பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நிறைய உதவித் திட்டங்கள் இருக்கின்றன. மத்திய அரசும் தனியார் அறக்கட்டளைகளும் வழங்கும் இந்த உதவித் தொகைகள் பற்றிய விவரங்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. சரியான நேரத்தில் தகவல் தெரிந்து தேர்வு பெற்றுவிட்டால் படிப்பு முடியும் வரைக்கும் கவலை இல்லை. இவை பெரும்பாலும் அகில இந்திய அளவிலான போட்டியாக இருப்பதால் தயாரிப்புகளுக்காக சற்று மெனக்கெட வேண்டியிருக்கும்தான். ஆனால் குழிக்கு ஏற்ற பனியாரம். உழைப்புக்கேற்ற ஊதியம்.
இரண்டு முக்கியமான உதவித் தொகைகள் பற்றிய குறிப்பினை திரு.பாலகுமார் அனுப்பி வைத்திருந்தார். இந்தக் குறிப்புகள் ஒன்றிரண்டு மாணவர்களுக்காவது பயன்படக் கூடும் என நினைக்கிறேன்.
உதவித் தொகைகள் (Scholarships) :
1) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உதவித் தொகை
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Dept of Scinence and Technology) அறிவியல் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களைக் கண்டுபிடிக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தவும் Kishore Vaigyanik Protsahan Yojna என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன.
பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களும் முதல் வருட அறிவியல் (கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், புள்ளியியல் உட்பட..) படிப்பை படிக்கும் கல்லூரி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். முதுநிலை அறிவியல் மாணவர்களுக்கும் கலந்து கொள்ளத் தகுதியுண்டு.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.5000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இதுவொரு அருமையான திட்டம். தெரிந்த பள்ளிக் கல்லூரி மாணவர்களிடம் பரிந்துரைக்கவும். மாதிரி வினாத்தாட்கள் உட்பட முழுமையான விவரங்கள் இணையதளத்தில் கிடைக்கின்றன.
2) பட்டயப்படிப்பு மாணவர்களுக்கான (Diploma) உதவித் தொகைகள்
Mahindra All India Talent Scholarship
மும்பையில் இருக்கும் மஹிந்திரா கல்வி அறக்கட்டளை அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வருடம் ரூபாய் பத்தாயிரம் உதவித் தொகையாக வழங்குகிறது. பெண்களுக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் இந்தத் திட்டத்தின் வழியாக விண்ணப்பிக்க இன்னமும் மிகக் குறைந்த அவகாசமே இருக்கிறது.
ஜூலை 31 கடைசி நாள்.
விவரங்கள் இணையதளத்தில் கிடைக்கின்றன.
****
வேலை வாய்ப்புகள்
1) எம்.பி.ஏ

எம்.பி.ஏ(மார்க்கெட்டிங்) படித்தவர்கள் இரண்டு பேர்கள் தேவைப்படுகிறார்கள். பணியிடம் சென்னை.
வேலை குறித்தான மற்ற விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கும் சுயவிவரக் குறிப்பை அனுப்புவதற்கும் sathya@excelautomationsolutions.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
2) Freshers மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள்
1. Associate Security Engineer
2. Security Engineer
3. Associate Security Analyst
4. Security Analyst
ஆகிய பணியிடங்களுக்கான சுயவிவரக் குறிப்பை renganayalu@infysec.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.
பணியிடம்: சென்னை.
2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பொறியியல் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நெட்வொர்க்கிங் மற்றும் செக்யூரிட்டி பற்றிய அனுபவம்/அறிவு உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3 எதிர் சப்தங்கள்:
Mani Anna,
Can you please elaborate (little) the requirements of the second one?
What 'Security' it means? who can apply for this?
IT Security..
Candidates who have finished academic degree like BE, ME, B.Tech, M.Tech, BCA, MCA, B.Sc Comp Sc, M.Sc Comp Sc (2012, 2013, 2014 & 2015) can apply.
Candidates with practical knowledge in handling Networking and Security Tools are preferred along with good communication skills.
Candidates who finished certification courses like Certified Ethical Cracker, ethical hacking, GCIA Certification are added advantage.
dear manikandan,
tamil nadu government offers a number of scholarships to sc st candidates.
a student belonging to sc st community can study from ug to phd free of cost.
if you want further details, please contact me,9840216744.
similarly,tuition fees are waived for first generation people irrespective of caste.
the brilliant boy who joined psg coimbatore can cmplete his entire course free of cost.unfortunately,these schemes are not widely advertised and popularized
rajasekaran
Post a Comment