நூல் திறனாய்வு செய்வது என்பது கொஞ்சம் சிக்கலான பணியாகவே தெரிகிறது. வாசித்துவிட்டு "தேறும்","தேறாது" என்பதில் ஒன்றைச் சொல்லிவிடுவது அல்லது கொஞ்சமாக அதைப் பற்றி பேசி நிறுத்திக் கொள்வது சற்று எளிது அல்லது உசிதம் கூட.
செல்லமுத்து குப்புசாமி எழுதியிருக்கும் 'பிரபாகரன் - ஒரு வாழ்க்கை'(வெளியீடு: கிழக்கு பதிப்பகம்)யை ஈழம் பற்றியெரிந்து கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் வாசிக்க நேர்ந்தது. புத்தகத்தைப் பற்றி நண்பர்களோடு பேசுவதோடு மட்டுமில்லாமல் எனக்கு 'பட்டதை' எழுதிவிடுவதும் சரி என்று தோன்றுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்ட வாழ்க்கையை மிக எளிமையான, சார்பில்லாத நடையில் ஆவணப்படுத்தியிருக்கும் செல்லமுத்து குப்புசாமியின் முயற்சி இன்றைய தேதியில் மிக முக்கியமான முயற்சியாக உணர்கிறேன்.
புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் செய்தியும், அது பற்றியதான அலசலும் படைப்பாளியின் ஆளுமையிலோ அல்லது அவரோடான தனிப்பட்ட நட்பின் காரணமாகவோ அடங்கிக் போவது நூல் விமர்சனத்தின் அடிப்படை பலவீனம் என்பதால் இனி இந்தப் பத்தியில் குப்புசாமி பற்றி எழுதப் போவதில்லை.
தமிழக மக்களின் ஆழ்மனதில் அடி மட்டத்தில் ஈழம் குறித்தான கிளர்ச்சியான சிந்தனை உருவெடுக்கக் காரணமாக, சிங்கள அரசின் கொள்கை விளக்க அணியாக இந்திய அரசியல் கட்சிகள் செயல்படும் இந்த நேரத்தில், வெளி வந்திருக்கும் இந்த புத்தகத்திற்கு ஒரு முக்கியமான வரலாற்று பதிவு.
காதலர் தினத்தை ஒட்டி வெளியான சில இதழ்களில் கூட பிரபாகரன் - மதிவதனி காதல் பிரதானமாகச் சித்தரிக்கபடுகிறது. சில வார இதழ்கள் புலிகளையும், பிரபாகரனையும் இதுவரை இல்லாத அளவில் தங்கள் பக்கங்களில் நிரப்புகின்றன. இது வியாபார குயுக்தியா என்பது போன்ற விவாதங்கள் இந்த நேரத்தில் தேவையில்லை.
இன்றைய கொந்தளிப்பான சூழ்நிலையில் பிரபாகரனின் வாழ்க்கைப் பின்னணி குறித்த புதிரை விடுவித்து அந்தத் தனி நபரின் வாழ்வு குறித்து மட்டுமல்லாமல் அவர் அந்தச் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான புறச் சூழலையும் விருப்பு வெறுப்பின்றி பதிவு செய்யும் காரியம் அவசியம். அந்தப் பணியை இந்த நூல் செய்திருக்கிறது.
ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் விற்கக் கூடாது என்று காந்தி கண்ணதாசன் முயற்சியால் முட்டுக்கட்டை போடப்பட்ட நூல் இது.
இன்றைய சூழலில் விடுதலைப் புலிகளின் கடந்த காலத் தவறுகளைக் குறித்துப் பேசுவதற்குப் போதிய அவகாசம் இல்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழரசுக் கட்சியால் நிராகரிக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சிங்கள இனத்தின் ஆதிகத்தைப் பறைசாற்றும் இலங்கையின் 'தேசியக் கொடி' இன்றைக்கு வலுக்கட்டாயமாக அனைத்து தமிழர் வீடுகள் முன்பாகவும் சிங்கள இராணுவத்தினரால் ஊன்றப்படுகிறது.
அதை எதிர்க்கும் திராணியுள்ள கூட்டத்தையும், அந்தக் கூட்டத்திற்கான கொடியையும் வடிவமைத்த மனிதனைப் பற்றிய வாழ்க்கையை தொகுத்துத் தந்திருக்கிறது இந்த நூல். சராசரி இந்தியத் தமிழர்களை நோக்கி, அவர்களுக்கு பிரபாகரனின் போராட்ட வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் நோக்கில் இது உருவாக்கப்பட்டிருபதாகவே படுகிறது.
1991 க்குப் பிறகு இலங்கைத் தமிழர் என்றாலே தேசத் துரோகியாக அடையாளப்படுத்தப்படும் அபாயம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டதால் அந்தத் தீவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிலவும் இனப் பிரச்சினையின் பின்னணி பற்றி நமக்குத் தெரிந்திராத, மறைக்கப்பட்ட சம்பவங்கள் குறித்தான புரிதலை இந்த நூல் உண்டாக்குகிறது.
உண்மையில் பிரபாகரன் எப்படிக் குளிப்பார், எப்படி தேகப் பயிற்சி செய்வார் முதலிய பர்சனல் விவரங்களைத் தேடி இதை வாசித்தால் ஏமாந்து போக வாய்ப்புண்டு. 'பிரபாகரனின் வாழ்க்கை என்பது, ஒரு தனி மனித சரித்திரமல்ல, ஓர் இனத்தின் பெருங்கதை' எனக் கூறும் புத்தகத்தின் பின் அட்டை வரிகள் நூறு விழுக்காடு மெய்யானது.
ஒரு அரசுப் பணியாளரின் வருமானத்தில் வாழும், கடவுள் நம்பிக்கை மிகுந்த ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த செல்லப் பையன் உலகின் ஆகப் பெரிய கட்டுப்பாடான கொரில்லா இராணுவத்தைக் கட்டமைத்த கதை இது. கோயில் பூசாரியை சிங்களர்கள் உயிரோடு தீயிட்டுக் கொளுத்திய சம்பவத்தைத் தன் தந்தையும், அவரது நண்பர்களும் விசனத்தோடு பேசக் கேட்டு, "அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை?" என எதிர் வினாத் தொடுத்த நிகழ்வோடு துவங்குகிற நூலின் முதல் அத்தியாயம் பின் நவீனத்துவ நாவலைப் போல முன்னும் பின்னுமாகப் பயணப்படுகிறது.
பல அடிப்படைக் கேள்விகளுக்கு விடையளிக்கும் வண்ணம்,தொய்வில்லாமல் நகர்கிறது.
- பிழைக்கப் போன இடத்தில் எதற்காக தனி நாடு கேட்கிறார்கள்?
அவர்கள் பிழைக்கப் போனவர்கள் இல்லை. நாடு கடத்தப்பட்டு இலங்கையில் வந்திறங்கிய விஜயன் என்ற இளவரசன் உருவாக்கிய சிங்கள இனம் இலங்கைத் தீவின் தென் பகுதியில் உருவாகும் முன்பே அங்கு வசித்த பூர்வ குடிகள்.
- அப்படியானால் இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்போர் யார்?
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியத்தில் காலங்க் காலமாக வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களைத் தவிர்த்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இருந்து அன்றைய சிலோன் தீவிற்குக் கொண்டு செல்லப்பட்டு கண்டி மலையக் பகுதியில் தேயிலைத் தோட்டம் உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட பிரிவினரே இந்திய வம்சாவழித் தமிழர். ஒரு காலத்தில் ஈழத் தமிழர்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் கூடுதலாக மிகப் பெரிய சிறுபான்மையினராக இலங்கை மண்ணில் விளங்கிய அவர்களது குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டது வேறு கதை.
- அதனால் மட்டும் தனி நாடு கேட்டுப் போராடுவது நியாயமா?
தனி ஈழக் கோரிக்கை என்பது மலையகத் தமிழர்களையும், மலையகத்தையும் உள்ளடக்கியதல்ல. காந்தியவாதி தந்தை செல்வநாயகம் 1949 முதல் 1976 வரை ஒருங்கிணைந்த இலங்கைத் தீவில் சிங்கள மக்களைப் போலத் தாங்களும் சம அந்தஸ்துடையயவர்களாக நடத்தப்பட வேண்டும் என்று போராடியதும், அப்படி அவர்களை நடத்துவதாக ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட சிங்கள ஆட்சியாளர்கள் அந்த உடன்படிக்கையை பகிரங்கமாகக் கிழித்துப் போட்ட கதையெல்லாம் உண்டு. இறுதியாக ஸ்ரீலங்காவாக மாறிய சிலோன் ஒரு பவுத்த சிங்கள தேசமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து தனி நாடு தவிர வேறு வழியே இல்லை என்ற நிலைக்கு அந்த மனிதர் தள்ளப்பட்டார்.
