நாமம் என்ற சொல் முதல் மூன்று வரிகளில் இருந்தால் தமிழ்மணத்தில் திரட்டப்படாது என்று சொல்கிறார்களே அப்படியா?
விலக்கப்பட்ட வார்த்தைகள், ஏற்றுக் கொள்ளப்பட்ட வார்த்தைகள் என்ற பட்டியல் தயாரிப்பதற்கு ஏதேனும் அளவுகோல் இருக்கிறதா? நாமம் என்பதை நாமம் என்று சொல்லாமல் எப்படிச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? பெண்ணிய மொழிகளிலும், தலித்திய மொழிகளிலும் உள்ள வீச்சிற்கு அடிப்படைக் காரணமே அந்த மொழியின் கட்டமைப்புதான் என்றால் ஏற்றுக் கொள்வீர்கள் தானே?
எந்தச் சொல்லையும் யாரும் விலக்கி வைக்க வேண்டியதில்லை. கால ஓட்டத்தில் உதிரக் கூடிய யாவும் உதிரப் போகின்றன. நாம் யார் எல்லாவற்றையும் முடிவு செய்வதற்கு? புறநானூற்றிலும் முந்தைய இலக்கியப்படைப்புகளிலும் இருந்த எத்தனை சொற்கள் இன்றைக்கு புழக்கத்தில் இருக்கின்றன?
சொற்கள் மட்டுமில்லை. கலாச்சாரத்தின் எந்தக் கூறும் இப்படித்தான் அமைய வேண்டும் என்று கட்டமைக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தமிழ்மணத்தில் சூடான இடுகை என்பதே ஒரு பொதுஜன ஊடகத்தின் மலிவான விளம்பர யுக்தி. அந்த யுக்திக்கு தக்கவாறு தமிழ்மணத்தில் இயங்கும் படைப்பாளியை வளையச் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை.
நீங்கள் சொல்வது போல தமிழ்மணம் இலாப நோக்கின்றி செயல்படும் தளம் அதன் முடிவுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வழிகாட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று. நன்றி. வேறு என்ன சொல்ல முடியும் எங்களால்?
Jul 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment