நிசப்தம் அறக்கட்டளையின் மே மாதத்திற்கான வரவு செலவுக் கணக்கு விவரம் இது.
வரிசை எண் 5-இல் இருக்கும் இருபத்தைந்தாயிரம் ரூபாய் குணசேகருக்கு வழங்கப்பட்டது. குணசேகர், சென்னையில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்தவர். நாற்பத்தைந்து வயது. மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சுய நினைவை இழந்தவருக்கு சோழிங்கநல்லூரில் இருக்கும் க்ளோபல் மருத்துவமனையின் நியூரோ பிரிவில் சிகிச்சையளித்தார்கள் குணசேகருக்கு ஒரே மகன். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். குணசேகர் மட்டும்தான் குடும்பத்தின் வருமானத்தை ஈட்டிக் கொண்டிருந்தவர். அவருடைய மருத்துவச் செலவுகளுக்காக காசோலை அனுப்பி வைக்கப்பட்டது. செலவைத் தாங்க முடியாமல் அவர இப்பொழுது புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு மாற்றிவிட்டார்கள். இன்னமும் சில மாதங்களுக்காவது மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என்று சொல்லியிருக்கிறார்களாம். அரசு மருத்துவமனை என்பதனால் பெரிய அளவிலான செலவு இல்லை என்றும் செலவைக் குடும்பம் சமாளித்துக் கொண்டிருப்பதாகவும் திரு. மகுடபதி சொன்னார். அவர்தான் குணசேகர் பற்றிய விவரங்களைத் தெரிவித்தவர்.
வரிசை எண் 7- இல் இருக்கும் முப்பதாயிரம் ரூபாய் ஜெர்மனியில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் திரு.மணிகண்டன் தனது ஸ்காலர்ஷிப் சம்பந்தமாக தமிழ்நாடு வந்து செல்வதற்கு கடனாக வழங்கப்பட்டிருக்கிறது. இன்னமும் இரண்டு மாதங்களில் திருப்பித் தந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். ஸ்காலர்ஷிப் விவகாரம் என்ன ஆனது என்ற பதில் எதுவும் அவரிடமிருந்து இன்னமும் வரவில்லை. இன்று அல்லது நாளை அவரை அழைத்துப் பேசவிருக்கிறேன்.
வரிசை எண் 16- குழந்தை கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் மாதப் பரமாரிப்புத் தொகை. இனி ஒவ்வொரு மாதமும் இரண்டாயிரம் ரூபாய் அந்தக் குழந்தைக்காகச் சென்றுவிடும்.
வரிசை எண் 20- குழந்தைகளுக்கான சஞ்சிகையான மின்மினி மாத இதழுக்கான சந்தா. மொத்தம் ஐம்பது பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். 48 பள்ளிகளைத்தான் தேர்ந்தெடுக்க முடிந்தது. பள்ளிகளின் முகவரிகளை பூவுலகின் நண்பர்கள் குழுவிற்கு அனுப்பி வைத்துவிடுகிறேன். அவர்கள் ஓராண்டுக்கு மின்மினி இதழை இந்தப் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.
பெரும்பாலான வரவு விவரங்கள் தெளிவாக இருக்கின்றன- பின்வரும் இரண்டைத் தவிர.
வரிசை எண் 24- பிரிட்டனில் வசிக்கும் திருமதி. நர்மதா தனது தந்தையின் மூலமாக வங்கியில் நேரடியாகச் செலுத்தியிருக்கிறார். அதனால் அவருடைய பெயர் வரவில்லை.
வரிசை எண் 26- தினமணி.காம்மில் எழுதும் அயல் சினிமா பற்றிய தொடருக்கான தொகை. அறக்கட்டளையின் பெயரிலேயே காசோலை அனுப்பியிருந்தார்கள். அந்தத் தொகை இது.
ஏப்ரல் மாத வரவு செலவுக் கணக்கை இணைப்பில் பார்க்கலாம்.
ஏப்ரல் மாத வரவு செலவுக் கணக்கை இணைப்பில் பார்க்கலாம்.