- அதற்காக ஆயுதம் தாங்கிப் போராடுவது சரியா?
- ஏனைய ஆயுதப் போராட்டக் குழுக்களை அழித்தது பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கு மட்டுமா? அல்லது சகோதரச் சண்டைக்கு வேறு சில காரணங்கள் உண்டா?
- பூடான் தலைநகர் திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இடையே நிலவிய ஒற்றுமை அதன் பிறகு சிதைந்து போய், சகோதர இயக்கங்களை அழிக்கும் நிலை உருவானதற்கு தமிழக அரசியல் சூழலும், இந்திய உளவுத் துறையும் காரணமாக விளங்கினவா?
- ஆண்களுக்கு நிகராக பெண்களும் துப்பாக்கி தூக்கிப் போராடும் இயக்கமாக புலிகள் இயக்கத்தை பிரபாகரன் எப்படி மாற்றினார்?
- பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் இடையேயான காதலுக்கும், உமா மகேஸ்வரன் மற்றும் ஊர்மிளா இயையேயான தகாத உறவுக்குமான வேறுபாடு ஈழத் தமிழ் விடுதலைப் போராடத்தில் எத்தகைய திருப்பங்களை ஏற்படுத்தியது?
- ராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனாவும் செய்து கொண்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் எந்தப் பின்னணியில் உருவானது?
- சிங்கள இராணுவத்தின் அடக்குமுறையில் இருந்து தமிழர்களைக் காப்பதற்கு இலங்கை சென்றதும், ஈழத் தமிழர்கள் மாலை போட்டு ஆரத்தி எடுத்து வரவேற்றதுமான இந்திய அமைதிப் படை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபடத் தூண்டிய காரணங்கள் யாவை?
- பொது மன்னிப்பு வழங்கப்பட்ட குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட புலிப் போராளிகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்காமல் அவர்களை அமைதிப் படை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் வரலாறு வேறு மாதிரி இருந்திருக்குமா?
- பச்சைத் தண்ணீர் கூடப் பருகாமல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றச் சொல்லி ஜெயவர்த்தனாவை நிர்ப்பந்திக்குமாறு இந்தியாவை நோக்கி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் உண்மையிலேயே இந்தியாவின் அகிம்சை முகமூடியைக் கிழித்தாரா அல்லது பிரபாகரன் உற்பத்தி செய்த இன்னுமொரு தற்கொலைப் போராளிதானா அந்த கண்ணாடி அணிந்த இளைஞன்?
- அமைதிப் படையை அனுப்பி வைத்தும் அது எவ்வாறு ஆயிரக் கணக்கான பொதுமக்களின் மரணத்திற்குக் காரணமாக இருந்தது?
ராஜீவைப் பழி வாங்குவதற்காகக் கொன்றார்களா அல்லது இனி மேல் ஆட்சிக்கு வந்தால் அவர் ஏற்படுத்தப் போகும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக இல்லாமல் செய்தார்களா?
- இராஜீவ் காந்தி கொலை விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதா அல்லது சாதமாக அமைந்ததா?
- விடுதலைப் புலிகள் மீதான தடை அவர்களை உண்மையிலேயே பாதித்துள்ளதா? அப்படிப் பாதித்துள்ள பட்சத்தில் பாதிப்பு அரசியல் ரீதியாக இருந்ததா அல்லது இராணுவ ரீதியாகவா?
- உண்மையில் பிரபாகரன் பயங்கரவாதியா அல்லது விடுதலைப் போராளியா?
இந்தக் கேள்விகளை அறிவார்த்தமாகவும், வரலாற்று நோக்கிலும் அணுக இந்நூல் உதவும்.
"பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் கணக்கில் கொள்ளாமல் இலங்கையின் இனப் போராட்ட வரலாறையும் ஈழத் தமிழர் பிரச்சினையையும் புரிந்துகொள்ள முடியாது. உணர்ச்சிப் பூர்வமாக அல்லாமல், வரலாற்று நோக்கில் பிரபாகரனை அணுகுகிறது இந்நூல்," என்ற வாசகத்தை முன் அட்டையில் தாங்கி வந்திருக்கும் இந்தப் புத்தகம் 'இந்திய இறையாண்மைக்குக் குந்தகம்' விளைவிக்காமல் ஈழத் தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் சவாலான காரியத்தைச் செய்திருக்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகள் பலவற்றை நியாயப்படுத்தாமல் சம்பவங்களை மட்டும் பதிவு பண்ணுகிறது இந்தப் புத்தகம். புலிகளுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் கூட, இந்திய அரசின் அல்லது உளவுத் துறையின் பல சித்து வேலைகளைச் சொல்லாமல் விட்டிருக்கிறார் நூலாசிரியர். குறிப்பாக ராஜீவ் காந்தி கொலை பல மர்மங்கள் நிறைந்ததாகவே இன்று வரை தொடர்கிறது என்று குறிப்பிட்டு விட்டு நகர்கிறார். நிச்சயமாக அந்த மர்மங்களும், புதிர்களும் அவருக்குத் தெரியாததாக இருந்திருக்காது. சுப்பலட்சுமி ஜெகதீசன் முதல் சந்திராசுவாமி வரை இராஜீவ் கொலைச் சமயத்தில் ஊடகத்தில் அலசப்பட்ட பலரைப் பற்றிக் குறிப்பிடாமல் நகர்கிறது புத்தகம்.
அதே போல புலிகளையும், ஏனைய போராளிக் குழுக்களையும் வைத்து எம்ஜிஆருக்கும், கலைஞருக்கும் நடுவே தமிழகத்தில் நடந்த அரசியல் குறித்து எந்தக் குறிப்பும் தென்படவில்லை. இலங்கை இனப் பிரச்சினையை, அங்கு நிலவும் பேதத்தை மென்மேலும் சிக்கலாக்கியதில் இந்திய அரசின் பங்கு குறித்தி வெளிப்படையாக எதுவும் குறிப்பிடாமல் சாமர்த்தியமாக விடப்பட்டிருக்கிறது.
அதே நேரம் பிரபாகரனை வில்லனாகச் சித்தரிக்கும் வேலையை நூல் செய்யவில்லை. தமிழர்களுக்கு எதிரான சிங்களர்களின் அடக்குமுறைக்கு எதிரான நீண்ட நெடிய போராடத்தில் பிரபாகரனின் பங்கு குறித்தும், போராடத்தின் போக்கையும் அதன் வீரியத்தையும் அவர் மாற்றியமைத்ததைப் பற்றியும் விவரிக்கிறது.
மிக முக்கியமானது மட்டுமல்லாமல், மிகச் சாமர்த்தியமாக எழுதப்பட்டிருக்கும் நூல் இது என்பதற்கான பல காரணங்களில் ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும். அது மறைந்த பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தி பற்றியது. பிரபாகரனைப் பற்றி என்ன எழுதினாலும், பேசினாலும் அதில் நிச்சயமாக ராஜீவின் பெயர் இடம் பெறும். ஒன்று பிரபாகரனை வில்லனாகவும், இராஜீவை கதாநாயகனாகவும் வர்ணிப்பார்கள். இல்லாவிடில் பிரபாகரனை நாயகனாகவும், இராஜீவை வில்லனாகவும் சித்தரிப்பார்கள்.
உண்மையில் இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்த வரை இராஜீவ் காந்தி வில்லனும் அல்ல, கதாநாயகனும் அல்ல. அவர் ஒரு அபிமன்யு. அப்படியான பிம்பத்தையே இந்தப் புத்தகம் உருவாக்கும். அதுதான் உண்மையாகவும் இருக்க வேண்டும்.
புத்தகத்தின் கதாநாயகன் பெயர் பிரபாகரன். வில்லன்மார்களின் பெயர்கள் - கொழும்பு ஆட்சி பீடத்தின் சிம்மாசனத்தை அலங்கரிப்பவர்களாக - மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. புனைவுகள் இல்லாமல், மிகுதியான அலங்கார வார்த்தைகள் இல்லாமல், வரலாற்று நோக்கில், சம்பவங்களின் கோர்வையாகத் வடிவமைக்கப்பட்டிருக்கும் பிரபாகரன் முக்கியான காலப் பதிவாக அமையும்.
