நவம்பர் மாதத்திற்கான நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கு விவரம் இது.
கடந்த மாதத்தில் ரூ.1,18,360 (ஒரு லட்சத்து பதினெட்டாயிரத்து முந்நூற்று அறுபது ரூபாய்) நன்கொடையாக வந்திருக்கிறது. அறக்கட்டளையிலிருந்து ரூ.82500 (எண்பத்து இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்) பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
1. நரேந்திரன் என்கிற தேசிய விளையாட்டு வீரர் ட்ரையத்லான் போட்டிகளுக்கு பயிற்சி பெறுவதற்காக சைக்கிள் வாங்குவதற்கு உதவியாக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. (இணைப்பு)
2. விஷ்ணுப்பிரியா என்கிற மாணவிக்கு கல்விக் கட்டணம் பனிரெண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
3. மாணவி வீரமணியின் கல்லூரி சேர்க்கைக்காக பதினாறாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
விஷ்ணுப்பிரியா, வீரமணி பற்றிய விவரங்கள் இணைப்பில் இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் குழந்தை கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் பராமரிப்புத் தொகையான இரண்டாயிரம் ரூபாய் வரிசை எண் பத்தில் இருக்கிறது. புத்தகக் கண்காட்சிக்கு மாணவர்களை அழைத்து வந்து சென்றதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை இரண்டு பள்ளிகள் எடுத்திருக்கிறார்கள்.
அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் தற்பொழுது ரூ.8.32,636 (எட்டு லட்சத்து முப்பத்து இரண்டாயிரத்து அறுநூற்று முப்பத்தாறு ரூபாய்) இருக்கிறது. நன்கொடையளித்தவர்களின் பட்டியல் வரிசையாக இருக்கிறது.
கடந்த மாதத்தின் வரவு செலவு விவரங்கள் இணைப்பில் இருக்கிறது.
வேறு ஏதேனும் விவரங்கள் தேவைப்பட்டால் அல்லது சந்தேகம் ஏதுமிருப்பின் vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். பதில்களை பொதுவெளியில் வெளியிடுகிறேன்.
பணம் கொடுக்கும் யாருமே ஏன் ரசீது வேண்டும் என்று கேட்பதில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நிசப்தம் அறக்கட்டளையின் ரசீதை 80Gயின் கீழாக வரிவிலக்கு பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். ரசீது தேவைப்படுபவர்கள் தெரியப்படுத்தவும். கூரியரில் அல்ல்து scan செய்து மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன். எனக்கு இதில் சிரமம் எதுவும் இருக்கக் கூடும் என்றெல்லாம் தயங்க வேண்டியதில்லை. செய்கிற வேலையை முழுமையாகச் செய்யலாம்.
நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் மனப்பூர்வமான நன்றி.
1 எதிர் சப்தங்கள்:
Good. Continue.
Post a Comment