கிராமத்தை
நெடுக்காக பிளந்து செல்லும்
நெடுஞ்சாலையை
கடக்க காத்திருக்கும்
அவள்
நேற்றைய மழையில் துளிர்த்த
பசுந்தளிர் ஒன்றைக் கிள்ளி
உள்ளங்கையில் வைத்திருக்கிறாள்
வியர்வையில் கசங்கிக் கொண்டிருக்கும் அது
நசுங்கிக் கிடந்த நாயொன்றை நினைவுபடுத்துகிறது
பதட்டத்தில் தளிரை வீசியெறிந்தவள்
நெடுஞ்சாலைகளில் மரிக்கும் நாய்களுக்காக
ஒரு கணம் மெளனிக்கிறாள்
மணிக்கு நூற்றியிருபது கிலோமீட்டர் வேகத்தில்
அவளைக் கலைக்கிறது
கறுப்பு நிற ஸ்கார்ப்பியோ.
படம்: Michel Keck
3 எதிர் சப்தங்கள்:
நல்ல உவமான உவமேயம். நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் !
அருமையான கவிதை..பகிர்வுக்கு ரொம்ப நன்றிங்க..
Mysterious Island - திரைப்பார்வை
Post a Comment