பொதுவான தகவல்-
அறக்கட்டளையின் 80G மற்றும் 12 Aவுக்கான விசாரணை கடந்தவாரம் நடப்பதாக இருந்தது. அன்றைய தினம் தங்களால் வர இயலவில்லை என்பதால் விசாரணையைத் தள்ளி வைக்கச் சொல்லி ஆடிட்டர் அலுவலகத்திலிருந்து வருமான வரித்துறையிடம் கோரியிருக்கிறார்கள். அதனால் விசாரணை வேறொரு நாளில் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
உதவிகள் சம்பந்தமாக ஒரு கோரிக்கை-
அடுத்தவர்களுக்காக உதவி கோரி மின்னஞ்சல் அல்லது அலைபேசி வழியாகத் தொடர்பு கொள்ளும் போது தயவு செய்து தொடர்ந்து follow-up செய்யவும். உதவி கோரி தொடர்பு கொள்பவர்கள் ஏதேதோ சில காரணங்களால் பாதியிலேயே விட்டுவிடுகிறார்கள். ‘இவன் பதில் சொல்வதில்லை’ என்றோ அல்லது ‘இவனிடமிருந்து சரியாக பதில் வருவதில்லை’ என்றோ நினைப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. மறுக்கவில்லை. ஆனால் உண்மையில் அவையெல்லாம் காரணமேயில்லை. நிறைய கோரிக்கைகள் வருகின்றன. அவற்றை விசாரிக்க வேண்டியிருக்கிறது. பலரையும் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் பல சமயங்களில் மின்னஞ்சல்களுக்கு பதில் சொல்ல முடியாமல் போய்விடுகிறது. பலருக்கு உதவுவதாகச் சொல்லிவிட்டு மறந்தும் விடுகிறேன்.
இப்படித்தான் விடுபடல்கள் நேர்கின்றன. தொடர்பு எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு பேசாமல் மறந்து போன சம்பவங்களும் இருக்கின்றன. இப்படி விடுபடும்போது அந்த முனையில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் கருதிக் கொள்ள வாய்ப்பிருக்கிறதுதான். ஆனால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை.
அழைப்புகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. குடும்பம், வேலை, எழுத்து தாண்டி அறக்கட்டளை சார்ந்த வேலைக்கும் நிறைய நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. அப்படியிருந்தும் கூட நேரம் போதவில்லை என்பதுதான் நிதர்சனம். அதனால் மேற்சொன்னது போன்ற நிர்வாகச் சிக்கல்களல் எழுவதால் உதவி கோரியவர்களை என்னால் மீண்டும் தொடர்பு கொள்ள முடிவதில்லை. அதனால் உதவி கோருபவர்கள் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் திரும்பவும் அழைக்கவும்.
அறக்கட்டளையின் செயல்பாடுகள், வங்கி வரவு செலவுக் கணக்கு உள்ளிட்டவற்றி வேறு ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள் இருப்பின் கேட்கவும்.
1) அரியலூர் மாவட்டம்
2) சென்னை மாவட்டம்
1)
வா.கணேஷ்குமார்,
தலைமை ஆசிரியர் ,
சென்னை நடு நிலைப் பள்ளி,
12,கபிலர் தெரு,
மடுமா நகர்,பெரம்பூர்,
சென்னை.11.
2)
தலைமையாசிரியர்,
பாவேந்தர் தமிழ் வழிப்பள்ளி,
10, திருநீலகண்டர் சாலை,
சேக்கிழார் நகர்,
குன்றத்தூர்
சென்னை - 69
3) கோயமுத்தூர் மாவட்டம்
3)
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கரவழி மாதப்பூர்,
சூலூர் ஒன்றியம்
கோவை மாவட்டம்- 641668
4) கடலூர் மாவட்டம்
4)
திரு.வசந்த்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கீழப்பாளையூர்
கம்மாபுரம்.
கடலூர் மாவட்டம் -606 103
5)
திரு. இப்ரஹிம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (கலப்பு)
உடையார்குடி
காட்டுமன்னார்கோவில்
கடலூர் மாவட்டம்- 608301
5) தர்மபுரி மாவட்டம்
6)
திரு. அன்பழகன்
ஊ.ஒ.ந.பள்ளி,
நல்லாம்பட்டி,
சாமனூர் அஞ்சல்
பாலக்கோடு வட்டம்,
தருமபுரி மாவட்டம்- 636 806
7)
திரு. P.குணசேகரன்
அறிவியல் ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
பள்ளப்பட்டி,
நல்லம்பள்ளி ஒன்றியம்
தர்மபுரி மாவட்டம் - 636 803
6) திண்டுக்கல் மாவட்டம்
8)
திரு.அருண்மொழி,
தலைமையாசிரியர்,
செல்வவிநாயகர் ஆரம்பப்பள்ளி,
லந்தக்கோட்டை,
வேடச்சந்தூர் வட்டம்,
திண்டுக்கல் மாவட்டம்- 624620
7) ஈரோடு மாவட்டம்
9)
திருமதி.செந்தில் வடிவு,
தலைமை ஆசிரியர்,
ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி
முருகம்பாளையம்
அய்யம்பாளையம் [தபால்]
கொடுமுடி [வழி]
ஈரோடு மாவட்டம்.
638151
10)
தலைமையாசிரியர்,
தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி,
பாலிக்காடு,
காந்திநகர்,
கோபிச்செட்டிபாளையம்.
ஈரோடு மாவட்டம்- 638452
11)
திருமதி. தனலட்சுமி,
தலைமையாசிரியர்,
அரசு நடுநிலைப்பள்ளி,
பிலியம்பாளையம்,
நம்பியூர் அஞ்சல்,
கோபி வட்டம்,
ஈரோடு மாவட்டம் -638 458.
12)
திரு. தாமசு,
தலைமையாசிரியர்,
புனித திரேசாள் ஆரம்பப்பள்ளி,
கோபிபாளையம்,
அளுக்குளி (அஞ்சல்),
கோபி வட்டம்
ஈரோடு மாவட்டம்- 638453
8) காஞ்சிபுரம் மாவட்டம்
13)
திரு. அன்பழகன்,
பட்டதாரி அறிவியல் ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
1-3, வார்டு உத்திரமேரூர்,
காஞ்சிபுரம் மாவட்டம்- 603406
9) கன்னியாகுமரி மாவட்டம்
10) கரூர் மாவட்டம்
14)
தலைமையாசிரியர்,
சக்தி தமிழ் பள்ளிக்கூடம்,
தொழிற்பேட்டை,
கரூர்- 639004
15)
தலைமையாசிரியர்,
ஊ.ஒ.ஆரம்பப்பள்ளி,
மேலமேட்டுப்பட்டி,
எருதிக்கோண்பட்டி அஞ்சல்,
கடவூர் ஒன்றியம்.
கரூர் மாவட்டம்- 621311
16)
திரு. செல்வக்கண்ணன்
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
கே.பரமத்தி அஞ்சல்,
கரூர் மாவட்டம்- 639111
11) கிருஷ்ணகிரி மாவட்டம்
17)
சுகவனமுருகன்
தலைமையாசிரியர்(பொறுப்பு)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
சவுளூர் கூட் ரோடு,
அகரம் சாலை
காவேரிப்பட்டினம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் - 635112
12) மதுரை மாவட்டம்
18)
நூர்ஜஹான்
தலைமையாசிரியர்,
அல்-அமீன் துவக்கப்பள்ளி,
மண்கட்டி தெப்பக்குளம் அருகில்,
மேலூர்-625106
மதுரை மாவட்டம்.
