எங்கள் தாத்தா சிட்டுக்குருவிகள் பிடிப்பதை பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.நெல் காயப்போட்டிருக்கும் களத்தில் மூங்கிலால் பின்னப்பட்ட முறத்தை ஒரு சிறு குச்சியை வைத்து நிறுத்தி வைப்பார். அந்தக் குச்சியை ஒரு நூலில் கட்டி நூலின் மற்றொரு நுனியைப் பிடித்துக் கொண்டு ஏதாவது மர நிழலில் அமர்ந்து கொள்வார். நெல்மணிகளைத் தின்ன வரும் சிட்டுக்குருவி முறத்திற்கு கீழாக வரும் போது நூலை இழுத்தால் முறம் சிட்டுக் குருவியை மூடிக் கொள்ளும்.பிறகு சிட்டுக்குருவியை பிடித்துவிடலாம்.
நாங்கள் சற்று பெரியவர்கள் ஆன பிறகு(பத்து வருடங்களுக்குள்ளாக வாசலில் நெல் காயப்போடுவது பெருமளவில் குறைந்து போனது)வாசலில் இருந்து வீட்டின் உட்புறம் வரைக்கும் அரிசியைத் தூவி வைப்போம். குருவிகள் வீட்டிற்குள் வந்த பிறகு கதவை மூடிவிட்டு சிக்கிக் கொண்ட குருவியை எந்த இடத்திலும் அமரவே விடாமல் துரத்தினால் அது களைத்துவிடும்.களைத்துப் போய் பறக்க முடியாமல் அமரும் சிட்டுக்குருவியை கையில் எடுத்தால் இளஞ்சூட்டோடு அதன் மிக வேகமான இதயத் துடிப்பை ரசிக்கலாம். சில அறிவாளிக் குருவிகள் இலாவகமாக கையை விட்டு நழுவிச் சென்று நம்மை ஓரிரு நாட்களுக்கு 'ஃபீல்' செய்ய வைத்துவிடும்.
இப்படியான விளையாட்டில் ஒரு பெண் சிட்டுக்குருவியை அதிகமாக விரட்டியதில் அதன் வாயில் இரத்தம் வழிந்து இறந்து போனது.அதற்கான எல்லாவிதமான ஈமச்சடங்குகளையும் நண்பர்களோடு செய்தபோது சிட்டுக்குருவிகளை இனிமேல் கொல்லக் கூடாது என்று மட்டுமே முடிவு செய்தோம்.துரத்துவதற்கு எந்தவிதமான தடையையும் எங்களின் சிறுவர் படை கொண்டு வரவில்லை.இருந்தாலும் அந்தக் குருவியே நான் பிடித்த கடைசிச் சிட்டுகுருவி.
விஜியன் என்ற நண்பன் கிணற்றுக்குள் இறங்கி பொந்துகளுக்குள் இருந்து குருவியின் குஞ்சுகளை எடுத்து வருவான்.காகமாக இருந்தால் அதன் குஞ்சுகளுக்கு அருகில் போகவே முடியாதபடி மண்டையைக் கொத்தி புண்ணாக்கிவிடும்.சிட்டுக் குருவிகளுக்கு அந்த வலிமை இல்லாததால் சற்றுத் தள்ளி அமர்ந்து தொடர்ச்சியாகக் கத்திக் கொண்டிருக்கும்.
இந்த நீட்டி முழக்கிய குறுவரலாறுகள் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்பதைச் சொல்வதற்கான அச்சாரம் என்று முடிவு செய்திருப்பீர்கள்.அதேதான்!.
இன்னமும் எங்கள் ஊரில் இருக்கும் கிணற்றுக்குள் குருவிகள் இருக்கின்றன. ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் பார்க்க முடிகிறது.புதிய ஊர்களுக்குச் சென்றால் முதலில் பார்க்க விரும்புவது சிட்டுக்குருவியைத் தான்.அதன் வேகமான பறத்தலும்,பெண் குருவியில் இருக்கும் மென்மையும்,ஆண் குருவியின் கம்பீர தோற்றமும் மிக விருப்பமானவை.
