கவிதை, வாசிக்கிற ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை கொடுக்கும் போது அந்த கவிதானுபவம் மிக சுவாரசியமானதாகிறது.
தேவதச்சன் தனது பெரும்பான்மையான கவிதைகளில் இந்த வித்தையை மிக இலாவகமாக கையாண்டிருப்பார்.
இந்தக் கவிதை சட்டென்று எனது மனக்கூட்டின் படிகட்டு ஒன்றில் அமர்ந்து கொண்டது.
துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.
தொகுப்பு: கடைசி டைனோசர்