நேற்று அலுவலகத்துக்கு வரும் போது கண்டபடி கற்பனை ஓடிக் கொண்டிருந்தது. இலியானவோ, காத்ரீனா கைஃப்போ -இப்படி யாராவது ஒருவரின் பெரிய பேனரைப் பார்த்துவிட்டால் அதே நினைப்பிலேயே அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துவிடலாம். இல்லையென்றால் இப்படித்தான் மனம் தறிகெட்டு ஓடும். இரண்டு மூன்று ரவுடிகளை அடிப்பது போன்றெல்லாம் கூட கற்பனை செய்திருக்கிறேன். சாத்தியமே இல்லாத விஷயங்கள்.
மற்றவர்களுக்கு எப்படியென்று தெரியவில்லை. உடல் ரீதியாக கெத்து காட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. ஆண்டவன் சதிகாரன். இத்தினியூண்டு உயரம். ஒற்றை நாடி உடலமைப்பு. மென்மையான குரல் என்று சதி செய்துவிட்டான். அதனால் வெறும் கற்பனையிலேயே ராணுவ அதிகாரியாகவும், ஐபிஎஸ் அதிகாரியாகவும், ஆகப்பெரிய ரவுடியாகவும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இடையில் தனுஷ் மாதிரி சுள்ளான்களும் மாரிகளும் வந்து ஆளுக்கும் கெத்துக்கும் சம்பந்தமில்லை என்று உசுப்பேற்றிவிட்டார்கள். கற்பனையில் ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் என்ன? ஒன்பது டன் எடை கூட விழும். எத்தனை பேரை அடித்து துவம்சம் செய்திருக்கிறேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும்.
மற்றவர்களுக்கு எப்படியென்று தெரியவில்லை. உடல் ரீதியாக கெத்து காட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. ஆண்டவன் சதிகாரன். இத்தினியூண்டு உயரம். ஒற்றை நாடி உடலமைப்பு. மென்மையான குரல் என்று சதி செய்துவிட்டான். அதனால் வெறும் கற்பனையிலேயே ராணுவ அதிகாரியாகவும், ஐபிஎஸ் அதிகாரியாகவும், ஆகப்பெரிய ரவுடியாகவும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இடையில் தனுஷ் மாதிரி சுள்ளான்களும் மாரிகளும் வந்து ஆளுக்கும் கெத்துக்கும் சம்பந்தமில்லை என்று உசுப்பேற்றிவிட்டார்கள். கற்பனையில் ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் என்ன? ஒன்பது டன் எடை கூட விழும். எத்தனை பேரை அடித்து துவம்சம் செய்திருக்கிறேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும்.
சிம்பு தனுஷையெல்லாம் நம்பி அவ்வப்போது முயன்று பார்த்து பதறியதுதான் மிச்சம். கடந்த வாரத்தில் கூட முயன்று பார்த்தேன். பெங்களூரில் ஃபோரம் மாலுக்கு வந்தவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அதன் எதிரில் ஒரு சாலை இருக்கிறது. அதில் முதல் சிக்னல். பெங்களூரில் பைக் ஓட்டுகிற என்னை மாதிரி சில்வண்டுகள் சாலையின் இடது பக்கமாகச் சென்றால் பிரச்சினையில்லை. சாலையின் நடுவில் அல்லது வலது பக்கத்தில் நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் பின்னால் வேகமாக வருகிறவர்கள் கண்டபடி திட்டுவார்கள். அதனால் எனக்கு எப்பவுமே இடது பக்கம்தான்.