நன்றி: அம்ருதா
நீங்கள் இறப்பதற்கான காரணங்கள்

அவள்
உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்
நீங்கள் பிரியத்தின் வெவ்வேறு வடிவங்களை உணர்த்திக் கொண்டிருக்கிறீர்கள்
அவள்
தன் துக்கங்களை பகிர்ந்து
புதிர்களுக்கான முடிச்சுகளை காட்டுகிறாள்
நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்
அவளை அவளாகவே
உங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறாள்
சிரிப்பதாக பாவித்த நீங்கள்
ஒரு பனிநனைத்த அதிகாலையில்
அவளின் படத்தை பார்த்து கதறியழுதீர்கள்
பிறகு
தனித்த பயணத்தில்
சூரியன் முகத்தில் விழும் கணத்தில்
பிறகு
தனித்த பயணத்தில்
சூரியன் முகத்தில் விழும் கணத்தில்
அழுது தீர்த்தீர்கள்
நாட்கள் கழிய
உங்களை பிடிக்கும் என்கிறாள்
சொற்களை
நாட்கள் கழிய
உங்களை பிடிக்கும் என்கிறாள்
சொற்களை
உங்களோடு புதைத்து
கொஞ்சமாகச் சிரிக்கிறீர்கள்
நேற்றுமில்லாத இன்றுமில்லாத
தருணத்தில்
உங்களின் அழகின்மையை பட்டியலிட்டு
நீங்கள்
கட்டியிருந்த
நேற்றுமில்லாத இன்றுமில்லாத
தருணத்தில்
உங்களின் அழகின்மையை பட்டியலிட்டு
நீங்கள்
கட்டியிருந்த
ஆளுமையை
சிதைக்கிறாள்
உங்களின் துக்கத்தை அறிந்தவளாய்
தான்
சொன்னவை எதுவும் பொருளற்றவை
தன்
சிக்கல்களின் வெற்று பிம்பங்கள் என்கிறாள்
நீங்கள்
நிராகரிக்க எதுவுமில்லை
உண்மையின் வெம்மையில் கசங்கத் துவங்குகிறீர்கள்
இந்தத் தார்ச்சாலையின் மதிய வெயிலில்
வாகனத்தில் நசுங்குவது கூட
உங்களுக்கு
ஆசுவாசம் தரக்கூடும்
கண்ணீரில் கரையத் துவங்கும்
உங்களைப் பார்த்து செருப்புத் தைப்பவன்
வருத்தப்பட்டிருக்கலாம்
உங்களுக்கு அடுத்தவரின் கருணை தேவையில்லை
உங்களின் துக்கம் உங்களுக்கானது
இந்தக் கண்ணீருக்கான அர்த்தம் முடிவற்றது
உறங்கச் செல்கிறீர்கள்
இரவின் வெறுமை உங்களை விழிக்கச் செய்கிறது.
அருகில் கிடக்கிறது ஒரு நைலான் கயிறு.
(தற்கொலை செய்து கொண்ட நண்பன் மதுவுக்கு)

கருணாநிதி சார். ஹாஸ்பிடல் வாழ்க்கை சுகமா?
தலைவா, தமிழினம் காக்கும் ஐந்தமிழ் அறிஞா,
எல்லோரும் உங்களை காய்ச்சி எடுக்கிறார்கள்.
நல்லவேளையாக ஏ.சி. அறைக்குள் படுத்துக் கொண்டீர்கள்.
அடுத்தவன் எரிந்தாலும் சரி, எவன் பொண்டாட்டி சீரழிந்தாலும் சரி. இந்த வயதில் எத்தனை பணிச்சுமை உங்களுக்கு?
ஸ்டாலினா, அஞ்சா நெஞ்சனா, மாறன் பெற்றெடுத்த பவுடர் பேபியா, தமிழ்த் தாயை உய்விக்க வந்த கவிதாயினியா எவருக்கு தருவது அரியாசனம்.
இந்த முடிவை கூட எளிதாக எடுத்துவிடலாம் போலிருக்கிறது. இந்தக் காங்கிரஸ் காரனை மிஞ்சி சோனியாவை குளிர வைப்பதுதான் உங்களுக்கு பெரும்பாடு தலைவா. சோனியாவை குளிர வைக்க காங்கிரஸ் காரன் எதைத் தின்னவும் தயாராக இருக்கிறான். அவனை மிஞ்ச வேண்டாமா தன்மான தமிழனத் தலைவன்.
