Feb 4, 2009

க‌ருணாநிதி சார். ஹாஸ்பிட‌ல் வாழ்க்கை சுக‌மா?

தலைவா, தமிழினம் காக்கும் ஐந்தமிழ் அறிஞா,

எல்லோரும் உங்க‌ளை காய்ச்சி எடுக்கிறார்க‌ள்.

ந‌ல்ல‌வேளையாக‌ ஏ.சி. அறைக்குள் படுத்துக் கொண்டீர்கள்.

அடுத்த‌வ‌ன் எரிந்தாலும் ச‌ரி, எவ‌ன் பொண்டாட்டி சீரழிந்தாலும் சரி. இந்த வயதில் எத்தனை பணிச்சுமை உங்களுக்கு?

ஸ்டாலினா, அஞ்சா நெஞ்சனா, மாற‌ன் பெற்றெடுத்த‌ ப‌வுட‌ர் பேபியா, த‌மிழ்த் தாயை உய்விக்க‌ வ‌ந்த‌ கவிதாயினியா எவ‌ருக்கு த‌ருவ‌து அரியாச‌ன‌ம்.

இந்த‌ முடிவை கூட‌ எளிதாக‌ எடுத்துவிட‌லாம் போலிருக்கிற‌து. இந்த‌க் காங்கிர‌ஸ் கார‌னை மிஞ்சி சோனியாவை குளிர‌ வைப்ப‌துதான் உங்க‌ளுக்கு பெரும்பாடு த‌லைவா. சோனியாவை குளிர‌ வைக்க‌ காங்கிரஸ் கார‌ன் எதைத் தின்ன‌வும் த‌யாராக‌ இருக்கிறான். அவ‌னை மிஞ்ச‌ வேண்டாமா தன்மான த‌மிழ‌ன‌த் த‌லைவ‌ன்.

இந்திரா ம‌ர‌ணத்திற்கு சீக்கிய‌ இன‌த்தை அழிக்க‌ நினைத்த வட நாட்டு காங்கிர‌ஸ் கார‌னுக்கும், ராஜீவ் ம‌ர‌ண‌த்திற்கு தமிழ‌னை அழிக்க‌ நினைக்கும் த‌மிழ்நாட்டு காங்கிர‌ஸ் கார‌னுக்கும் என்ன‌ த‌லைவா வித்தியாச‌ம்? காங்கிர‌ஸ் கார‌னுக்கு, இந்திரா குடும்ப‌த்தின் கால் க‌ழுவிய‌ த‌ண்ணீர்தான் தேவாமிர்த‌ம். அவ‌ர்க‌ள் கிட‌க்க‌ட்டும். மானங்கெட்டவர்கள்.

நீங்கள் மஞ்சள் பையும் தகர டப்பாவுமாக சென்னைக்குள் வரும் போது நினைத்தீர்களா பல தலைமுறைக்கான சொத்தினை நம் வாழ்நாளில் சேர்த்துவிடுவோம் என்று. தமிழன் உருகி கொடுத்த காசு அல்லவா உங்கள் கஜானாவை நிரப்பியிருக்கிறது.

த‌மிழ‌னுக்கும் தெரியும். இந்த‌ச் சொத்து எப்ப‌டி வ‌ந்த‌து என்று. இருந்தாலும் உங்க‌ளைத் தான் அவன் இதுவரைக்கும் கொண்டாடி வ‌ந்திருக்கிறான். க‌டைசி க‌ட்ட‌த்திலும் உங்க‌ள் த‌மிழுண‌ர்வு ம‌ங்காது என்று இத்தனை நாளும் நம்பியிருந்தான். அவ‌னை நம்ப‌ வைத்து க‌ழுத்த‌றுக்கிறீர்க‌ள்.

ந‌ல்ல‌து த‌லைவா. உன‌க்கு தெரியாத‌ த‌மிழ் ப‌ண்பாடா? பிண‌த்தை வைத்துதான் அர‌சிய‌ல் செய்ய‌க் கூடாது. அடுத்த‌வ‌னை பிண‌மாக்க‌ அர‌சிய‌ல் ந‌ட‌த்த‌லாம்.

தமிழன் செத்து மடிகையில் என் ஆட்சியை கலைக்க முயல்கிறார்கள் என்று முக்குவதற்கு கொஞ்சமும் வெட்கமாக‌யில்லை? பதவி உங்கள் தோளில் ஆடும் துண்டல்லவா? தூக்கி எறிவதில் என்ன சிரமம்? அதுவும் ஜனநாயக முறைதான் என்று நாங்கள் சொல்லியா தெரிய‌ வேண்டும் உங்க‌ளுக்கு.

உங்கள் பேச்சுக்கு இத்தனை நாள் தமிழன் ஏமாந்தான். அடுத்த கொஞ்சம் நாள் தொண்டன் ஏமாந்தான். இன்னுமா ஏமாறுவார்கள் என்று மனக்கணக்கு போடுகிறீர்கள்? இன்னும் எத்தனை நாளைக்கு அடுத்தவனை ஏமாற்றி அடித்து உலையில் போட போகிறீர்கள்?

த‌மிழ் ம‌க்க‌ளுக்கு ஈழ‌த்தின் நிக‌ழ்வுக‌ள் ப‌ற்றி விழிப்புண‌ர்வை தி.மு.க‌ உண்டாக்கும் என்று சொன்ன‌துதான் த‌லைவா உச்ச‌க‌ட்ட‌ம். சொல்லிவிட்டு ந‌ல்ல‌வேளையாக‌ ம‌ருத்துவ‌ம‌னைக்கு சென்று விட்டீர்க‌ள். வெளியில் வ‌ந்திருந்தால் செருப்ப‌டி வாங்கிய உங்கள் மாவ‌ட்ட‌ செய‌லாள‌ரின் நிலையை விட‌ மோச‌மாகியிருக்கும் உங்க‌ள் நிலை.

தமிழீழம் அமைந்தால் சர்வாதிகார ஆட்சி அமையும் என்ற பேட்டி இன்றுதானா தலைவா உங்க‌ள் காதில் விழுகிறது? இத்தனை நாள் அது குறித்து ஒரு அறிக்கை கூடவா வெளியிட முடியவில்லை? மூக்கை பிடித்துக் கொண்டு நாற்காலிக் காலை கட்டித் திரியும்
உங்க‌ளுக்கும் உங்க‌ள் குடும்ப‌த்துக்கும் தெரிகிறதா தமிழகம் கொந்தளிப்பது?

உங்களை ஏச வேண்டும் என்று உண்மையான‌ த‌மிழுண‌ர்வாள‌ன் அடி ம‌ன‌தில் இருந்து இத்த‌னை நாளும் நினைத்திருக்க‌ மாட்டான். ஆனால் இப்பொழுது நிலைமை அப்படியில்லை.

நீங்க‌ள் சேர்க்காத‌ சொத்தில்லை. பதவிச் சுகம் கண்ட உங்கள் பின்பக்கம் இன்னமும் எதற்கு நாற்காலியை விட்டு எழுந்திட மறுக்கிறது. இனியும் எத‌ற்கு பத‌விப் பிச்சை.

இன்று நீங்க‌ள் த‌மிழ‌னுக்காக உண்மையாக‌ ந‌ட‌ந்து கொண்டாலும் கூட‌ த‌மிழ‌ன் உங்க‌ளை ம‌றுப‌டியும் த‌லையில் சும‌க்க‌ த‌ய‌ங்க‌மாட்டான்.

ஆனால் உங்க‌ளுக்கு தெரியும் எந்தக் காயை, எப்ப‌டி அடிக்க‌ வேண்டும் என்ப‌தும், த‌மிழனின் ஞாப‌க ம‌ற‌தியை எப்ப‌டி ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும் என்றும்.

நீங்க‌ள் இங்கு அடித்து ஆடுங்க‌ள். இத்தாலிக்காரி டெல்லியில் இருந்து கொக்க‌ரிக்க‌ட்டும். சிங்க‌ள‌ன் முல்லைத் தீவை உருக்குலைக்க‌ட்டும்.

கொஞ்ச‌ம் எமோஷ‌ன‌லாக‌ எழுதியிருக்கிறேனா? இந்த‌ அவ‌ல‌த்தில் எது எழுதினாலும் எமோஷ‌னலாக‌த் தான் வ‌ருகிற‌து.

எப்ப‌டி முடிப்ப‌து இந்த‌க் க‌டித‌த்தை...

...த்தூ....

16 எதிர் சப்தங்கள்:

singainathan said...

:( :)
anputan
Singai Nathan

ஜோதிபாரதி said...

ஆரம்பத்திலிருந்து அழகாகச் சொல்லிவந்து, இறுதியில் வரியில்(எழுத்தில் அல்லது வார்த்தையில்) உரத்து சொல்லியிருக்கிறீர்கள்.

Anonymous said...

பதவி(பண) வெறி பிடித்த அரசியல் சானக்கியணுக்கு(புள்ளையை நுள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடுவது ) . மக்கள் சாணக்கியதனமாக பதில் சொல்வார்கள் !!!
வரும் தேர்தலில் 40/40?????

Anonymous said...

nach...super...

உதயதேவன் said...

த்தூ .....த்தூ .....த்தூ...த்தூ ..... நானும் துப்புகிறேன்... காசுக்காக.... எதுவும் செய்யும்.. கருங்காளி....மனங்கெட்ட தமிழ் இனதுரோகிகள்.....மீது....

எம்.ரிஷான் ஷெரீப் said...

மிகக் காத்திரமான எழுத்து !

Sabes said...

...த்தூ....

Sen said...

தமிழ் இனதுரோகிகள்...த்தூ...

ஏழிசை said...

