வெள்ளிக்கிழமையானால் அலுவலகத்துக்கு ஒரு கூட்டம் வருகிறது. ஊழியர்கள் நலனுக்காக சில காரியங்களைச் செய்வார்கள் அல்லவா? அப்படியான செயல்பாடு அது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவற்றை சோதனை செய்வதற்காக ஒரு குழுவினர் வந்திருந்தார்கள். தனியார் மருத்துவமனையின் ஆட்கள் அவர்கள். Random Blood Sugar பார்த்தார்கள். எங்கள் ஊரில் பரிசோதித்தால் ஐம்பது ரூபாய். பெங்களூரில் நூற்றியிருபது ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால் இந்த முகாமில் இலவசமாகச் செய்தார்கள். ‘இவ்வளவு பேருக்கு இலவசமாக பார்க்கிறார்கள். நல்ல மருத்துவமனை’ என்று நினைத்து வரிசையில் நின்றிருந்தேன். வரிசையில் நிற்கும் போதே ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்து நிரப்பச் சொல்லியிருந்தார்கள். வழக்கமான விவரங்கள்தான். தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி, வீட்டில் யாருக்கேனும் சர்க்கரை இருக்கிறதா என்கிற கேள்விகள். அம்மாவுக்கு இருக்கிறது என்று நிரப்பிக் கொடுத்திருந்தேன். அலுவலக பணியாளர்களுக்கு பரிசோதனை முடிந்த பிறகு மற்றவர்களுக்கும் செய்தார்கள்- மற்றவர்கள் என்றால் அலுவலகத்தை துடைத்துப் பெருக்கும் கடைநிலை ஊழியர்கள். ஒரு ஆயாவுக்கு சர்க்கரையின் அளவு முந்நூற்று சொச்சம் இருந்தது. அதைக் கேட்டு மயங்கி வீழ்ந்துவிட்டார். சர்க்கரை என்றால் உயிர்க்கொல்லி என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது.
அடுத்த நாள் காலையில் அந்த ஆயாவிடம் பேசினேன். நேற்றிலிருந்து சாப்பாடே சாப்பிடவில்லை என்றார். அவ்வளவு பயம். நூல்கோல் வைத்தியத்தைச் சொல்லிவிட்டு ‘எதுக்கும் நீங்க டாக்டரைப் பாருங்க’ என்றேன். நேற்று மாலையில் விசாரித்த வரைக்கும் அவர் மருத்துவரை பார்த்திருக்கவில்லை. பரிசோதனை செய்ய வந்த மருத்துவமனையிலிருந்தே இரண்டு மூன்று முறை அழைத்திருக்கிறார்கள். ‘அந்த ஆஸ்பத்திரிக்காரங்களே வரச் சொல்லியிருக்காங்க..டெஸ்ட் எல்லாம் செய்யணும்...தொள்ளாயிரம் ரூபாய் எடுத்துட்டு வரச் சொல்லுறாங்க...காசு ரெடி பண்ணிட்டு போகணும்’ என்றார். இப்பொழுதெல்லாம் மதிய உணவுக்குச் சென்றால் ஒரு பஃபே சாப்பாடு நானூறு ரூபாய்க்கு குறைவில்லாமல் ஆகிறது. பார்-பீ-க்யூவுக்குச் சென்றால் எழுநூறு ரூபாய்க்கு மேலாக ஆகிறதாம். அதே அலுவலகத்தில் வேலை செய்யும் ஆயாவுக்கு முந்நூறுக்கு மேல் சர்க்கரையிருந்தாலும் மருத்துவமனைக்குச் செல்வதற்கு காசு ஏற்பாடு செய்ய ஒன்றிரண்டு வாரங்கள் ஆகிறது.
