சில நாட்களுக்கு முன்பாக கார்டூனிஸ்ட் பாலா அழைத்து ‘குமுதம் ரிப்போர்ட்டரின் ஆசிரியர் உங்களுடன் பேச விரும்புகிறார்’ என்றார். என்ன விஷயம் என்று கேட்ட போது ஒரு கட்டுரை கேட்பதாகச் சொன்னார். அடுத்த சில மணி நேரங்களில் ரிப்போர்ட்டரின் இணை ஆசிரியர் குபேந்திரன் அழைத்தார். ‘இதெல்லாம் பத்தி ஒரு தொடர் எழுத முடியுமா?’ என்றார். இதெல்லாம் என்பது அவர் பத்து நிமிடங்களுக்கு விளக்கிய சமாச்சாரங்கள். செல்போன், இணையம், ஃபேஸ்புக் பற்றியெல்லாம். எழுத முடியும் என்ற நம்பிக்கையிருந்தது. ஆனால் வாரம் இரண்டு கட்டுரைகளை அனுப்ப வேண்டும். அது அவ்வளவு எளிதான காரியமில்லை என்று தெரியும். கொஞ்சம் தாமதமானாலும் ‘தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த வாரம் கட்டுரையை பிரசுரிக்க முடியவில்லை’ என்று அச்சிட வைக்க வேண்டியதாகிவிடும்.
‘தொடர் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஏழெட்டு கட்டுரைகளை அனுப்பிவிடட்டுமா?’ என்று சலுகையை வாங்கிக் கொண்டேன். வாரம் இரண்டாக அவர்கள் பிரசுரித்துக் கொண்டிருக்கும் போது இன்னும் நான்கைந்து கட்டுரைகளை அனுப்பி வைத்தால் பதினைந்து வாரத் தொடர் முடிந்துவிடும். சரியென்று சொல்லிவிட்டார்கள். ஏழு கட்டுரைகளை அனுப்புவதற்கு சற்று தாமதித்துவிட்டேன். இல்லையென்றால் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே தொடர் ஆரம்பித்திருக்க கூடும்.
ஆசிரியர் ‘நாளைக்கு விளம்பரம் வந்துவிடும்..கட்டுரையை அனுப்பிடுங்க’ என்று இரண்டு மூன்று முறையாவது மின்னஞ்சல் அனுப்பியிருப்பார். அவருக்கு பெரிய மனது.
நேற்று ரிப்போர்ட்டரின் கடைசிப் பக்கத்தில் முழுப்பக்கம் விளம்பரம் கொடுத்திருந்தார்கள். ‘ரிப்போர்ட்டர்ல தொடர் வருதா?’ என்ற விசாரணைகள் வரத் தொடங்கிய போது பெங்களூரின் கடையில் வாங்கினேன். அப்பொழுதுதான் கட்டுக்களை பிரித்துக் கொண்டிருந்தார்கள். இந்நகரத்தின் சூட்டைத் தாங்கிக் கொண்டிருந்த இதழின் கடைசிப் பக்கத்தை தெருவோரமாக நின்று சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு சற்று அதிகப்படியான முக்கியத்துவம்தான். அவர்கள் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் யோசனையாக இருக்கிறது.
தொடரின் முதல் கட்டுரை நாளை வெளியாகிவிடும். வாய்ப்பிருப்பவர்கள் வாசித்துவிட்டுச் சொல்லவும். நல்லதோ கெட்டதோ நான்கு பேர் நான்கு விதமாகச் சொன்னால்தான் நாம் உயிர்ப்போடு இருக்கிறோம் என்று அர்த்தம். கிணற்றில் போட்ட கல் மாதிரி கிடந்தால் என்ன அர்த்தம்? வரக் கூடிய விமர்சனங்கள், யோசனைகளுக்கு ஏற்ப அடுத்தடுத்த கட்டுரைகளைத் திருத்திக் கொள்கிறேன். Tuning process.
தொடரை முழுமையாக முடித்துவிட்டு அத்தனை பேருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
14 எதிர் சப்தங்கள்:
I am waiting. All the very best sir!!!
வாழ்த்துக்கள் மணிகண்டன் :)
CONGRATS
புதிய வானம் கிடைத்துள்ளது, சிறகடித்துப் பறக்கவும் வெற்றிகரமாக....வாழ்த்துகள்.
Kalakkunga Mani..
Murali Natarajan
வாழ்த்துக்கள்.
நீங்கள் நினைப்பதுபோலவே இது அதிகப்படியான பொறுப்பு .ஏற்கனவே இருக்கும் வேலைகளை அப்படியே விட்டுவிட்டு அதிக சுமையுடன் ஒரு வேலையை ஆரம்பிக்கிறீர்கள் .அப்படியே உங்களை ஏற்றுக்கொண்டார்கள் என்றால் சரிதான்
வாழ்த்துக்கள் மணி, நீங்கள் சிறப்பாகவே எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
கோவா கருத்தரங்கம்
ரிப்போர்ட்டருல கட்டுரை
கலக்குற(ங்க)மணி
Congrats sir, I am sure it would be a wonderful series of recent times
possible could you please publish those articles in Nisaptham. i'm living faraway to get a copy of kumudham reporter. thanks.
Congratulations Mr Manikandan.
- Deivam
வாழ்த்துகள் ! ! ! ! ஆவலுடன் காத்திருக்கிறேன் ! ! ! . . . . ..
Really super its amazing to read first part I read today morning it very interesting as well as very useful for society.
Regards,
Baskar, S. (Yavarum.com)
Post a Comment