துலுக்கம்பாளையம் புளியம்பட்டியிலிருந்து அன்னூர் போகும் வழியில் இருக்கிறது. ஊரின் பெயர்தான் துலுக்கம்பாளையமே தவிர ஊருக்குள் ஒரு துலுக்கன் கிடையாது. துலுக்கன் மட்டுமில்லை வண்ணான், நாசுவன் என்ற எந்தச் சாதியும் இல்லை. கவுண்ட வீடுகள்தான் பத்து இருக்கும். மொத்தமே பத்து வீடுகள் மட்டுமே இருப்பதால் பஞ்சாயத்து போர்டு, மணியகாரர் ஆபிஸ், பள்ளிக்கூடம் என எதுவும் துலுக்கம்பாளையத்துக்கு இல்லை. எதுவானாலும் பக்கத்தில் இருக்கும் காசிகவுண்டன்புதூருக்குத்தான் கவுண்டமார்கள் போய் வருகிறார்கள்.
வாய்க்கால் ஓரமாக மிட்டாய்க்கடை நடத்தும் காசியம்மாயா கடைக்கு சிகரெட் வாங்கச் சென்ற போதெல்லாம் கணேஷ் பீடிதான் இருந்தது. சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ மாதிரி சிகரெட் இல்லாதவனுக்கு பீடிக்கட்டு. அடிக்கடி கடைக்கு போனதால் அந்த ஆயாவும் ‘ஃப்ரெண்ட்’ ஆகிவிட்டது. ஊரின் பெயருக்கான காரணம் ஆயாக் கிழவிதான் சொன்னது.
சலீம் தன் குடும்பத்தோடு அந்த ஊருக்கு வந்து இன்றைய தேதிக்கு அறுபது வருடங்கள் ஆகிவிட்டது. சலீமின் மகன்கள் ஏழு பேர், பேரப்பிள்ளைகள் இருபத்தெட்டு, வாழாவெட்டியாக வாழும் மகள் அவளது இரண்டு குழந்தைகள், சலீமின் அம்மா, திருமணமாகாத மகள்கள் இரண்டு பேர் என பெருங்குடும்பம். கேரளாச்சீமையிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தார்களாம். வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் தமிழ் பேசத்தெரியாது. சலீமும் இன்னும் ஓரிருவர் மட்டும் அரைகுறைத் தமிழில் பேசுவார்கள்.
இந்த ஊருக்கு வந்த புதிதில் ராமசாமிக் கவுண்டர் தோட்டத்தில் குடிசை போட்டுக் கொள்ள அனுமதி கேட்டார்கள். துலுக்கர்களுக்கு இடம் தர முடியாது என்று அவர் சொல்லிவிட்டார். இதையேதான் ஒவ்வொரு கவுண்டனும் சொல்லியிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் சுடுகாட்டுக்கு முன்பாக இருந்த புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்ட சலீம் குடிசைக்கு முன்பாகவே கசாப்பு கடைக்கான முட்டியையும் கொண்டு வந்து போட்டிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் மட்டுமே கசாப்புக் கடை உண்டு. மற்ற நாட்களில் சலீமும் அவரது மகன்கள் நான்கு பேர்களும் வெளியூர் போய்விடுவார்கள். அவர்கள் வெளியூர்ச் சந்தைகளில் தோல் வியாபாரம் செய்வதாக ஒரு பேச்சு உண்டு.
மற்ற மூன்று மகன்களில் இரண்டு பேர் ஊனம் என்பதாலும் மற்ற ஒருவன் பெண்களுக்கு பாதுகாப்பிற்காகவும் வீட்டிலேயே இருந்து கொள்வதுண்டு. ஊனம் என்றாலும் இரண்டு பேராலும் நடக்க முடியும். கொஞ்சம் சிரமப்படுவார்கள். அவ்வளவுதான்.
கசாப்புக்கடை சுற்றுவட்டார ஊர்களில் பிரபலம் அடையத்துவங்கியது. ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ஒரு வெள்ளாட்டு குட்டியை அறுத்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று குட்டிகள் வரை அறுத்தார்கள். பணம் தேவைப்படும் கவுண்டர்கள் சலீமிடம் தங்களது வெள்ளாட்டுக்குட்டிகளை விற்கத்துவங்கினார்கள்.
மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். ஒரு புதன்கிழமையன்று பழனிக்கவுண்டன் மனைவி அவள் கழுத்தில் போட்டிருந்த அட்டியைக் காணவில்லை என்று விடிந்தும் விடியாமலும் ஒப்பாரி வைக்கத் துவங்கினாள். ஊரே திரண்டு விட்டது. பெண்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். கவுண்டன்கள் கூடி விவாதித்தார்கள். இறுதியாக துலுக்கவீட்டில் விசாரிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். மொத்தமாக சலீம் வீட்டிற்கு போனவர்கள் ஊனமான இரண்டு பேர்களையும் தூக்கி வந்து மரத்தில் கட்டி வைத்துவிட்டார்கள்.
