Dec 13, 2015

தெளிவாக இருக்கிறதா?

டிசம்பர் மூன்றாம் தேதியிலிருந்து பனிரெண்டாம் தேதி வரையிலும் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு என ரூ.30,69,894 (முப்பது லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரத்து எந்நூற்று தொண்ணூற்று நான்கு ரூபாய்) நன்கொடையாக வந்திருக்கிறது. ஆரம்பத்தில் ஐந்து லட்ச ரூபாய் வரைக்கும் வரவு இருக்கும் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருந்தது. டிசம்பர் நான்காம் தேதியன்று எழுதிய பதிவில் கூட அப்படித்தான் எழுதியிருந்தேன். கிடைக்கிற தொகையுடன் ஏற்கனவே நம்மிடம் இருக்கும் பணத்தில் இரண்டு லட்ச ரூபாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் திட்டமாக இருந்தது. ஆனால் இது எதிர்பாராத தொகை. 

தமிழ் தெரியாதவர்கள் கூட அனுப்பியிருக்கிறார்கள். ‘நிசப்தம் ட்ரஸ்ட்டுக்கு அனுப்பிடுங்க’ என்று தமிழ் நண்பர்கள் அவர்களிடம் சொல்லியிருக்கக் கூடும். டெல்லி ஐஐடியில் கூட நிசப்தம் அறக்கட்டளையின் கணக்கு விவரங்களை இயக்குநரின் அனுமதியோடு அறிவிப்புப் பலகையில் ஒட்டியிருப்பதாகச் சொன்னார்கள். இன்னமும் எங்கெல்லாம் இப்படி பரவியிருக்கிறது என்று தெரியவில்லை.

இதன் காரணமாகவோ என்னவோ அறக்கட்டளையின் செயல்பாடுகளை மட்டுமாவது ஆங்கிலத்தில் எழுதச் சொல்லி கடந்த சில நாட்களில் நிறையப் பேர்கள் அறிவுறுத்திவிட்டார்கள். என் ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு அது எனக்கு சாத்தியமில்லை. சொதப்பிவிடும். மற்றவர்களின் உதவியோடு அறக்கட்டளை சம்பந்தப்பட்ட பதிவுகளை மட்டுமாவது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஏதேனும் வாய்ப்புகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். யாராவது இந்த உதவியைச் செய்ய இயலுமெனில்  பேருதவியாக இருக்கும்.






முந்தைய பணப் பரிமாற்ற விவரங்களை பின்வரும் இணைப்புகளில் பார்த்துக் கொள்ளலாம்.
  1. இணைப்பு 1
  2. இணைப்பு 2
  3. இணைப்பு 3
  4. இணைப்பு 4

சென்னை மற்றும் கடலூரில் ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வாங்கவும் அவற்றை மூட்டைகளில் கட்டவும் விநியோகிக்கவும் என ரூ. 835332 (எட்டு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரத்து முந்நூற்று முப்பத்து இரண்டு ரூபாய்) செலவு செய்யப்பட்டிருக்கிறது.

அரிசி, பருப்பு, சர்க்கரை, புளி, கோதுமை மாவு, ரவை, காபித்தூள், டீத்தூள், சமையலுக்கான மசாலா பொடிகள், குளியல் சோப்பு, சலவை சோப்பு, சானிடரி நாப்கின் என கிட்டத்தட்ட முப்பது பொருட்கள் அடங்கிய மூட்டை வழங்கப்பட்டது. MRP விலையில் வாங்கியிருந்தால் ஒவ்வொரு மூட்டையும் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான விலை உடையதாக இருந்திருக்கும். ஆனால் அத்தனை கடைக்காரர்களும் அடக்கவிலைக்குக் கொடுத்தார்கள். அதனால் எல்லாச் செலவுகளும் சேர்த்து ஒரு மூட்டையை விநியோகிக்க சராசரியாக எந்நூற்று முப்பத்தைந்து ரூபாய் ஆகியிருக்கிறது.  ஒரு மூட்டை என்பது ஒரு குடும்பத்துக்கு பத்து நாட்களுக்காவது பயன்படும். 

