இன்று வரை சிற்றிதழ்கள் பற்றிய பதினெட்டு குறிப்புகள் வந்திருந்தன. அவற்றில் சிலவற்றை நிராகரிக்க வேண்டியிருந்தது. வரிசை எண் 12, 13 ஆகிய இரண்டையும் ஒருவரே எழுதியிருக்கிறார். மொத்தம் பன்னிரெண்டு சந்தா. கணையாழி எனக்குக் கொடுத்த ஆயிரம் ரூபாய் போக மீதத் தொகையை அனுப்பி வைத்துவிடுகிறேன். அடுத்த மாதத்திலிருந்து அனைவருக்கும் கணையாழி இதழ் வந்துவிடும்.
அனைவருக்கும் நன்றி.
5)
பாசமலர்- குடும்ப உறவு பற்றிய சிற்றிதழ்
பாசமலர் என்றொரு சிற்றிதழ் கோவை கவுண்டம்பாளையத்திலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது.
பாசம் தவழும் குடும்பங்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தோடு போளி பைய்யாப்பிள்ளி என்ற பாதிரியார் நடத்துகிறார். குழந்தை வளர்ப்பு, குழந்தைகளின் கல்வி, குடும்பங்களில் உருவாகும் பிரச்சனைகளை சமாளிக்கும் வழிகள், குழந்தைகளுக்கான சில செயல்பாடுகள் என்று பல்வேறு வகை கட்டுரைகள் அதில் உடங்கியுள்ளன. 500 பிரதிகள் என தொடங்கி தற்போது 2500 பிரதிகள் வெளிவருகின்றன என்று நினைக்கிறேன்.
குழந்தைகளின் கல்வி பற்றியும், குழந்தைகளுக்கான செயல்பாடுகள் பற்றியும் நான் எழுதுகிறேன். திரு என். சொக்கன் அவர்கள் மாதம் ஒரு திருக்குறளின் கருத்து வெளிப்படும் விதம் கதை எழுதுகிறார். முக்கியமாக பெற்றோர்களுக்காக வெளிவரும் இம்மாத இதழ் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் குறுகிய வட்டத்தில் நல்ல பல கருத்துகளைப் பரப்பி வருகிறது.
http://www.paasamalar.com/
குறிப்பை அனுப்பியவர்: ராஜேந்திரன், பாலக்காடு
6)
சஞ்சிகை
ஃபேஸ்புக் பல்வேறு அரிய முகங்களின் அறிமுகத்தை தந்துக் கொண்டே இருக்கிறது. அப்படியாக சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானவர் தான் முருகராஜ். கும்பகோணத்தை சேர்ந்தவர். சுய விருப்பத்தின் காரணமாக வள்ளலார் நூலகத்தை (நடமாடும் நூலகம்) கும்பகோணத்தில் நடத்தி வருகிறார். ஒரு ஃபோன் செய்தால் வீட்டிற்கு புத்தகம் வந்துவிடும். சொந்த செலவிலும் நண்பர்களின் உதவி மூலமாகவும் சுமார் 1500 புத்தகங்களை நூலகத்தில் சேர்த்துள்ளார். வீட்டில் புத்தகம் சேர்க்கவே இங்கு பலருக்கு எதிர்ப்பு இருக்கும் பட்சத்தில் நண்பருக்கு சொல்லத் தேவையில்லை.அதையும் மீறித் தான் இத்தனை விஷயங்களையும் சாத்தியப்படுத்தி வருகிறார். அவரிடம் என்ன ஏதென்று விசாரித்தால் , "சும்மா சின்ன வயசுலேந்து நூலகம் மீது ஒரு ஈர்ப்பு அவ்வளவு தான்" என்று எளிமையான பதிலைத் தருவார். இது ஒரு பக்கம் என்றால் மறுப்பக்கம் சஞ்சிகை எனும் சிற்றிதழையும் நடத்திவருகிறார்.
