Bank statement எடுக்கும் வசதி இப்பொழுதுதான் கிடைத்தது. நல்ல செளகரியம். இது இல்லாமல் எண்பத்தைந்து ரூபாய் கொடுத்து கணக்கு வழக்கு நோட்டுப்புத்தகம் ஒன்று வாங்கி வந்து அதற்கு திருநீறு பொட்டெல்லாம் வைத்து கணக்கு எழுதிக் கொண்டிருந்தேன். அலைபேசி எண் பதிவு செய்யப்படாததால் இத்தனை நாட்களாக ஸ்டேட்மெண்ட் எடுக்க முடியாமல் இருந்தது. இப்பொழுது கொடுத்துவிட்டார்கள். இனி பிரச்சினையில்லை. மாதம் ஒரு முறை கணக்கு ஏற்றிவிடலாம். வேலை எளிதாகிவிட்டது.
ரசீது அனுப்பும் வேலைதான் சற்று சிரமமான காரியமாக இருக்கிறது. இதில் பாதிப்பேருக்கு மேலாக பணத்தை அனுப்பிவிட்டு எந்தத் தகவலையும் அனுப்புவதில்லை. அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ரசீதை எழுதி யாருக்கு அனுப்புவது என்று குழப்பம் வந்துவிடுகிறது. வரிசை எண்: 49 வரைக்கும் ரசீது அனுப்பியிருக்கிறேன். மற்றவர்கள் யாருக்கேனும் ரசீது உடனடியாகத் தேவைப்பட்டால் ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். தேவைப்படாதவர்களுக்கு வரிசையாகவும் அதே சமயம் பொறுமையாகவும் அனுப்பி வைக்கிறேன்.
நன்றி.
vaamanikandan@gmail.com