சிறப்பாகச் செயல்படும் ஐம்பது பள்ளிகளின் பட்டியலைத் தயாரிக்கும் வேலையில் பாதிக்கிணறு தாண்டியாகிவிட்டது. இதுவரை இருபத்தெட்டு பள்ளிகளின் முகவரிகள் கிடைத்திருக்கின்றன. பெரும்பாலான தலைமையாசிரியர்களிடம் பேசியிருக்கிறேன். ஓரிருவரிடம் இன்னமும் பேசவில்லை. முக்கால்வாசி பள்ளிகளின் விவரங்கள் மற்றவர்களின் பரிந்துரை வழியாகவே சேகரிக்கப்பட்டிருக்கிறது. பரிந்துரை செய்தவர்களுக்கு நன்றி.
இப்போதைக்கு சிவகங்கை, நீலகிரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி என்று ஓரளவு பரவலாக இருந்தாலும் இது போதாது. இன்னமும் இருபது பள்ளிகளையாவது பட்டியலில் சேர்க்க வேண்டும். ஐம்பது பள்ளிகள் சேர்ந்தவுடன் சின்னநதி மற்றும் மின்மினி ஆகிய சஞ்சிகைகளுக்கு ஓராண்டுச் சந்தா கட்டிவிடுவது முதற்பணி. பிறகு இந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தபடி நம்மால் இயன்ற வேறு உதவிகளைச் செய்யலாம். அந்தப் பள்ளிகளுக்கான உதவிகள், பள்ளியில் படிக்கும் தகுதியான குழந்தைகளின் கல்விச் செலவுகள்- இப்படியான உதவிகள்.
ஒரே மாவட்டம் என்று குவிந்துவிடாமல் தமிழ்நாடு முழுவதும் இதைச் செய்யத் தொடங்கலாம். இன்னமும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளைக் கண்டறிய முடியவில்லை. இப்போதைய பட்டியலை இணைத்திருக்கிறேன். சரியான பள்ளிகளை அடையாளம் காட்டுவதற்கு உங்களால் உதவ முடியுமா என்று பாருங்கள். இல்லையெனில் இது குறித்து போதுமான அனுபவமுடையவர்கள் யாராவது இருப்பின் அவர்களிடம் இந்தச் செய்தியைக் கொண்டு சேர்த்து உதவவும். நன்றி.
1)
தலைமையாசிரியர் ,
சென்னை நடு நிலைப் பள்ளி,
12,கபிலர் தெரு,
மடுமா நகர்,பெரம்பூர்,
சென்னை.11.
2)
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
துலுக்கமுத்தூர்,
அவிநாசி தாலுக்கா.
திருப்பூர் மாவட்டம் - 641 654
3)
தலைமையாசிரியர்(பொறுப்பு)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
சவுளூர் கூட் ரோடு,
அகரம் சாலை
காவேரிப்பட்டினம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் - 635112
4)
தலைமையாசிரியர்,
பாவேந்தர் தமிழ் வழிப்பள்ளி,
10, திருநீலகண்டர் சாலை,
சேக்கிழார் நகர்,
குன்றத்தூர்
சென்னை - 69
5)
தலைமையாசிரியர்
PUPS Havoor,
கீழ் கோத்தகிரி அஞ்சல்,
கோத்தகிரி(தாலுக்கா)
நீலகிரி மாவட்டம்- 643271
6)
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி
முருகம்பாளையம்
அய்யம்பாளையம் [தபால்]
கொடுமுடி [வழி]
ஈரோடு மாவட்டம்- 638151
7)
தலைமையாசிரியர்,
சேர்மேன் மாணிக்கவாசகம் பள்ளி,
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம்- 630 302
8)
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
முத்தநேரி,
நரிக்காடு(அஞ்சல்)
விருதுநகர் மாவட்டம் - 626607
9)
தலைமையாசிரியர்,
ஆனந்தா பள்ளி,
கே.பி.சி.நகர்,
வெள்ளகோவில்
திருப்பூர் மாவட்டம்- 638111
10)
தலைமையாசிரியர்,
அல்-அமீன் துவக்கப்பள்ளி,
மண்கட்டி தெப்பக்குளம் அருகில்,
மேலூர்-625106
மதுரை மாவட்டம்.