சஞ்சிகை சிற்றிதழையும் கும்பகோணத்திலிருந்து தான் இயங்குகின்றார். மாதம் ஒரு முறை வெளியாகின்றது. தனிச் சுற்றுக்கு மட்டும் அனுப்பிவைக்கப்படுகிறது. சஞ்சிகை இணைய தளத்திலும் ஏற்றப்படுகிறது. எளிமையான கதைகள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், புத்தகம் பற்றின அறிமுகங்கள், கவிதைகள், உதிரி என வெவ்வேறு தலைப்புகள் நிறைந்ததாக இந்த இதழ் இருக்கிறது. சஞ்சிகை இதழில் வெளிவந்த படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்த சில பதிவுகள் இதோ உங்களுக்காக.
*தெரிந்ததில் தெளிந்தது – காந்தி என்ற தலைப்பில் நண்பர் அருண் எழுதிய கட்டுரை. காந்தி பற்றின தனது புரிதலை வாசிப்புப் பழக்கம் எவ்வாறு மாற்றுகிறது என்பதை அழகாக எழுதியிருப்பார் .அதற்கு உதவிய புத்தகங்கள் பற்றிய எளிய அறிமுகங்களைத் தந்திருப்பார்.
*பசுமை நடை - மதுரையில் நடக்கும் பசுமை நடைப் பற்றின பதிவுகளைத் தொடர்ந்து பதிந்துக் கொண்டிருக்கிறார் .பசுமை நடையில் பங்கேற்க முடியாத என்னைப் போன்றவர்களுக்கு இது உதவியாக இருக்கின்றது.
*விசா இல்லாமல் செய்த வெளிநாட்டுப் பயணம் பற்றிய ராஜன்னா எழுதிய கட்டுரையும் பயணக் கட்டுரைகளில் எனக்குப் பிடித்த ஒன்று.
*தண்ணீர், காட்டுயிர் போன்ற சில சிறப்பிதழ்களும் வெளிவந்துள்ளன.இவையும் எனக்கு மிகவும் பிடித்தவை.
சஞ்சிகைப் பதிவுகள் இந்தத் தளத்தில் கிடைக்கின்றது.
அலைபேசி: 9655322933
மின்னஞ்சல்: sanjigai@gmail.com
குறிப்பை எழுதியவர்: பிரபு ராஜேந்திரன்
7)
காவிரிக்கதிர்
தமிழ்நாட்டிலேயே ஓர் ஊர் அல்லது பகுதியின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் குரல் கொடுக்கும் ஒரே புத்தக வடிவ மாத இதழ் ‘காவிரிக்கதிர்’. இதன் ஆசிரியர் ஊடகவிலாளரும் சமூக செயற்பாட்டாளருமான கோமல் அன்பரசன்.
முன்னணி இதழ்களைப் போன்று பொதுவான செய்திகளையும் கூடவே மயிலாடுதுறை பகுதி செய்திகளையும் கலந்து தரும் வித்தியான இதழ் இது. இயல்பாகவே பண்பாட்டு பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட காவிரிப்படுகை பகுதியில் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறை தனியான புகழுக்குரியது. ஆனால் அரசியல் காரணங்களால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ச்சிப் பாதையில் மிகவும் பின்தங்கி இருக்கும் மயிலாடுதுறை பகுதியின் குரலை ஓங்கி ஒலிப்பதே காவிரிக்கதிர் இதழின் முதன்மை நோக்கம். அதிலும் இதழில் ‘மாயூர யுத்தம்’ என்ற பெயரில் கோமல் அன்பரசன் எழுதி வரும் தொடர், இதழ் மூலமாகவும் இணையம் வழியாகவும் உலகெங்கும் காவிரி டெல்டாவைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது.
காவிரிக்கதிர்
118,இரண்டாம் தளம்,தாஜ் டவர், காந்திஜி சாலை,
மயிலாடுதுறை-609001
நாகப்பட்டினம்(Dist).
மின்னஞ்சல்:Kavirikathir@gmail.com
Phone:04364-225757
குறிப்பை அனுப்பியவர்: கருணாநிதி கன்னையன்
8)
கணையாழி
கணையாழி எனக்கு அறிமுகமாகி ஒரு வருடமாகிறது. இலக்கிய உலகில் தனி அடையாளமாக இருப்பது அதன் இயல்பு. ஒவ்வொரு கவிதைக்கும் தனியொரு பக்கம் ஒதுக்கி, அதற்கு வரைபடமும் கொடுதிருப்பார்கள், நான் மிகவும் ரசித்த கவிதை பக்கங்கள் பல.
மற்ற பத்திரிக்கைகளை வாசிப்பதற்கும், கணையாழியை வாசிப்பதற்கும் அதிகமான வேறுபாடு உண்டு, இது மிகையல்ல உண்மை. வாசகனால் வாசிக்கப்படும் ஒவ்வொரு சிறுகதைகளும் வெவ்வேறு தளங்களை உருவாக்கிச் செல்லும் வடிவமைப்பு நிச்சயம் பாராட்டுதலுக்குரியது.
கணையாழியை வாங்குவதற்காக நான் செல்லும் பாதைகள் மாறுவதில்லை, அதன் வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
கணையாழிக்கு எனது வாழ்த்துக்கள்
மாத இதழ்
விலை: 20 ரூபாய்
மின்னஞ்சல் : kanaiyazhi2011@gmail.com
கிடைக்குமிடம்:
பனுவல் புத்தக நிலையம்
112, திருவள்ளுவர் சாலை,
திருவான்மியூர் -600041
குறிப்பை அனுப்பியவர்: பாண்டிய ராஜ்
9)
தமிழ்ச்சிட்டு
தமிழ்ச்சிட்டு சிறுவர்களுக்கான மாத இதழ். தென்மொழி என்ற பெயரில் பாவலேரேறு பெருஞ்சித்திரனார் தொடங்கிய இலக்கிய மாத இதழின் தொடர்ச்சியாக சிறுவர்களுக்காக வெளிவந்த தமிழ்ச்சிட்டு இதழும் மாத இதழாக வெளிவருகிறது.
ஆண்டுக்கட்டணம்: உரு.120.00
வாழ்நாள் கட்டணம்: உரு.1000.00 (பத்து ஆண்டுகள்)
தனி இதழ் உரு.10.00
வெளிநாடு ஆண்டுக்கட்டணம்: உரு.1000.00
அலுவலகத் தொடர்பு முகவரி:
தென்மொழி,
மேடவாக்கம் கூட்டுச் சாலை,
சென்னை – 600100.
94444 40449, 94438 10662
thamizhnilam@gmail.com
குறிப்பை அனுப்பியவர்: தமிழ்.
10)
சிற்றேடு.
இந்த சிற்றிதழை எனக்கு திரு.க.நல்லதம்பி அவர்கள் அறிமுகப்படுத்தினார்.
சிற்றேடு பெங்களூரில் இருந்து வெளிவரும் காலாண்டிதழ். முக்கிய கன்னட மற்றும் கேரள எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்பு கதைகள், தலித் இலக்கியம் குறித்த பார்வை, நவீன தமிழ் வளர்ச்சி மற்றும் பயன்பாடு பற்றிய கட்டுரைகள், சமூக/ பொருளாதார கட்டுரைகள், கவிதைகள், பின் நவீனத்துவத்தின் பரிமாணங்கள் என விரிகிறது இந்த சிற்றிதழ்.
பிற சிற்றிலக்கிய இதழ்கள் பற்றிய அறிமுகம் பெட்டிச் செய்தியாக பக்கம் தோறும் வருவது புதுமை மற்றும் சிறப்பு.
ஆசிரியர்:தமிழவன்
இணை ஆசிரியர்:சிவசு
முத்துக்கிரிஷ்னன்
பா.ரவிகுமார்
விஷ்ணுக்குமாரன்
வனிதா
திருநாவுக்கரசு
அலை பேசி எண் 09346787741
மின்னஞ்சல்:tamil4545@gmail.com
குறிப்பை அனுப்பியவர்: மணிமொழி
11)
உயிர்மை
கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களால் உயிர்மை பதிப்பகத்தின் மூலமாக நடத்தப் பெற்று வரும் உயிர்மை மாத இதழாக வெளிவருகிறது. தமிழ் இலக்கிய சூழலின் ஆரோக்கியமான பக்கத்தை படம் பிடித்துக் காட்டுவது இவ்விதழின் சிறப்புகளின் ஒன்றாகும்.
இவ்விதழில் வெளியாகும் பதிவுகள் சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்புக் கதை, புத்தக விமரிசனம் போன்ற பல பிரிவுகளின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.
பல எழுத்தாளர்களின் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத இதழ் இவ்விதழின் 100-வது சிறப்பிதழாக வெளிவந்த தருணத்தில் பல எழுத்தாளர்களிடம் தமிழ் இலக்கிய சூழல் மற்றும் அரசியல் பற்றி கேட்கப்பெற்ற கேள்விகளும் பதில்களும் இடம்பெற்றிருந்தன என்பது சிறப்புச் செய்தி.
சந்தா -
ஆண்டுச் சந்தா 225/- ரூபாய்கள்
தனி இதழ் - 20 ரூபாய்கள்
ஆயுட்காலச் சந்தா - 5000 ரூபாய்கள் .
தனி மாத இதழ் மட்டும் அன்றி, கடந்த வருடங்களின் இதழ்களின் தொகுப்புகளை பெற விரும்பும் வாசகர்களுக்கு அவை சிறந்த முறையில் பைண்ட் செய்யப்பெற்று விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த தொகுப்புகள் பெரும்பாலும் சென்னை மற்றும் தமிழ் நாட்டின் பிற நகரங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியின் போது உயிர்மை பதிப்பகத்தின் கடையில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. ஆண்டுச் சந்தா மற்றும் ஆயுட்காலச் சந்தா செலுத்தும் வாசகர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் 3 தேதிகளுக்குள் அம் மாததத்திற்கான இதழ் புக் போஸ்ட் மூலம் முறையில் அனுப்பி வைக்கப் படுகின்றன.
மேலும் விபரங்களுக்கு http://www.uyirmmai.com
குறிப்பை அனுப்பியவர்: விக்ரம்
12)
இளந்தமிழன்
விவரங்கள்
ஆசிரியர்: தி.வ. மெய்கண்டார்
துணையாசிரியர் எஸ்.இராசரத்தினம்
அ.பெ.எண்.637, 7 கிழக்கு மாட வீதி, மயிலை, சென்னை-600 004
தனி இதழ் ரூ.10, ஆண்டுக் கட்டணம் ரூ.120
ஒவ்வொரு மாதமும், தமிழ் உலகில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஒருவர் பற்றிய சிறப்பிதழாக இது வெளியிடப்படுகிறது. அனேகமாக, நமக்குத் தெரியாத தகவல்களாக அவை இருக்கும். இவை தவிர ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியவையும் உண்டு. இளம் எழுத்தாளர்களின் சிறுகவிதை, கவிதை, கட்டுரை முதலிய படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
குறிப்பை அனுப்பியவர்: கி.அனந்தநாராயணன்.
13)
கவிதா மண்டலம்
ஆசிரியர்: தி.வ. மெய்கண்டார்
அ.பெ.எண்.637, 7 கிழக்கு மாட வீதி, மயிலை, சென்னை-600 004
தனி இதழ் ரூ.10, ஆண்டுக் கட்டணம் ரூ.120
இதுவும் ஒரு மாத இதழ், ஆனால் கவிதைகள், கவிஞர்கள், அவைபற்றிய குறிப்புகள், ஆய்வுகள், தகவல்கள் முதலியவை இடம் பெறுகின்றன.
குறிப்பை அனுப்பியவர்: கி.அனந்தநாராயணன்.