இந்திரா மரணத்திற்கு சீக்கிய இனத்தை அழிக்க நினைத்த வட நாட்டு காங்கிரஸ் காரனுக்கும், ராஜீவ் மரணத்திற்கு தமிழனை அழிக்க நினைக்கும் தமிழ்நாட்டு காங்கிரஸ் காரனுக்கும் என்ன தலைவா வித்தியாசம்? காங்கிரஸ் காரனுக்கு, இந்திரா குடும்பத்தின் கால் கழுவிய தண்ணீர்தான் தேவாமிர்தம். அவர்கள் கிடக்கட்டும். மானங்கெட்டவர்கள்.
நீங்கள் மஞ்சள் பையும் தகர டப்பாவுமாக சென்னைக்குள் வரும் போது நினைத்தீர்களா பல தலைமுறைக்கான சொத்தினை நம் வாழ்நாளில் சேர்த்துவிடுவோம் என்று. தமிழன் உருகி கொடுத்த காசு அல்லவா உங்கள் கஜானாவை நிரப்பியிருக்கிறது.
தமிழனுக்கும் தெரியும். இந்தச் சொத்து எப்படி வந்தது என்று. இருந்தாலும் உங்களைத் தான் அவன் இதுவரைக்கும் கொண்டாடி வந்திருக்கிறான். கடைசி கட்டத்திலும் உங்கள் தமிழுணர்வு மங்காது என்று இத்தனை நாளும் நம்பியிருந்தான். அவனை நம்ப வைத்து கழுத்தறுக்கிறீர்கள்.
நல்லது தலைவா. உனக்கு தெரியாத தமிழ் பண்பாடா? பிணத்தை வைத்துதான் அரசியல் செய்யக் கூடாது. அடுத்தவனை பிணமாக்க அரசியல் நடத்தலாம்.
தமிழன் செத்து மடிகையில் என் ஆட்சியை கலைக்க முயல்கிறார்கள் என்று முக்குவதற்கு கொஞ்சமும் வெட்கமாகயில்லை? பதவி உங்கள் தோளில் ஆடும் துண்டல்லவா? தூக்கி எறிவதில் என்ன சிரமம்? அதுவும் ஜனநாயக முறைதான் என்று நாங்கள் சொல்லியா தெரிய வேண்டும் உங்களுக்கு.
உங்கள் பேச்சுக்கு இத்தனை நாள் தமிழன் ஏமாந்தான். அடுத்த கொஞ்சம் நாள் தொண்டன் ஏமாந்தான். இன்னுமா ஏமாறுவார்கள் என்று மனக்கணக்கு போடுகிறீர்கள்? இன்னும் எத்தனை நாளைக்கு அடுத்தவனை ஏமாற்றி அடித்து உலையில் போட போகிறீர்கள்?
தமிழ் மக்களுக்கு ஈழத்தின் நிகழ்வுகள் பற்றி விழிப்புணர்வை தி.மு.க உண்டாக்கும் என்று சொன்னதுதான் தலைவா உச்சகட்டம். சொல்லிவிட்டு நல்லவேளையாக மருத்துவமனைக்கு சென்று விட்டீர்கள். வெளியில் வந்திருந்தால் செருப்படி வாங்கிய உங்கள் மாவட்ட செயலாளரின் நிலையை விட மோசமாகியிருக்கும் உங்கள் நிலை.
தமிழீழம் அமைந்தால் சர்வாதிகார ஆட்சி அமையும் என்ற பேட்டி இன்றுதானா தலைவா உங்கள் காதில் விழுகிறது? இத்தனை நாள் அது குறித்து ஒரு அறிக்கை கூடவா வெளியிட முடியவில்லை? மூக்கை பிடித்துக் கொண்டு நாற்காலிக் காலை கட்டித் திரியும்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தெரிகிறதா தமிழகம் கொந்தளிப்பது?
உங்களை ஏச வேண்டும் என்று உண்மையான தமிழுணர்வாளன் அடி மனதில் இருந்து இத்தனை நாளும் நினைத்திருக்க மாட்டான். ஆனால் இப்பொழுது நிலைமை அப்படியில்லை.
நீங்கள் சேர்க்காத சொத்தில்லை. பதவிச் சுகம் கண்ட உங்கள் பின்பக்கம் இன்னமும் எதற்கு நாற்காலியை விட்டு எழுந்திட மறுக்கிறது. இனியும் எதற்கு பதவிப் பிச்சை.
இன்று நீங்கள் தமிழனுக்காக உண்மையாக நடந்து கொண்டாலும் கூட தமிழன் உங்களை மறுபடியும் தலையில் சுமக்க தயங்கமாட்டான்.