அப்படி இடது பக்கமாகச் சென்று கொண்டிருந்த போது ஒரு ஸ்விஃப்ட் வண்டியை சிக்னலுக்கு முன்பாக நிறுத்தி வைத்திருந்தான். TN 54. தமிழ்நட்டு பதிவு எண் கொண்ட வண்டி. எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த முரடன் விழித்துக் கொண்டான். தமிழ்நாட்டுக்காரனாக இருந்தால் அவனுக்குக் கன்னடம் தெரியாது என்ற முடிவுக்கு வந்திருந்தேன். எப்படியும் சண்டைக்கு வரமாட்டான் என்ற நம்பிக்கை கரை புரண்டது. ஒரு வசவை உதிர்த்துவிட்டுச் செல்லலாம் என்று முடிவு செய்து ஜன்னலைத் தட்டினேன். அவன் கீழே இறக்குவதற்குள்ளாகவே ‘சிக்னலைத் தாண்டிப் போய் நிறுத்துங்க’ என்றேன். இதில் என்ன மரியாதைக் குறைவு வந்துவிட்டது? நான் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே கண்டபடி கத்தினான். காதுக்குள் கொண்டு வந்து கொம்பை வைத்து ஊதுவதைப் போல இருந்தது. ‘அடி ஆத்தி இவன் தமிழ்க்காரன் இல்லை’ என்று முடிவு செய்து கை தன்னைத்தானே வண்டியை முறுக்கிவிட்டது. அதுவரை நாற்பதில் சென்று கொண்டிருந்த என் வண்டி அறுபதைத் தாண்டிவிட்டது. வெகு தூரத்துக்கு கண்ணாடியில் பார்த்துக் கொண்டே வந்தேன். நல்லவேளையாக அவன் பின்னால் துரத்திக் கொண்டு வரவில்லை. வந்திருந்தால் பிடித்துக் கும்மியிருப்பான்.
கற்பனைக்கு யதார்த்தத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்?
மனித மனம் இப்படித்தான். நம்மால் செய்ய முடியாத காரியத்தையெல்லாம் கற்பனை செய்து பார்த்து திருப்தியடைந்து கொள்கிறது. நீலப்படங்களின் உளவியலில் ஆரம்பித்து வன்முறையைக் கொண்டாடுவது வரை இதுதான் காரணமாக இருக்கக் கூடும். நம்முடைய போதாமையை மறைத்துக் கொள்வதற்காக ஆளுக்கொரு முகமூடி அணிந்து கொள்கிறோம். குரலை மாற்றிக் கொள்கிறோம். ஒரு முறை ஒரு நண்பர் பேச்சுவாக்கில் சொன்னது நினைவில் இருக்கிறது. மீசை பெரியதாக வைத்திருக்கும் ஆளைத் துணிந்து மிரட்டலாம் என்றார். அவன் தனது அவ நம்பிக்கையை மறைத்துக் கொள்வதற்காகத்தான் மீசையே வைத்திருக்கிறான் என்பது அவர் வாதம். அவர் பேசிக் கொண்டிருந்த போது ‘மவனே உன்னைப் புடிச்சு வீரப்பன்கிட்ட விட்டிருக்கணும்ய்யா’ என்று நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். நகைச்சுவைக்காக அப்படி நினைத்துக் கொண்டாலும் அவர் சொன்னதில் உண்மை இருக்கவும் கூடும். எல்லாமே முகமூடிதானே?
போலீஸ், ரவுடி, மிரட்டல் அதட்டல் பற்றியெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் இன்று பெங்களூரின் கிழக்கு பிராந்திய துணை கமிஷனர் சதீஷ்குமாரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஊரில் காவல்துறை அதிகாரிகளைச் சந்திப்பதில் சிரமமேயில்லை. அலுவலகத்துக்குச் சென்றால் ஒரு துண்டுச்சீட்டைக் கொடுக்கிறார்கள். நமது பெயரையும் அலைபேசி எண்ணையும் எழுதிக் கொடுத்து அனுப்பினால் உள்ளே அழைக்கிறார்கள். காத்திருப்பு எதுவுமில்லை. இரண்டே நிமிடங்களில் உள்ளே அழைத்தார்கள்.
நுழைந்தவுடன் ‘சார் பிரச்சினையை உங்களுக்கு தமிழில் சொல்லட்டுமா?’ என்றேன்.
‘சொல்லுங்க’ என்றார்.
உடன் வந்திருந்தவரின் பிரச்சினைகளை விலாவாரியாகச் சொன்னவுடன் ‘நான் பார்த்துக்கிறேன்’ என்றார். வெகு சிநேகமாகப் பேசினார். இடையிடையே தொலைபேசியிலும் உள்ளே வருகிறவர்களிடமும் கன்னடத்தில் சரளமாகப் பேசினார். இவர் கன்னடமா தமிழா என்று சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.
