பெங்களூர் என்றால் மென்பொருள் பணியாளர்கள், லூயி பிலிப் சட்டை, ஃபோரம் மால், எலெக்ட்ரானிக் சிட்டி, வொய்ட் ஃபீல்ட் கார்கள், இரவு நேரக் கேளிக்கை விடுதிகள் மட்டுமில்லை அல்லவா? வீங்கிய நகரத்துக்கு நம் கண்களுக்குத் தெரியாமல் இயங்கும் மறுபக்கம் என்று இருக்கிறது. நாம் கண்டுகொள்ளாத சாமானிய மனிதர்களும் இங்கு புரண்டு கொண்டிருக்கிறார்கள். பல அடுக்குகளாலான நகரத்தின் அடியில் கிடக்கும் ஒரு உலகத்தை உருவியெடுத்து புதிய நாவலில் சொல்ல முயற்சித்திருக்கிறேன். இதையெல்லாம் முழுமையாகச் சொல்லிவிட முடியாது. நுனியைத் தொட்டாலும் கூட போதும். நான்கு பேர் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் சிங்கம் 2, சிங்கம் 3 மாதிரி வரிசையாக அவிழ்த்து அடுத்தடுத்த புத்தகக் கண்காட்சிகளில் மேய விட்டுவிடலாம்.
நாவலுக்காக மூன்று தலைப்புகள் பரிசீலனையில் இருக்கின்றன. அந்தர்வாகினி, மூன்றாம் நதி, நீர்முனி.
அந்தர்வாகினியும், மூன்றாம் நதியும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தம். காவிரியும் பவானியும் இணைகிற இடத்தில் கண்ணுக்குத் தெரியாமல் சங்கமிக்கிற அமுத நதியையும், கங்கையும் யமுனையும் சங்கமிக்கிற இடத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இணைவதாக நம்பப்படுகிற சரஸ்வதி நதியையும் அந்தர்வாகினி என்கிறார்கள். கீழாக ஓடி வருகிற ஆறு. கீழாறு. மூன்றாம் நதி என்பதையும் அதே பொருளில்தான் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
பெருநகரத்தில் சாதாரணமாகக் கண்களுக்குப் புலப்படாத ஒரு வாழ்க்கை என்பது நாவலின் களம் என்பதால் இந்தத் தலைப்புகளில் ஒன்று சரியாக இருக்கும் என்று தோன்றியது. இத்தகைய சமயங்களில் சட்டென்று முடிவுக்கு வர முடிவதில்லை. பத்து அல்லது இருபது பேரிடமாவது கேட்டிருக்கிறேன். மூன்றாம் நதி என்பது சற்று பழக்கப்பட்ட பெயராகத் தெரிகிறது என்று சிலர் சொன்னார்கள். அந்தர்வாகினி என்பது சமஸ்கிருதப் பெயராக இருக்கிறது என்று வேறு சிலர் சொன்னார்கள். நீர்முனி கவிதைத் தொகுப்புக்கு சரிப்பட்டு வரும் என்றார்கள்.
இந்தப் பக்கம் இருப்பவர்கள் அந்தர்வாகினி வித்தியாசமானதாக இருக்கிறது என்று அபிப்பிராயப்பட்டார்கள். அந்தப்பக்கம் இருப்பவர்கள் நீர்முனி கவித்துவமானதாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார்கள். மூன்றாம் நதி நல்ல பெயர் என்று மற்றும் சிலர் கருத்துச் சொல்லியிருந்தார்கள்.
இது எக்கச்சக்கமாக குழப்பிவிட்டது. எனக்கு மூன்று தலைப்புகளுமே பிடித்திருக்கின்றன என்றாலும் ஒரு தலைப்பு மட்டும் சற்று தூக்கலாகப் பிடித்திருக்கிறது. அதை வெளிப்படையாகச் சொல்லிவிடலாம்தான் ஆனால் எல்லோரும் அதற்கு எதிராக வாக்களித்து சோலியை முடித்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.
பதிப்பாளரிடம் கேட்டால் ‘செம கன்ப்யூஸப்பு’ என்கிறார்.
‘நல்லதுக்கும் கெட்டதுக்கும் நிசப்தம் படிக்கிறவங்ககிட்டயே கேட்டுடலாமா’ என்று அவரிடம் கேட்ட பிறகு இந்த சர்வே.
தளத்தின் வலது பக்கம் ஒரு சர்வே இருக்கிறது. வஞ்சகமில்லாமல் ஒரு குத்து குத்திவிடுங்கள். ஒன்றரை வினாடி கூட ஆகாது. நம்பிக்கையில்லையென்றால் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே குத்துங்கள். ஒன்றரை வினாடிக்கு மேலாக ஆனால் ‘ஏன் ஆனது?’ என்று கேளுங்கள்.
ஒரே வாக்கு! ஒஹோன்னு பெயர்!!
18 எதிர் சப்தங்கள்:
Why cannot the book title be
அந்தர்வாகினி or நீர் முனி or மூன்றாம் நதி
Readers will have the option of calling the book by any name.
I Remember old books / films ( pre 1950's) having more than one name.
மூன்றாம் நதி!!
முனி பற்றிய செய்திகள் என்றுமே சுவராசியம் கொடுப்பவை. அதனால் எனது தேர்வு "நீர் முனி"
kuthiyachi... ***மூன்றாம் நதி***
மூன்றாம் நதி
மூன்றாம் நதி...!
மூன்றாம் நதி. நல்ல தலைப்பு. ஒன்று தெரியுமா? சரஸ்வதி என்ற நதியை தேடி நான் 25 வருடம் முன்பு ஆராய்ச்சி செய்ய தொடங்கிய போடு அறிந்தவை - சரஸ்வதி நதி ராஜஸ்தானில் ஓடிய நதி (உ பி , பீகாரில் அல்ல), தற்போது வறண்டு விட்டது என்றாலும் ஆங்காங்கே அது ஓடியதற்கான புதை தடங்கள் உள்ளன. 25/30 வருடம் முன்னரே 2-3 Ph .D award ஆகி விட்டன. இல்லாத நதியை இருப்பதாக நம்புவதே நம் வழக்கம். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.வெற்றி பெற வாழ்த்துகிறேன்
மூன்றாம் நதி...!
Mannikkavam.. Intha Puthakathukku Peyar Illai..
Why wont we try some thing like this for more reachability...
Else I voted for Moondram nathi.
அந்தர்வாகினி என்றால் என்ன அர்த்தம் ?
மூன்றாம் நதி This title is apt for a modern Tamil prose. it will reach the common Tamil reader to look at, esp in book fair. other two titles are either too tamil or too Samskrutam. the Moonram Nadi will reach a larger audience, kindle the reader's imagination. hope Manikandan will dable in the novel arena.. it gives scope for detailing.. event.. emotions..suspence... language 'AALUMAI'. All the best
"நீர் முனி"
.
சாதாரண கண்களூக்கு புலப்படாத வாழ்க்கை களத்திற்கு மக்கள் பெறிதும் அறிந்திராத அந்தர்வாகினியே மிக்க பொருத்தமாக உள்ளது.
I go with Mr. Nanthakumar kannan sir. "சாதாரண கண்களூக்கு புலப்படாத வாழ்க்கை களத்திற்கு மக்கள் பெறிதும் அறிந்திராத அந்தர்வாகினியே மிக்க பொருத்தமாக உள்ளது." The title is very different, unheard, and bewitching too!
1) Mukkoodal
2) Inai-Thunai-Anai Nadhigal
3) Moondram Nadhi
4) Moondraam Sangamam
5) Neer Moondru
6) Moondru
Okayvaa
Mr Mani
regards,
PNR- Hosur
Waiting for the book at CHENNAI book fair. I hope it is just like
Orhan Pamuk's Istanbul.
அந்தர்வாகினி..
மூன்றாம் நதி...
Post a Comment