
இரவே வராத
இந்த நகரத்தில்
இரண்டாவது
பன்னிரெண்டு மணியின்
முப்பத்திரண்டாவது நிமிடத்தில்
அவன்
கரிய நிறப்பறவையொன்று
நசுங்கிக் கிடந்த சாலையில்
நடந்து கொண்டிருக்கிறான்
பசித்துக் கிடக்கும்
அவனை
பெய்யத் துவங்கும் மழையின்
முதல்துளி
தின்னத்துவங்குகிறது.
யாருமே ஸ்பரிசிக்காத அவனை
மழை ஸ்பரிசிக்கிறது
யாருமே நனைய விரும்பாத
இந்த நகரத்தில் அவன் மட்டுமே
நனைந்து கொண்டிருக்கிறான்
யாருமே பெயர் சொல்லி அழைக்காத
அவனை
மழை அழைத்தது
ஒரு
மின்னலைத் தொடர்ந்து
பெருங்குரலெடுத்து அழுத மழை
தன்
காமத்தை தீர்க்கச் சொல்லி
இவனை
யாசிக்கிறது.
பரிகாசிக்கிறான்.
கொஞ்சமாக
ஓய்ந்து-
கெஞ்சுகிறது
மழை
மழையின்
காதலும் காமமும்
அதீதமானது மட்டுமில்லை
மிக மூர்க்கமானதும்
இவனை மிரட்டத்துவங்கிய மழை
இந்த நகரத்தை புரட்டிப்போடுகிறது
நகரம் திணறத் துவங்குகையில்
ஒதுங்க முடியாத
இவன்
தப்பிக்க இயலாதவனாய்
சரணடைகிறான்
இப்பொழுது
மழை
இவனை
அணைக்கத் துவங்குகிறது
மூர்க்க மழையிடமிருந்து
காக்க
ஒரு தேவதை உதிக்கிறாள்
நனைந்தவளின்
நடனத்தில்
அசைவுறும் அங்கங்கள்
மழையினை சலனமுறச் செய்கின்றன
ஆண் மீதான
காமத்தை
பெண் மீதாக மாற்றுகிறது
மழை.
இப்பொழுது
மழையைத் தோற்கடிக்க
அவளுக்கு
ஒரு தீக்குச்சி
போதுமானதாக இருக்கிறது.
6 எதிர் சப்தங்கள்:
மழையைத் தோற்கடிக்க
அவளுக்கு
ஒரு தீக்குச்சி
போதுமானதாக இருக்கிறது.//
நிசப்தம்...
மிகவும் அருமை தோழா... தொடர்ந்தும் எழுதுங்கள்
நல்ல பதிவு
மிக மிக பிடிச்சிருக்கு..
தொடருங்க கத்திருக்கிறேன்....
!!நம்ம பக்கமும் உங்க கருத்துக்காக காத்திருக்கிறது!!
மிகவும் அழகான படைப்பு.
அழைக் காமல் வந்ததோ
இந்தக் காமம்-இல்லை
மழைக் காக வந்ததோ
இந்தக் காமம்
படமும் தலைப்பும நல்
கவித்துவ மானா ஒன்றாம்
புலவர் சா இராமாநுசம்
யாருமே நனைய விரும்பாத
இந்த நகரத்தில் அவன் மட்டுமே
நனைந்து கொண்டிருக்கிறான்...
நிசப்தம் என்ற ப்லாக் மழையில் நானும் நனைகிறேன்...
rajeshnedveera
Post a Comment