பெரும்பாலான எழுத்தாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் எதிர்வினையே புரியக் கூடாது. தங்களைக் கொம்ப மகாராஜாக்களாக நினைத்துக் கொண்டு கருத்தை உதிர்ப்பார்கள். அதை விவாதிப்பதற்கான மனநிலை எதுவும் அவர்களிடம் இருக்காது என்று கற்பூரம் அடித்துக் கூட சத்தியம் செய்யலாம். ‘இங்க எனக்குத் தெரியாத விஷயமே இல்ல..நான் கருத்து சொல்லுறேன்...கேட்டுக்க.....அவ்வளவுதான்’ என்ற நினைப்பில் திரிகிற அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சினை இருக்கிறது. மனோவியல் சார்ந்த பிரச்சினை. தங்களை எல்லாக்காலத்திலும் அறிவுஜீவியாகவும் பொது ஜன மனநிலையிலிருந்து துண்டிக்கப்பட்ட விசித்திர ஜந்துக்களாகவும் காட்டிக் கொள்கிற மனோவியாதி அது. ஒரு விஷயம், இரண்டு விஷயம் என்றால் பரவாயில்லை- கிட்டத்தட்ட நம்மைச் சுற்றி நிகழும் எல்லாவற்றிலுமே அப்படித்தான் செயல்படுவார்கள். வலிந்து திணிக்கப்பட்ட மாற்றுக் கருத்தை முன்வைக்க பிரயத்தனப்பட்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குவார்கள்.
இணையத்தில் என்ன பிரச்சினை என்றால் இந்த அவஸ்தைகளை நம்மால் தவிர்க்கவே முடியாது. சாரு நிவேதிதா டாக்டர் அப்துல்கலாம் மீது சாணத்தை வீசியடிக்க திணறிக் கொண்டிருக்கும் போது நம் மீது சாணத்தின் துளி படாமல் தப்பிக்கவே முடியாது. ‘அந்த மனுஷன் எழுதின ஒரு கட்டுரையை படிச்சாச்சா...அதோட சரி...இனிமே அந்தப் பக்கமே போகக் கூடாது’ என்று நம் கடுப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது யாராவது அந்த இணைப்பை எடுத்துப் போட்டு ‘இந்த லோலாயத்தைப் பாருங்க’ என்று எழுதியிருப்பார்கள். சாருவைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? சுவாரஸியமாக எழுதக் கூடிய மனிதர் அல்லவா?. அப்படி என்னதான் எழுதியிருப்பார் என்று நமக்கு கை பரபரக்கும். க்ளிக் செய்து தொலைத்துவிடுவோம். பிறகு அதையெல்லாம் படித்து ரத்தக் கொதிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
சாமானிய மனிதனுக்கும் இந்தக் கொம்ப மகாராஜாவுக்குமான வித்தியாசம் ஒன்றிருக்கிறது.
எந்தவொரு பிரச்சினை என்றாலும் கொம்பமகாராஜாக்கள் தாங்கள்தான் குரலை உயர்த்த வேண்டும் என்பார்கள். அதுவும் வித்தியாசமான தொனியில். உயர்த்திவிட்டு போகட்டும். அவர்களுக்கு அதுதான் பிழைப்பு. நீங்களும் நானும் சொல்லும் அதே கருத்தையே சாருவும் இன்னபிற அறிவுஜீவிகளும் சொன்னால் நாளைக்கு அவர்களை யார் சீந்துவார்கள். அதனால் வித்தியாசமாகக் கூவித்தான் தீர வேண்டும். ஆனால் முதல் கூவலில் ‘இங்க பார்றா வித்தியாசமா கூவுறாண்டா’ என்று சிலர் திரும்பிப் பார்க்கும் போது திருப்தியடையமாட்டார்கள். ‘இன்னோருக்கா கூவலாம்’ என்று மீண்டும் முயற்சிப்பார்கள். சென்ற முறை திரும்பிப் பார்த்தவன் இந்த முறை குனிந்து கற்களை எடுப்பான். ‘இதைத்தானய்யா எதிர்பார்த்தேன்’ என்று இன்னொரு முறை கூவுவார்கள். கல்லை எடுத்தவன் அமைதியாக இருப்பானா? வீசுவான். இது மிக முக்கியமான கட்டம். உதட்டில் அல்லது நெற்றியில் அடிபடும். ரத்தம் கசிகிறதோ இல்லையோ- இந்த கொம்ப மகாராஜாக்கள் ஊளையிடுவார்கள். ‘இங்கு கருத்துச் சுதந்திரமே இல்லையா?’என்று கதறுவார்கள். இப்பொழுது நூறு பேர் கவனிப்பார்கள். அவ்வளவுதான். காரியம் முடிந்தது. ஆசுவாசமடைந்துவிடுவார்கள். ஒரு முறை கல்லால் அடித்தவன் ‘இவன் எப்பவுமே இப்படித்தான்...திருத்த முடியாது’ என்று போயிருப்பான். இந்த கொம்ப மகாராஜாக்கள் அடுத்து எவன் சாவான், எவன் கல்லைத் தூக்குவான் என்று எதிர்பார்க்கத் தொடங்கியிருப்பார்கள்.
கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் ஸ்கோர் செய்ய முயற்சிக்கிற Attention seeking என்று நாம் இதைச் சொல்வோம். ‘இல்லை இல்லை மொத்த சமூகமும் மொன்னையாகத் திரியும் போது நான் மட்டும்தான் சலனத்தை உருவாக்குகிறேன்’ என்று அவர்கள் சொல்வார்கள்.
கிழித்தார்கள்.
சாரு நிவேதிதா அளக்கும் கதையின் படி பார்த்தால் தமிழ்நாட்டில் அவர் காலத்தில் ஒரு பெரும்புரட்சியே நடந்திருக்க வேண்டும். மொத்த சமுதாயமும் தலைகீழாக மாறியிருக்க வேண்டும். எதைச் சாதித்திருக்கிறார்? இவரைப் போன்றவர்களால் இந்தச் சமூகத்தில் துளி சலனத்தைக் கூட உருவாக்க முடியாது. வெறும் மனப்பிராந்தி. தன்னால்தான் இந்த உலகமே சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதான வெற்றுப் பாவனை. தனது காலம் முழுக்கவும் இப்படியே தொண்டைத்தண்ணீர் வறண்டு போகுமளவுக்கு கத்தி கத்தி ரெமி மார்ட்டினுக்கும் காஸ்ட்லி ஜட்டிக்கும் ஏற்பாடு செய்து கொள்வதைத் தவிர வேறு எந்த ஆணியையும் பிடுங்கிச் சேர்க்கமாட்டார்கள்.
ஒரு போராளி அல்லது சமூக சிந்தனையாளன் ஒரு விஷயத்தை பேசினால் அதையே திரும்பத் திரும்ப பேசியும் சிந்தித்தும் கொண்டிருப்பான். சாரு போன்ற புரட்டுப் புரட்சியாளர்கள் தன் வாழ்நாளில் எந்த ஒரு கொள்கையைப் பின்பற்றி ஆழமாகவும் அழுத்தமாகவும் தொடர்ந்து விவாதங்களை உருவாக்கியிருக்கிறார்கள்? ஆட்டோ பிக்ஷன் என்பார் சீலே என்பார் அயல் சினிமா என்பார் திடீரென்று இந்த சமூகம் நாசமாகப் போகட்டும் என்பார். இங்கே நடப்பது வெறும் கழைக் கூத்து.
இத்தனை நாள் முடங்கிக் கிடந்த தனது தளத்துக்கு ஒரு விளம்பரம் தேவைப்படுகிறது. மீண்டும் ஆட்களைத் திரட்டுவதற்கு அப்துல்கலாம் சிக்கியிருக்கிறார். அப்துல்கலாமின் தாய் மொழிக் கொள்கை என்ன என்பதைக் குறித்து இணையத்தில் தேடினால் கூட பேச்சுக்கள் கிடைகின்றன. அவர் மத அடையாளம் பற்றி பெரிய பிரக்ஞையற்றிருந்தது குறித்தான கட்டுரைகளும் தகவல்களும் கிடைக்கின்றன. அவற்றை விரிவாக விவாதிக்கலாம். ஆனால் அதற்கான சமயம் இதுவன்று.
ஒரு போராளி அல்லது சமூக சிந்தனையாளன் ஒரு விஷயத்தை பேசினால் அதையே திரும்பத் திரும்ப பேசியும் சிந்தித்தும் கொண்டிருப்பான். சாரு போன்ற புரட்டுப் புரட்சியாளர்கள் தன் வாழ்நாளில் எந்த ஒரு கொள்கையைப் பின்பற்றி ஆழமாகவும் அழுத்தமாகவும் தொடர்ந்து விவாதங்களை உருவாக்கியிருக்கிறார்கள்? ஆட்டோ பிக்ஷன் என்பார் சீலே என்பார் அயல் சினிமா என்பார் திடீரென்று இந்த சமூகம் நாசமாகப் போகட்டும் என்பார். இங்கே நடப்பது வெறும் கழைக் கூத்து.
