* இதுவரை நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு "கண்ணாடியில் நகரும் வெயில்" என்ற பெயரில் உயிர்மை வெளியீடாக பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது(15,ஜனவரி 2008).
* எழுத்தாளர் சுஜாதா புத்தகத்தினை வெளியிட, ரோகிணி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
* கவிதை தொகுப்பு எந்த நாளில் வெளியாகும் என்னால் சரியாக கணிக்க இயலாததால் எவருக்கும் முன்பாகவே அறிவிக்க இயலவில்லை.
மன்னிக்கவும்.
* இத்தொகுப்பில் உயிர்மை,காலச்சுவடு,புதிய பார்வை,உன்னதம், தக்கை, அம்ருதா, திண்ணை.காம்,அந்திமழை.காம் உள்ளிட்ட இதழ்களில் வெளியான ஐம்பத்தேழு கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
* முதல் புத்தகம் என்பது முதல் பிரசவத்திற்கு இணையானது என்று சொல்வார்கள். அப்படித்தான்.
புகைப்படம் உதவி: ஹரன் பிரசன்னா.