
தற்கொலை செய்து கொண்டவர்கள்
எப்பொழுதும்
நம்மை துரத்தும்படியான
சாயலை
விட்டுச் செல்கிறார்கள்
தினமும்
பன்னிரெண்டு மணி
பேருந்தில்
இறந்து போனவர்கள்
வந்து கொண்டிருக்கிறார்கள்
உறைந்த தலையென
பனிக்கட்டி நினைவுகளில்
புதைந்த
மீளா முகங்களை
எதிர் கொள்ளும்
ஒவ்வொரு கணமும்
அதிர்ந்து
நடுங்குகிறது
உடல்
மறக்கப்பட வேண்டியவர்கள்
எதாவதொரு சாயலில்
ஏதாவதொரு சாலையில்
எதிர்பாராத பொழுதில்
நம்மை கடக்கிறார்கள்
சாயல்களிலிருந்து விடுபடுதல் சுலபமில்லை
சில சாயல்கள் அழ வைக்கின்றன
சில சாயல்கள் பதற வைக்கின்றன
சில சாயல்கள் சாரலில் நனைக்கின்றன
நேற்றும்-
இரத்தச் சகதியோடு
தோண்டப்பட்ட கண்களில்
கடைசி முத்தத்தில்
கசிந்த
உன் கண்களின்
சாயலை பார்க்கிறேன்.
(நண்பர் கென்னிற்கு)
4 எதிர் சப்தங்கள்:
//மறக்கப்பட வேண்டியவர்கள்
எதாவதொரு சாயலில்
ஏதாவதொரு சாலையில்
எதிர்பாராத பொழுதில்
நம்மை கடக்கிறார்கள்//
அருமையான.. நான் ரசித்த வரிகள்!!
"நேற்றும்-
இரத்தச் சகதியோடு
தோண்டப்பட்ட கண்களில்
கடைசி முத்தத்தில்
கசிந்த
உன் கண்களின்
சாயலை பார்க்கிறேன்."
நன்றி மணி சாயல்களிலிருந்தும் விடுபடுதல் சுலபமில்லைதான் :)
ஓஹோ யாருக்காவது அது என்ன சார்.... சமர்ப்பணம் என்று போட்டு விட்டால் அவர் ஒரு கமெண்ட் எழுதி விடுவார் இல்லையா
நன்றி கேவி.
இதை விட கீழ்த்தரமாக/சில்லறைத்தனமாக வேறொருவர் யோசிக்க முடியுமா என்று யோசிக்கிறேன். :)
Post a Comment