இத்தனை நாள் முடங்கிக் கிடந்த தனது தளத்துக்கு ஒரு விளம்பரம் தேவைப்படுகிறது. மீண்டும் ஆட்களைத் திரட்டுவதற்கு அப்துல்கலாம் சிக்கியிருக்கிறார். அப்துல்கலாமின் தாய் மொழிக் கொள்கை என்ன என்பதைக் குறித்து இணையத்தில் தேடினால் கூட பேச்சுக்கள் கிடைகின்றன. அவர் மத அடையாளம் பற்றி பெரிய பிரக்ஞையற்றிருந்தது குறித்தான கட்டுரைகளும் தகவல்களும் கிடைக்கின்றன. அவற்றை விரிவாக விவாதிக்கலாம். ஆனால் அதற்கான சமயம் இதுவன்று.
சமூக சிந்தனையாளர்கள் என்ற பெயரில் இந்தச் சமூகம் தலை சிலுப்பிகளாலும் வாய்ச் சொல் வீரர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது.
‘உனக்குத் தெரிந்ததை நீ சொல்; எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்’ என்கிற மனநிலைதான் வளர்ந்து பெருகிக் கொண்டிருக்கிறது. இந்தக் கொம்பமகராஜாக்கள் அலட்சியமாகப் பார்க்கும் கூட்டு மனசாட்சி, வெகுஜன மனநிலை என்பதெல்லாம் கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்ற தட்டயானதாக இல்லை. மிகச் சிக்கல் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாத நுணுக்கங்களால் நிரம்பியிருக்கிறது. பொதுமக்கள் அத்தனை பேரும் ஒரே மாதிரியாக சிந்திப்பதில்லை. அவனவனுக்கு அவனவன் கருத்து முக்கியம். ‘எனக்கு எழுதத் தெரியும்’ என்கிற நினைப்பில் முரட்டுத்தனமாக உனது கருத்தை முன் வைத்தால் அவனுக்குத் தெரிந்த எழுத்து வடிவத்தில் அவன் கருத்தை முன்வைப்பான். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இவன் பேசுவதைக் கேட்டு அவனோ அவன் பேசுவதைக் கேட்டு நானோ தவறுகளைத் திருத்திக் கொள்ளப் போவதில்லை. அதற்கு யாரும் இங்கு தயாராகவும் இல்லை. இந்த சூழல்தான் கொம்பமகாராஜாக்களுக்கு அதீதமான பதற்றத்தை உருவாக்குகிறது. முக்கி முக்கி நாம் எழுதும் விஷயத்தைவிட ஒன்றரை வரியில் நேற்று வந்த ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பொடியன்கள் மொத்த கவனத்தையும் திருப்பிவிடுகிறார்கள் என்று பதறுகிறார்கள். நம்மை இந்த சமூகம் மறந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். அதற்காக அண்டர்வேரோடு இறங்கி அட்டைக் கத்தியைச் சுழற்றுகிறார்கள்.
இணையத்தின் மிக அதிகமாகக் கொட்டிக் கிடப்பது என்னவென்று கேட்டால் pornography என்பதுதான் பலருடைய பதிலாக இருக்கும். ஆனால் அது உண்மையில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர், ப்லாக் என்று நாம் எழுதிக் குவிக்கிற தனிமனித கருத்துக்கள்தான் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. எதிர்காலத்தில் டெராபைட்டுகளாகவும், பெட்டாபைட்டுகளாகவும், எக்ஸாபைட்டுகளாகவும், ஜெட்டாபைட்டுகளாவும், யொட்டாபைட்டுகளாவும் நிரம்பப் போகின்ற இந்தக் கருத்துக் குவியல்களுக்குள் தங்கள் மொன்னையாக குரல் நசுங்கிப் போய்விடக் கூடாது என்கிற பயத்தில்தான் ‘இந்தச் சமூகம் மொன்னை’ என்று கதறுகிறார்கள். மற்றவர்களை விட தங்களின் சிந்தனை வித்தியாசமானது மேம்பட்டது என்றெல்லாம் சிரமப்பட்டு நம்புகிறார்கள். அதையே நாமும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்த்து கல்லடி வாங்குகிறார்கள்.