அந்த ஆயா இருக்கட்டும். மருத்துவமனைக்காரர்களை கவனித்தீர்களா? இலவச பரிசோதனை செய்வதாகவும் ஆயிற்று; நோயாளியையும் பிடித்த மாதிரி ஆகிவிட்டது. இரண்டு நாட்கள் கழித்து என்னையும் ஃபோனில் அழைத்தார்கள். ‘அம்மாவுக்கு சர்க்கரை இருக்குல்ல...கூட்டிட்டு வர்றீங்களா?’ என்றார் ஒரு பெண்மணி. அம்மா ஊரில் இருக்கிறார் என்று சொல்லியிருக்கலாம். அதற்கு மேல் தொந்தரவு இருந்திருக்காது. தெரியாத்தனமாக சரி என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்குத் தாளித்து தள்ளிவிட்டார்கள். ‘எப்போ வர்றீங்க?’ என்று கேட்கமாட்டார்கள். ‘உங்களுக்காக எப்போ அப்பாய்ண்ட்மெண்ட் புக் பண்ணட்டும்?’ என்பார்கள். ஏதாவது ஒரு நாளில் நாம் சென்றே தீர வேண்டும் என்பது மாதிரியான அழுத்தம் இது. அலுவலக நண்பர்கள் பலருக்கும் இதே தொந்தரவு. இவர்கள் இப்படி ஆள் பிடிப்பதற்கு இலவச மருத்துவ முகாம் என்று பெயர். முந்தாநாள் கூட அதே பெண் அழைத்திருந்தார். ‘எனக்கு ஓரளவுக்கு விவரம் இருக்குங்க...தயவு செஞ்சு நான் முடிவெடுக்க அனுமதிங்க...எந்த மருத்துவரிடம் அம்மாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும்’ என்று கத்திவிட்டேன். வழக்கமாக அப்படி யாரிடமும் ஃபோனில் கத்துவதில்லை. ஆனால் வெண்ணையை வெட்டுவது போல வழு வழுவென பேசி ஆள் பிடித்தால் கோபம் வந்துவிடுகிறது. நம்மை இளிச்சவாயன் என்று நினைத்தால் மட்டுமே அப்படி வழுவழுப்பாக பேச முடியும். அதற்கு மேல் தொந்தரவு இல்லை.
இவர்கள் இப்படியொரு களவாணி என்றால் கடந்த வெள்ளிக்கிழமை இன்னொரு கார்போரேட் களவாணிக் குழு வந்திருந்தது. யோகா சொல்லித் தருகிறோம் என்று இறங்கியிருந்தார்கள். ஈஷா யோக மையத்தினர்தான். உண்மையில் ஜக்கியின் ஆட்கள்தான் யோகா சொல்லித் தருகிறார்கள் என்று தெரியாது. ஷூவைக் கழற்றிவிட்டு அந்த இடத்துக்குச் சென்ற போதுதான் தெரிந்தது. ஒரு பெண் - அவளுக்கு முப்பது வயது இருக்கலாம் - முழு சந்நியாசினி ஆகிவிட்டாளாம். ‘நான் சிஸ்கோவில் வேலை செய்தேன்...லட்சக்கணக்கில் சம்பளம்...இப்போ வேலையை விட்டுட்டு சத்குருவின் பாதங்களில் சரணடைந்துவிட்டேன்...ரொம்ப நிம்மதி’ என்றார். இது ஒரு மூளைச் சலவை. இந்த உலகத்தில் வேலை, குடும்பம் உள்ளிட்ட லெளகீக வாழ்க்கை என்பதே சுமை என்பதாகவும் இந்தச் சுமையை இறக்கி வைக்க ஒரு குருவினால் மட்டுமே முடியும் என்கிற வகையில் ஐடிக்காரர்களிடம் காட்டுவதற்கான மாடல்கள் இந்த மாதிரியான சந்நியாசினிகள். ‘ச்சே ஐஐடியில் படிச்சவன் இப்படி மாறியிருக்கான் பாரு..நிச்சயம் ஏதோ இருக்கு’ என்று அடுத்தவர்களையும் யோசிக்கச் செய்கிறார்கள். பக்காவான strategy.
ஓட்டுவது எருமை. அதில் இப்படியொரு வெட்டிப் பெருமை.