சலீம் வீட்டு இளம்பெண்கள் வெளியே வருவதில்லை என்பதால் சலீமின் அம்மாவும் அவரது மனைவியும் மட்டும் கட்டி வைக்கப்பட்டிருந்த மரத்திற்கு அருகில் வந்தார்கள். தாங்கள் நகையை எடுக்கவில்லை என்று அழுதாலும் யாரும் கேட்பதாக இல்லை. சலீம் சனிக்கிழமைதான் ஊருக்கு வருவான் என்பதால் இவர்களை நாலு சாத்து சாத்தி விட்டுவிடலாம் என்றும் அவர்கள் வந்தவுடன் விசாரித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இரண்டு துலுக்கப்பசங்களையும் தங்களின் கை வலிக்கும் வரை அடித்து கயிற்றை அவிழ்த்துவிட்டார்கள்.
மருவிக் கொண்டே கிடந்த சின்னப்பையன் சனிக்கிழமையன்று அதிகாலையில் பக்கத்திலிருந்த வேப்பமரத்தில் தொங்கிவிட்டான். மொத்தக் குடும்பமும் கதறியதில் ஊரே அதிர்ந்து நடுங்கியது. சலீமும் அவரது மகன்களும் சாயந்திரமாக வந்து சேர்ந்த போது நடந்த நிகழ்சிகள் அவர்களுக்கு விவரிக்கப்பட்டது. சலீம் துக்கம் தாளமாட்டாமல் ஓரமாக அமர்ந்து கொண்டார். சலீமின் மூத்த மகன் கசாப்பு கடை கத்தியைத் தூக்கிக் கொண்டு ஓடினான். இரண்டு பேர் துரத்திக் கொண்டே போனார்கள் ஆனால் அவனது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஓடியவன் பழனிக்கவுண்டன் சுதாரிப்பதற்குள் கவுண்டனின் நெஞ்சில் ஒரு வெட்டு போட்டான். வெள்ளாடு கத்துவதைப் போலவே பழனிக்கவுண்டன் கத்திக்கொண்டு விழுந்தான். அடுத்தவர்களை தேடிக் கொண்டு அவன் ஓடுவதற்கு முன்பாக மற்ற இரண்டு பேர்களும் அவனை பிடித்துவிட்டார்கள்.
வெளியூர் கவுண்டர்களுக்கும் கூட பழனிக்கவுண்டன் வெட்டப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியைத் தந்தது. ”சனி பொணம் தனியாக போகாது” என்பதால் சற்று பயந்தும் கூட போனார்கள். பழனிக்கவுண்டனை தன் மகன் கொன்றுவிட்டதை கேள்விப்பட்ட சலீம் அதிர்ச்சியடைந்தார். தன் மகனை ஓங்கி அறைந்துவிட்டு ராமசாமிக் கவுண்டர் காலில் விழ ஓடினார். கவுண்டர் எழவு வீட்டில் இருந்தார். அங்கு சென்ற சலீம் நாளை காலை ஊரைக் காலி செய்துவிடுவதாகச் சொன்னபோது யாருமே பதில் பேசவில்லை. பழனிக்கவுண்டனின் மனைவிதான் அந்த துலுக்கனை கொல்லுங்களே...அந்த துலுக்கனை வெட்டுங்களே என்று கதறிக் கொண்டிருந்தாள்.
சலீம் சென்றதற்கு பிறகாக ராமசாமிக் கவுண்டர் வீட்டில் கவுண்டர்கள் கூடினார்கள். கூட்டத்தில் சுற்றுவட்டாரக் கவுண்டர்களும் அடக்கம். பழனிக்கவுண்டனை விடிந்தபிறகு அடக்கம் செய்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். அதோடு துலுக்கனை பழிவாங்கினால்தான் கவுண்டர்கள் மீது பயம் வரும் என்றும் பேசிக் கொண்டனர்.
சலீம் குடும்பத்தார் தம் குடிசைக்கு பக்கத்திலேயே இறந்தவனை அடக்கம் செய்துவிட்டு கதவை தாழிட்டுக் கொண்டனர். இரவில் யாரும் வெளியே போக வேண்டாம் என்று சலீம் தன் குடும்பத்தாரிடம் சொன்னார்.
நள்ளிரவு தாண்டிய போது வெளியே ஆள் அரவம் கேட்டது. சலீமீன் அம்மாதான் தடுக்கு ஓட்டை வழியாக பார்த்தாள். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் நின்று கொண்டிருந்தார்கள். கதவை திறக்க முடியவில்லை. வெளியே பூட்டியிருப்பார்கள் போலிருக்கிறது. மூன்று பேர்கள் அவசர அவசரமாக குடிசையின் மீது ஏதோ ஒரு திரவத்தை ஊற்றினார்கள். ராமசாமிக் கவுண்டர் பக்கத்தில் இருந்தவனிடம் இருந்து தீப்பந்தத்தை வாங்கினார். ஒரு மணி நேரத்தில் அனைத்தும் முடிந்துவிட்டது. கதறல் சத்தம் பக்கத்து ஊர்களுக்கும் கேட்டதாம்.
அடுத்த நாள் காலையில் நாற்பதுக்கும் மேற்பட்ட கரிக்கட்டைகளை ஒரே குழியில் போட்டு மண்ணை மூடியவர்கள் அதன் பிறகாக பழனிக்கவுண்டனை அடக்கம் செய்யச் சென்றார்கள்.
'துலுக்கர் எரிஞ்ச பாளையம்’ இப்பொழுது துலுக்கம்பாளையம் ஆகியிருக்கிறது.
31 எதிர் சப்தங்கள்:
மணி, இது முற்றிலும் புனைவா? எனக்கு இது ஏறக்குறைய முற்றிலும் 'நிஜம்' போல இருக்கு :(
Nanba, Is this true story? or story. but end of the story is very sad.natpudan
அனு,ஃபெரோஸ்- புனைவை நிஜம் போலவும் நிஜத்தை புனைவு போலவும் சித்தரிப்பதில் வெற்றிபெறுவதற்கான முயற்சியில் இருக்கிறேன். வெற்றிபெற்றிருக்கிறேன் என நீங்கள் அறிவித்தால் சந்தோஷம்தான் :)
இது நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால் முடிவு மிகவும் வருத்தப்பட வைத்தது. பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...! (த.ம. 1)
யதார்த்தம்
//ஒரு புதன்கிழமையன்று பழனிக்கவுண்டன் மனைவி அவள் கழுத்தில் போட்டிருந்த அட்டியைக் காணவில்லை என்று விடிந்தும் விடியாமலும் ஒப்பாரி வைக்கத் துவங்கினா.//
எரிந்து மடிந்த சாம்பலில் அட்டி(கை) கிடைத்ததா?
கதை சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
Please avoid using caste names! Please! Try to write the story without using it or use it very very less as required.
மிகவும் வன்மத்துடன் ஒரு சாதியை, அந்த ஊரில் அந்தச் சாதியைச் சேர்ந்த அனைவரது மீதும் குற்றம் சுமத்தி (அனேகமா உனக்கு ஆவாத சாதி போல) நயவஞ்சகமாக எழுதப்பட்ட பொனவு. வெக்கமா இல்ல இப்படி பொய்யா எழுதி அதுல வேற பொனவ நிஜம் மாதிரி எழுதியிருக்கேன்ன்னு பெருமை பீத்திக்கறதுக்கு?
நீ எவ்வளவு வன்மத்தோட எழுதி வைத்திருகிறாய் என்பது கொஞ்சமேனும் உரைத்தால் இந்தப் பின்னூட்டத்தை வெளியிடு பார்க்கலாம்! குறைந்தபட்சம் இதை வாசிக்கும் பதர்கள் இது உண்மைக்கதை இல்லை என்றாவது உணர்ந்து கொள்ளட்டும்!
I am sorry for the above emotional outburst! But I just can't tolerate the way you have portrayed a particular caste with such a stupid and false accusation! It is not just one murder - it is so cruel with slaughtering of the whole family! Even if it is a 'punaivu', you should not use a particular caste name to write this! This would only leave the people who do not know anything about a particular region/caste to come to a very bad conclusion about them! I got the same feeling when I saw a movie called Uththama puththiran! And I would have got irritated in the same way if all the muslims were portrayed as 'theeviravaathis'
I am not saying that these people do not have any caste based issues with others, but to portray them as very cruel and mindless people falsely (even if it is a punaivu) is totally wrong, and against your basic ethics! Just don't exploit a caste's name for your experiments.
I do not believe in casteism or the supremacy of a particular caste over others! I believe that people of all castes are equal provided they are given equal opportunities to nourish and flourish! I want all these the boundaries to disappear gradually through intercaste marriages. I hope you understand my stand!
வணக்கம்.
உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்கிறேன்.
கொங்குப் பகுதியின் ஆதிக்க சாதியான கவுண்டர்கள் பிற சாதிகளின் மீது நிகழ்த்திய வன்முறைகளின் பிரதிபலிப்பாக மட்டுமே சில சாதியம் சார்ந்த கதைகளை முன் வைக்கிறேன். இதில் குறிப்பிட்ட சாதி மீது புழுதி வாரித்தூற்றும் எண்ணம் எதுவும் இல்லை.
