இன்று மதியம்
தூக்குப் போட்டு இறந்தவனின்
வீட்டில்
குழந்தைகள்
ரயில் விளையாட்டை
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டைகளைப் பிடித்துக் கொண்டு
ஓடும் மனிதப் பெட்டிகள்
துக்கம் கேட்க வந்த
ஒவ்வொருவரையும் நெருங்குகிறது.
ஒரு கணம்
ரயிலோடு சேர்ந்து ஓடுபவர்கள்
பின்னர்
பதட்டமடைந்தவர்களாக
குழந்தைகளை மிரட்டுகிறார்கள்.
மிரட்டல்களால்
அமைதிப்படுத்த முடியாத
சிலர்
தலையைக் குனிந்து கொள்கிறார்கள்
ரயிலில்
மூன்றாவதாக ஓடிக் கொண்டிருக்கும்
தன் மகனைப் பார்த்து
கேவி அழுகிறாள்
இறந்தவனின் மனைவி
குழந்தைகளால் நிராகரிக்கப்படும்
அழுகையின் சப்தங்கள்
அனாதைகளாகிக் கொண்டிருந்த
அந்த வீட்டில்
கீழே விழும் குழந்தைகளை
எடுத்துவிடாத
பெரியவர்களின் அமைதியால்
பிஞ்சு உலகில்
சிறகுகள் முளைக்கின்றன.
வேகத்தையும் கூச்சலையும்
அதிகரிக்கிறார்கள்.
இறந்தவனை நோக்கி
ரயில் ஓடுகையில்
அவனின்
வலது கால் கட்டைவிரலை
மிதித்துச் செல்கிறான்
கடைசிக்கு முந்தியவன்.
கூட்டத்தில் வெள்ளைச் சட்டையணிந்தவர்
எழுந்து வந்து
ரயிலின் கடைசிச் சிறுமியின்
முதுகில்
அறைகிறார்.
எல்லோரும் அவரைப்
பார்த்த கணம்
தூக்கிலிட்டவன்
பிரிவும் காதலும்
மிகுந்தவனாய்
அழுது கொண்டிருக்கும்
மனைவியை
பார்க்கிறான்
தன்
அசைவற்ற கண்களின்
வழியே
ஒரே ஒரு வினாடி மட்டும்.
திகைத்தவள்
அரைவினாடிக்கும் குறைவான
நேரத்தில்
தன் முகத்தை
வேறொரு பக்கம் திருப்புகிறாள்-
யாரும் பார்த்துவிடும் முன்.
மிக ரகசியமாக
5 எதிர் சப்தங்கள்:
சின்ன சின்ன அசைவுகளில் உயிர்கொள்கிறது கவிதை.
//எல்லோரும் அவரைப்
பார்த்த கணம்
தூக்கிலிட்டவன்
பிரிவும் காதலும்
மிகுந்தவனாய்
அழுது கொண்டிருக்கும்
மனைவியை
பார்க்கிறான்
தன்
அசைவற்ற கண்களின்
வழியே
ஒரே ஒரு வினாடி மட்டும்.
திகைத்தவள்
அரைவினாடிக்கும் குறைவான
நேரத்தில்
தன் முகத்தை
வேறொரு பக்கம் திருப்புகிறாள்-
யாரும் பார்த்துவிடும் முன்.
மிக ரகசியமாக
//
சேலைவிற்பவனென தன் மூட்டையை அவிழ்த்து விதவிதமான பரிமாணங்களை மனதிற்குள் விரித்துப் போடுகின்றன இந்த வரிகள்..
Nice
அன்பின் மணி, கவிதை அற்புதம்.. ஒவ்வொரு வரியும் எதார்த்தத்தை அப்படியே சொல்லி அதிர வைக்கின்றது..
அந்த இறுதி இரண்டு பத்திகளில்.. சட்டென்று சடலம் எழுந்து உட்கார்ந்தால் நாம் எப்படி உணர்வோமோ அதை வாசிக்கும்பொழுது உணர்த்தியது.. வாழ்த்துக்கள்..மணி..
நட்புடன் இளங்கோவன், சென்னை
//அரைவினாடிக்கும் குறைவான
நேரத்தில்
தன் முகத்தை
வேறொரு பக்கம் திருப்புகிறாள்-
யாரும் பார்த்துவிடும் முன்.
மிக ரகசியமாக//
அழகான கவிதை
Post a Comment