முப்பது வயதிலும் நாற்பது வயதிலும் வாழ்க்கையில் அனுபவிக்கவும் தெரிந்து கொள்ளவும் எவ்வளவோ இருக்கின்றன. இந்த வயதில் எவனோ சொன்னான் என்று விட்டில் பூச்சியாக விழுந்துவிட்டு அடுத்தவனைப் பார்த்து ‘உங்கள் வாழ்க்கையைவிடவும் என்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கிறது’ என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஒருவிதமான மனப்பிரம்மை அது. சாதாரண மனித வாழ்க்கையின் எல்லாவிதமான பரிமாணங்களையும் பார்த்து அனுபவித்தவன்தான் பூரண மனிதனாக முடியுமே தவிர பாதியிலேயே எல்லாவற்றையும் விட்டு ஒரு அரைவேக்காட்டு சாமியாரிடம் சராணகதியடைந்தவர் வந்து பேசினால் எரிச்சல் வரத்தான் செய்யும். இதே ஜக்கியின் மகள் முழுநேர யோகா பயிற்சியாளர் ஆகிவிட்டாரா என்ன? அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ இருக்கிறாராம். உபதேசமெல்லாம் ஊருக்குத்தான்.
எனக்கு இந்த மாதிரி சமயங்களில் வாய் சும்மா இருக்காது. ‘உங்களை விட நான் சந்தோஷமாக இருக்கிறேன். இல்லையென்று நிரூபிக்க முடியுமா?’ என்று கேட்டேன். ஹோட்டலில் வேலை செய்பவரோ, சாலையோரம் காய்கறி விற்பவரோ ‘உன்னைவிட சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று சொன்னால் ஒத்துக் கொள்வேன். ஆனால் இந்தப் பெண்மணி சொல்வதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எதைப்பற்றியும் யோசிக்காமல் ‘சத்குருவின் கூட்டம் பெங்களூரில் நடக்கிறது. அதற்கு நீங்கள் வர வேண்டும்’ என்றார்.
இவ்வளவுதான். இதுதான் இந்த யோகா பயிற்சியின் நோக்கம். எதையாவது சொல்லி சத்குருவின் கூட்டத்திற்கு ஆளை இழுத்து வர வேண்டும். இப்படித்தான் பெங்களூரில் நிறைய கார்போரேட் நிறுவனங்களில் நுழைந்திருக்கிறார்கள். யோகா சொல்லித் தருகிறோம் என்று நுழைந்து பிறகு ஜூன் 20 ஆம் தேதி ஜக்கி நடத்தும் யோகா பயிற்சிக்கு வந்துவிடுங்கள் என்று கொக்கி போடுகிறார்கள். பெங்களூரில் திரும்பிய பக்கமெல்லாம் பேனர்கள். முதலமைச்சரே சத்குருவுடன் சேர்ந்து யோகா செய்கிறாராம். செய்தித்தாள்களில் பிட் நோட்டீஸ் வைத்துக் கொடுக்கிறார்கள். பேருந்து நிறுத்தங்களில் விநியோகிக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஆட்களைத் திரட்டிவிடுவார்கள். அதுவும் கூட்டத்தை எங்கே நடத்துகிறார்கள்? மான்யாட்டா டெக் பார்க். கார்போரேட் நிறுவனங்கள் நிரம்பிக் கிடக்கும் வளாகம் அது. இந்த களவாணி சாமியார்கள் பேசும் போது ‘கார்போரேட் என்றாலே மன அழுத்தம்’ என்று நிறுவிவிடுகிறார்கள். ‘ஆமாம்டா நமக்கு பயங்கர டென்ஷன்’ என்று நாமும் நம்பத் தொடங்குகிறோம். ‘அப்போ வாங்க நாங்க ரிலாக்ஸ் பண்ணிவிடுறோம்’ என்று அமுக்குகிறார்கள்.
