ஜூன் மாதத்திற்கான ‘இரண்டாம் ஞாயிறு’ வாசகர் கூட்டம் பெங்களூர் தமிழ் சங்கத்தில் ஞாயிறு(14-06-2015) காலை 10.30 மணிக்கு நடைபெறும். வழக்கமாக சிறுகதைகள், கவிதைகள் என்று பிரித்து நடத்தப்படும் கூட்டத்தை இந்த முறை சிறுகதைகளை மட்டும் மையமாக வைத்து நடத்தலாம். ஒரே கூட்டத்தில் கவிதை, கதை என நிரப்பினால் நேர பற்றாக்குறை ஆகிவிடுகிறது. அதனால் ஒன்னே ஒன்னு; கண்ணே கண்ணு. சிறுகதைகள் மட்டும்.
இரண்டு அல்லது இரண்டரை மணி நேரத்தில் கூட்டத்தை முடித்துக் கொள்ளலாம்.
கு.அழகிரிசாமியின் மூன்று கதைகளும், கி.ராஜநாராயணின் மூன்று கதைகளுமாக மொத்தம் ஆறு கதைகள்.
கு.அழகிரிசாமியின் கதைகள்:
1) அன்பளிப்பு
கி.ராஜநாராயணன் கதைகள்:
1) கன்னிமை
2) கதவு
3) கோமதி
வாசித்துவிட்டு வந்துவிடுங்கள். இந்தச் சிறுகதைகள் உருவாக்கக் கூடிய புரிதல்கள், கதைகளில் இருக்கும் நுட்பங்கள் போன்றவற்றை பேச முயற்சிக்கலாம்.
நன்றி.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment