சென்னையில் வசிக்கும் ஒரு கல்லூரிப் பெண் குடும்பச் சூழலின் காரணமாக கடைசி நேரம் வரைக்கும் பணம் கட்டாமல் விட்டுவிட்டாள். நாளைக்கு தேர்வுகள் ஆரம்பமாகின்றன. கல்லூரியில் ஹால் டிக்கெட் தராமல் நிறுத்தி வைத்துவிட்டார்கள். கல்லூரியை இன்னொரு நாள் திட்டிக் கொள்ளலாம். இப்போதைக்கு பன்னிரெண்டாயிரம் ரூபாய் கட்டியாக வேண்டும். இன்று மதியம் ஒன்றரை மணிக்கு மேலாகத்தான் எனக்குத் தகவல் தெரிந்தது. அதனால் இணைய வழி பரிமாற்றம் எதுவும் செய்ய இயலவில்லை.
ஏற்கனவே இதே பிரச்சினையினால்தான் முதல் செமஸ்டர் தேர்வுகளை எழுதாமல் விட்டுவிட்டாள். இப்பொழுது இரண்டாவது செமஸ்டர் தேர்விலும் சிக்கிக் கொண்டாள்.
பன்னிரெண்டாயிரம் ரூபாய் கைவசம் வைத்திருப்பவர்கள் இன்றைக்கு அந்தப் பெண்ணிடம் கொடுக்க வேண்டும். இதைக் கடனாகச் செய்தால் போதும். திங்கட்கிழமையன்று அறக்கட்டளையின் காசோலையை தூதஞ்சலில் அனுப்பி வைத்துவிடுகிறேன். ஏன் திங்கட்கிழமை? காசோலைப் புத்தகத்தை ஊரிலேயே மறந்து வைத்துவிட்டேன். சனிக்கிழமையன்று ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால்தான் இந்தத் தாமதம்.
பணம் தயாராக இருப்பின் யாரையாவது வந்து பெற்றுக் கொள்ளச் சொல்கிறேன். திங்கட்கிழமைக்கு முன்னதாகவே பணம் தேவைப்படுமாயின் ஏதாவது வழிவகைகளை யோசித்துக் கொள்ளலாம். பெரிய பிரச்சினை இருக்காது.
அந்தப் பெண் முதலாமாண்டு ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறாள். அப்பா தையல் வேலை செய்கிறார். ‘ஏம்மா கடைசி நேரம் வரைக்கும் கட்டாமல் விட்டீர்கள்?’ என்று கேட்டால் அம்மாவுக்கு இருதய சிகிச்சை செய்தோம் என்கிறாள்.

யாராவது உதவ முடியுமா?
vaamanikandan@gmail.com
***
Latest Update:
எழுதிவிட்டு ஒரு நடை சென்று வருவதற்குள் பதின்மூன்று மின்னஞ்சல்கள் வந்துவிட்டன. அத்தனை பேருக்கும் நன்றி. முதலில் தொடர்பு கொண்டவரே உதவுவதாகச் சொல்லிவிட்டதால் அவர் வழியாக பணத்தை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்துவிடலாம். அவரது முகவரிக்குச் சென்று பெண்ணின் தந்தை பணத்தை வாங்கிக் கொள்வார்.