ரிச்சர்ட் விஜய் சோமனூர்க்காரர். அந்த ஊர் கோவை மாவட்டத்தில் இருக்கிறது. அவர் இப்பொழுது இங்கிலாந்தில் இருக்கிறார். அங்கு சென்று பல வருடங்கள் ஆகிவிட்டதாம். மசால் தோசை 38 ரூபாய் புத்தகத்தின் பத்து பிரதிகளுக்கான பணத்தை தான் கொடுப்பதாகச் சொல்லி பதிப்பாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் பிரதிகளை அவருக்கு அனுப்பி வைக்க வேண்டியதில்லை. சரவண பாபு சொன்னதைப் போலவே அந்தப் பிரதிகளை நாம் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி வைத்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே சொன்னதைப் போல என்னை உற்சாகமூட்டுவதற்காக இதைச் செய்கிறாராம். எனக்கும் சந்தோஷம்தான். பதிப்பாளர் தப்பித்துவிடுவார் என்கிற நம்பிக்கை உருவாகிறது அல்லவா? அவ்வளவுதான்.
பத்து பிரதிகளை வாங்கிக் கொள்கிறேன் என்று ஆயிரத்து நூறு ரூபாய் அனுப்பியிருக்கிறார். ஆக, பதினோரு பேருக்குக் கொடுக்கலாம்.
போட்டியை ஆரம்பித்துவிடலாம்.
மசால் தோசை 3 ரூபாய் தொகுப்பு முழுவதும் Characters தான். சிறுகதை வடிவிலான கட்டுரைகள். அறிவுரை சொல்கிறேன்; தகவல்களைக் கொட்டுகிறேன் என்றெல்லாம் கிளம்பாமல் சுவாரஸியமான கேரக்டர்கள் இருபத்தைந்து பேரைப் பற்றி எழுதிய புத்தகம் இது.
எனவே அதே வடிவிலான போட்டி இது.
1) வாழ்க்கையில் தங்களைக் கவர்ந்த எந்த ஒரு மனிதரைப் பற்றி வேண்டுமானால் எழுதி அனுப்பலாம். ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர் என்றிருக்கக் கூடாது. தாங்கள் நேரில் பார்த்த அல்லது பழகிய மனிதர்களாக இருக்க வேண்டும்.
2) சந்தோஷம், நகைச்சுவை, சோகம், நெகிழ்ச்சி என்று எந்த வடிவிலும் இருக்கலாம்.
3) அம்மா, அப்பா, ஆசிரியர், நண்பர் அல்லது பக்கத்து வீட்டுக்காரர், ஒரு பைத்தியகாரன் என்று எந்தக் கேரக்டராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
4) குறைந்தபட்சம் பத்து வரிகளாவது இருக்க வேண்டும்.
5) எவ்வளவு சுவாரஸியப்படுத்த முடியுமோ அவ்வளவு சுவாரஸியமாக்கி அனுப்பவும்.
பதினோரு கட்டுரைகள் வந்து சேர்ந்தவுடன் அவற்றை பதிவேற்றம் செய்துவிடலாம்.
பதினோரு கட்டுரைகள் வந்து சேர்ந்தவுடன் அவற்றை பதிவேற்றம் செய்துவிடலாம்.
முதலில் வரும் பதினோரு கட்டுரைகளுக்கு மசால் தோசையின் ஒரு பிரதி அனுப்பி வைக்கப்படும்.
ரிச்சர்ட் விஜய்க்கு நன்றி.
vaamanikandan@gmail.com
vaamanikandan@gmail.com