சில கதைகளுக்கான தரவுகளை கொங்குவரலாற்று நூல்களில் இருந்து எடுத்திருக்கிறேன். சில கதைகள் புனைவுகள்.
நன்றி.
அப்படியா! எனில் உங்க தரவு சுட்டி எல்லாத்தையும் கொடுத்துட்டு எழுதுங்க. சும்மா கண்டமேனிக்கு இப்படி கதை கட்டி விடப் படாது. அந்தப் பகுதியிலேயே வளர்ந்த நான் இப்படிப்பட்ட கதைகளைக் கேட்டதும் இல்லை, நடைமுறையில் அவர்கள் (சாதி ஆதிக்கத்தைத் தவிர்த்து) இப்படி நேரடியான வன்முறை செய்தும் பார்த்ததில்லை.
மேலும், தயவு செய்து பழைய நாட்டார் கதைகளை வைத்து, ஊரில் வெற்றுப் பெருமை பேசித் திரியும் விலாங்குகள் சொல்லும் கதைகளை வைத்து புனைவுகளை உருவாக்கி அலைய விடாதீர்கள். இதில் எத்தனை சதவிகிதம் கதை என்பது யாருக்கும் தெரியாது. இரண்டு குடிகள் சண்டை போட்டுக் கொள்வது என்பதும் அதில் ஒருவர் வென்று மற்றவர் தோற்பது என்பதும் வரலாறு முழுக்க நடந்துள்ளது. எனில் இன்றைய மக்களிடையே அதைத் தூசித் தட்டி அவர்கள் வாரிசுகளைக் குற்றவாளிகளாகக முயற்சிப்பதன் காரியகாரணமென்ன? கசினி படை எடுத்து வந்து இந்துக்களை கொன்றான் என்றால் அதற்கும் இன்றைய இஸ்லாமியருக்கும் என்ன சம்பந்தம் அல்லது பொறுப்பு இருக்க முடியும்?
சாதி ஆதிக்கத்தை எதிர்த்து எழுதுவதானால் இன்றைய உண்மை நிலவரப்படி இருப்பதை எழுதினால் நல்லது, அதுவே ஒரு எழுத்தாளருக்குரிய அறமும் நெறியும் கடமையும் ஆகும். இரட்டை டம்ளர் முறை பற்றி, அது மனிதத்தன்மையற்ற செயல் என்பது பற்றியெல்லாம்
எழுதுங்கள், குறைந்தபட்சம் அவர்களில் அறிவுள்ளவர்கள் தம்மைத் திருத்திக் கொள்ள உதவும்.
ஆனால் இப்படிப் ஒன்றுமற்ற விடயத்தை வைத்து புனைவென்று நீங்கள் எழுதுவது, சாதீய வன்மத்தை, அவர்களுள்ளே அல்லது அவர்கள் மேலே மற்றவர்களுக்கு, தூண்டுவதாக அமையும். நீங்கள் நிச்சயமாக அந்த ஊரைச் சேர்ந்த ஆனால் அவர்களைப் பிடிக்காத வேறொரு சாதி எனபது என்னுடைய கணிப்பு. அப்படியெனில், தயவு செய்து உங்கள் சாதி என்ன, அவர்கள் தலித்துகள் மீது நிகழ்த்திய வன்முறைகளையும் எழுதுங்கள். தம்முதுகை மறைத்துக் கொண்டு அடுத்தவன் மீது சேற்றை வாரி இறைப்பது என்பது இன்றைய இணைய நிகருலகில் மிகச் சுலபமான மற்றும் பலருக்கும் பிடித்தமான காரியமாகும். பிராமணர்களுக்கு எதிராக பிழியப் பிழிய எழுதுபவர்கள் தம் சொந்த சாதியின் அடக்குமுறைகளை சொந்த ஊரில் சட்டை கூட செய்ய மாட்டார்கள்.
புனைவுகள் எழுதும் போது தரவுகளைத் தர வேண்டிய அவசியம் இல்லை.
நானும் அதே கொங்குப்பகுதியில் வளர்ந்தவன் தான்.
விரிவாகவே எழுதுகிறேன். உங்களின் அடையாளத்தோடு விவாதிக்க தயார் எனில்.
புனைவுகள் எழுதும் போது தரவுகள் தர வேண்டிய அவசியம் இல்லைதான்.
ஆனால், புனைவுகளில் ஒரு சாதிப் பெயரைக் குறிப்பிட்டு, அந்த சாதிக்காரர்களை இழிவு படுத்தும் வகையில் எழுதக் கூடாது என்பதைத் தாங்கள் அறியாமலிருப்பது ஆச்சரியம்.
நீங்களும் ஒரு கவுண்டராக இருந்தாலும்கூட அந்த உரிமை உங்களுக்குக் கிடையாது.