மதுராந்தகத்தில் இருக்கும் பத்மா ஏஜென்ஸீஸ் நிறுவனர் திரு.கோபால் அவர்களை நன்றியோடு குறிப்பிட்டாக வேண்டும். சில பொருட்கள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தோம். அவர்தான் பட்டியலை எங்களிடமிருந்து வாங்கி தனக்குச் சம்பந்தமேயில்லாத பொருட்களைக் கூட தனக்குத் தெரிந்த ஏஜென்ஸிகள் மூலமாக வாங்கிக் கொடுத்தார். ‘சார் செக் மட்டும் தான் கொடுக்க முடியும்’ என்ற போது அத்தனை ஏஜென்ஸிகளிடமும் பேசி, தேவைப்பட்ட இடங்களில் அவர் பணம் கொடுத்துவிட்டு நம்மிடமிருந்து காசோலையை வாங்கிக் கொண்டார். அவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் மட்டும் இல்லையென்றால் நாம் வெகுவாகத் திணறியிருக்கக் கூடும். அவர் மதுராந்தகத்தில் மிகப்பெரிய வணிகர். தனது நேரத்தை ஒதுக்கி இதையெல்லாம் செய்து கொடுத்திருக்க வேண்டிய அவசியமேயில்லை. ஆனால் செய்து கொடுத்தார்.

நிவாரணப் பொருட்களை வாங்கிய வகையிலும் விநியோகம் செய்த வகையிலும் பின்வரும் காசோலைகள் அறக்கட்டளையிலிருந்து வழங்கப்பட்டிருக்கின்றன.

Ch.No
பெயர்
தொகை
பொருள்
69
Royal Agency
21054
சானிடரி நாப்கின்
70
Manickam
5900
கோணிப்பை
71
Sree Murugan Traders
13600
மிளகாய் பொடி – 50 கிகி
72
Rose Agencies
47750
மஞ்சள் தூள் (50 கிகி), சாம்பார் தூள்(50 கிகி), ரசத் தூள்(50 கிகி), புளியோதரை (40 கிகி) மற்றும் எலுமிச்சை சாதத் தூள்(10 கிகி)
73
Uma Provision Stores
215962
து.பருப்பு (1000 கிகி), புளி (100 கிகி), சர்க்கரை (500 கிகி), தீப்பெட்டி (100), தேங்காய் எண்ணெய் (2000 பாக்கெட்), கடுகு (100 கிகி), கடலை எண்ணெய் (10+44+50+6 லிட்டர் பாக்கெட்கள்), பாலித்தீன் பைகள் (40 பாக்கெட்), மார்க்கர் எழுதுகோ (20), பிபி கவர் (6 கிகி)
74
Sri Senthil Andawar Oil Mills
71100
கடலை எண்ணெய் (900 லிட்டர்)
75
V.Gunaseelan
40000
கோதுமை மாவு (1000 கிகி)
76
Yesde Agency
8200
உப்பு (1000 கிகி)
77
Padma Enterprises
46900
 பற்பசை, ப்ரஷ் உள்ளிட்ட பிற பொருட்கள்
78
Sun Traders
34535
பூஸ்ட்(1000 பாக்கெட்), க்ளினிக் ப்ளஸ் (4552), கொசுவர்த்திச் சுருள் (1000)
79
Prema Enterprises
28115
அணில் சேமியா (25 case)
80
Padma Agencies
31193
சன்ரைஸ் காபித்தூள், மேகி நூடுல்ஸ்
81
Gopalakrishnan Agencies
79523
3 ரோசஸ், குளியல் சோப்(லக்ஸ்+லைப்ஃபாய்), ரின் சலவை சோப்
82
Sri Jothi Ramalingam Modern Rice Mill
165000
அரிசி (200 பை- 5000 கிகி)
83
A.Raja
5000
ஜெயராஜுக்கு வழங்கப்பட்ட காசோலை
84
A.Raja
5000
ஜெயராஜூக்கு வழங்கப்பட்ட காசோலை
85
A.Sekar
11000
சென்னை, கடலூர் லாரி வாடகை
86
M.Ramalingam
2500
உள்ளூர் லாரி வாடகை
87
A.Raja
3000
ஜெயராஜூக்கு வழங்கப்பட்ட காசோலை
மொத்தம் ரூ. 835332 (எட்டு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரத்து முந்நூற்று முப்பத்து இரண்டு ரூபாய்). அத்தனை செலவுகளும் காசோலைகள் வழியாக மட்டும்தான் செய்யப்பட்டன.

