பெங்களூரிலிருந்து ஊருக்கு வரும் போதெல்லாம் ஒரு ஆஞ்சநேயர் கோவிலைத் தாண்டித்தான் வர வேண்டும். ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில். அந்தக் கோவிலுக்கு முன்பாக இருக்கும் காலி இடத்தில்தான் வண்டியை நிறுத்தி எடுத்து வந்த உணவை உண்போம். பக்தி எல்லாம் எதுவும் இல்லை. அந்த கோவிலுக்கு அருகிலேயே நிறைய குரங்குகள் உண்டு. பையன்களுக்கு குரங்குகளை வேடிக்கை காட்டிக் கொண்டே ஊட்டிவிடலாம் என்பதுதான் முக்கியமான காரணம்.
இந்த இடத்தில் குரங்குகள் இருப்பதால்தான் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டியிருக்கிறார்கள் என்று சொன்னால் அம்மாவும் அப்பாவும் நம்புவதேயில்லை. ஆஞ்சநேயர் இருப்பதால்தான் குரங்குகள் வந்திருக்கின்றன என்பார்கள். மீறிப் பேசினால் திட்டுவார்கள். அதனால் அதற்கு மேல் எதுவும் பேசுவதில்லை. அதுவும் இல்லாமல் சாமிகளை நக்கலடிக்க நான் என்ன பெரியாரா? ஆனானப்பட்ட கருணாநிதியே வெளியே நக்கலடிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் சாய்பாபாவை கூட்டி வைத்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். தம்மாத்துண்டு பீஸான நான் நக்கலடிப்பதெல்லாம் நல்லதுக்கு இல்லை. அதுவும் நெடுஞ்சாலையில் இருக்கும் சாமியைக் கலாய்த்து அவர் கடுப்பாகி காற்றைப் பிடுங்கிவிட்டார் என்றால் அவ்வளவுதான். அந்தப் பாங்காட்டில் அமர்ந்து சக்கரத்தின் மவுத்தில் வாய் வைத்துத்தான் ஊத வேண்டும்.
கோவிலுக்கு வெளியே பல முறை நின்றிருந்தாலும் உள்ளே போனதில்லை. வண்டி நிறுத்தும் இடத்தில் இருந்து பார்த்தால் அனுமர் தெளிவாகத் தெரிவார். நின்ற இடத்தில் நின்று ஒரு சல்யூட் அடித்துக் கொள்வேன். ஆனால் அந்த வழியில் போகும் பெரும்பாலான பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள் சற்று வேகத்தைக் குறைத்து ஆஞ்சநேயருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டுப் போவார்கள்.
இந்தப் பகுதிகளில் ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் அதிகம் போலிருக்கிறது. அதே போலத்தான் கிருஷ்ணகிரிக்கு அருகில் இருக்கும் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலும். ஒரு காலத்தில் இந்த ஆஞ்சநேயர் பயில்வான் சாமியாக இருந்திருக்கக் கூடும். ஒருகாலத்தில் என்ன ஒரு காலத்தில்- இப்பவும் பயில்வான்தான். இல்லையென்றால் சின்னம்மாவையே தன் கோவிலுக்கு வர வைக்க முடியுமா? நம் சின்னம்மாதான். சசிகலா. இரண்டொரு நாட்களுக்கு முன்பாக வந்துவிட்டு போயிருக்கிறார். ஒரு பையில் தேங்காயைப் போட்டு அதைக் கோவிலில் கட்டித் தொங்கவிட்டுப் போனால் வேண்டுதல் நிறைவேறிவிடுமாம். அவருக்கு என்ன வேண்டுதலோ- நம் பத்திரிக்கையாளர்கள்‘தனது தோழி நாற்பதுக்கும் நாற்பதும் வெல்ல சசிகலா வேண்டுதல்’ என்று செய்தி போட்டிருக்கிறார்கள்- அவர் வேண்டிக் கொண்டிருக்கும் போது இவர்கள் தங்களது காதுகளை வைத்துக் கேட்டது போலவே எழுதியிருந்தார்கள்.