இணையப் பாதுகாப்பில் இதைச் செய்கிறீர்கள்.
பிரச்சினை ஏதும் உருவாகாமலிருந்தால் பரவாயில்லை. உருவாகும் போது அதை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும்.
கவுண்டர்களை இழிவு படுத்த நினைத்தால், உங்கள் முழு முகவரியைக் கொடுத்து தொடர்ந்து எழுதுங்கள்.
உங்கள் சாதியையும் கொஞ்சம் சொல்லுங்களேன்.அதன் பெருமையை எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும்.
இதற்கு மேல் உங்கள் விருப்பம்.
நீங்கள் பதிவிடுவதைத் தடுத்து நிறுத்த என்னால் முடியுமா என்ன?
என் பெயர் பரமசிவம்.சொந்த ஊர் நாமக்கல்.
உங்கள் முகவரியும் தந்திருக்கிறீர்கள்.எங்கேயும் பதுங்கிக் கொண்டு எழுதவில்லை.
பாராட்டுகள்.
கொங்குப் பகுதியில் வளர்ந்த தங்களுக்குக் கொங்கு வேளாளரை இழிவு படுத்தி எழுதும் உரிமை இருக்கலாம்.
பிரச்சினைகளை எதிர் கொள்ளும் ஆற்றல் இல்லாமலா இதைச் செய்வீர்கள்?
பதிவு படிப்பதற்குச் சுவையாக இருக்கிறது.
மிக்க நன்றி.
இது புனைகதை.....சரி.
காணாமல் போன அட்டிகையை அந்த முஸ்லீம் குடும்பம்தான் எடுத்தது என்று கவுண்டர்கள் முடிவு செய்கிறார்களே, அது எந்த அடிப்படையில்?
அந்த அளவுக்குக் கவுண்டர்கள் அடிமுட்டாள்கள் என்று சொல்வதில் உங்களுக்கு அத்தனை மகிழ்ச்சி.
இல்லையா?
கவுண்டர்கள் கொலைகாரர்கள்தான். விட்டுத் தள்ளுங்கள்.
உங்கள் ஜாதிப் பெருமைகளைப் பறை சாற்றும் வகையில் கதைகள் புனையுங்களேன்.
அம்மாதிரிக் கதைகளை விரைவில் எதிர்பார்க்கலாமா?
நீங்களும் ஒரு கவுண்டர்தான் என்பது என் கணிப்பு.அந்த உரிமையில்தான் இப்படியொரு புனைகதையை எழுதியிருக்கிறீர்கள்.
தன் ஜாதியை மட்டம் தட்டுவதில் பெருமைப் படுகிற குணம் கவுண்டனுக்கு உண்டு.
துலுக்கர்களைக் கொலைகாரர்களாக உருவகம் செய்து ஒரு புனைகதை எழுதி வெளியிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?
கொஞ்சம் சிந்தியுங்கள்.
கண்டனக் கடிதங்கள் அணிவகுத்திருக்கும்.
தங்களின் இந்தப் பதிவு தமிழ்மணத்திலிருந்து நீக்கப் பட்டிருக்கும்!
என்ன சொல்றீங்க மணிகண்டன்?
//அந்தப் பகுதியிலேயே வளர்ந்த நான்//
ரொம்ப நல்லதா போச்சு.கதை(அல்லது சம்பவம்)யில் வரும்"துலுக்கம்பாளையம் புளியம்பட்டியிலிருந்து அன்னூர் போகும் வழியில் இருக்கிறது" என்பது இருக்கிறதா என்பதை தெளிவு படுத்துங்களேன் Ananymous
உங்களின் பெயரை அறிவித்தததற்கு நன்றி முனைவர்.பரமசிவம்.
கொங்குப்பகுதியில் கவுண்டர்கள் இன்னமும் ஆதிக்க சாதியினராகத்தானே இருக்கிறார்கள்? ஆதிதிராவிடர், அருந்ததியர் என்று இவர்கள் ஒதுக்கி வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளை விடுங்கள்- எங்கள் சாதியில் இருந்து பிரிந்து சென்றவர்கள்தான் குடி நாசுவன்கள் என்று கவுண்டர்கள் சொல்கிறார்கள் அல்லவா? அந்த நாவிதர்களுடன் பந்தியில் அமர்ந்து உண்ணும் கவுண்டர்கள் இருக்கிறார்களா?
வண்ணான், குயவன் என்ற எண்ணற்ற சாதிகளை ‘பலவற்றை’கள் என்று ஒதுக்கி வைக்கும் இனமல்லவா ‘பெருமைமிகு’ கவுண்டர் இனம்.
