சமீபத்தில் ஒரு விவகாரம் கேள்விப்பட்டேன். இலக்கிய விவகாரம்தான். பணப் பிரச்சினை. காவல் நிலையம் வரைக்கும் சென்றுவிட்டது. உள்ளூர் காவல் நிலையத்தில் இரு தரப்பையும் அழைத்து விசாரித்திருக்கிறார்கள். இப்போதைக்கு விவகாரம் முடியுமா என்று தெரியவில்லை. ‘இந்த லெவலிலேயே முடித்துக் கொள்ளுங்கள்’ என்று ஸ்டேஷனில் சொல்லியிருக்கிறார்களாம். இன்னும் கொஞ்சம் தகவல் கிடைத்தவுடன் விரிவாக எழுதலாம். டிசம்பர் புத்தகக் கச்சேரி ஆரம்பிப்பதற்குள் இது பற்றிய தகவல்கள் நிறைய வந்துவிடும் போலிருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது.
எண்பது பக்க புத்தகத்துக்கு நாற்பதாயிரம் ரூபாயைத் தண்டம் அழும் சில அப்பாவிகளாவது தப்பித்துவிடுவார்கள். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைள் என எதுவாக இருந்தாலும் ஓரளவு கவனம் பெற்ற எழுத்தாளராக இருந்தால் எந்தப் பதிப்பகத்திலும் காசு கேட்க மாட்டார்கள். ஆனால் புதிதாக எழுத வரும் எழுத்தாளர்கள் நிறையப் பேர்களுக்கு உடனடியாக புத்தகம் கொண்டு வந்துவிட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அந்த ஆசையைத்தான் இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ‘உங்க கவிதை புக்கெல்லாம் விக்காது..காசு கொடுங்க போட்டுத் தர்றேன்’ என்று கொக்கி போடுகிறார்கள். இந்த மாதிரி சமயத்தில் பொறுமை காப்பதுதான் நல்ல செயல். இரண்டு வருடங்களுக்குத் தொடர்ந்து எழுதினால் எப்படியும் கவனம் பெற்றுவிடலாம். பிறகு புத்தகம் கொண்டு வரலாம். அதைவிட்டுவிட்டு அவசரப்பட்டு பணம் கொடுத்து அவர்கள் அச்சடித்துக் கொடுத்தாலும் நாம்தான் விற்க வேண்டும்.
ஒரு புரளியை வேறு கிளப்பிவிட்டிருக்கிறார்கள்- ‘இந்தப் பதிப்பகத்தில் புத்தகம் போடுவது பெருமை..அந்த ப்ராண்டுக்காகவே ஐம்பதாயிரம் ரூபாய் வேண்டுமானாலும் கொடுக்கலாம்’ என்பார்கள். நம்மவர்களும் நம்பிக் கொடுத்தால் பாதிக்காசை பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு மீதிக் காசுக்கு புத்தகமாகத் தருவார்கள். இப்படியெல்லாம் பதிப்பகத்தின் பெயரோடுதான் புத்தகம் கொண்டு வர வேண்டும் என்பதில்லை. எவ்வளவு பெரிய பதிப்பகத்தில் புத்தகத்தை வெளியிட்டாலும் கவனம் பெறக் கூடிய உள்ளடக்கம் இருந்தால் மட்டும்தான் கவனம் பெறும். இல்லையென்றால் சீண்ட நாதி இருக்காது. எத்தனையோ புத்தகங்கள் எழுத்தாளராலேயே வெளியிடப்பட்டு மிகப்பெரிய கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அதனால் பதிப்பகத்தின் ப்ராண்ட் என்பதெல்லாம் அவ்வளவு முக்கியமில்லை. அதை நம்பியெல்லாம் பல்லாயிரம் ரூபாயை அழ வேண்டியதில்லை.
ம்ஹூம்.
வேறு எதையாவது எழுத வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் இப்படி கண்டதையும் எழுதித் தொலைத்து பகையாளி ஆவதுதான் மிச்சம். மேலே சொன்னதையெல்லாம் மறந்துவிடுங்கள். பெங்களூர் செய்தி ஒன்றிருக்கிறது.
வேறு எதையாவது எழுத வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் இப்படி கண்டதையும் எழுதித் தொலைத்து பகையாளி ஆவதுதான் மிச்சம். மேலே சொன்னதையெல்லாம் மறந்துவிடுங்கள். பெங்களூர் செய்தி ஒன்றிருக்கிறது.