யோகா வாழ்க்கைக்கான கருவிதான். ஆனால் இந்தக் கருவியைப் பயன்படுத்திதான் அத்தனை சாமியார்களும் கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறார்கள். பாபா ராம்தேவ் வெறும் யோகா சாமியாராக இருந்தால் பிரச்சினையில்லை. அவருடைய பதஞ்சலி கடைகளில் விசாரித்துப் பார்த்தால் தெரியும். கிட்டத்தட்ட ஐநூறு விதமான பொருட்களை வைத்திருக்கிறார்கள். மருத்துவப் பொருட்களை மட்டும்தான் விற்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. துணி துவைக்கும் டிடர்ஜெண்ட் வரைக்கும் அத்தனையும் கிடைக்கிறது. அரை லிட்டர் எண்பது ரூபாய்தான். வெரி வெரி சீப். யோகா என்ற பெயரில் ஆட்களை உள்ளே இழுத்து ஒரு மிகப்பெரிய வணிகத்தை நடத்துகிறார்கள். புத்தகம், ருத்ராட்சைகள் என்று எல்லாவற்றையும் வைத்து வியாபாரம் நடத்துகிறார்கள். இந்த வியாபாரிகளுக்குத்தான் யோகா தினம் பயன்படப் போகிறது.
மாதா அமிர்தானந்தமாயியை தான வள்ளல் என்கிறார்கள். அவரது அமிர்தா பொறியியல் கல்லூரியில் எவ்வளவு ஃபீஸ் வாங்குகிறார்கள் என்று விசாரித்துப் பார்க்கலாமே. ஜக்கி இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டிருப்பதாகச் சொல்கிறார். ஆலந்துறையில் அவரது ஈஷா மையம் வனப்பகுதிக்குள் நடத்தும் அழிச்சாட்டியங்களை அந்த ஊர்க்காரர்களிடம் கேட்டால் சொல்வார்கள்- மிகப்பெரிய கட்டடங்களை எழுப்புவதும், வனவிலங்குகளின் பாதைகளை மறைப்பதும், வனப்பகுதிக்குள் கூட்டம் சேர்ப்பதும் என்று அடித்து நொறுக்குகிறார்கள். ஒரு பக்கம் கொடுப்பது மாதிரி கொடுத்துவிட்டு இன்னொரு சுருட்டியெடுக்கிறார்கள் இந்த சாமியார்கள்.
யோகாவை பழிக்கவில்லை. அதைக் குறை சொல்லவுமில்லை. ஆனால் எல்லாவற்றையும் வணிகமயமாக்கிக் கொண்டிருக்கும் யுகத்தில் யோகாவின் பெயரால் களவாணிகளும் கேடிகளும் கார்போரேட் சாமியார்களும் கோடிக்கணக்கில் புரண்டு கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் கணக்கெடுத்தால் யோகா தெரிந்த குருக்கள் பல்லாயிரக்கணக்கில் இருப்பார்கள். ஆனால் கார்போரேட் பெரு மருத்துவமனைகளைக் கொண்டு வந்து பிறகு குடும்ப மருத்துவர் என்கிற ஒரு அம்சத்தையே ஒழித்துக் கட்டினார்கள் அல்லவா? அப்படித்தான் யோகாவிலும்- யோகா பழக வேண்டுமானால் ஈஷாவிலும், ராம்தேவிடமும், வாழும்கலையிலும்தான் பழக வேண்டும் என்று அவர்கள் மீது பெரும் வெளிச்ச வெள்ளத்தைப் பாய்ச்சுகிறார்கள். அவர்களை மட்டும்தான் பிரதானப்படுத்துகிறார்கள். குடும்ப டாக்டர்கள் ஒழிந்தது போல இந்த சிறு சிறு யோகா குருக்களும் ஒழியப் போகிறார்கள். எல்லாவற்றிலும் கார்போரேட் மயமாக்கல்தான்.
இந்த யோகா தினக் கொண்டாட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் most influential சாமியார்கள் நிச்சயம் இருப்பார்கள் என்று நம்பலாம். அக்ஷய திருதியைப் போல இதில் மிகப்பெரிய வணிக நோக்கம் ஒளிந்திருக்கிறது. இவ்வளவு விளம்பரங்களும் பிரம்மாண்டப்படுத்துதலும் யாருக்கு பயன்படுகிறதோ இல்லையோ- தங்களின் வணிக சாம்ராஜ்யத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்திக் கொள்ள சாமியார்களுக்கு உதவும். இப்படியான ஒரு சூழலில் அரசாங்கம் கார்போரேட் சாமியார்களை முன்னிலைப்படுத்திக் காட்ட வேண்டியதில்லை. ஆனால் அப்படியெல்லாம் விட்டுவிடுவார்களா? வேலிக்கு ஓணான் தேவை. ஓணானுக்கு வேலி தேவை. இந்த லட்சணத்தில் நாம் சொன்னால் கேட்கவா போகிறார்கள்?