ஆனால் பல ஊர்களில் இவற்றைப் பார்க்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
சிட்டுக்குவிகள் செல்போன் டவரின் கதிரியக்கத்தால் அழிகின்றன,சோடியம் விளக்குகளால் அழிகின்றன, வாழ்க்கை முறை மாற்றங்களால் அழிகின்றன என்ற காரணங்களைச் சொல்கிறார்கள். ஆனால் இந்த எந்தக் காரணமும் முழுமையான முடிவுகள் இல்லை என்றே தோன்றுகிறது. இதுவரைக்கும் கூட இந்தியாவில் சிட்டுக்குருவிகளின் தோராயமான எண்ணிக்கை குறித்தான கணக்கீடுகள் எதுவும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
சிட்டுக்குருவிகள் எங்கும் காணப்படுவை என்பதாலேயே அவற்றைப் பற்றிய கவனம் நமக்கு இருப்பதில்லை. அவற்றை அறிவியல் பூர்வமாக கண்காணிப்பதுமில்லை. ஆனால் அவை குறைந்து வருகின்றன என்பதை கிட்டத்தட்ட எல்லோருமே உணர்ந்திருக்கிறோம்.
சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கான காரணமாக சூழலியல் கட்டுரைகளில் சில காரணங்களே திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன.
முதலாவது நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்.முன்பு சிட்டுக்குருவிகள் கூடுகள் அமைப்பதற்கான இடமாக கூரைகளின் அடிப்பகுதி இருந்தது. கான்கிரீட் கட்டடங்களில் இதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. வீட்டில் சிட்டுக்குருவி கூடு கட்டுவது நல்ல சகுனம் என்று சொல்வார்கள்.
முப்பது வருடங்களுக்கு முன்பாக வீட்டின் காலிப்புறத்தில் தானியங்களை உரலில் இடித்து புடைப்பார்கள். சிதறிக் கிடக்கும் தானியங்கள் பறவைகளுக்கான உணவாக இருந்தன. ஆனால் இப்பொழுது சூப்பர் மார்கெட்டிலிருந்து சுத்தம் செய்யப்பட்ட தானியங்களை பிளாஸ்டிக் பைகளில் வாங்கி வருகிறோம்.ஒரு தானியமணி கூட சிதறாமல் சிக்கனப்படுத்தி பணத்தை வேறு ஊதாரி செலவுகளுக்கு திசைதிருப்பும் வாழ்வுமுறையை பின்பற்றுகிறோம்.
அடுத்ததாக,வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஈயம் கலவாத பெட்ரோல்(Unleaded-Petrol)புழு,பூச்சிகளை அழித்துவிடுகிறது. வளரும் பருவத்தில் இருக்கும் குருவிக் குஞ்சுகளுக்கு இந்தப் பூச்சி புழுக்கள் முக்கியமான உணவு. உணவுப் பற்றாக்குறையின் காரணமாக குருவிகளின் எண்ணிக்கை குறைகின்றன.
மூன்றாவதாகச் சொல்லப்படும் காரணம், செல்போன் கதிரியக்கம் குருவிகளின் கருத்தரிக்கும் தன்மையைச் சிதைக்கின்றன.
இத்தகைய காரணங்களில் ஓரளவுக்கு உண்மையாக இருந்தாலும் முழுமையான காரணங்கள் இவை மட்டும்தானா என்பதில் பல கேள்விகள் இருக்கின்றன.
உதாரணத்திற்கு மும்பையின் நரிமன் பாய்ண்ட் பகுதியிலும், அந்நகரத்தின் வேறு சில பகுதிகளிலும் கணிசமான அளவில் சிட்டுக்குருவிகளைக் காண முடிகிறது. இந்தியாவில் மற்ற எந்த நகரத்தையும் விடவும் மேற்சொன்ன காரணங்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது மும்பைதான். ஆனால் அங்கு சிட்டுக்குருவிகள் இருப்பது இந்த முடிவுகள் எவ்வளவு சதவீதம் உண்மையானவை என்று யோசிக்கச் செய்கிறது.
சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் தொடர்ச்சியாக கண்காணிப்பதன் மூலமே சிட்டுக்குருவிகளைக் காக்க முடியும் என்று தோன்றுகிறது.
பறவையினங்களின் எண்ணிக்கையை இந்தியாவில் அதிகரிப்பது சற்று சவாலானது என்றாலும் முடியாதது என்று நினைக்கவில்லை.அவிநாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்பொழுது அதிக எண்ணிக்கையில் மயில்களைக் காண முடிகிறது.மயில்கறி விற்ற உணவு விடுதிகள் பெரும்பாலானவற்றின் மீது அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
தென் மேற்கு பருவமழைக்காலம் துவங்கிவிட்ட இப்பொழுது, இடி மின்னலுடன் கூடிய மாலை நேரத்தில் தோகைகளை விரித்து மயில்கள் நடனமாடிக் கொண்டிருக்கின்றன.

உயிரோசையில் வெளியான கட்டுரை.
8 எதிர் சப்தங்கள்:
துபாயிலும்,மஸ்கட்டிலும் சிட்டுக்குருவிகளை பார்க்க முடிகிறது!!- காரணம் இங்கு மரம் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
//முன்பு சிட்டுக்குருவிகள் கூடுகள் அமைப்பதற்கான இடமாக கூரைகளின் அடிப்பகுதி இருந்தது. கான்கிரீட் கட்டடங்களில் இதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. //
நல்ல தகவல்கள்...
கவிஞர்களுக்குச் சிட்டுக் குருவி பிடிப்பது போலவே, சிட்டுக் குருவிகளுக்கு நல்ல கவிஞர் என்றால் மிகப் பிரியம் என்று நினைக்கிறேன். நாரிமன் பாயிண்டிலும், நானிருக்கும் வீட்டிலும் ஏராளமான (சரி சரி... சில) சிட்டுக்குருவிகள் இருப்பது இதைத்தானே குறிக்கிறது!
நல்லா இருக்கு கட்டுரை. ஃபிரான்ஸ் எப்படி இருக்கிறது மணி?
அனுஜன்யா
சிட்டு குருவிகள் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டதென்னமோ உண்மை தான், சிட்டு குருவிகளை பிடிக்கும் வழிமுறைகள் எனக்கு ஆச்சர்யமான தகவல், அதற்கெல்லாம் முயற்சி எடுக்காததால் தெரியாமல் இருந்திருக்கலாம். கி. ராவின் பிஞ்சுகள் நாவலில் தான் எனக்கு தெரிந்தது பறவைகளில் எத்தனை வகை உண்டென்பதே, நல்லபதிவு.
//////வடுவூர் குமார் said...
துபாயிலும்,மஸ்கட்டிலும் சிட்டுக்குருவிகளை பார்க்க முடிகிறது!!- காரணம் இங்கு மரம் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
///////
right
புதிய தலைமுறையினருக்கு இதெல்லாம் கனவுதான்.
சமீபத்தில் காஷ்மீர் சென்ற போது நிறைய சிட்டுக்குருவிகளை காணமுடிந்தது.சின்ன பையன்களுக்கு காண்பித்தோம்..
நன்றி வடுவூர் குமார், மாரிமுத்து, பனித்துளி சங்கர்.
அனுஜன்யா, உங்களின் ஸ்டேட்மெண்ட் என் வயிற்றை புரட்டுகிறது. :)
நன்றி இனியாள்.
ராபின் கனவெல்லாம் இல்லை. என் அம்மா ஏதோ ஒரு பறவைக்காட்சி சாலையில்தான் மயிலை முதன் முதலில் பார்த்ததாகச் சொன்னார். என் மகன் ஆறு மாதத்தில் தோட்டத்தில் மேயும் மயில்களைப் பார்க்கிறான்.
அமுதா கிருஷ்ணா, சிட்டுக்குருவி பார்க்க காஷ்மீர் போனீர்களா? :)
Post a Comment