புத்தகங்கள் வாங்கிக் கொள்வதற்காக ஏழு பள்ளிகளுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டிருந்தது அல்லவா? ஏழு பள்ளிகளில் இரண்டு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள். மீதி ஐந்தும் அரசுப் பள்ளிகள். அந்தப் பள்ளிகளில் பெரும்பாலானவர்கள் கோபி புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை வாங்கிவிட்டார்கள். ஒரு பள்ளி குறித்து மட்டும் இன்னமும் தகவல் இல்லை. நாளை விசாரித்துவிடுகிறேன். முதல் பள்ளியாக கோபிபாளையம் பள்ளி திங்கட்கிழமையன்றே சென்று வாங்கியிருக்கிறார்கள். அது அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி. வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து குழந்தைகளையும் அழைத்துச் சென்று வாங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான புத்தகங்களை மாணவர்களே தேர்ந்தெடுத்ததாக பள்ளியின் தலைமையாசிரியர் இன்று தெரிவித்தார்.
இந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு வகுப்புக்கும் வாசிப்புக்கு என வாரத்தில் ஒரு பிரிவேளையை ஒதுக்கியிருப்பதாகவும் இனி அது தொடரும் என்றும் தெரிவித்தார். எதிர்பார்த்தது இதைத்தான்.
பள்ளி மாணவர்கள் புத்தகத் திருவிழாவுக்கு சென்ற நிகழ்வின் நிழற்படங்கள் சிலவற்றை ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார். அந்த நிழற்படங்கள்தான் இவை-
நிழற்படங்களையும் அந்தக் குழந்தைகளின் முகங்களையும் பார்ப்பதற்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.
குழந்தைகளின் இந்த நன்றியும் புன்னகையும் நம் அனைவருக்குமானது.
குழந்தைகளின் இந்த நன்றியும் புன்னகையும் நம் அனைவருக்குமானது.
கிராமப்புற குழந்தைகளுக்கு இது போன்றதொரு வாய்ப்பினை சாத்தியமாக்கிக் கொடுத்த அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி. நன்கொடைகளும், ஊக்கமும், தொடர்ச்சியான நல் வார்த்தைகளும் இது போன்ற சிறு சிறு வெற்றிகளை உருவாக்கித் தருகின்றன. இந்தச் சிறு சிறு வெற்றிகள்தான் நம்மை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகின்றன.
உறுதுணையாக இருக்கும் நல்ல உள்ளங்கள் ஒவ்வொன்றுக்கும் அன்பும் நன்றியும்.
உறுதுணையாக இருக்கும் நல்ல உள்ளங்கள் ஒவ்வொன்றுக்கும் அன்பும் நன்றியும்.
3 எதிர் சப்தங்கள்:
மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்பள்ளியில் படித்த மாணவன் என்கின்ற முறையில் வா.மணிகண்டன் அண்ணா அவர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் எங்கள்(என்) மனமார்ந்த நன்றிகள்.
இப்பள்ளியில் படித்ததிற்காக மேலும் பெருமை அடைகிறேன்.
இப்பள்ளியின் சிறு பெருமைகள்...
1. இன்றுவரை மாதம் ஒருமுறை மாணவர்களால் நடத்தப்பெரும் மாணவர் மன்றம்.
2. கல்வியின் பயன் ஒழுக்கம் என்று போதிக்கும் முறை.
3. தை-யாம் தமிழர் திருவிழா அன்று முன்னாள் மாணவர்களின் கூட்டம்
4. இயற்கையோடு கூடிய கல்வி.
மேலும் பள்ளியின் சிறப்பை காண
Facebook : https://www.facebook.com/pages/Gobipalayam-StTheresas-Primary-School/247789072046657?fref=ts
75 ஆண்டுகளை நிறைவுசெய்து தமிழ் வழிக்கல்வியில் தொடர்ந்து சாதித்து வரும் "தூய திரேசாள் முதனிலைப் பள்ளி "யின் வரலாறு
YouTube:https://www.youtube.com/channel/UCk2GrQOzRVnr87gsLGskFCQ
Great Work.... Wishes... பிரிவேளை... had seen the word before 20 years...
Nice to see the word again...
sakthivel V
Post a Comment