May 8, 2009

அதிமுக மதச்சார்பற்ற கட்சி

இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தமிழக காங்கிரஸின் ஒரே 'விடிவெள்ளியுமான' ராகுல் காந்தியார் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் அதிமுகவுடனான கூட்டணிக்கான வாய்ப்புகள் இருப்பதாக கோடிட்டு காட்டியிருக்கிறார்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் எதற்காக இந்த செய்திகள்? யாரை குழப்புவதற்கு? "ஆறு மணிநேர உண்ணாவிரத தலைவர்" கலைஞரின் தூண்டுதலில் திமுக காங்கிரஸே இந்த தகிடுதத்தங்களை கிளப்பியிருக்கிறதா அல்லது திமுக வை கை கழுவ ராஜபக்ஷேவின் அக்கா மகள் சோனியா முடிவு செய்திருக்கிறாரா?

காங்கிரஸ் திமுக கூட்டணியை தமிழக மக்கள் இந்த தேர்தலில் துரத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் தென்பட ஆரம்பித்துவிட்டன.இதுவரை கொஞ்சம் ஒளிவட்டத்தோடு இருந்த விஜயகாந்த்தை இரு தலைவர்களும் கண்டு கொள்வதாகக் கூட காட்டிக் கொள்ளாத நிலையில் போட்டி வழக்கம் போலவே இரு முனை ஆகியிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு கூடும் கூட்டமும், அம்மையாரின் 'நேற்று முளைத்த' ஈழத் தமிழர் ஆதரவு கோஷமும் திமுக கூடாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கின்றன‌.

திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் அடி வாங்குமென்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் காங்கிரஸின் "ராஜபக்ஷே அடி வருடித்தனம்" என்பது சொல்ல வேண்டியதில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ்‍ அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக கிளப்பி விட்டால், அதிமுகவை வெல்ல வைத்து காங்கிரஸோடு அவர்கள் கூட்டணி அமைத்து நம்மை முட்டாளாக்குவதற்கு பதிலாக, திமுகவையாவது ஜெயிக்க வைக்கலாம் என்று ந‌டுநிலை வாக்காள‌ர்க‌ள் நினைக்க‌லாம். த‌மிழ‌க‌த்தில் காங்கிர‌ஸ் தோற்றாலும் கூட‌ திமுக‌ வென்று ம‌த்தியில் காங்கிர‌ஸ் அர‌சு அமைய‌ திமுக‌ ஆத‌ர‌வ‌ளிக்க‌லாம்.

அல்ல‌து ராகுல் காந்தியும், ஷீலாவும் பேசிய‌து முழு உண்மையாக‌ அமையுமானால்தான் ப‌ய‌ம் தொற்றிக் கொள்கிற‌து.

"த‌னி ஈழ‌ம் அமைப்பேன்" என்று வாய்க்கு வாய் சொல்லிவிட்டு, வாக்குக‌ளையும் பெற்று விட்டு, ம‌த்தியில் காங்கிர‌ஸோடு ஜெய‌ல‌லிதா கை கோர்த்தால்.....

ஏமாளிக‌ள் த‌மிழ‌க‌ ம‌க்களும் ஈழத் தமிழர்கள் ம‌ட்டும‌ல்ல‌. எந்த‌க் கூட்ட‌ணிக்காக‌ த‌ன் "த‌மிழின‌ த‌லைவ‌ர்" என்ற‌ அடைமொழியை கூட‌ க‌ருணாநிதி இழ‌ந்தாரோ அவ‌ரும், திமுக‌ வும் கூட‌ மிக‌ப் பெரும் ஏமாளிக‌ள் ஆக‌க் கூடும்.

"ஜால்ரா ம‌க்க‌ள் க‌ட்சி" ராம‌தாஸுக்கு வெட்க‌ம், மான‌ம் எதுவும் இல்லை என்ப‌தால் மீண்டும் த‌ன் ம‌க‌னை ம‌ந்திரியாக்கி, "எந்திர‌ன்" ப‌ட‌ப் பெட்டியை காடுவெட்டி குருவை வைத்து தூக்க‌ச் சொல்வார்.

த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் த‌லையில் மிள‌காய் அரைத்துக் கொண்டே இருப்பார்க‌ள். இவ‌ர்க‌ளும் அவ்வ‌ப்போது 'பீல்' ப‌ண்ணி ம‌ற‌ந்து போவார்க‌ள்.

1 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

இன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரியாக இருக்கும் இந்தியக் காங்கிரசு நாளைக்குத் தமிழகத் தமிழர்க்கும் எதிரி என்பதைப் புரிந்து கொள்ளச் சொல்லியிருக்கிறார் அவ்வளவு தான்.

நாற்பது தமிழக எம்.பி க்கள்,பெரிய மந்திகள் எல்லாம் இருந்தும் ஒன்றும் பிடுங்க முடியவில்லை என்பது தான் உண்மை.
இவர்கள் தயவிலே இருந்த ஆட்சியே இப்படியென்றால்,இவர்கள் தயவில்லாதக் காங்கிரசு ஆட்சி என்ன செய்திருக்கும்,எண்ணிப் பாருங்கள்.

காங்கிரசைக் கல்லறையில் தள்ளுங்கள்.