இந்தச் சமூகத்தில் பிரச்சினைகள் இருக்கலாம்- ஆனால் சமூகத்திற்கென சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் தங்களைச் சமூகத்தைச் செதுக்க வந்த சிற்பிகளாக நினைத்துக் கொள்ளும் உங்களிடம்தான் அதைவிட சிக்கலானதும் தீர்க்கவே முடியாத பிரச்சினைகளும் நிரம்பிக் கிடக்கின்றன.
இந்தச் சமூகத்தில் பிரச்சினைகள் இருக்கலாம்- ஆனால் சமூகத்திற்கென சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் தங்களைச் சமூகத்தைச் செதுக்க வந்த சிற்பிகளாக நினைத்துக் கொள்ளும் உங்களிடம்தான் அதைவிட சிக்கலானதும் தீர்க்கவே முடியாத பிரச்சினைகளும் நிரம்பிக் கிடக்கின்றன.
25 எதிர் சப்தங்கள்:
உங்களுடய இந்த பதிவு நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு எழுதியதாகவேப்படுகிறது. ஏன் இந்த கோபம்? நான் சாருவின் ரசிகன் அல்லன். ஆனால் அவர் எழுதியது யோசித்துப்பார்க்கையில் ஞாயமாகவே தோன்றுகிறது. அவர் இறப்பின் போது அவரை விமர்சிக்கலாமா என்றால், அது அந்த விமர்சனத்தின் தரம் பொருத்தது. தரம் தாழ்ந்த விமர்சனமாக எனக்கு தோன்றவில்லை. கலாம் நல்ல மனிதர், நம் நாட்டை உண்மையாகவே நேசித்தவர் என்பதில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது, ஆயினும் அவருடைய சமூகம் சார்ந்த பங்களிப்பு என்ன, அவரால் என்ன மாற்றம் கொண்டுவர முடிந்தது என்று தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.
Wonderful...சாட்டையடி,அவருக்கு மனநிலை சரியில்லையோ என்று நினைத்திருந்தேன்...உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி
sema sariyaana pathivu.
sonna ovvoru visayamum, ketta ovvoru kelviyum nach.
அந்த லிங்கை படித்து மிகவும் வருந்தினேன். ஏன் இப்படி யெல்லாம் எழுதுகிறார்கள் என்று. ௭ன் மனதில் நினைத்து குமறிக் கொண்டிருந்த Attention Seeking யை தெளிவாக கிழித்து விட்டீர்கள்.
மிக அருமையான, நாகரிகமான விளாசல். சாநி என்ற சாக்கடைக்காக நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! சேற்றில் விழுந்து ‘ஒற்றை எழுத்தை’த் தின்னும் பன்றியைப் பற்றி நாம் ஏன் பேசவேண்டும்?
what happened to you?how can you take a person like cha ni so seriously?there is always
method in his madness.he is a person to be laughed off.he is always amusing and entertaining like our comedian Vadivelu.vandu murugan and su na pa na tickle you and entertain you.one should not see any offence in their clownish behavior.
என் வோட்டு செல்வாவின் பின்னுட்டத்திற்குத்தான்..
கலாம் சமுதாயத்துக்கு என்ன செய்துயிருக்க வேண்டும் என்று இவர்கள் எதிர் பார்கிறார்கள், மேலும் இவருக்கு முன்பும் பின்பும் ஜனாதிபதியாக வந்தவர்கள் என்ன செய்தார்கள் இந்த சமுதாயத்துக்கு ??கலாமை விமர்சிக்கும் இவர்கள்(சாரு + கொம்ப மகாராஜாக்கள்) இந்த சமுதாயத்துக்கு என்ன செய்தார்கள்???
Please do not get emotional for everything, Charu is saying his view, you just decide whether you want to take it or ignore it. If you hate anyone, you are not at all a Kalam follower.
Dear Mani,
This person is a psycho. You have rightly said what he intend to do. He has ASS (attention seeking syndrome)
Mani - i am a regular reader of your's and Charu's blog. I see his views are reasonable as well & i don't consider he is degrading Kalam. Its just other side of the coin and if you disagree please do challenge it with a your response and justify why you say so. It encourages learning on both sides i believe
believe there is no point bursting out. i see life is full of learning.
please continue your good work
No, Mani. I feel Charu's comments are valid and he explained his points very clearly.To my opinion, Kalam is simple & good person. Appreciating that, may his soul rest in peace. But all these recent overrated hype created by media/people is disgusting.