மேற்சொன்ன பட்டியலில் சென்னை, கடலூர் லாரி வாடகை என்பது- Eicher வண்டியில் கடலூர் மஞ்சக்குழி சென்று வந்ததற்காக ஆறாயிரத்து ஐநூறு ரூபாயும், சென்னை சென்று வந்தற்காக நான்காயிரத்து ஐநூறு ரூபாயும் வாடகை நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டிருப்பதைக் குறிக்கும். மொத்தம் பதினோராயிரம் ரூபாய்.

உள்ளூர் லாரி வாடகை- நிவாரணப் பொருட்களை மூட்டை கட்டும் பணி நடந்த போது பொருட்களை இடம் மாற்றுவதற்காக இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு லாரியை வாடகைக்கு பிடித்துக் கொண்டார்கள். அந்த லாரிக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வாடகை கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஜெயராஜூக்கு வழங்கப்பட்டிருக்கும் பதின்மூன்றாயிரம் ரூபாய்கான விவரங்கள்:

கூலி  விவரம்(முதல்நாள்)
4 ஆண்கள் - 1 நாள் வேலை (300*4)
1200
4 பெண்கள்- முக்கால் நாள் வேலை - (200*4)
800
கூலி விவரம் (இரண்டாம் நாள்)
உள்ளூர் சிறுவர்கள் (4 பேர்) (100*4)
400
பெண்கள் (5 பேர்) (250*5)
1250
ஆண் (ஒருவர்)- அரை நாள்
200
முதல் நாள் பொருட்கள் ஏற்று/இறக்கு கூலி
650
ஏற்று/இறக்கு கூலி (இரண்டாம் நாள்)
650
ஒரு வாரம் வாட்ச்மேன் சம்பளம்
1200
வேலை செய்த ஆர்வலர்களுக்கான உணவு
2200
சணல்  கயிறு (4.5 கிலோ) (கிலோ 130 ரூபாய்)
585
கடலூர் (மஞ்சக்குழி) சென்று வந்ததற்கான பெட்ரோல் செலவு
1500
உள்ளூர் வாகனச் செலவு - ஒரு வாரம்
1500
சென்னை விநியோகத்திற்காகச் சென்று வந்த பெட்ரோல் செலவு
700
டாட்டா ஏஸ் வாடகை
1700
ஜெயராஜ் செய்த செலவு ரூ.14535 (ரூபாய் பதினான்காயிரத்து ஐநூற்று முப்பத்தைந்து)

மேற்சொன்ன பட்டியலில்,
  • பொருட்களை கடலூரில் விநியோகம் செய்வதற்கு முந்தின நாள் ஜெயராஜூம் நண்பர்களும் மஞ்சக்குழி கிராமத்துக்குச் சென்று பார்த்து வந்தார்கள். பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட தினத்தன்றும் ஜெயராஜின் கார் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது
  • ஒரு வார காலமாக மேல்மருவத்தூருக்கு வரும் தன்னார்வலர்களை பொருட்கள் இருந்த நீர்பெயர் கிராமத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவும் கடைகளுக்குச் செல்வதற்காகவும் தனது காரையும் பைக்கையும் ஜெயராஜ் பயன்படுத்தினார்.
  • சென்னை நிவாரணப் பொருட்களின் விநியோகத்திற்காக ஜெயராஜின் கார் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.
  • டாட்டா ஏஸ் வாடகை- சில்லரைச் சாமான்களை மதுராந்தகத்திலிருந்தும் செங்கல்பட்டிலிருந்தும் எடுத்து வருவதற்காக உள்ளூர் டாட்டா ஏஸ் பயன்படுத்தப்பட்டது.
இவை தவிர எனது பங்களிப்பாக சிறு தொகை செலவிடப்பட்டிருக்கிறது. அது இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