19)
திரு. தென்னவன்,
தலைமையாசிரியர்
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
Y.ஒத்தக்கடை,
மதுரை மாவட்டம்- 625107
20)
திரு. கே.சரவணன்,
தலைமையாசிரியர்,
டாக்டர். T.திருஞானம் துவக்கப்பள்ளி,
கீழ சந்தைப்பேட்டை,
மதுரை- 625 009
21)
திரு. நாகேஸ்வரன்,
நிர்வாகி,
காந்திஜி ஆரம்பப்பள்ளி,
பொட்டுலுபட்டி,
வாடிப்பட்டி வட்டம்
மதுரை மாவட்டம்- 625218
13) நாகப்பட்டினம் மாவட்டம்
22)
திரு. பாலு,
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கிச்சான்குப்பம்
நாகப்பட்டினம் மாவட்டம் - 611108
14) நாமக்கல் மாவட்டம்
23)
திருமதி. மா.சாந்தி
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
நாவலடியூத்து கிராமம்
தாண்டக்கவுண்டனூர் அஞ்சல்
நாமகிரிப்பேட்டை ஒன்றியம்
ராசிபுரம் தாலுக்கா
நாமக்கல் மாவட்டம் - 636202
24)
திரு . மோகன்
தலைமை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
சின்ன முதலைப் பட்டி,
நாமக்கல் (வ )
நாமக்கல் (மா ) - 637002
15) நீலகிரி மாவட்டம்
25)
திரு.நல்லமுத்து
தலைமையாசிரியர்
PUPS Havoor,
கீழ் கோத்தகிரி அஞ்சல்,
கோத்தகிரி(தாலுக்கா)
நீலகிரி மாவட்டம்- 643271
16) பெரம்பலூர் மாவட்டம்
17) புதுக்கோட்டை மாவட்டம்
26)
திருமதி. அழகம்மை,
தலைமையாசிரியர்,
ஸ்ரீ சிவகாமி அம்பாள் வித்யாசாலை ஆரம்பப்பள்ளி,
ராங்கியம் அஞ்சல்
திருமயம் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்-622301
18) ராமநாதபுரம் மாவட்டம்
27)
திரு. சேவியர் ஜோசப்,
தலைமையாசிரியர்,
ஸ்ரீ சேதுபதி நடுநிலைப்பள்ளி,
(தலைமை தபால் நிலையம் அருகில்)
ராமநாதபுரம்- 623 501
19) சேலம் மாவட்டம்
28)
திரு. திருஞானம்
தலைமை ஆசிரியர்:
அரசு நடுநிலைப்பள்ளி,
தேவண்ணகவுண்டனூர்,
சங்ககிரி தாலுக்கா
சங்ககிரி - 637301
சேலம் மாவட்டம்
29)
திருமதி.புஷ்பா,
தலைமையாசிரியர்,
ஊ ஒ தொ பள்ளி
அண்ணாநகர்காலனி
வாழப்பாடி.
சேலம் மாவட்டம் - 636115.
30)
திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி,
கோனேரிப்பட்டி அஞ்சல்,
எடப்பாடி வட்டம்,
சேலம் மாவட்டம் - 637107
31)
தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,
67ஏ, பவானி நெடுஞ்சாலை,
மாதையன்குட்டை,
மேட்டூர் அணை- 636452
சேலம் மாவட்டம்
20) சிவகங்கை மாவட்டம்
32)
திரு. லூர்து சேவியர்.
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கட்டம்மன்கோட்டை,
திருப்புவனம் (அஞ்சல்)
சிவகங்கை மாவட்டம்- 630611
33)
திரு.எல்.சொக்கலிங்கம்,
தலைமையாசிரியர்,
சேர்மேன் மாணிக்கவாசகம் பள்ளி,
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம்- 630 302
21) தஞ்சாவூர் மாவட்டம்
34)
திருமதி. செல்வமேரி,
தலைமையாசிரியர்,
பாரதமாதா உதவிபெறும் துவக்கப்பள்ளி,
ஆணூர்,
அத்தியூர் அஞ்சல்,
கும்பகோணம் தாலுக்கா,
தஞ்சாவூர் மாவட்டம்- 612503.