இந்தப் பகுதிகளில் ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் அதிகம் போலிருக்கிறது. அதே போலத்தான் கிருஷ்ணகிரிக்கு அருகில் இருக்கும் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலும். ஒரு காலத்தில் இந்த ஆஞ்சநேயர் பயில்வான் சாமியாக இருந்திருக்கக் கூடும். ஒருகாலத்தில் என்ன ஒரு காலத்தில்- இப்பவும் பயில்வான்தான். இல்லையென்றால் சின்னம்மாவையே தன் கோவிலுக்கு வர வைக்க முடியுமா? நம் சின்னம்மாதான். சசிகலா. இரண்டொரு நாட்களுக்கு முன்பாக வந்துவிட்டு போயிருக்கிறார். ஒரு பையில் தேங்காயைப் போட்டு அதைக் கோவிலில் கட்டித் தொங்கவிட்டுப் போனால் வேண்டுதல் நிறைவேறிவிடுமாம். அவருக்கு என்ன வேண்டுதலோ- நம் பத்திரிக்கையாளர்கள்‘தனது தோழி நாற்பதுக்கும் நாற்பதும் வெல்ல சசிகலா வேண்டுதல்’ என்று செய்தி போட்டிருக்கிறார்கள்- அவர் வேண்டிக் கொண்டிருக்கும் போது இவர்கள் தங்களது காதுகளை வைத்துக் கேட்டது போலவே எழுதியிருந்தார்கள்.
ஆஞ்சநேயரை நம்புபவர்கள் எதற்காக ஊர் ஊருக்குக் 200 ரூபாயைக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. மேலிடத்திலிருந்து ஐந்நூறுதான் வந்திருக்கும் போலிருக்கிறது. ஒவ்வொரு ஐந்நூறிலும் மேல்மட்ட பொறுப்பாளருக்கு நூறு. அந்தப் பகுதி பொறுப்பாளருக்கு நூறு. பட்டுவாடா செய்பவருக்கு இன்னொரு நூறு. ஆக முந்நூறு போக மிச்சமிருக்கும் இருநூறு ரூபாய் மட்டும் வாக்காளருக்கு. எலும்புத் துண்டு போல வீசியிருக்கிறார்கள். மா.செக்களிலிருந்து வட்டப்பிரதிநிதி வரைக்கும் கரை வேட்டி கட்டிக் கொண்டு சுற்றுவதற்கு இப்பொழுதுதான் அர்த்தம் தெரிகிறது. செம பூஸ்ட்.
பிற கட்சிகளில் பெரிய பாக்கெட் படைத்த வேட்பாளர்கள் அள்ளி வீசியிருக்கிறார்கள். நீலகிரியில் அட்டகாசமான கவனிப்பு. மற்ற தொகுதிகளைப் பற்றித் தெரியவில்லை. நல்ல சாமியாக இருந்தால் பணம் கொடுத்தவனையெல்லாம் - அவன் எந்தக் கட்சிக்காரனாக இருந்தாலும் மண்ணைக் கவ்வச் செய்ய வேண்டும். பார்க்கலாம்.
பிற கட்சிகளில் பெரிய பாக்கெட் படைத்த வேட்பாளர்கள் அள்ளி வீசியிருக்கிறார்கள். நீலகிரியில் அட்டகாசமான கவனிப்பு. மற்ற தொகுதிகளைப் பற்றித் தெரியவில்லை. நல்ல சாமியாக இருந்தால் பணம் கொடுத்தவனையெல்லாம் - அவன் எந்தக் கட்சிக்காரனாக இருந்தாலும் மண்ணைக் கவ்வச் செய்ய வேண்டும். பார்க்கலாம்.
எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உண்டு. ஆனால் அது துளித் துளியாக அவ்வப்போது சிதைந்துவிடுகிறது.
எங்கள் ஊரில் மாரியம்மன் திருவிழாவை வருடாவருடம் நடத்துகிறார்கள். மாரிக்கான அம்மன்- மழை அம்மன். வெட்டினால் பால் வரும் மரங்களான ஆலமரத்தையோ, பாலை மரத்தையோ எடுத்து வந்து அம்மனுக்கு முன்பாக நட்டு ஒரு வாரம் அந்தக் கம்பத்தைச் சுற்றி ஆடுவார்கள். அந்தக்காலத்திலிருந்தே கோடை வெயில் கொளுத்தும் சித்திரை மாதத்தில்தான் கம்பத்திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. வருடாவருடம் நானும் அக்னிக்கும்பம் எடுத்து ஊரைச் சுற்றிவருவேன். ஒவ்வொருவருடமும் மழை தவறாமல் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இந்தத் திருவிழாவை நடத்துகிறார்கள். அக்னிக்கும்பம் எடுப்பது அத்தனை சுலபமான காரியம் இல்லை. மதியம் பன்னிரெண்டு மணிவாக்கில் ஊரைச் சுற்ற ஆரம்பித்து மூன்று மணியளவில் ஊர்வலத்தை முடிப்பார்கள். கையில் இருக்கும் கும்பம் முகத்தைக் கருக்கிக் கொண்டிருக்க தார்ச்சாலையின் சூடு வெறும் பாதத்தை பொத்தலிடும். மூன்று மணிநேரங்கள். மழை வருகிறதோ இல்லையோ- எத்தனை சிரமமான காரியமாக இருந்தாலும் நம்மால் அதைச் செய்துவிட முடியும் என்கிற ஒரு நம்பிக்கையை இது கொடுத்துவிடும். அக்னிக்கும்பம், அக்னிக்குண்டம், அலகு குத்துதல் போன்ற சிரமங்கள் யாவுமே மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டும் சைக்காலஜிக்கல் அசைன்மெண்ட்ஸ்தானே?
இந்த வருடமும் கம்பம் நட்டுவிட்டார்கள். மழையைத்தான் காணவில்லை. கடந்த சில வருடங்களைப் பார்க்கும் போது மழை மீதிருந்த நம்பிக்கை சுத்தமாக பொய்த்துவிட்டது. மழை மீதான நம்பிக்கை மட்டும் இல்லை, மாரியம்மன் மீதான நம்பிக்கையும் சேர்த்து பொய்த்துவிட்டது. துளி மழை பெய்வதில்லை. காய்ந்து பிளந்து கிடக்கிறது பூமி. எதற்காக திருவிழாவை நடத்த வேண்டும்? எதற்காக இத்தனை சிரமப்பட வேண்டும்? இந்த வருடமும் கம்பம் நட்டிருக்கிறார்கள். ஆனால் எனக்குத்தான் நம்பிக்கை போய்விட்டது. வீட்டில் சொன்னால் திட்டுவார்கள். நாத்திகம் பேசுறியா? என்பார்கள். நாத்திகம் எதுவும் இல்லை. இதெல்லாம் நம்பிக்கைச் சிதைவு.
சின்னம்மா ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்துவிட்டுச் சென்றார் என்ற செய்தியைப் படித்ததும் இன்னொரு செய்தி ஞாபகம் வந்தது. அது முதல் பத்தியில் சொன்ன தொப்பூர் ஆஞ்சநேயரைப் பற்றிய செய்திதான். இந்த ஆஞ்சநேயர் கோவிலைத் தாண்டி கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய வளைவு இருக்கிறது. அவ்வப்போது விபத்து நடக்கிறது. சென்ற மாதத்தில் கூட கேரளாவிலிருந்து அம்மா, அப்பா, இரண்டு மகன்கள் மற்றும் அப்பாவின் நண்பர் ஆகியோர் காரில் வந்திருக்கிறார்கள். நண்பர்தான் காரை ஓட்டி வந்திருக்கிறார். இந்த இடத்திற்கு வந்தவுடன் பள்ளத்தில் உருண்டுவிட்டது. அதிகாலை மூன்று மணிக்கு விபத்து நடந்திருக்கிறது. ஏழு மணிக்குத்தான் அந்த வழியாகச் சென்றவர்கள் கவனித்திருக்கிறார்கள். சின்னப்பையனும், நண்பரும் மட்டும் தப்பித்துவிட்டார்கள். மற்ற அனைவரும் சின்னாபின்னமாகி இறந்து போனார்கள். தப்பித்த சிறுவனுக்கு நான்கு வயது. குடும்பத்தை இழந்து அநாதையாகிவிட்டான். ஆஞ்சநேயர் நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். விபத்து நடந்த ஓரிரு நாளில் அந்த வழியாகச் சென்றோம். அந்த இடத்தில் வண்டியை நிறுத்தி சிதைந்த காரின் கண்ணாடிச்சில்லுகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியின் பெரியவர் ஒருவர் வந்தார். ஆஞ்சநேயர் மீது சின்னம்மாவுக்கு இருக்கும் நம்பிக்கை தொப்பூர்க்காரர்களுக்கு இல்லை போலிருக்கிறது. பேய்தான் அக்கப்போர் செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார். அவரவருக்கு அவரவர் நம்பிக்கை.
