங்கள் தேவைப்படின் அல்லது கேள்விகள், சந்தேகங்கள் இருப்பின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
vaamanikandan@gmail.com
நன்றி.
2 எதிர் சப்தங்கள்:
Smart Class - Good initiative Anna.
Students will go to next level and this will bring positive changes in teaching learning process.
இனிய அறசிந்தனையும் கொடையுள்ளம் கொண்ட நல் படைப்பாளி திருவாளர் வா. மணிகண்டன் அவர்களுக்கு வணக்கம்.
தொடக்க நிலை பயிலும் பள்ளிகளை குறிப்பாக கிராம சூழ்நிலையில் அமைந்துள்ள கோபி பாளையம் புனித தூய திரோசால் பள்ளிக்கும் வைர விழா தொடக்கப் பள்ளிக்கும் தாங்கள் வழங்கிய உதவிகளுக்கும் நிசப்பத அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் நெஞ்சம் நிறை வாழ்த்துகள்.
நிகழ்கால எதிர்கால மாணவர்களின் வாழ்வில் நுட்ப மாற்றங்களுக்கும் உதவிய உங்களின் கொடையுள்ளத்திற்கு நீண்ட நலனை வழங்கட்டும்.
தங்களின் படைப்புகளின் இரசிகன்.
தங்களின் படைப்புகள் தமிழ் சமுகத்தின் எழச்சிக்கு வரலாறு படைக்கட்டும்.
நன்றியுடன்
கரட்டடி பாளையம்
க.சே. அன்பு ரோஸ்
9442109934
Post a Comment