22) தேனி மாவட்டம்
23) தூத்துக்குடி மாவட்டம்
35)
திருமதி ஹேமலதா,
தலைமை ஆசிரியர்,
இந்துதொடக்கப்பள்ளி,
ஜமீன்தேவர்குளம்(அஞ்சல்)
வானரமுட்டி(வழி)
கோவில்பட்டி(தாலுகா)
தூத்துக்குடி மாவட்டம்-628721.
24) திருச்சி மாவட்டம்
36)
திருமதி. வனசெல்வி,
தலைமையாசிரியர்,
சிறுமலர் மற்றும் மழலையர் ஆரம்பப்பள்ளி,
வெள்ளகுளம்,
அயன் பொருவாய்(அஞ்சல்)
பாலக்குறிச்சி,
திருச்சி- 621 308
25) திருநெல்வேலி மாவட்டம்
37)
வே.சங்கர்ராம்
தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி,
127, பாரதியார் எட்டாம் தெரு,
இளவன்குளம் சாலை,
சங்கரன்கோவில்
நெல்லை மாவட்டம்- 627756
26) திருப்பூர் மாவட்டம்
38)
திருமதி. சத்யபாமா,
தலைமையாசிரியர்,
ஊ ஒ தொ பள்ளி
உப்புபாளையம்
வெள்ளகோவில்,
திருப்பூர் மாவட்டம்- 638111
39)
சி.கலையரசி,
தலைமையாசிரியை,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
துலுக்கமுத்தூர்,
அவிநாசி தாலுக்கா.
திருப்பூர் மாவட்டம் - 641 654
40)
திருமதி.வேதநாயகி,
தலைமையாசிரியர்,
ஆனந்தா பள்ளி,
கே.பி.சி.நகர்,
வெள்ளகோவில்
திருப்பூர் மாவட்டம்- 638111
41)
திரு. சம்பத்குமார்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
வேலாயுதம்பாளையம்
அவிநாசி
திருப்பூர் மாவட்டம் - 641654
42)
திருமதி.சிவகாமி,
தலைமையாசிரியை,
பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி,
கெங்கநாய்க்கன்பாளையம்,
மானூர் அஞ்சல்,
திருப்பூர் மாவட்டம்- 641606
27) திருவள்ளூர் மாவட்டம்
43)
திருமதி. பவானி,
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,
73 நத்தம் கிராமம், பஞ்செட்டி அஞ்சல்,
பொன்னேரி வட்டம்
திருவள்ளூர் மாவட்டம்- 601204
28) திருவண்ணாமலை மாவட்டம்
44)
திருமதி. சசிகலா,
தலைமையாசிரியர்,
சன்னதி அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி,
38-பி, சன்னதி தெரு,
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம்- 604 408
29) திருவாரூர் மாவட்டம்
45)
திரு.மணிமாறன்
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
மேலராதாநல்லூர்,
கண்கொடுத்தவனிதம் (அஞ்சல்)
கொரடச்சேரி,
திருவாரூர் மாவட்டம் - 610 113
30) வேலூர் மாவட்டம்
46)
திரு.வின்செண்ட்,
தலைமையாசிரியர்,
கன்கார்டியா ஆரம்பப்பள்ளி,
Mission Compound,
ஆம்பூர்,
வேலூர் மாவட்டம்-635 802
31) விழுப்புரம் மாவட்டம்
47)
திரு. பாலு
தலைமை ஆசிரியர் / பொறுப்பாளர்,
அழகப்பா நடுநிலைப் பள்ளி,
பூட்டை கிராமம்,
சங்கராபுரம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம். 606401
32) விருதுநகர் மாவட்டம்
48)
கே.அன்புவேலன்,
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
முத்தனேரி,
நரிக்குடி(அஞ்சல்)
விருதுநகர் மாவட்டம் - 626607
1 எதிர் சப்தங்கள்:
இவ்வளவு விசயங்களை சேகரிப்பதே பெரும் பணி .வாழ்க வளமுடன் .இறைப்பணியை ஆற்ற அவரே உதவுவார் .அன்பும் கருணையும் தவிர வேறு என்ன இருக்கு உலகில் ?
Post a Comment