Dec 8, 2014

வரவும் செலவும்

நிசப்தம் அறக்கட்டளையின் வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்பி வைத்தவர்களில் பெரும்பாலானவர்களின் விவரங்கள் தெரியும். அவர்களது மின்னஞ்சல் முகவரி இருக்கிறது. ரசீதில் பெயரையும் தொகையையும் எழுதி ஸ்கேன் செய்து அனுப்பி வைத்துவிடலாம். hard copy தேவையென்றாலும் சரி. மின்னஞ்சலில் முகவரி அனுப்பி வைத்தால் ரசீதை அனுப்பி வைத்துவிடுகிறேன்.

எட்டாயிரம் ரூபாயை யார் அனுப்பினார்கள் என்றே தெரியவில்லை- கீழேயிருக்கும் பட்டியலில் unknown எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று பணப்பரிமாற்றங்கள். அதற்கு அடுத்தபடியாக கடைசியாக இருக்கும் ஐந்து பரிமாற்றங்களைச் செய்தவர்களின் பெயர் தெரிகிறது. ஆனால் அவர்களின் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் என எதுவும் இல்லை. பணத்தைக் கொடுத்துவிட்டு இவ்வளவு அமைதியாக இருக்க வேண்டியதில்லை. தயவு செய்து மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும்.

மொத்தமாக கிடைத்த தொகை ரூ.337907 (மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து தொள்ளாயிரத்து ஏழு ரூபாய்). பரிசோதனையாக அனுப்பி சரிபார்க்கப்பட்ட இருநூற்று ஐந்து ரூபாயும் இதில் அடக்கம். இந்தத் தொகையிலிருந்து ஐம்பத்தாறு ரூபாயை வங்கி எடுத்துக் கொண்டது. ஆக வங்கியில் இருந்த மொத்தத் தொகை ரூ.337851 (மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து எந்நூற்று ஐம்பத்து ஒரு ரூபாய்). இதில் ஒரு லட்ச ரூபாய்க்கு பணவிடை எடுத்தேன்.  அதற்காக வங்கிக் கமிஷன் ரூ. 449

இப்பொழுது வங்கிக் கணக்கில் இருக்கும் தொகை (08.12.2014 அன்று) : 3,37,851-1,00,449= ரூ. 237402 (இரண்டு லட்சத்து முப்பத்தேழாயிரத்து நானூற்றிரண்டு ரூபாய்).


பெயர் தொகை (ரூ.)
ஆனந்த் 2001
ஜெகநாத் ஸ்ரீனிவாசன் 2000
ஸ்ரீராம் 5000
சேதுபதி 11000
சர்வோத்தமன் 5000
சுரேஷ் 5100
சரவணன் 10000
ஹரிராமன் 2000
M.மகேந்திரன்  5000
தினேஷ் 10100
ஜனனி 5000
சிவக்குமார் 3000
வானதி 5000
நாகராஜன் 15000
தியாகு 2500
B.மகேந்திரன் 500
அசோக் மற்றும் சக்தி 7500
S.சரவணன் 5000
ஈஸ்வரன் 5000
N.மோகன் 3000
வசந்தி 20000
சார்லஸ் 40000
உதயசங்கர் 3000
ஸ்ரீராம் 7500
வெங்கட்ரமணி 5000
வெங்கட்ராமன் 10000
ஆனந்த சுதா 3000
பாஸ்கர் 5000
செல்வக்குமார் 5000
மணி 2000
சதீஷ்குமார் 10000
கார்த்திகேயன் 20000
T.சேகர் 6000
கேத்தரின் 50000
Unknown 1001
Unknown 5000
Unknown 3000
விஜய் அருண் 25000
கதிரேசன்  5000
பிரபாகரன் 1000
தீபக் சந்திரசேகர் 500
S கார்த்தி 2000