32 எதிர் சப்தங்கள்:
100 % agree. Especially about Jakki.
very good post.
-- By same annony.
Well said,
இதே ஜக்கியின் மகள் முழுநேர யோகா பயிற்சியாளர் ஆகிவிட்டாரா என்ன?/// இந்தியாவில் இருக்கும் அத்தனை கார்போரேட் சாமியார்களும்
ஊருக்குத்தான் உபதேசமெல்லாம்... பதிவு super sir.
எல்லாமே 80G தான்
புளுவ போட்டு மீன புடிக்கிற வேலை.தேவையான பதிவு
மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். இன்று காலை ஒரு வார இதழை படித்த போது பிரபல சாமியார் நடிகையை திருமணம் செய்து கொண்டு விட்டார் என்று செய்தி வெளியிட்டுள்ளது. பின்பு எதற்கு காவி உடை என்று தெரியவில்லை. பங்காரு அடிகளார் பெண்கள் பூஜை செய்யலாம் என்று ஒரு புதிய வழியில் யோசித்து அதை நடைமுறைப்படுத்தி 1980 களில் சைக்கிளில் சென்றவர் இன்று கோடிக்கணக்கான மதிப்புடைய கார்களில் பவனி வருகிறார். இந்த காலகட்டங்களில் உங்களின் கட்டுரை மக்களுக்கு தேவையான ஒன்றுதான். வாழ்த்துக்கள்
Dear mani
IMHO, god has given each and everybody a unique talent, equal time (24hrs/ a day -- be it rockfeller / rajinikanth / or an ordinary man ). it is how you utilise the talent within the given frame of time and achieve success. Here, success is an yardstick of different characteristics. for some people success is happiness lies in charity (like all of us in nisaptham), for some earning big money is success, for some showing their status (wealthy ornaments, gadgets etc.,), for some directing a film or writing a poem, etc., so on and so forth. BUT god has given a different question paper to each and everybody to learn from society, family, friends etc in the disguised name of "Experience" -- so everybody got different experience and that is called "LIFE". so, when there are different question papers, experience and life then how can those brainwashed sanyasis compare "happiness". it is absolutely Ridiculous. even happiness and success differ from person to person. -- kannadasan rightly pointed it out in his poem
"Anaithaiyum anubavathin moolam arinthukolvathendral aandavane nee yen endreane ?
Aandavan sattru arugae vanthu punnagaiyudan antha anubhavame naan thaan endran " --- How true. This kind of Maturity is not with those sheepish gullible people and thats why they fell for those corporate yoga, medical..... traps. for yogis "Stress is the Corporate Mantra" to cultivate more people and then more money. they do not know what is "Elimai/modest/humbleness"
so, we cannot do anything instead warning and preventing them from free fall , if they do not heed then they are those sufferers, what else we can do rather than praying.
"Kurukku vazhiyil vaazhvu thedidum purattu ulagamada athil kollai adippavar vallamai kaatitudum thiruttu ulagamada thambi thelinthu nadanthu kollada"- purinthu nadanthu kollada
aatukku vaalai aandavan alanthu thaan vaithirukkiran. makkal eppadiyo magesan appadi. so intha maathiri mooda janangalukku antha mathiri oozhal ministers, cheating film stars, dubakkur medicos, fraud yogis thaan kidaippanga. avangalukku thaan othuvarum. upadesam panna othukka maatanga. so leave them to suffer. paatu therinthu kollattum, ingu yellame business thaan, purinthu kondu nelivu sulivoda vaazhanthal thaan thakku pudikka mudiyum. survival of the fittest. onnum solrathukkuillai.
thanks for the another eye opening article for yarukko-- (vaidvelu style)
anbudan
sundar g
மணி தூள்.
மணி பார் யுவர் கைண்ட் இன்பர்மேசன் " அனுஷ்கா ஷெட்டி கூட யோகா டீச்சர் தான்
எவனோ சொன்னான் என்று விட்டில் பூச்சியாக விழுந்துவிட்டு அடுத்தவனைப் பார்த்து ‘உங்கள் வாழ்க்கையைவிடவும் என்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கிறது’ என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? // Very true..
well written article!
super sir
அன்புள்ள மணிகண்டன்
உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். பொதுவாக இலக்கிய தகவல்கள், அறக்கட்டளை நடவடிக்கைகள் அல்லது மனதுக்கு இதமான இலகுவான பதிவுகள் என இருக்கும். கடந்த இரு வாரமாக நெகடிவ் சமாச்சாரங்கள் அதிகமாக உள்ளன.
ஏன் இவ்வளவு கோபம். "டேக் இட் ஈஸி" பாலிசி கை கொள்ளுங்கள். எந்த ஒரு நடவடிக்கையிலும் பொது பலன் இருக்கிறதா என பார்க்கவும். (உ-ம்) இலவச மருத்துவ முகாம். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. மேல் சிகிச்சைக்கு நம் குடும்ப மருத்தவரிடம் போகலாம். அதே போல் யோகா பயிற்சி. சும்மா தெரிந்து கொள்வோம். கூட்டத்திற்கு போகவும், அவர்கள் கருத்திற்கு ஒத்தூதுவதுக்கும் யாரும் கட்டய படுத்துவதில்லையே!
தொடர்ந்த உங்கள் சக்தி தரும் எழுத்துக்களை எதிர் பார்க்கும்
நாச்சியப்பன்
Anna,
Unamaiyai urakka sonneergal..
Nethi adi..
அன்புள்ள நாச்சியப்பன்,
அவ்வப்பொழுது இருக்கிற மனநிலைக்கு ஏற்பத்தான் எழுத்தும் அமைகிறது. பாஸிட்டிவாக இருக்கிறதா அல்லது நெகடிவ்வாக இருக்கிறதா என்று யோசிப்பதில்லை. அப்படி யோசிக்க ஆரம்பித்தால் எழுத்தின் வேகம் தடைபட்டுவிடும் என நினைக்கிறேன். இதைத்தான், இந்த வடிவத்தில்தான், இந்த உள்ளடக்கத்தோடுதான் எழுத வேண்டும் என்பதில்லை. எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். அவ்வளவுதான். மனநிலைக்கேற்ப அது ஒரு வடிவத்தைப் பற்றிக் கொள்ளும்.
நன்றி.
You have written an Indignant letter against corrupt practices.. Yoga and corporate hospitals are just examples of a bigger picture.
True yogis have never condemned another way of life. Geetha teaches us that Karma maarga (path of action) is as effective as gyana maarga ( path of wisdom) or bhakthi maarga ( path of devotion) to attain happiness and satisfaction. So if an IITian is accepting Jakki Vaasudev as a guru, it doesnt mean that everyone has to follow the same path. I agree that there are many crooked people using yoga to earn disproportionate amount of money but which field is incorruptible? Starting with the milk man that adds water to the milk upto the renounced yogi, there are possibilities to be untrue. All corporatioins need to make money in order to survive. If they use even part of this money for the common good they have served their purpose. I have lived in the sixties and seventies in India where doctors perhaps were less corrupt but had much lesser facilities for high tech medicine.
Satyameva jayathe
சார் நான் கூட ஒரு அமைப்பில் சென்னை வர்த்தக வளாகத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் கவர்னர் கலந்து கொள்ளும் யோக நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறோம் . அறக்கட்டளையில் மூலமாக எங்களிடம் உள்ளவர்களை மட்டுமே பயன்படுத்தி செய்கிறோம் . வெளிநாடுகளே ஏற்றுக்கொள்ளும் இந்த விசயத்தை நாமும் கௌரவப்படுத்துவோம் என்பதே நோக்கம் .
I feel pity for them. what else I can say about them? nice post sir. Everyone is given a life to live and find. but, I don't. Why they become slaves to some fake sages in the name of disciples. enga urula oruthan molachirukkan. peru bhudhababavam. ulla ponathumthan name therinjichu. vantha kovathukku...
ஜக்கி மரம் நடும் இயக்கம் ஆரம்பித்ததே அவர் மீது சுமத்தப்பட்ட, ஆலந்துறை வனப்பகுதியை சீரழித்த குற்றச்சாட்டை நீர்த்து போக வைக்கத்தான்.