பொது புத்தி என்று ஒன்று உள்ளது. அதை மீறி யோசிப்பது கடினம். மீறி யோசித்தாலும் - எதாவது இன்சிடியஸ் அஜன்டா இருக்கும் - அதையும் மீறி ஒரு சிலரே ஒரு சில நேரங்களில் நாம் யோசிக்க மறந்ததை சொல்வார்கள். அதை கண்டுபிடிக்க, நம் உணர்ச்சிகளை கட்டுபடுத்திக் கொண்டு படிக்க வேண்டும். அப்படி படித்ததில் சாரு சொல்வது சரி மட்டுமல்ல நம் மீது அவருக்கு பெருக்கெடுத்து ஓடும் அன்பும் தெரிகிறது. மரத்தில் மறைந்தது மாமர யானை தான் நியாபகம் வருகிறது.
சவுக்கடி சாட்டையடி போன்றவை உடலை கிழித்து வருத்தும் காயப்படுத்தும்... உங்கள் வார்த்தை விளாசல் அதற்கு நிகரானது ஆனால் காயப்படுத்தாத நேர்மையான பதிலடி.. இந்நேரம் இரண்டு லார்ஜ் எக்ஸ்ட்ராவாக போயிருக்கும்
செம்பட்டி அடி குடுத்தீங்க மணி. இந்த மாரியான ஆளுங்களுக்கு இதே பொழப்பு . அவுங்கலஎலாம் ஒரு பொருட்டாவே எடுத்துக்க கூடாது
மணி அண்ணா ,
"கழைக் கூத்து" என்பதன் பொருள் என்ன?
இங்கே "கழை" என்பது எதை குறிக்கிறது? Is it mentioning to "art"?
சமீபத்தில் நான் படித்த ஒரு வார இதழ் கட்டுரையில் சுமார் 30 முறை உபயோகமாயிரிந்த இந்த வார்த்தை எனக்கு கலை (art ) என்றே இருக்க வேண்டும் எனப்பட்டது.
உங்கள் கருத்து ?
-தனபால்
மணிகண்டன், உங்களைப்போல்தான் நானும் கை பர பரக்க க்ளிக் பண்ணி வாசித்துத் தொலைத்தேன். (Intact, உங்களுடைய இந்தப் பதிவைக்கூட முதலில் அவரது தளத்தில் தான் வாசித்தேன்).
உங்களது இந்தப் பதிவைப் வாசித்த்பின்தான் முதன் முதலாக அடுத்தவரை விமர்சித்து எழுதப்பட்ட பதிவுக்காக சந்தோஷமாக புன்னகைத்தேன். Thank you
அன்புள்ள மணிகண்டன்,
நல்ல வேளை தலைப்பில் சாரு + என்று தொடங்கினீர்கள் இல்லையென்றால் இந்த கட்டுரை உங்களுக்கும் அப்படியே பொறுந்துவது போலத்தான் இருக்கிறது.
நீங்களும் எழுத்தாளர் என்ற அறிவு ஜீவி வட்டத்துக்குள் வருபவர் போலத்தான் தோன்றுகிறது.
நீங்களும் எல்லா விதமான நாட்டு நடப்புகளுக்கும் உங்களுடைய கருத்துகளை சொல்லிக்கொண்டு தான் இருக்கிறீர்கள்.
ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் நீங்கள் பொதுப் புத்தி என்ற வட்டத்திற்கு வேலயே வந்து கருத்து சொன்னதாக எனக்குத் தெரியவில்லை.
ஒரு முன்னேறுகிற சமூகத்திற்கு இது போன்ற கலகக்காரர்கள்/iconoclast கண்டிப்பாக தேவை.
எனக்கும் அவருடைய நிறைய கருத்துகளில் முரண்பாடு இருந்த போதும் இந்த குறிப்பிட்ட கட்டுரை சரியானதாகவே படுகிறது.
நன்றி,
ஜெபம்
நாம் எல்லாம் வாய் வழியாக சாப்பிடுகிறோம். சாரு மட்டும் வேறு வழியாக சாப்பிட முயற்சிக்கிறார்.
Dear Manikandan,
Vandheri vadugarkal endrume thamizhargalai paratavadhu kidaiyadhu.
அக்னியை உருவாக்கியவனை பற்றி
இந்த வெற்று (சாராய நெடி வாறும்) வாய்கள்
மூடியே இருந்தால் நலம்.