திடீரென்று என்னிடம் ‘நீங்க யாரு?’ என்றார்.
எனக்கு பெங்களூரில் இன்னொரு பேர் இருக்கு என்று சொல்லி கெத்து காட்டினால் பிடித்து மூலையில் அமர வைத்துவிடுவார்களோ என்று ‘மை நேம் ஈஸ் மணிகண்டன் சார்..ஐ அம் லிவிங் இன் சிங்கசந்தரா சார்’ என்று பவ்யமாகச் சொன்னேன்.
‘இவரோடு எதற்கு வந்தீங்க?’ என்ற அவருடைய கேள்விக்குப் பதிலாக நிசப்தம் அறக்கட்டளை பற்றிச் சொன்னேன். அவருக்கும் சந்தேகம் வந்திருக்கக் கூடும். ‘உன்னையெல்லாம் நம்பி பணம் தர்றாங்களா?’ என்ற ரீதியில் பார்த்த மாதிரிதான் தெரிந்தது. இன்னும் சற்று விரிவாகச் சொன்ன போது சிரித்தார். அவருக்கு நம்பிக்கை வந்துவிட்டது.
‘என்ன சார் கன்னடமெல்லாம் பயங்கரமா பேசறீங்க?’ என்றேன்.
DCP அரூர் காரராம். கிருஷ்ணகிரி, கோயமுத்தூரில்தான் படித்து வளர்ந்திருக்கிறார். ஐபிஎஸ்ஸில் தேர்வான பிறகு கர்நாடகாவில் வேலை. உத்தரகன்னடாவில் மாவட்டக் கண்காணிப்பாளராக இருந்தவர் இப்பொழுது பெங்களூரில் டெபுடி கமிஷனர்.
முதலில் அவருடைய அலுவலக எண்ணைக் எழுதிக் கொடுத்திருந்த காகிதத்தை வாங்கி ‘அது இந்த போஸ்ட்டில் இருக்கிற வரைக்கும்தான் அந்த நெம்பர் இருக்கும். இது என்னோட பெர்சனல் நெம்பர்..அப்பப்போ பேசுங்க’என்றார்.
இப்படியே மற்ற போலீஸ்காரர்களும் இருந்துவிட்டால் காக்க காக்க, சேதுபதி மாதிரி நல்ல போலீஸ்காரர்களின் கதைகளாக மட்டும்தான் சினிமாவில் எடுக்க முடியும். ‘ஏதாவது பிரச்சினைன்னா கூப்பிடுறேன் சார்’ என்றேன். சிரித்தார். இவன் எல்லாம் என்ன பிரச்சினை செய்துவிடப் போகிறான் என்ற நினைப்பிலான சிரிப்பு அது.
இப்படியே மற்ற போலீஸ்காரர்களும் இருந்துவிட்டால் காக்க காக்க, சேதுபதி மாதிரி நல்ல போலீஸ்காரர்களின் கதைகளாக மட்டும்தான் சினிமாவில் எடுக்க முடியும். ‘ஏதாவது பிரச்சினைன்னா கூப்பிடுறேன் சார்’ என்றேன். சிரித்தார். இவன் எல்லாம் என்ன பிரச்சினை செய்துவிடப் போகிறான் என்ற நினைப்பிலான சிரிப்பு அது.
வெளியில் வந்ததிலிருந்து TN 54 காரைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இதுவரை கண்ணிலேயே சிக்கவில்லை.
3 எதிர் சப்தங்கள்:
அப்படின்னா தமிழனுக்கு எதிரி வெளியில் இல்லையா ?
” நம்முடைய போதாமையை மறைத்துக் கொள்வதற்காக ஆளுக்கொரு முகமூடி அணிந்து கொள்கிறோம்”
அதை மறந்து போய்த்தான் அடிக்கடி இல்லாளிடம் காட்டித்தானே அவர்கள் அதை மனதுக்குள் வைத்து நம்மை இல்லாத ஆளாக ஆக்கி அனுபவம் உங்களுக்கும் தெரியுமே ?
"வெளியில் வந்ததிலிருந்து TN 54 காரைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இதுவரை கண்ணிலேயே சிக்கவில்லை."
Hahaha, super finish:)
லாஸ்ட் பஞ்ச் அசத்தல்!
Post a Comment