இன்று மதுக்கரை வரை யானைகள் தடம் மாறி ஊருக்குள் புகுவதுக்கு முழு முதல் காரணம் வன பகுதியில் கட்டப்பட்ட யோகா மையம் தான். சிவராத்திரி அன்று நள்ளிரவில் இசைக்கருவிகளை அலற விட்டு காட்டையே அதிரடிக்கிரார்கள்.
ஓட்டுவது எருமை. அதில் இப்படியொரு வெட்டிப் பெருமை
Manikandan
Don't make sweeping comments about everything. As someone said there are always positive and negative sides to anything. Like medical camps, there are several people who came to know that they have sugar or BP etc for the first time. Because they never had any test in the past. It is you who decides to go to which hospital. There is no compulsion.
I attended Jaggi's yoga camp in 2004 and before that I had severe back pain. I practiced for some time and do it as a part of morning walk. I am benefitted by their camp not only for back pain but also on several aspects of life. But it doesn't mean I am a slave to them.
Generally in India there is a clear lack of awareness on health. Someone is taking to good number of people and some people benefit from it. There is a tendency for Indians to grab free offers whatever it is. Every organization has to run and they need money to do that. They cannot do charity.
If you pass negative comments about these things, people will immediately say everything is a fraud and become lazy.
Govind
மணி, செம பட்டாசு !!
"ஓட்டுவது எருமை. அதில் இப்படியொரு வெட்டிப் பெருமை" - அதகளம் !!!
Dear Mani,
I want to add my two cents.
I am presently in the US with my children. Last week-end, I traveled to nearby states to meet some family friends.On one occasion, some three four people ventured out for a walk. Excepting me, all other s were of the next generation.The subject veered around a pastor in North Carolina seeking funds to upgrade his existing flight into a modern jet and he successfully raised a coupe millions. The reason he claimed was Jesus wants to me to reach out to many, and so forth.
I told him that this was very common everywhere and irrespective of Religion
or national boundaries, Godmen always go for the gullible and most of the people who have been fooled never mention it.
No sooner, I said this, an uneasy calm prevailed. Till we reached home no further words were spoken. I felt very embarrassed and uncomfortable.
Several hours later, after the guests were gone,the host, equally felt baad and told me the story.
Among those who walked with us, was a person. He is an accomplished person holding a reasonable position and to some extent financially strong also. Somewhere down the way, his wife got sucked into this Isha matter.
After spending lots of money to visit Coimbatore and donations, this man's savings got eroded. A few years back their only son, then aged seven, was left at the ashram school. They charge about 5 lakhs per year and we have to provide them the clothing and other things. Once a year you are either allowed to spend time with them at the Asram or take back home.Last year during his visit back to home, he had pleaded with the father to stay back with the parents and not keen to go back.After the usual arguments, the wife's word prevailed. Now, both Mother and son are in the Ashram.
i was told that the mother has been thoroughly brainwahed. The Guru has told them Marital life is not important and service to God is supreme.
This poor chap does not know how to go about life now. He cannot leave the job now as he needs to support his son and the mortgages for his home. He is even finding tit difficult to cook at home spend time alone in fairly large house.
There was another friend of theirs, who are devotees of Nityanandha and these people are supposed to join him on cruises for "ARUL". It is another thing that at the last minute he did not join and sent a recorded version for the benefit of devotees on board. They spend about 30000 dollars every year for this.
God know when these people wake up and act normally.
I thought of sharing this so that at least one person can be saved.
இவையெல்லாம்ஆள் பிடிக்கும் கூட்டங்களின் வெட்டி பந்தா வேலைகளே....வருபவர்களிடம் எடக்கு மடக்கான அறிவுபூர்வ கேள்விகள் கேட்டால் போதும் ஆளை விடுடா சாமி என்று ஓடி விடுவார்கள்....இபபடித்தான் ஓர்ஆள்பிடிஆளிடமஂநீங்கள ஏன் துயருறும் ஏழைகள் வாழும் பகுதியில் இக்கலையை வளர்க்கலாகாது எனக் கேட்டதற்கு, என் கையில் வலுக்கட்டாயமாய் ஒரு காட்டப்பூவைத் திணித்து விட்டு ஓடிவிட்டார்...உண்மையில் நிசப்தம் செய்யும் சேவை கூட இவர்கள் செய்வதில்லை என்பதே உண்மை.