வெள்ள நிவாரண நிதிக்கென வரவாக வந்திருக்கும் முப்பது லட்சத்துச் சொச்சத்தில் மிச்சமிருக்கும் ரூ.22,34,562 (ரூபாய் இருபத்து இரண்டு லட்சத்து முப்பத்து நான்காயிரத்து ஐநூற்று அறுபத்து இரண்டு ரூபாய்) அடுத்தடுத்த கட்ட நிவாரண உதவிகளுக்காக முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிடும். 

இன்னமும் சிலர் பணம் அனுப்பவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். திங்கட்கிழமை (டிசம்பர் 15) வரைக்கும் அனுப்பி வைக்கப்படும் பணத்தை கடலூர், சென்னை வெள்ள நிவாரண நிதியில் சேர்த்துக் கொள்ளலாம். அதன்பிறகாக வரும் தொகை நிசப்தம் அறக்கட்டளையின் பொதுவான செயல்பாடுகளான கல்வி மற்றும் மருத்துவ உதவிகளுக்காக ஏற்கனவே சேர்ந்திருக்கும் எட்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாயுடன் சேர்த்துக் கொள்ளப்படும்.

அனைத்து ரசீதுகளையும் ஒழுங்குபடுத்திய பிறகு அவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை பதிவு செய்கிறேன். அத்துடன் முதற்கட்ட நிவாரணப்பணிகள் சம்பந்தமான அனைத்து செயல்பாடுகளும் நிறைவு பெற்றுவிடும்.

பணம் அனுப்பிய ஒவ்வொரு மனிதருக்கும் இந்த விவரங்கள் சென்று சேர்ந்துவிட வேண்டும் என விரும்புகிறேன். தங்களின் நண்பர்கள் யாரேனும் அறக்கட்டளைக்கு பணம் அனுப்பியிருந்தால் இந்த இணைப்பைக் கொடுத்துவிடவும். தன்னுடைய ஒவ்வொரு ரூபாயும் சரியாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிற நம்பிக்கையும் மனத் திருப்தியும் அவர்களுக்கு மிக அவசியம்.

இந்த கணக்கு விவரங்களில்  எந்தவிதமான சந்தேகமிருப்பினும் கேட்கவும். விரிவாக பதில் எழுதுகிறேன். vaamanikandan@gmail.com

6 எதிர் சப்தங்கள்:

viswa said...

your deeds are incomparable and beyond any type of expression either in paper or otherwise-regards-vishwanathan

DHANA said...

பாராட்டுகள்!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தெள்ளத் தெளிவான கணக்கு விவரங்கள்.எவ்வளவு பெரிய மகத்தான பணியை செய்திருக்கிறீர்கள். ஆயரம் ஆயிரம் உள்ளங்கள் உங்களையும் உங்களுடன் இனைந்து பணியாற்றியவர்களையும் நிதி வழங்கியவர்களையும் வாழ்த்தும். நீங்கள் அசாதாரண மனிதர்தான்.

வெங்கட் நாகராஜ் said...

மனம் நிறைந்த பாராட்டுகள்......

Unknown said...

I sincerly congratulate you for the extreme contribution that you making for our people. This motivates many youngsters to do good things as they are capable off. Thanks once again for you and all who supports you in the entire journey.

USK said...

I read your interview in one tamil weekly magazine and now visits your web blog..Really good and amazing work done by yourself and your team. Really this is result of teamwork's effort. I congratulate to you and the entire voluntires for this great work. Nantri - U.Sankaran Karthik, Kanchipuram