11)
தலைமை ஆசிரியர்:
அரசு நடுநிலைப்பள்ளி,
தேவண்ணகவுண்டனூர்,
சங்ககிரி தாலுக்கா
சங்ககிரி - 637301
12)
தலைமையாசிரியர்,
தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி,
பாலிக்காடு,
காந்திநகர்,
கோபிச்செட்டிபாளையம்.
ஈரோடு மாவட்டம்- 638452
13)
தலைமையாசிரியர்,
சக்தி தமிழ் பள்ளிக்கூடம்,
தொழிற்பேட்டை,
கரூர்- 639004
14)
தலைமையாசிரியர்,
ஸ்ரீ சிவகாமி அம்பாள் வித்யாசாலை ஆரம்பப்பள்ளி,
ராங்கியம் அஞ்சல்
திருமயம் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்-622301
15)
தலைமையாசிரியர்,
பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி,
கெங்கநாய்க்கன்பாளையம்,
மானூர் அஞ்சல்,
திருப்பூர் மாவட்டம்- 641606
16)
தலைமையாசிரியர்,
சிறுமலர் மற்றும் மழலையர் ஆரம்பப்பள்ளி,
வெள்ளகுளம்,
அயன் பொருவாய்(அஞ்சல்)
பாலக்குறிச்சி,
திருச்சு- 621 308
17)
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கரவழி மாதப்பூர்,
சூலூர் ஒன்றியம்
கோவை மாவட்டம்- 641668
18)
தலைமையாசிரியர்,
ஊ ஒ தொ பள்ளி
அண்ணாநகர்காலனி
வாழப்பாடி.
சேலம் மாவட்டம் - 636115.
19)
தலைமையாசிரியர்,
ஊ ஒ தொ பள்ளி
உப்புபள்ளம்
வெள்ளகோவில்,
திருப்பூர் மாவட்டம்- 638111
20)
திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி,
கோனேரிப்பட்டி அஞ்சல்,
எடப்பாடி வட்டம்,
சேலம் மாவட்டம் - 637107
21)
தலைமையாசிரியர்
தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,
67ஏ, பவானி நெடுஞ்சாலை,
மாதையன்குட்டை,
மேட்டூர் அணை- 636452
சேலம் மாவட்டம்
22)
தலைமையாசிரியர்,
ஊ.ஒ.ஆரம்பப்பள்ளி,
மேலமேட்டுப்பட்டி,
எருதிக்கோண்பட்டி அஞ்சல்,
கடவூர் ஒன்றியம்.
கரூர் மாவட்டம்- 621311
9787147200
23)
ஊ.ஒ.ந.பள்ளி,
நல்லாம்பட்டி,
சாமனூர் அஞ்சல்
பாலக்கோடு வட்டம்,
தருமபுரி மாவட்டம்- 636 806
24)
தலைமையாசிரியர்
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
Y.ஒத்தக்கடை,
மதுரை மாவட்டம்- 625107
25)
தலைமையாசிரியர்,
புனித திரேசாள் ஆரம்பப்பள்ளி,
கோபிபாளையம்,
அளுக்குளி (அஞ்சல்),
கோபி வட்டம்
ஈரோடு மாவட்டம்- 638453
26)
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கீழப்பாளையூர்
கம்மாபுரம்.
கடலூர் மாவட்டம் -606 103
27)
தலைமையாசிரியர்,
சன்னதி அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி,
38-பி, சன்னதி தெரு,
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம்- 604 408
28)
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
மேலராதாநல்லூர்,
கண்கொடுத்தவனிதம் (அஞ்சல்)
கொரடச்சேரி,
திருவாரூர் மாவட்டம் - 610 113