சரி இருக்கட்டும்.
நேற்று பெங்களூரிலிருந்து வரும் போது கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். கூட்டமே இல்லை. எல்லோரும் வாக்களிக்கச் சென்றிருப்பார்கள் போலிருக்கிறது. பூசாரி மட்டும் இருந்தார். கற்பூரம் காட்டினார். ‘சசிகலா வந்திருந்தாங்களா?’என்று கேட்ட போது ஒரு மார்க்கமாக பார்த்தார். அவர் அப்படிப் பார்க்காமல் இருந்திருந்தால் ‘அவர் கட்டிய தேங்காய் பை எது?’ என்று கேட்டிருப்பேன். ஆனால் அவர் முறைத்த பிறகு கேட்பதற்கு தைரியமில்லை. கட்டப்பட்டிருந்த தேங்காய்ப்பைகளுக்குள் பார்வையை ஓட்டினேன். இருந்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்பொழுது இன்னொரு முறை ஆஞ்சநேயரைக் கும்பிட்டுக் கொண்டேன். இந்த இரண்டாவது கும்பிடு ஆஞ்சநேயருக்கான வேண்டுதல். ‘என்னதான் இருநூறு கொடுத்திருந்தாலும் நாற்பதுக்கு நாற்பதெல்லாம் சாத்தியமில்லை ஆஞ்சநேயரப்பா. அவங்க வந்து வேண்டுதல் போட்டுட்டு போய்ட்டாங்க. டார்கெட் மிஸ் ஆச்சுன்னா கண்ணகி நிலைமைதான் உனக்கும். சூதானமா இருந்துக்க’ என்றேன். அநேகமாக ஆஞ்சநேயருக்கு வியர்த்திருக்க வேண்டும். வியாஸராயர் தொண்ணூற்றாறு ஆஞ்சநேயர் கோவில்கள் கட்ட விரும்பி தான் சென்ற இடங்களில் எல்லாம் கட்டியிருக்கிறார். அப்படி கட்டப்பட்டதுதான் இந்தக் கோவிலும். இந்த ஆஞ்சநேயர் காலங்காலமாக இங்கேயே இருந்து பழகிவிட்டார். இப்பொழுது நகரத்தின் நெரிசலுக்குள் தன்னை மூடி வைப்பது மாதிரி ஒரு கணம் நினைத்துப் பார்த்திருப்பார். வியர்த்திருக்கும்.
ஜெய் ஸ்ரீராம் அல்லது ஜெய ஸ்ரீராம்.
11 எதிர் சப்தங்கள்:
superb vm.
அந்தக் கோவிலுக்கு முன்பாக இருக்கும் காலி இடத்தில்தான் வண்டியை நிறுத்தி எடுத்து வந்த உணவை உண்போம். பக்தி எல்லாம் எதுவும் இல்லை.//
இது என்ன பெருமையான விஷயமா? அதிகமானவர்கள் தங்களை நாத்திகராக அடையாளம் காட்டிக் கொள்ள விரும்புகின்றனரோ என்ற தோற்றம் உருவாகிறது. முக்கியமாக தமிழ் பேசும் நல்லுலகில் எழுதாளராக வேண்டுமெனில் முற்போக்கு சிந்தனையும், நாத்திகமும் பேச வேண்டும் என்பது எழுதப்படாத விதியா என்ன?