மஞ்சள் துண்டு மாமுனிக்கு உரைக்குமா?

ஜுர்கேன் க்ருகேர் said...

துப்பலாம் ..தப்பில்லை!

S.Lenin said...

////இந்திரா ம‌ர‌ணத்திற்கு சீக்கிய‌ இன‌த்தை அழிக்க‌ நினைத்த வட நாட்டு காங்கிர‌ஸ் கார‌னுக்கும், ராஜீவ் ம‌ர‌ண‌த்திற்கு தமிழ‌னை அழிக்க‌ நினைக்கும் த‌மிழ்நாட்டு காங்கிர‌ஸ் கார‌னுக்கும் என்ன‌ த‌லைவா வித்தியாச‌ம்? காங்கிர‌ஸ் கார‌னுக்கு, இந்திரா குடும்ப‌த்தின் கால் க‌ழுவிய‌ த‌ண்ணீர்தான் தேவாமிர்த‌ம். அவ‌ர்க‌ள் கிட‌க்க‌ட்டும். மானங்கெட்டவர்கள்.

நீங்கள் மஞ்சள் பையும் தகர டப்பாவுமாக சென்னைக்குள் வரும் போது நினைத்தீர்களா பல தலைமுறைக்கான சொத்தினை நம் வாழ்நாளில் சேர்த்துவிடுவோம் என்று. தமிழன் உருகி கொடுத்த காசு அல்லவா உங்கள் கஜானாவை நிரப்பியிருக்கிறது.////த்தூ .....த்தூ .....த்தூ...த்தூ ..... நானும் துப்புகிறேன்...

ஒரிஜினல் "மனிதன்" said...

"நீங்கள் மஞ்சள் பையும் தகர டப்பாவுமாக சென்னைக்குள் வரும் போது நினைத்தீர்களா"

ஆகா இது சூப்பர்.

கணினி வழியாகவே கலகம் செய்யும் கலியுகப் பொரட்சியாளா உன்னை வாழ்த்தவயதில்லை.

Anonymous said...

அவரையாவது திட்ட முடிகின்றது. அந்த "குண்டு" ஆட்சியில் இருந்தால் நாம் அனைவருக்கும் பொடாக் களி தான். மத்திய ஆட்சிக்காலம் முடிவை நெருங்குகின்றது. கலைஞர் ஆட்சி காங்கிரசின் கையில்.சோனியா நல்ல வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தமிழர்களை அழிக்க முயற்சி. வெற்றியும் பெற்றுவிட்டார்.

ஒரு புறம் வேடன், மறு புறம் நாகம்.


புள்ளிராஜா

muduvai tamizhlan said...

கலைஞரின் சமீபத்திய முன்னுக்குப்பின் முரனான பேச்சுக்களையும் அப்பட்டமான சுயநல நடவடிக்கைகளையும் பார்த்தால் இவரை ஏன் இந்த அளவிற்கு தலையில் வைத்து தமிழர் தலைவர் என்று கொண்டாடினோம் என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
சகோதரயுத்தம் என்கிறார், பிரபாகரன் சர்வாதிகாரி என்கிறார் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டு யோசித்தார் போல
அவர் குடும்பத்தில் சகோதரயுத்தம் காரணமாக கொளுத்தப்பட்டார்களே அப்பாவிகள் ,ஆனால் இப்போது அனைவரும் கூடி கும்மியடிக்கவில்லையா?
அன்னா தொடங்கிய தி.மு.கா வை எந்த சகோதர யுத்தத்தை பயன்படுத்தி கூறு போட்டீர்கள்? ஏன் ஒற்றுமையை கட்டிக்காப்பாற்றி இருந்தால் காங்கிரஸ் கானாமலே போயிருக்குமே!
இத்தனை துரோகங்கள் செய்தி நீங்கள் உங்கள் வாழ்க்கையின் அந்திமகாலத்தில் இதுவரை உங்களை நம்பிய தமிழனுக்கு இலங்கை பிரச்சினை மூலம் முத்தாய்ப்பான துரோகத்தையும் செயற்குழு மூலம் செய்துமுடித்து விட்டீர்கள். நன்றி!

Mahesh said...

Dear Manikandan,

Wonderful.. Wonderful.. Wonderful.. You have reflected the feelings of thousands of fellow Tamilians..

Regards.

தமிழ்நதி said...

மணிகண்டன்,

நீங்கள் எத்தனை தெளிவானவர் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத கோபம்.. எங்கள் கோபம் ஒரு மயிரைக்கூட அசைக்காது. இருந்தாலும் எழுதித் தொலையவேண்டியிருக்கிறது. ஏன் எச்சிலை வீணாக்குகிறீர்கள் நண்பர்களே... தேர்தல் முடிவில் பன்னீர்மழை பொழியக் காத்திருக்கிறது... மக்களின் மறதி நோயைப் பற்றி நமக்குத் தெரியாதா என்ன?