ஆனால் உங்களுக்கு தெரியும் எந்தக் காயை, எப்படி அடிக்க வேண்டும் என்பதும், தமிழனின் ஞாபக மறதியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும்.
நீங்கள் இங்கு அடித்து ஆடுங்கள். இத்தாலிக்காரி டெல்லியில் இருந்து கொக்கரிக்கட்டும். சிங்களன் முல்லைத் தீவை உருக்குலைக்கட்டும்.
கொஞ்சம் எமோஷனலாக எழுதியிருக்கிறேனா? இந்த அவலத்தில் எது எழுதினாலும் எமோஷனலாகத் தான் வருகிறது.
எப்படி முடிப்பது இந்தக் கடிதத்தை...
...த்தூ....

திராவிட அரசியலின் இறுதிப்புள்ளி
பெரியாரின் காலத்திலிருந்து திராவிட அரசியல் தமிழக வரலாற்றில் இடம் பிடிக்கிறது என்று சொல்ல முடியும் என்றாலும் அவரது காலத்துக்கு முன்பாகவே தமிழுணர்வு, நாத்திகம், தலித் அரசியல் போன்ற சில கூறுகளின் மூலமாக திராவிட அரசியல் தனக்கென வடிவம் பெற முயன்று கொண்டிருந்திருக்கிறது.
பெரியார் திராவிட கொள்கைகளுக்கான பரிணாமத்தை கொடுக்க, அதற்கான அரசியல் உருவம் திராவிட முன்னேற்ற கழகத்தின் மூலமாக வலுப்பெற்றது. இந்த இரண்டு கூற்றுகளும் ஒரு நேர்கோட்டுப் பார்வை மட்டுமே. இவை தவிர்த்து எண்ணற்ற செயல்பாடுகளின் மூலம் திராவிட அரசியல் உறுதி பெற்றது. எங்கள் ஊர்பக்கம் உள்ள தி.மு.க அனுதாபிகள் நாவிதர்கள் கடைகளிலும், டீக்கடை பெஞ்ச்களிலும்தான் தி.மு.க வளர்ந்தது என்பார்கள்.
நாற்பதுளில் மிகத் தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு, நாத்திகம், திராவிட நாடு என்ற கொள்கைகள் அண்ணா காலத்திலேயே நீர்த்துப் போனது. பின்னர் கருணாநிதி தன்னை திராவிட கொள்கைகளை பின்பற்றுபவராக வெற்றிகரமாக நிறுவிக் கொண்டிருந்த போது அண்ணாவின் பெயரில் கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர் ,தன்னை கடவுள் நம்பிக்கை உடையவர் என்பதை வெளிப்படுத்த எந்த தயக்கமும் காட்டவில்லை. அவரது வழித் தோன்றல் ஜெயலலிதா தன்னை "பாப்பாத்தி" என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டார்.
கருணாநிதியும் தனது காற்றில் கரைந்த கொள்கைகளை இன்னமும் பிடித்திருப்பதாக பல வழிகளில் நிரூபிக்க முயன்று கொண்டிருக்கிறார். மஞ்சள் நிறத்தை அணிய ஆயிரம் காரணங்களைக் கூறினார். அவரது வாரிசுகள் கருணாநிதியின் "இமேஜை"க் காப்பாற்ற கடவுள் நம்பிக்கையையும் இன்ன பிற ஆரிய செயல்பாடுகளையும் வெளியுலகில் வெளிப்படையாக மறைக்கிறார்கள்.
ஒரு குட்டிக் கதை ஒன்று நினைவிற்கு வருகிறது. ஒரு அரசனை பழி வாங்க நினைத்த சோதிடன் ஒருவன், அவருக்கு மந்திர உடை அணிய வைப்பதாகக் கூறி ஒன்றும் அணிவிக்காமல் நிர்வாணமாக நகர்வலம் செல்லச் செய்தான். எதிர்பட்ட ஒவ்வொருவருக்கும் அரசன் நிர்வாணமாக செல்வது தெரிந்தாலும், தண்டனைக்கு பயந்து "ஆடை பிரமாதம்" என்றார்கள். அரசன் நினைத்துக் கொண்டான், தான் நிர்வாணமாக இருப்பது தனக்கு மட்டுந்தான் தெரியும் என்று. எனக்கு இந்தக் கதையை படிக்கும் போது கருணாநிதியின் திராவிட கொள்கைகள் மீதான பிடிப்பும், அதற்காக அவரது பிரதாபங்களும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.