கவுண்டர்கள் வன்முறையற்றவர்கள் எனில் வெட்ட வெட்ட தழைவான் வேட்டுவன் என்ற பழமொழியின் ஆதி அந்தம் குறித்து கொஞ்சம் யோசிப்போமா?
மற்றபடி,
கவுண்டர்களின் பெருமைகளையும், இழி குணங்களையும் வைத்து இன்னமும் குறைந்தது நூறு கதைகளையாவது வாழ்நாளில் எழுதிவிட முடியும் என நம்புகிறேன். ஆனால் அதை தொடர்ச்சியாக செய்யப்போவதில்லை.
மின்னல்கதைகளின் நோக்கம் குறிப்பிட்ட சாதியையோ அல்லது தனிமனிதனையோ பகடியாக்குவது இல்லை. கதைக்கான முயற்சியும் பயிற்சியுமே.
மேலும்,
எனது சாதி குறித்தான கணிப்பை நீங்கள் தவிர்ப்பதுதான் நல்லது. எந்தச் சாதியோடும் என்னை இணைத்துப்பார்க்க விரும்பவில்லை.
வேறொரு கதையுடன் வருகிறேன். சந்திப்போம்.
நன்றி.
//புனைவுகள் எழுதும் போது தரவுகளைத் தர வேண்டிய அவசியம் இல்லை.//
எனில் நானும் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு உங்கள் புகைப்படத்தையும் அதில் இட்டு தப்பும் தவறுமாக ஒரு புனைவை எழுதி இணையம் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்ட இயலும். கேக்குறவன் கேனையாக இருந்தால் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நியாயப் படுத்திக் கொள்ளுவீர்கள்.
//நானும் அதே கொங்குப்பகுதியில் வளர்ந்தவன் தான்//
யாரும் அவர்கள் மீது தவறு இல்லை என்று சொல்லவில்லை. உண்மையை எழுதினால் தகும். சும்மா புனைவென்ற பெயரில் இப்படி குறிப்பிட்ட சாதி மீது சேற்றை வாரி இறைப்பதற்காக உங்கள் மீது வழக்குத் தொடர இயலும்.
//விரிவாகவே எழுதுகிறேன். உங்களின் அடையாளத்தோடு விவாதிக்க தயார் எனி//
நீங்கள் எழுதித் தான் நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. நியாயமற்ற அவதூறுகளை அள்ளி வீசுகிறீர்கள்.
//உங்களின் பெயரை அறிவித்தததற்கு நன்றி முனைவர்.பரமசிவம்.//
பெயரில்லாமல் பேசிய நான் வேறு, அவர் வேறு. குழப்பிக் கொள்ளாதீர்கள்!
//கொங்குப்பகுதியில் கவுண்டர்கள் இன்னமும் ஆதிக்க சாதியினராகத்தானே இருக்கிறார்கள்? ஆதிதிராவிடர், அருந்ததியர் என்று இவர்கள் ஒதுக்கி வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளை விடுங்கள்- எங்கள் சாதியில் இருந்து பிரிந்து சென்றவர்கள்தான் குடி நாசுவன்கள் என்று கவுண்டர்கள் சொல்கிறார்கள் அல்லவா? அந்த நாவிதர்களுடன் பந்தியில் அமர்ந்து உண்ணும் கவுண்டர்கள் இருக்கிறார்களா?//
நண்பரே. சாதி என்பது சமூகக் கொடுமை. அதில் ஒற்றை மனிதனோ இல்லை ஒற்றை சாதியோ மட்டும் குற்றவாளியல்ல. ஒட்டுமொத்த இந்திய சமுதாயமே அவ்வகையில் குற்றவாளி தான். சிலர் தானாகப் புரிந்து திருந்துவார்கள். அப்படியல்லாத சிலரை அடித்துத் திருத்த இன்று சட்டமுண்டு. தீண்டாமை என்பது வன்கொடுமை, அதை உணர்ந்த நாங்கள் அதை மாற்ற முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அறிவியல்பூர்வமாக எல்லாரும் ஒன்றே என்று புகட்ட முயற்சித்து வருகிறோம். நிலை மாறும், தம்சாதியில் பெண் கிடைக்காதவர்கள் வேறு சாதிகளில் திருமணம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். பிள்ளைகள் புலம்பெயர ஆரம்பித்துள்ளார்கள், அவர்களும் புரிந்துகொள்ளுவார்கள்.
என் ஊரில் இருக்கும் எல்லாரையும் என் ஊர் மக்கள் என்றே நான் அணுக விரும்பிகிறேன். ஆனால் இப்படி இல்லாததியும் பொல்லாததியும் சொல்லி சாதிய வன்மத்தை வளர்த்து விடுவதில் உங்களுக்கு என்ன லாபம்?
//வண்ணான், குயவன் என்ற எண்ணற்ற சாதிகளை ‘பலவற்றை’கள் என்று ஒதுக்கி வைக்கும் இனமல்லவா ‘பெருமைமிகு’ கவுண்டர் இனம்.//
ஆம், ஒதுக்கி வைத்தார்கள், அவர்களும் ஒதுக்கப்பட்டார்கள் அவர்களது மேலடுக்குகளால். இன்றும் கூட அவர்கள் மைனாரிட்டியாக வசிக்கும் ஊர்களில் சென்று பாருங்கள், பொருளாதாரத்தில் முன்னேறி அதே பிசி அந்தஸ்தில் இருக்கும் நகரத்தில் வசிக்கும் பிற சாதிக்காரர்களால் அவர்கள் பட்டிக்காட்டான்களாகக் கருதப்படுவதை.
//கவுண்டர்கள் வன்முறையற்றவர்கள் எனில் வெட்ட வெட்ட தழைவான் வேட்டுவன் என்ற பழமொழியின் ஆதி அந்தம் குறித்து கொஞ்சம் யோசிப்போமா?//
அடடா! புல்லரிக்கிறது. இன்னும் சில நூற்றாண்டுகள் முன்னே சென்றால் இன்றைய மனிதனான Homo Sapiens என்ற இனம் கூட தன்னுடைய மூத்த குடிகளைப் போரிட்டுத் தான் அழித்ததாம்! நீங்கள் ஏன் அந்த வரலாற்றை சோகமும் உருக்கமும் வன்முறையும் பிழியப் பிழிய எழுதக் கூடாது?
//எனது சாதி குறித்தான கணிப்பை நீங்கள் தவிர்ப்பதுதான் நல்லது. //
என்னுடைய கணிப்பு இன்னும் அதே தான். நீங்கள் அதே பகுதியில் இருக்கக் கூடிய தலித்தும் அல்லாத கவுண்டரும் அல்லாத ஒரு சாதி! தில் இருந்தால் உங்கள் சாதிப் பெயரை அறிவித்துவிட்டு எழுதுங்களேன். முன்னே சொன்னது போல, தம்முதுகை மறைத்துக் கொண்டு அடுத்தவர் அழுக்கைச் சுட்டிக் காட்டுவதில் தான் இந்த இணையப் புலிகளுக்கு எத்தனை பாய்ச்சல் எத்தனை துணிச்சல்!
//கவுண்டர்களின் பெருமைகளையும், இழி குணங்களையும் வைத்து இன்னமும் குறைந்தது நூறு கதைகளையாவது வாழ்நாளில் எழுதிவிட முடியும் என நம்புகிறேன். ஆனால் அதை தொடர்ச்சியாக செய்யப்போவதில்லை.//
தேவையேஇல்லை. பெருமையும் வேண்டாம் இழிவும் வேண்டாம். தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வதில் அவர்களே கவனம் செலுத்திக் கொள்ளுவார்கள், மாறுவார்கள், சட்டம் மாற வைக்கும்.
//மின்னல்கதைகளின் நோக்கம் குறிப்பிட்ட சாதியையோ அல்லது தனிமனிதனையோ பகடியாக்குவது இல்லை. கதைக்கான முயற்சியும் பயிற்சியுமே.//
உங்கள் பயிற்சிக்கு நீங்கள் குறிப்பிட்ட சாதியை பலியாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால் தான் இத்தனை விவாதங்களும். இதற்கு மேல் எப்படி உங்களுக்குப் புரியவைப்பது என்று தெரியவில்லை. தூங்கிக் கொண்டிருக்கும் சாதிப்பாசத்தை, அதன் தொடர்ச்சியாக கக்கப் போகும் வன்மத்தை, தட்டி எழுப்பிவிடத்தான் போகிறீர்கள். எழுதுங்கள், நாங்களும் புனைவின் அவதூறைப் பொறுத்து அடுத்தகட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்குத் தயாராகிறோம்.
சலசலப்பு அதிகமாகவே இருக்கிறது. அஞ்ச வைக்க நினைக்கிறீர்களா? உங்களின் பெயரையே சொல்லாத நீங்கள் என் சாதியை கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது.
இந்தக் கதைக்கு இவ்வளவுதான் என் பதில். இதையே பேசிக் கொண்டிருக்காமல் என் அடுத்த வேலையை பார்க்கவிருக்கிறேன்.
நன்றி.
உங்களை அஞ்ச வைப்பதால் எனக்கு என்ன வந்துவிடப் போகிறது? எனது பெயரை நான் ஏன் சொல்லவேண்டும், உங்களுக்கு எதிர்வினை ஆற்றுவது மட்டுமே எனது நோக்கம். பெயரில்லாமல் வந்து அசிங்காசிங்கமாகப் பேச விருப்பமுமில்லை. உங்கள் சாதி என்னவென்று கேட்பது, கல் எறிவதற்கு உங்களுக்கு முதலில் தகுதி இருக்கிறதா என்று அறிவதற்கு மட்டுமே.