ஏதோ எனக்குத் தோன்றியது, தவறிருந்தால் மன்னிக்கவும்.
இதில் பெருமை எங்கே இருக்கிறது? தினமும் நமது பாதையில் எவ்வளவோ கோவில்களைத் தாண்டுகிறோம். என்னதான் கடவுள் நம்பிக்கை இருந்தாலும் அத்தனை கோவில்களைப் பார்த்தும் பக்தி உணர்வு வருகிறதா என்ன? இந்த வாக்கியத்தை நீங்கள் அந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
மற்றபடி என்னை நாத்திகவாதி என்று எங்கும் சொன்னதில்லை. இந்தக் கட்டுரை உட்பட. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றுதான் எழுதியிருக்கிறேன் சரவணக் குமார்.
http://www.youtube.com/watch?v=wkwcIf1vAsk
நாற்பதுக்கு நாற்பதெல்லாம் சாத்தியமில்லை ஆஞ்சநேயரப்பா. அவங்க வந்து வேண்டுதல் போட்டுட்டு போய்ட்டாங்க. டார்கெட் மிஸ் ஆச்சுன்னா கண்ணகி நிலைமைதான் உனக்கும். சூதானமா இருந்துக்க’
>>
கடவுளுக்கே அட்வைஸ் பண்ணுற நிலைமைக்கு தமிழகம் வந்துட்டுதா!?
KADAVUL IRUKKARA ??? indha kaelvikku yaarukkumae bathil theriyaadhu... appadi irukkurappa... ivaru dhaan kadavul... idhu dhaan saami... indha kovilukulla thaan irukkaar... ippudi vaenduna adhai niraivaethuvar ... ippadiyellam sollum bothu ... sirippu varaatha pinna :) :)
வாக்கினை விற்பது வாழ்க்கையை விற்பது போல - என்று தான் மக்கள் திருந்துவார்களோ
ஆஞ்சனேயருக்கே வார்னிங்கா..?! :)
அது ஒரு நோய். ஈரோடு ராமசாமி என்ற கிருமி அதை பரப்பிவிட்டது. அதனாலேயே தமிழ் வலை தளங்களை படிப்பத்தற்க்கு விருப்பம் ஏற்படுவதில்லை. புதிதாக வளரும் எழுத்தாளர்கள் மூத்த எழுத்தாளர்களின் ஆதரவை பெறுவதற்காக இவ்வாறு எழுத்துகிறார்களா?? என தெரியவில்லை.
கொஞ்சம் போல நாத்திக வாசம் என்னவோ வருது மணி. நம்ப அன்பே சிவம் கமல் மாதிரி. என்னை பொருத்தவரை தீதும் நன்றும் பிறர் தர வாரா.. நமக்கு வருவது சென்ற நாளுடய காரணத்தின் காரியம்.. அல்லது சென்ற ஜென்மத்தின் காரணத்தின் காரியம்....
ஆனாலும் சில பாலகுமாரன் நாவல் போல கருத்து உடன்படாலனாலும் எழுத்து பிடிச்சிருக்கு :)
''என்னதான் இருநூறு கொடுத்திருந்தாலும் நாற்பதுக்கு நாற்பதெல்லாம் சாத்தியமில்லை ஆஞ்சநேயரப்பா. அவங்க வந்து வேண்டுதல் போட்டுட்டு போய்ட்டாங்க. டார்கெட் மிஸ் ஆச்சுன்னா கண்ணகி நிலைமைதான் உனக்கும். சூதானமா இருந்துக்க’ என்றேன். ''
அம்மா நாற்பது கிடைக்கவில்லை என்றால் ஆஞ்சநேயரையும் ம்யூசியத்தில் வைத்து விடுவார்கள்.
Post a Comment