வைகோ திராவிட கொள்கைகளை கொஞ்சம் பிடித்திருப்பதாகத் தெரிந்தாலும் (திராவிடக் கொள்கைகளில், சுயமரியாதையை தொலைத்தவர் இவர்) அவரது அரசியல் செயல்பாடு முக்கியத்துவமில்லாமல் போய்விட்டது.
"அண்ணாயிசம்","எம்ஜியாரிசம்", "காமராஜரிசம்" என எல்லாவற்றையும் கலந்து "மிளகு ரசம்" வைத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்த் கட்சியின் பெயரில் எதற்காக "திராவிடம்" என்ற ஒட்டியிருக்கிறது என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
இவர்களை எல்லாம் தவிர்த்து இன்னும் கொஞ்சம் அரசியல் ரீதியாக ஒட்டிக் கொண்டிருக்கும் கி.வீரமணிக்கு, கொள்கையை விட ஆட்சியில் இருக்கும் கட்சிதான் முக்கியம். அடுத்த முறை பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சியை பிடித்தால் அவர்களுக்கு ஜால்ரா தட்டவும் கொஞ்சமும் யோசிக்க மாட்டார். இப்படியான அரைகுறை "திராவிட" தலைவர்கள் டஜனுக்கும் மேலாக தமிழ்நாட்டில் உண்டு.
தலைவர்கள் கொள்கைகளை காற்றில் விட்டுவிட்டால் ஐம்பது ஆண்டுகாலமாக உருவம் பெற்ற கொள்கை அழிந்து விடுமா என்றால், இல்லை தான். ஆனால் தனிமனித வழிபாடு தனக்கான நிலையான இடம் பெற்றுவிட்ட தமிழகத்தில் தலைவன் எவ்வழியோ, விசிலடிச்சான் குஞ்சும் அவ்வழிதான்.
இந்த நிலையில் திராவிட கொள்கைகளில் அரசியல் ரீதியாக வலிமையானதாக எது இருக்கிறது என்று பார்த்தால் ஒன்று கூட இல்லை என்பதுதான் உண்மை. இன உணர்வு, மொழியுணர்வு, சாதி எதிர்ப்பு, சுய மரியாதை, கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு இவற்றில் ஒன்று கூட பெரும்பான்மை மக்களின் உணர்வுகளில் இல்லை.
இன்னமும் இவை முற்றாக அழிந்துவிடவில்லை. எங்காவது சில உணர்வாளர்கள் கூடுகிறார்கள். கொஞ்சம் பேசுகிறார்கள். சிலர் சலனம் உண்டாக்குகிறார்கள். ஆனால் அடுத்த தலைமுறைக்கு இவற்றை எடுத்துச் செல்வதற்கான வலிமையான தலைவர்களோ, இயக்கமோ தமிழ் மண்ணில் இல்லை என்பது சர்வ நிச்சயம்.
திராவிட கொள்கைகள் அழிந்து விடக் கூடாத கொள்கைகள் என்பதில்லை. கால ஓட்டத்தில் கட்டமைக்கப்பட்ட அரசியல் கூறுகளும், பண்பாட்டு கூறுகளும் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாவதும், ஒத்து வராத கொள்கைகள் முற்றாக அழிந்து போவதும் இயற்கை. அப்படியான ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.
எந்தத் தலைவனும் இன்றைய தேதியில் தன்னை திராவிட உணர்வாளன் என்று அறிவித்துக் கொள்ள யோக்கிதை அற்றவன் என்பதை எந்தவித தயக்கமும் இல்லாமல் சொல்லலாம். ஆனால் அப்படி தன் கீரிடத்தை அசைய விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு தலைவனும். நம் தமிழ் சாதி அதையும் நம்பிக் கொண்டிருக்கிறது. கண்ணை மூடிக் கொண்டு.
இதன் விளைவு உடனடியாக தெரியாது.
அடுத்த தலைமுறையில் ஒருவனிடமும் இந்த உணர்வுகள் இல்லாத போது அப்படி ஒரு கொள்கை இருந்ததாக ஏதாவது நூலகத்தில், கரையான் அரித்த ஒரு புத்தகம் சொல்லிக் கொண்டிருக்கும்.

Subscribe to:
Posts (Atom)