நீங்கள் தொடர்ந்து அவதூறை வீசினால் அதைச் சட்டப்படி எதிர்கொள்ளுவோம் என்றது உங்களை மிரட்டுவது போலிருக்கிறது என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் (சலசலப்பு). நீங்கள் செய்வதில் உள்ள தவறை வேறெப்படி எதிர்கொள்ளுவதாம்? தனிநபராக எதுவும் செய்ய இயலாது என்னாலும், சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துச் செல்லவே முயற்சிக்கப் போகிறேன்.
//இந்தக் கதைக்கு இவ்வளவுதான் என் பதில். இதையே பேசிக் கொண்டிருக்காமல் என் அடுத்த வேலையை பார்க்கவிருக்கிறேன்.//
நல்லது. நன்றி.
புனைவை நிஜம் போலவும், நிஜத்தை புனைவு போலவும் எழுத முயற்சிப்பது இப்படியான சாதி ரீதியிலான வன்மத்தை மேற்கொள்ளுவதற்கு என்றால், ஒரு எழுத்தாளனுக்குரிய தகுதியை நீங்கள் இழந்து விடுகிறீர்கள் மணிகண்டன். மனித வாழ்வின் குரூரத்தை, அதிகார வேட்கையை , கண்ணீரை, வலியை, வேதனையை , கதறல்களை, குருதியின் காய்ந்த தடத்தை எழுதிய எத்தனையோ உலக எழுத்தாளர்கள் இங்கு உண்டு. யாரும் தங்களைப் போல குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்கள் அல்ல. இப்போது தங்கள் எழுத்துக்களால் தமிழ் இலக்கியச் சூழலில் உருவாகி வரும் (அல்லது ஒரு இடம் வேண்டி) ஒரு இடத்தை நோக்கிய ஒரு நுண்ணரசியல் பதிவே இப்படி சாதியைப் பற்றி , தீண்டாமையைப் பற்றி எழுதுகிறேன் பேர்வழி என்று குறிப்பிட்ட சாதியை மட்டும் வழக்குரைத்து வருகிறது. சிறிதேனும் நீங்கள் சிந்திக்கத் தலைப் பட்டால் ஒன்று புரியும். உங்களை நோக்கிய விமர்சனங்கள், நீங்கள் பொதுவெளியில் , பத்திரிக்கையில் எழுதியதைப் படித்தான பிறகு அல்ல, மாறாக உங்கள் எழுத்துக்களைப் படிக்க உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்களால் மட்டுமே. நல்ல நயத்தகு வார்த்தைகளைக் கொண்டு பிழையான கருத்தைச் சொல்வது ஒரு இளம் படைப்பாளி செய்யும் முதல் தவறு என்பது உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?
எனக்கு என்னவோ அந்த துலுக்க ஜனம் இல்லாததனாலே ஊரு இப்போ நிசப்தம்மா இருக்குமே...????
கவுண்டனை பற்றி தப்பா பேச இங்க எவனுக்கும் தகுதி இல்ல...மொதல்ல உனோட பொழப்ப பாரு சாதிய பத்தி பேச வந்துடன்...
good one
இவ்வளவு சர்ச்சைக்கு அப்புறமும் இந்த பதிவு
இன்னும் வாசிக்க கிடைப்பது உங்களது தைரியத்தை காட்டுகிறது.
நான் நாடு நிலை பார்வை உடன் சொல்கிறேன்.
இந்த கதையை படிக்கும் பொது உள்ளுக்குள் நடுங்கியது மனது.
மிகுந்த வன்மத்தை தூண்டும் வகையில் இருக்கிறது.
தயவு செய்து இது போல நேரடியாக குறிப்பிட்டு எழுத வேண்டாம்.
தவிர்க்க இயலாத இடங்களில் நீங்கள் இல்லை மறை காயாக சொல்லுவது நல்லது.
நானும் பெரிய எழுத்தாளர்களின்
சாதிய பெயர்களின் சொல்லாடல்களை படித்து இருக்கிறேன்.
ஒரு சில இடங்களிதான் அவர்கள் நேரடியாக குறிப்பிடுவர், அவர்கள் சொல்லாமலே நமக்கு
கதை ஓட்டம் புரிந்து விடும்.
இது போன்ற கதைகளை தவிர்க்கவும்.
இரு பக்கமும் வேதனை கொள்வார்கள் ..
நன்றி..
Awesome..
இதெல்லாம் ஒரு பொழப்பா... நீ என்ன ஜாதின்னு சொல்லுடா உன் ஜாதியைப் பத்தி நான் சொல்றேன்..
Post a Comment