திறக்க வேண்டுமாயின், அவரின் முந்தைய
நாயகன் நித்தியானந்தைஇவை பற்றி
பதிவு எழுதி தன்வி தீர்த்துக் கொள்ளட்டும்.
உங்கள் கோணம் அந்த வகையைச் சார்ந்தது
OBJECTIVITY என்கிற ஒரு சொல் இருக்கிறதே, அதை புரிந்து கொள்வதோ, நடை முறையில் கடைப்பிடிப்பதோ மிகவும் கஷ்டமான ஒரு நிலை. எதையுமே உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமே பார்க்க, புரிந்துகொள்ள பழகிய நமக்கு எந்த விஷயத்திலும் சரியான பார்வையை செலுத்த முடிவதே இல்லை.
டாக்டர் கலாமின் மறைவு குறித்து நாடு முழுவதும் ஒரே உணர்ச்சிக்குவியலாக, அவரை போற்றி செலுத்தப்படும் அஞ்சலிக்கிடையில், அந்த கூட்டத்தில் தான் சேர வேண்டும் என்று ஏதும் கட்டாயமுள்ளதா ? மாற்று கருத்து என்று இருக்கவே கூடாதா, அல்லது நம் செவிக்கு இனிமையாக இல்லாத அக்கருத்து, அவர் இறந்த பின் கூறப்பட்டது தான் நம்மை கோபப்படுத்துகிறதா? டாக்டர் கலாமை விமர்சித்து, அவருடைய நிலைப்பாடை குறைகூறி, இத்தனை வருடங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததில்லையா ? ஏன் உணர்ச்சி வசப்பட்டு சாருவை திட்டி தீர்க்க வேண்டும் ? அவர் கூற்றை கூறி விட்டு போகட்டுமே ! இளையராஜா, கே ஜே யேசுதாஸ், என்று தம் திறமை,உழைப்பால், உயர்ந்து, சமூகத்தில், மக்கள் மனதில் நீங்கா புகழுடன் திகழும் பலரை, மட்டம் தட்டி எழுதினால், அவருக்கு வெளிச்சம் விழுவதாக நினைத்து அதை ஒரு வியாபார யுக்தியாக பல காலமாக செய்து கொண்டிருப்பவர் தானே சாரு ? இன்று அந்த வரிசையில் டாக்டர் கலாம். அவ்வளவுதான். பாவம் அவரை விட்டு விடுங்கள்.
அவரே பெருமை அடித்துகொள்வதுபோல் அவர் ஒரு "ஞானம் வழங்கும் ஆசான்" .ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க, தென்னாப்பரிக்க, கிழக்காசிய இலக்கிய படைப்புகளை, பெருமைகளை தமிழர்களுக்கு ஞான ஒளியாக வழங்க படைக்கப்பட்டிருக்கும் SOLE SELLING AGENT !! முடிந்தால் அவர் அக்கௌண்டில் பணம் அடைத்து அவரை அடுத்த வருடம் துருக்கி அனுப்ப உதவுங்கள். நிறைய ஞானத்துடன் வந்து அதை நம் தமிழர்களுக்கு படைப்பார். அதை விடுத்து, ஆசானின் கருத்தை குறை கூறினால் தமிழ் சமுதாயம் உருப்படவே உருப்படாது என்று சாபம் இட்டு விடுவார், ஜாக்கிரதை.
மணி அண்ணா ,
கொஞ்ச நாளைக்கு முன்னாடி விஜய் டிவி நீயா நானாவில் அராத்து கிட்ட கோபி , "உங்க ப்ளாக்-அ எப்படி இண்டரெஸ்ட் -ஆ வச்சுகிறீங்க " னு கேட்டார் . அதுக்கு அவரு "ரொம்ப சிம்பிள் . எவனாவது ஒரு இளிச்சவாயன் வித்யாசமா கருத்து சொல்றேன்னு, எல்லோரையும் விட முரண்பாடா ஒண்ணு சொல்லுவான் ; அவன நாங்க எல்லாரும் சேர்ந்து சாத்து சாத்துன்னு சாத்துவோம் . பாம்பு செத்து போச்சுன்னு தெரியும் ; இருந்தாலும் அடி அடின்னு அடிப்போம் . That will be so interesting " னு சொன்னார் .
:-)
There are some more like these cracks.. Thamizhachi, Kishore K swamy etc.. You are right and spot on.
சாட்டையடி பதிவு
Post a Comment