It seems Mr Jagadish Vasudev aka Sadhguru Jaggi Vasudev aka Jaggi has been accused by his own father in law of killing his daughter (Sadhguru jaggi's wife) Vijji aka Mrs Vijaya kumari either by strangulation or by poisoning, in 1997. Mrs Vijaya Kumari was 31 years old then with a 6 year old daughter . Jaggi has escaped saying that she went into mahasamadhi. (Now, which court accepts mahasamadhi and acquits a murderer?).
Mr. Jagadish cremated the body of his wife on the next day itself, hence no autopsy could be performed. Before marrying Jagadish vasudev, Vijaya kumari was working in a bank and was previously married to someone else. After her death, another woman who was involved with them (in the tri-vortex of energy needed to consecrate the so -called dhyanalinga), a certain Mrs. Bharathi divorced her husband and came to live with Mr. Jagadish vasudev.
Mr. Jagadish vasudev has a daughter named Radhe, who is a dancer and she is married to a classical singer and is living a normal, luxurious life in Chennai and the USA, whereas most young women and men in the ashram live as unpaid slave labour, just on 2 meals a day and 3 sets of clothes and hard work to produce products and money for his so called Isha foundation, which many say is just an excuse to get tax exempt status in India and the USA for all ashram activities and businesses. Isha foundation doesnt seem to work much as it is advertised.
Mr Jagadish Vasudev once said that children who go to govt. schools are walking 4 km per day and giving the bus charges (7rs/ day) to the ashram and that they are very commendable.
Also, while he asks people to live frugally, and donate to the ashram, he and his daughter, and Bharathi etc live very luxuriously and Jaggi has bought himself a landrover, a landcruiser and a hummer apart from other things. He advises people not to drink coffee, but he himself drinks folgers coffee and is seen at starbucks. His family members (daughter, son in law etc ) go to movies, malls, foreign vacations, and drink coffee and hang out with friends along with their latest i-phones as normal people do. It seems that Mr. Jgadish vasudev is keeping them in "miserable" luxuries while the ashramites are enjoying sublime "spiritual" bliss in bare frugality.
He has once said that 3 things should never be commercialized...education, health care and spirituality. He is commercializing all the three as - a) isha home school charges around 6 lakh per annum, b) isha arogya (medicine) products are sold through isha stores and c) inner engineering and all other programs (spirituality) are also being sold to the masses.
He is good with words, but he himself never practices what he speaks. Some people who want to come out of the ashram are threatened from leaving saying that their spiritual progress will be stopped and that they will also affect the lives of many people around them...or something like that. Anyways most of them are in a kind of hypnotic delusional state where they worship their master since he is offering them something intangible like enlightenment, and they believe all the lies he continuously says and defend him and the organization to the best of their abilities.
You can read more on sadhguru jaggi vasudev aka sjv on guruphiliac forums written by ex ishaites. They say that few people were found dead at both his ashrams in India and the US.
ஹா...ஹாஅ அண்ணே நானும் டென்...ஜன் ஆவேன். ஆனா இருக்கும் இடம் கத்தவிடாதே. அதனாலே நானும் வெண்ணெய் வெட்டும் வேலையை செய்ய ஆரம்பித்தேன். வாழ்க்கை சுமூகமா போகுது.
It is mostly in Hinduism. Pls don't get angry, read fully. Hindu does not read his Veda so people easily make money out of them. It happens in all religion as they don't Know ant their scriptures. Read ur scriptures no stress no misconception no Isha nothing. Tc
In Similar style Dr. Naick and other christian samiars in the name religion are brainwashing so many weak mind and amazing wealth
ரொம்ப நேரமா நெனச்சி நெனச்சி சிரிக்க வைக்குது எருமையும் பெருமையும்! :-)
http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/1-3-2-1.html
Yes you are totally correct, bu this never always act same
Post a Comment