இந்த ஊரில் நாற்பதாண்டு கால வழக்கு ஒன்றிற்கு தீர்ப்புச் சொல்லியிருக்கிறார்கள். நாற்பது வருடங்களுக்கு முன்பாக ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ‘பெண் குழந்தையைப் பெற்றவளுடன் எல்லாம் வாழ்க்கை நடத்த முடியாது’ என்று சொல்லி கணவன் துரத்திவிட்டுவிட்டார். அந்தப் பெண்மணி ஜீவனாம்ஸம் கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இழு இழுவென்று இழுத்த வழக்கு நேற்று முடிவுக்கு வந்திருக்கிறது. அந்தப் பெண்மணி வழக்கில் வெற்றி பெற்றிருக்கிறார். இனிமேல் அந்த ஆள் இந்தப் பெண்மணிக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் ஜீவனாம்ஸம் தர வேண்டும்.
எவ்வளவு வேகம் பார்த்தீர்களா?
பிறந்த குழந்தைக்கு நாற்பது வயதாகும் போது மாதம் ஆறாயிரம் ரூபாய் ஜீவனாம்ஸம். இதே நீதிமன்றத்தைத்தான் கொஞ்ச நாட்களுக்கு முன்பாக உச்சநீதிமன்றம் அவ்வளவு அவசரப்படுத்தியது. நீதிபதியும் மின்சாரம் இல்லாத சமயத்தில் கூட நேரத்தை வீணடிக்காமல் அவசர அவசரமாக ஸ்லேட்டும் பென்சிலும் வைத்து கூட்டல் கணக்கை குண்டக்க மண்டக்க முடித்து முடித்து தீர்ப்பையும் எழுதினார். இதோடு விட்டுவிட்டால் தப்பித்தோம். மேல் முறையீடு அது இது என்று போனால் ‘நான்கு பேருக்கும் பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிடுகிறேன்’ என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்கள். அப்புறம் என்னதான் தணங்கிணத்தோம் என்று குதித்தாலும் ஒன்றும் நடக்காது. சரி விடுங்கள். நாம் சொன்னால் கேட்கவா போகிறார்கள்? முறையீடு செய்யட்டும்.

இந்த விவகாரம் சம்பந்தமாக இன்னொரு விஷயம் ஞாபகமிருக்கிறதா? மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தவுடன் உடனடியாக அவர் தகுதியிழப்பு செய்யப்பட்டு அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக கெஜட்டிலும் அறிவிக்க வேண்டுமாம். ஆனால் குன்ஹாவின் தீர்ப்பு வந்த பிறகு எவ்வளவு நாட்கள் இழுத்தார்கள் என்று பழைய செய்தித்தாள்களை புரட்டிப் பார்த்தால் தெரியும். ஆமை வேகத்தில் நகர்ந்தவர்கள் இப்பொழுது பறக்கிறார்கள்- முதல் நாள் எம்.எல்.ஏ ராஜினாமா செய்கிறார். அதே நாளிலேயே ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனடியாக கெஜட்டிலும் குறிக்கப்படுகிறது அடுத்த நாளே இந்தியத் தேர்தல் கமிஷனுக்கு ‘தேர்தல் நடத்தலாம்’ என்று தமிழகத்திலிருந்து கடிதம் எழுதுகிறார்கள். மோனோ ரயில் வேகம்.
அதெல்லாம் அப்படித்தான் பாஸ். இங்கு யாருக்கு எது வேகமாகச் செயல்பட வேண்டுமோ அது அவர்களுக்காக வேகமாகச் செயல்படும். நம்மால் முடிந்த காரியமெல்லாம் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் நம் பெயரைச் சேர்க்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும். இல்லையென்றால் அந்தத் தொகுதி வாக்காளர் யாரிடமாவது துண்டைப் போட்டு வைத்து பெர்சனல் லோன் வாங்கிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
அது சரி. எனக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. இல்லையென்றால் நாக்கு இவ்வளவு பேச்சு பேசுமா? சுருட்டி எடுத்து உள்ளே வைக்க வேண்டும்.
இதுவரை பேசியதற்கு தண்டிக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த ஒல்லிப்பிச்சானை நடமாடும் நீதிமன்றத்தில் நிறுத்தி முந்நூறு ரூபாய் பைன் போடுவதோடு விட்டுவிடுங்கள் அய்யா!